பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்

பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்

ஆண்களின் வக்கிரமா?
பெண்கள் உடை அணியும் முறையா?

குமுதம் சினேகிதியில் நடத்தப்பட்ட இந்த விவாதத்தில் பெண்கள் சொன்ன சில கருத்துகள்.

1. இரண்டு அர்த்தம் சொல்லும் வாசகங்களை மார்பில் அணிந்து அடுத்தவர் பார்வைக்கு அளிப்பது யார்க் குற்றம்?. இது பாலியல் தொந்தரவுகளை தாம்பூலம் வைத்து அழைப்பதாகாதா?.
2. பல பெண் குழந்தைகளின் பெற்றோரே தம் பெண்கள் இறுக்கமான மற்றும் உடலழகை எடுத்துக் காட்டும் ஆடைகளை அணிவதில் ஆர்வம் காட்டுவதுடன் பெருமையும் படுகின்றனர். இந்த நிலைக்கு ஆண்களை குறை சொல்லுதல் இரண்டாம் பட்சமாகிவிட்டது.
3. புடவை கட்டினால் லோ நெக் ஜாக்கெட், சுடிதார் போட்டாலோ துப்பட்டாவை ஒழுங்காகப் போடுவதில்லை. இல்லையென்றால் ஜீன்ஸ், டீ சர்ட் இப்படி பண்ணினால் ஒழுங்காய் இருக்கும் ஆண்கள் கூட சபலப்படதான் செய்வார்கள்.

இதில் எழுபத்தி இரண்டு சதவீதப் பெண்கள் பெண்களுடைய உடையின் மீதான தவறை சுட்டி காண்மித்திருக்கின்றார்கள்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உடைகளிலிருந்து பாட்டிகள் போட்டிருக்கும் உடைகள் வரை பெண்களே தவறுகள் செய்கின்றார்கள் என்கிறது ஒரு தரப்பு.

இல்லை எப்படி ஆடை அணிந்து வந்தாலும் ஆண்கள் மோசமாக தான் நடந்து கொள்வார்கள் என்கிறது இன்னொரு தரப்பு. எல்லா ஆண்களும் சபலப் பிரியர்கள், அவர்கள் சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கின்றார்கள். பெண்கள் ஆடை விசயத்தில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் அந்த சந்தர்ப்பம் கிடைக்கின்றது. சிலர் அதை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். வேறு சிலர் சந்தர்ப்பம் கிடைத்தும் சமூகத்தின் தண்டனைக்கு பயந்து தவறு செய்யாமல் இருந்து விடுகின்றார்கள்.

ஆனால் சந்தர்ப்பங்கள் பலவும் சமூகத்தின் மீதான பயத்தினை போக்கி விடுகின்றது என்பதே உண்மை. வன்புணர்ச்சி எனபடும் கற்பழிப்புகள் பல நடப்பதற்கு சமூகமும் ஒரு முக்கிய காரணம் என்றே எனக்கு படுகின்றது. ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை ஆண் காணும் போது அவனுக்கு இச்சை உண்டாதல் இயற்கை. அது தவறென்று சமூகம் சொன்னாலும், சட்டங்கள் சொன்னாலும் இயற்கை அனுமதிக்கின்றது. அதனால் மட்டுமே இன்றுவரை ஏகப்பட்ட பாலியல் தொந்தரவுகள் பெண்களுக்கு இருக்கின்றது.

இடுப்பு தெரிய சேலை, மார்பு தெரிய டீசர்ட், துப்பட்டா இல்லாமல் சுடுதார், பின்புறம் தெரியும் ஜீன்ஸ் என எல்லாவற்றையும் பெண்கள் அதில் குறிப்பிட்டுவிட்டாலும், முக்கியமான ஒரு ஆடையை மறந்துவிட்டார்கள் அது இரவு உடை நைட்டி. உடலழகை அப்படியே காட்டிடும் இந்த உடைய இரவு அவர்கள் வசதிக்காக அணிந்து கொண்டிருந்த பலரும் பகல் நேரங்களிலும் அணிந்து வெளியே பவணி வருகின்றார்கள்.

ஆடை அணிவதில் தவறு செய்துவிட்டு பாலியல் வன்முறைக்கு அழைப்பு வைக்கும் பெண்களுடன், அந்த அழைப்பிற்கு செவி சாய்க்கும் ஆண்களை குற்றவாளியாக ஆக்கி விடுகின்றார்கள் பெண்கள். இதைப் பெண்களே ஒப்புக்கொண்டபின் நமக்கு என்ன வேலை.

இதற்கு சான்றாய் ஒரு இந்து மதக் கதை –

மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கும், அசுர்ர்ரகளுக்கும் மாறி மாறி ஏமாற்றி அமுதமும், திரவமும் கொடுக்கின்றார் விஷ்னு. அந்தப் பணி முடிந்த பிறகு அதே கோலத்தில் சிவனைப் பார்க்க செல்கின்றார். அகில லோகமும் தங்களை மறந்து மோகினியை ரசிக்கின்றது. அப்படி ஒரு அழகு. மோகினியை சிவன் பார்க்கின்றார். இது வரை இப்படியொரு அழகான பெண்ணை கண்டிராத சிவனுக்கோ மோகம் வருகிறது மோகினி மேல். தன்னுடைய ஆசையை மோகினியிடம் சொல்கிறார் சிவன். அந்த ஆசையை நிறைவேற்ற மோகினியும் தயாராகிறாள். சிவனும் மோகினியும் உடலுறவில் இடுபடுகின்றார்கள். அவர்களுக்கு பிறக்கும் குழந்தையையே ஐயப்பன் என மக்கள் வழிபடுகின்றார்கள்.

இந்தக் கதை சொல்வது மோகினியின் அழகை பார்த்த சிவனுக்கே மோகம் வருகின்றது. காமதேவனை எரித்தவனுக்கே ஒரு பெண்ணால் மோகம் உண்டாகுமானால் சாதாரண ஆண்கள் எம்மாத்தரம் என்று சொல்லாமல் சொல்கிறது இந்தக் கதை.

மார்பின் மேல் தெகிரியம் இருந்தால் தொடு, மிகவும் ஆபத்தான பகுதி, வெளியில் பார்ப்பதை விடவும் உள்ளே பெரியது என இரட்டை அர்த்த வசனங்களை எழுதிப் போகும் பெண்களுக்கு யாராவது வக்காலத்து வாங்க ஆள் இருக்கின்றார்களா?. இருந்தால் அவர்கள் 28 சதவீதம் பேரில் ஒருவர். நீங்கள் என்ன 72%மா 28% மா.

15 comments on “பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்

 1. மு. மயூரன் சொல்கிறார்:

  இங்கே இலங்கையில் யாழ்ப்பாணத்தில், 1950ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மேற்சட்டை அணியவில்லை. அப்படி மேற்சட்டை அணிய எத்தனித்தால் மேல் சாதிக்காரர்களால் தண்டிக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

  பின்தங்கிய கிராமங்களில் இன்றும் மார்புக்கச்சினையோ மேற்சட்டையினையோ அணியாமல் தொழில் பார்க்கும், நடமாடும் பெண்களைக் காணலாம்.

  உங்கள் நியாயப்படி பார்த்தால்,

  ஐம்பதாம் ஆண்டுக்கு முற்பட்ட யாழ்ப்பாணத்திலும் இன்றைய பின்தங்கிய கிராமங்களிலும் ஆண்கள் எல்லாம் பெண்களை எல்லாம் வன்புணர்ந்துகொண்டா திரிந்தார்கள்/திரிகிறார்கள்?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அப்படியா!. ஒரு வேளை அங்கிருக்கும் ஆண்களுக்கு அவர்களின் மார்பழகு பற்றி கவணமின்றியோ, மோகம் ஊட்டமலோ இருந்திருக்கலாம். உங்கள் கருத்துக்கு நன்றி!

   • சங்குமணி சொல்கிறார்:

    மயூரன் சொல்வதிலும் உளவியல் சார்ந்த உண்மை இருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். திறந்திருப்பதில் மனித மனம் அதிக ஆர்வம் கொள்வது இல்லை. ரகசியமாகப் பூட்டி வைப்பதால் ஆர்வம் கிளறிவிடப்படுகிறது.

 2. ஒருவன் சொல்கிறார்:

  1) what will u do when u see ur mom or ur sister with their (நைட்டி) nightgown?

  2) friend we are not animals we are humans.

  3) பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்?
  men who has no way of satisfying his basic sexual needs.?

  then what about thieves? y do u think they steal?
  they desperate for money or the rich showing off wealth,

  (ஆண்களின் வக்கிரமா?
  பெண்கள் உடை அணியும் முறையா?)

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   தாங்கள் கருத்து சொல்ல முன்வந்தமைக்கு நன்றி!. என்னுடைய தாயும், சகோதரியும் நைட்டி போட்டுக் கொண்டால் உறவு என்கிறமுறையிலும் சமூக நெறிகளுக்கும் வேண்டுமானால் அவர்கள் என்னுடைய கண்களிலிருந்து தப்பலாம். ஆனால் எல்லோருக்கும் என் சகோதரி சகோதரி அல்ல. அப்படி யாரும் பார்க்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.

   விலங்காய் இருந்தால் இத்தகைய சமூக சிக்கல்கள் இல்லையே, மனிதனாக இருப்பதானாயே வன்புணர்வு தவறாகப் படுகிறது.

   அடிப்படை காம ஆசைகள் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். அந்த அடிப்படை எதிர்பாலின ஆடையை வைத்தே இயங்குகிறது என்பது என் கருத்து.

 3. ஒருவன் சொல்கிறார்:

  28% ?

 4. Robin சொல்கிறார்:

  /நீங்கள் என்ன 72%மா 28% மா. // 72%

 5. Sathish சொல்கிறார்:

  இந்த பெண் படம் எங்கு கிடைத்தது

 6. ram சொல்கிறார்:

  Ya its correct its true

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s