குளிப்பதை எட்டிப் பார்த்த சிவன்

பிள்ளையார் என பெரும்பாலான மக்கள் வழிபடும் யானை முகத்தை சிவன் என்று இந்தக் கதை கூறுகின்றது. நீதி போதனைக்காக லாஜிக் பார்க்காத கதை இது. சிவனின் மகனையே சிவனாக வழங்கும் கதை.

ஆண்களில் சிலருக்கு பெண்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் மறைந்திருந்து ரசிக்கும் குணம் இருக்கிறது. இந்தச் செயலை தகாத செயல் என இந்து மத்த்தை சேர்ந்தவர் ஒருவர் நினைக்க, சிவனையும் பார்வதியையும் கதையின் நாயகர்களாக கொண்டு புனைந்த அரநெறிக் கதை.

ஒரு நாள் சிவனுக்கு பார்வதி தேவி குளிக்கும் அழகை காண ஆசை ஏற்பட்டது. அதனால் தேவி குளிக்கும் போது மறைந்திருந்து ரசிக்கின்றார். எல்லாவற்றையும் அறிந்தவள் என்பதால் சிவனின் லீலைகள் தெரிந்துவிடுகின்றன. என்ன தான் கணவன் என்றாலும் மனைவி குளிப்பதை ரசிக்கலாமா என தேவிக்கு கோபம் வருகிறது.

ஒரு பெண்ணின் அனுமதியில்லாமல் அவள் உடலை பார்ப்பது பாவம் என உலகிற்கு உணர்த்த சிவனின் முகத்தை யானை முகமாக மாற சாபமிடுகின்றார். அந்த சாபத்தின் பலனாக யானை முகனாக மாறிய சிவன் எல்லா அரச மரத்தடியிலும் அமர்ந்து பெண்கள் குளிப்பதை ரசித்து பார்க்க வரும் மனிதர்களை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றார் என கதை முடிகிறது.

முருகனுக்கு இரண்டு திருமணம் நடந்துவிட தனக்கென பெண் பார்க்கவே குளக்கரையின் அரச மரத்தடியில் பிள்ளையார் அமரந்திருப்பதாகவும் இன்னொரு கதை உண்டு. கடவுள்களேயே கதாநாயகர்களாக மாற்றி கதை சொல்லும் போக்கு எனக்கு தெரிந்து இந்து மத்த்தில் மட்டுமே உள்ள போக்கு. மனிதனின் நல்ல நடத்தைகளுக்காக பாவம் கடவுள்கள் கூட நாடகமேற்கின்றார்கள்.

பெண்களை ரசிக்கும் ஆண்களுக்கு எச்சரிக்கை விடும் கதைகள் போல ஆண்களை ரசிக்கும் பெண்களுக்கு இனி யாராவது கதை எழுதக் கூடும். ஏற்கனவே எழுதப்பட்டிருந்தால் சுட்டி கொடுக்கவும்.

4 comments on “குளிப்பதை எட்டிப் பார்த்த சிவன்

  1. SARAVANASAMY.PK சொல்கிறார்:

    A TRUTH WILL NEVER BE FALSIFIED. HENCE NO COMMENTS ON YOUR TRUTH

  2. கொடுக்கு சொல்கிறார்:

    சிவன் கூட தப்பு பண்ணினா, தண்டனை கிடைச்சுடுது. ஆனா இங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒன்னுமே கிடைக்கிறதில்ல.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s