கேள்விக் குறியான பிரம்மச்சரியம்

நித்தியானந்தர் ரஞ்சிதா காணொளி வெளிவந்திருக்கும் இந்த வேளையில் என்னுடைய பதிவும் முக்கியம் வாய்ந்த்தாக உணர்கிறேன். இந்து மதம் உட்பட எல்லா மதங்களும் தலையில் தூக்கி வைத்திருக்கும் விஷயம் “பிரம்மச்சரியம்”. சமீபகாலமாக வெளிவரும் செய்திகள் இந்த பிரம்மச்சரியத்தினை கேள்விக்குறியாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் எது பிரம்மச்சரியம். ஏன் பிரம்மச்சரியத்தினை இப்போது பின்பற்ற இயலுவதில்லை என கொஞ்சம் அலசுவோம்.

எது பிரம்மச்சரியம் –
பிரம்மச்சரியம் என்பது ஒழுக்க நிலை. இன்னும் தெளிவாக சொன்னால் அது புலனடக்கம். ஐந்து புலன்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்.
மகாத்மா காந்தியடிகள் பகவத்கீதைக்கு The Interpretations of Gita,The Gospel of Selfless Action என்ற உரையை எழுதியுள்ளார். கீதையின் சாரம்சத்தினை உணர்ந்து வாழ 1.சத்தியம், 2.பிரம்மச்சரியம், 3.அஹிம்சை, 4.அஸ்தேயம், 5.அபரிக்ரஹம் இவற்றை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார். நாம் பிரம்மச்சரியத்தினை பற்றி மட்டுமே பேச முடியாது. ஏனென்றால் அதற்கெல்லாம் முன்நிற்கின்ற சத்தியம் என்கிற உண்மையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவனால் மட்டுமே பிரம்மச்சரியத்தினை கடைபிடிக்க இயலும். புலனடக்கம் எளிதானதல்ல என்பதால் எவன் உண்மைக்காக தன்னை வருத்தி அதனை ஏற்றுக்கொள்கின்றானோ, அவனுக்கே பிரம்மச்சரியம் கைகூடும். அதன் பின்புதான் மற்ற நிலைகள்.

எதுவரை பிரம்மச்சரியம் –
விவேகானந்தர் தன்னுடைய பிரம்மச்சரியத்தினை தன் வாழ்நாள் முழுக்க கடைபிடித்திருந்தார். ஆனால் இந்து மதம் எல்லோரையும் அப்படியே வாழுமாறு சொல்லவில்லை. அது பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், துறவறம் என்ற நான்கு நிலை கோட்பாட்டின் படி வலியுருத்துகிறது. இந்த நான்கில் பிரம்மச்சரியம் முதல் நிலை மற்றும் பயிற்சி நிலை. ஒருவன் பிறந்ததிலிருந்து பதினாறு வயதுவரை பாலபருவம்.அச்சமயம் அடிப்படைக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. பின் பதினாறு வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை பிரம்மச்சரியம். அதன் பின் மனைவியுடன் இல்லற வாழ்க்கை புக அனுமதியளிக்கிறது. கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், துறவறம் ஆகியவை அடுத்தடுத்த நிலையில் நிகழ்கின்றன.

இல்லறம் அனுமதிக்கப்பட்டதே! –
நான்கு நிலை கோட்பாட்டின் படி கிரகஸ்தம் என்கிற இல்லற வாழ்க்கைக்கு பிரம்மச்சரியம் முதல் நிலையாக இருக்கிறது. முழுமையான பிரம்மச்சரியம் எப்படி அனுமதிக்கப்பட்டதோ, அதே போல இல்லறமும் அனுமதிக்கப்பட்டதே. ஆனால் இதனை மக்கள் உணரவில்லை. அதன் விளைவைத்தான் இன்று கண்டுகொண்டிருக்கிறோம். முதல் சித்தராக போற்றப்படும் அகத்தியர்கூட லோபமுத்திரை என்ற பெண்ணை மணந்து வாழ்ந்துள்ளார்.

நித்தியானந்தர் ரஞ்சிதா –

இல்லற வாழ்க்கையில் விருப்பம் இருந்திருந்தால் முறையாக திருமணம் செய்து கொண்டு நித்தியானந்தர் வாழ்ந்திருக்கலாம். இந்த திருமணம் என்பது அவருடைய ஆன்மீக வாழ்க்கையை பாதித்தே இருக்காது.
பிரம்மச்சரியம் துறவறத்திற்கு முதல் நிலை. அதையே சரிவர கடைபிடிக்காத ஒருவன், அடுத்த நிலைக்கு செல்ல இயலாது. காந்தியடிகள் சொன்ன உண்மை பிரம்மச்சரியத்திற்கும் முன்பே உள்ள நிலை. நித்தியானந்தர் ரஞ்சிதா காணொளியால் அடிப்படை விஷயங்களே நித்தியானந்தருக்கு இல்லை என்று காட்டியிருக்கின்றன. இனியும் பிறருக்கு அறிவுரை கூறவும், ஆன்மீக சொற்பொழிவு நடத்தவும் அவர் முயன்றால் அதைக் கேட்க அறிவற்றக் கூட்டமே செல்லும்.

One comment on “கேள்விக் குறியான பிரம்மச்சரியம்

  1. chandran சொல்கிறார்:

    Thanks for your information about ther.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s