போலி சாமியார்களின் உண்மை முகம் – காணோளியுடன்

சில புதிர்களை எப்போதும் அவிழ்க்க முடிவதில்லை. விஞ்ஞானம் வளர வளர மேஜிக் எனப்படும் சாகசங்கள் அதிகமாகிக் கொண்டேப் போகின்றன. சிலவற்றின் மர்ம முடிச்சுகளை எளிதாக அவிழ்த்தெரிந்துவிட முடியும் என்றாலும் மக்கள் அவ்வாறு செய்ய முன்வருவதில்லை.

சில உத்திகளைக் கையாண்டு மக்களிடம் பணம் பரிக்கும் கும்பல்களின் முகத்திரையை கிழித்தெரியவே இந்த இடுகை.

இந்தக் காணோளியில் ஒரு சாமியார் நடந்து வருகின்றார். அவரை எல்லோரும் வணங்குகின்றார்கள். அவர்களை ஆசிர்வாதம் செய்துவிட்டு கைகளிலிருந்து திருநீரு எடுக்கின்றார், பணம் வரவலைக்கின்றார், சொம்பில் தண்ணீர் தருகின்றார்.

பரவசத்துடன் மக்கள் வாங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு பெண்ணை அவளின் பெற்றோர்கள் கூட்டிவருகின்றார்கள். ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவள் போல அப்பெண் தெரிகின்றாள். அந்தப் பெண்ணிடமிருந்து எதையோ எடுத்து ஒரு தேங்காயில் செலுத்துவது போல பாவனை செய்கின்றார். அதை கீழே வைக்க,தேங்காய் தானாக உருண்டு ஓடுகின்றது.

மீண்டும் வேறொரு தேங்காய் கையில் வாங்கிக் கொண்டு அதன் குடுமியில் தண்ணீர் ஊற்ற அது எரிகிறது. பிறகு அதை உடைக்கின்றார். தேங்காய் உடைகிறது. ஆனால் அது சிவப்பு நிறமாக காட்சியளிக்கின்றது.

அதற்கு தட்சனையாக பணம் வாங்கும் போது சாமியாரை சுற்றி வளைக்கின்றார்கள். உருண்டு ஓடிய அந்தத் தேங்காய்க்குள் ஒரு வெள்ளை எலி இருக்கின்றது. இது போதாதா அவர் எப்படி பட்ட சாமியார் என்பதற்கு.

அடுத்து பறக்கும் சாமியார். அவரை விடவும் இந்த சாமியார் கொஞ்சம் அறிவாளி. அவராவது ஏதோ வேதியல் படித்துவந்து தேங்காயை எரிய வைத்தார். இவர் செய்தது ஒரு குச்சியுடன் அமரும் ஆசனம், அவ்வளவு தான்.

இவர்களைப் போல வித்தை காட்டும் மனிதர்கள் வெளி நாடுகளிலும் இருக்கின்றார்கள். ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றி அல்ல. வித்தைகளை மற்றவர்களிடம் காட்டி வியக்க வைக்கும் மந்திரக்காரர்களாக. ஒரு உதாரணம்.

10 comments on “போலி சாமியார்களின் உண்மை முகம் – காணோளியுடன்

 1. Robin சொல்கிறார்:

  ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

 2. Karthikeyan A சொல்கிறார்:

  ம்ஹூம்… இந்த வீடியோக்கள்தான் நம்ம மக்களுக்குத்தேவை ! இதைத்தான் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒளிபரப்பவேண்டும் !

  ஆனால், இதை ’மறந்தும்’கூட வெளியிட்டுவிடமாட்டார்கள்.. சர்ச்சையை மேலும் சர்ச்சையாக்குவது தமிழ் சேனல்கள் என்றால், சர்ச்சையை சர்ச்சையேதுமில்லை என விளக்கம் தருகிற உலக சேனல்களும் இருக்கின்றன.. இதுக்கெல்லாம் ஒரு திராணி வேணுங்க. அது நம்ம ஊடகங்களுக்கு இல்லை என்பது வருத்தமான உண்மை..

  அன்புடன்
  கார்த்திகேயன்

 3. guna சொல்கிறார்:

  sariyana paadam

 4. jungleman சொல்கிறார்:

  ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்………ஆமாம் நண்பர்களே, இப்படி பல போலி சாமியார்கள் அப்பாவி மக்களை அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கிறேன் என்று சொல்லி அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடிகின்றனர், ராமன்ஸ்வாமிஜி ( Ramanswamiji ) என்ற போலி சாமியார் “நான் கடவுள்” என்று சொல்லி வலைதலங்களில் எமாற்றி வருகிறான், மக்களே உஷார்!!!!!

 5. s.natarajan சொல்கிறார்:

  meka arumaiyana valaithalam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s