அன்னை மாதவிக்காக

வேர்ட்ப்ரஸ்.காம் வலைப்பதிவில் முதலிடம் தந்த வாசகர்களுக்கும், பதிவுலக நண்பர்களுக்கும், நிர்வாகத்திற்கும் நன்றி!.

அன்னை மாதவிக்காக

புரட்சி துறவியொருவன்
படைத்திட்ட பாவையடி !
மிரட்சி நீங்காமல்
பார்வைகள் நிற்குதடி !

கற்புக்கரசி கண்ணகியென
கத்துக்குட்டிகள் பிதற்றுதடி !
கண்ணகி கற்புள்ளவள்தான்
கற்புக்கரசி நீதானடி !

உயர்குலத்தில் பிறந்துவளர்ந்து
உயிர்கற்பு காத்த்தில் !
வியப்பொன்றும் இல்லை
விந்தையொன்றும் இல்லை !

பரத்தையர்குலத்தில் பிறந்துவளர்ந்து
பத்தினியாய் நீபோராடியதில்தான்
இருக்கிறது சிறப்பு !
இதற்கில்லை மறுப்பு !

உடல்விற்கும் சந்தைதனில்
உள்ளம்விற்ற மங்கைநீ !
கவலைகள் பலவிருந்தும்
கலைகள்கற்ற கங்கைநீ !

கண்ணகி கற்புடையவள்தான்
காதலுற்ற பெண்ணில்லை !
கணவனை வழிபட்டவள்தான்
அவன்மீது விழியிடவில்லை !

எரித்தாள் கொற்றவனை
ஏற்றமிகு மதுரையுடன் !
தடம்தவறி சென்றவனை
தடுக்கவில்லை காதலுடன் !

மனையில் காட்டாவீரம்
மதுரையில் காட்டியென்னபயன் !
உரியவனுக்கு காட்டாகாதல்
ஊருக்கு காட்டியென்னபயன் !

மன்னித்துவிடு அன்னையே
மாண்பில்லை உன்னவனுக்கு !
இருவிடத்தும் உள்ளகாதல்
தெரியவில்லை தென்னவனுக்கு !

மணிமேகலையை பெற்றதனால்
மனம்கமழும் உன்பொற்பை !
போராடிப் பெற்றதனால்
பார்புகழும் உன்கற்பை !

இல்லறம் துறந்து
பூண்டாய் காவி !
தர்மத்தால் உலகை
ஆண்டாய் தேவி !

7 comments on “அன்னை மாதவிக்காக

 1. ம‌துரை ச‌ர‌வ‌ண‌ன் சொல்கிறார்:

  அருமை. கவிதை கருத்துக்கள் மனதை கவர்ந்து இழுக்கின்றன. வாழ்த்துக்கள்

 2. sempakam சொல்கிறார்:

  கவிதை அருமை………

 3. k.sathya சொல்கிறார்:

  அய்யா மிக அருமை, தனித்த சிந்தனை வாழ்க…

 4. வைகுண்டராமன்.ப சொல்கிறார்:

  அருமையான கவிதை…. மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுகிறது….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s