சிற்பக்கலையை பாதுகாப்போம்

உலகம் முழுவதும் இந்தியா இனங்காணப்படுவது காந்திய நாடென்றும், கலையில் சிறந்த நாடென்றும் தான். பல்வேறான கோவில்கள் நிறைந்த பூமி என்பதால் சிற்பக்கலைக்கு பஞ்சமில்லா பூமி இந்தியா.

மற்ற நாட்டிலிருந்து வந்து புகைப்படம் எடுக்கவும், வரலாற்றை தெரிந்து கொள்ளவும் வருகின்ற கூட்டத்தினரிடையே இருக்கும் ஆர்வம் நம்மில் பலருக்கும் இருப்பதில்லை. திருவரங்கத்தின் தாயார் சன்னதியில் வெளிநாட்டினருக்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. வேறு மதத்தவருக்கு அனுமதி மறுக்கபடும் இடங்களில் எனக்கு கொஞ்சம் வருத்தம் வருவதுண்டு, என்றாலும் மகிழ்வும் வரும் இந்துவாக பிறந்தமைக்காக.

ஒருவேளை மாற்று மத்த்தில் பிறந்திருந்தால் அரிய பல சிற்பங்களும் கதைகளும் கிட்டாமலேயே போயிருக்கும். இதற்கே அதிக இடங்களை பார்க்க முடியாமல் வருத்தம் கொண்டிருக்கின்றேன். சுற்றிப் பார்க்க வேண்டிய கோவில்களுள் எனக்கு தாராசுரம் தான் முதல் இடம். அந்தக் குறையையும் தீர்த்து வைக்க கல்லிலே கலைவண்ணம் கண்டோம் எனும் வலைப்பூ இருக்கிறது. அதன் முகவரி இது http://www.poetryinstone.in/

படங்களை மட்டும் தராமல் விளக்கங்களும், நேர்த்தியான கலை நுனுக்கங்களை விவரித்து எழுதியிருக்கும் விதமும் அருமை. பலவகையான இடங்களுக்கு சென்று சேகரித்த விசங்களை படிக்கும் போது, எனக்கு பொறாமையாக இருக்கிறது, கடவுள் அவர்களுக்கு மட்டும் ஏதோ சலுகை காட்டிவிட்டது போல.

நான் பார்த்து ரசித்தவை,.

கற்சங்கிலி –

நவீன கருவிகளுன் செய்யப்படுகின்ற வேலைகளை விட சின்ன சின்ன உளிகள் கொண்டே முடித்திட்ட நம் சிற்பிகள் இன்னும் வியப்பு தருகின்றார்கள். பலருக்கும் திருச்சி என்றவுடன் மலைக்கோட்டைதான் ஞாபகம் வரும். அந்த மாபெரும் மலைக்கோட்டையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவிலில் அழகான ஓவியக் கூடம் இருக்கிறது.

நான்கு, ஐந்து உடல்களுடன் உள்ள குரங்கு ஓவியம் வெகுவாக ஈர்த்தது. அந்த ஓவியத்தின் நடுப்பகுதியில் மட்டும் ஒரு குரங்கு தலை காணப்படும். அந்த தலைக்கு தகுந்தாற்போல குரங்குகளின் உடல்கள் சுற்றி சுற்றி வரையப்பட்டிருக்கும். அந்தக் கூடத்தில் கல்சங்கிலி ஒன்றை கண்டேன். இரும்பு சங்கிலியைப்போலவே முழுக்க முழுக்க கற்கலால் நேரித்தியாக செய்யப்பட்ட அற்புதம் அது.

குடைவரைக் கோவில் –

இது நாமக்கல் மலையில் உள்ளது. நாமக்கல் என்றாலே பலருக்கும் ஆஞ்சிநேயர்தான் ஞாபகம் வருவார். சிலருக்கு முட்டையும், விவரம் அறிந்தவர்களுக்கு எய்சும் ஞாபகம் வரலாம். நாமகிரி என்ர அந்த மலையிலும் கோட்டை அமைந்துள்ளது. அந்த மலையில் இருக்கும் நரசிம்மர் சந்னதியில் இருக்கும் குடைந்து செய்யப்பட்ட சிலைகள் மனதை கொள்ளையடிப்பவை. நரசிம்மரின் இருபுறமும் தேவர்கள், புராண சிற்பங்களும் இருக்கும். எல்லாம் குடைந்து செய்யப்பட்டவை. பக்தனுக்கு கடவுளாக காட்சி தரும் சிலைகள். எனக்கு அருமையான கலையாகவும் தெரிந்த்தே பெரும் பாக்கியம்.

பெரிய நந்தி –

தஞ்சையை தவிற பெரிய நந்தியை நான் வேறெங்கும் பார்த்து இல்லை. மிகப்பெரிய கோவிலின் ஆவுடையாரும் சிறப்பு. கோவில் அமைப்பு மிகவும் பெரியது. எனக்கு தெரிந்து பல காலமாக வராகிக்கென தனி கோவில் இருப்பது அங்குதான். இப்போது சில இடங்களில் சப்த கன்னியர்களில் வராகிக்கும், கௌமாரிக்கும் கோவில்கள் அமைக்கப்படுகின்றன. தினமலர் ந்ந்தி அபிசேகத்தை எப்போதும் வண்ணப் படங்களுடன் வெளியிடும். அந்தப் படங்களைப் பார்க்கவே அத்தனை இன்பமாக இருக்கும் எனக்கு.

கோவிலுக்குள் இசைகலைஞர்கள் –

பறைகளை அடிக்கும் இருவரின் சிலைகள் தொட்டியம் மருதகாளியம்மன் கோவிலுக்குள் இருக்கும். மதுரையில் இருந்த காளியின் திருவிழாவிற்கு பறையடிக்க சென்ர இருவரின் இசையில் மயங்கி தேவி. அவரிகளுடனே தொட்டயத்திற்கு வந்துவிட்டதாக தளபுராணம் இங்கு சொல்லப்படுகின்றது. அதற்கு சாட்சியாய் இரண்டு பறையடிக்கும் மேதைகளும் அங்கே சிலையாய் இருக்கின்றார்கள். இந்த கோவிலில் எருமைமாடுகள் பலி கொடுப்பதை பார்த்திருக்கின்றேன். ஆடுகளைப் போல மாடுகள் பலி கொடுக்கும் இடம் எனக்கு தெரிந்து இது ஒன்று மட்டுமே.

நுண்ணிய வேலைபாடுகளுடன் இருக்கும் சிலைகள் சுற்றுப் பிரகாரங்களில் சில புராணக் கதைகள் முழுவதும் செதுக்கிஇருக்கும் சிற்பிகளுக்கு பாராட்டையும் நன்றியையும் அந்த சிற்பங்களை பலகாலம் பாதுகாத்து சொல்லவேண்டும். உயிருள்ள புலிகளை பாதுகாக்க அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது போல சிலைகளை காக்கவும் ஏதேனும் அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.

2 comments on “சிற்பக்கலையை பாதுகாப்போம்

  1. vidhaanam சொல்கிறார்:

    கல்லை உடைத்து உடைத்து உருவாக்கப்படும் சிற்பக் கலை எப்போதும் பெரும் மலைப்பை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு சிறு தவறு ஏற்பட்டால் மொத்தமும் வீணாகிவிடுமே! களிமண் வைத்து சிலை செய்தால் பூசி மொழுகி சரிசெய்து விடலாம். கல்லில் எப்படி அது முடியும். தவறுகளே இன்றி எப்படி இதையெல்லாம் சாதித்தார்கள்.

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      ஆம் நண்பரே. மிகப்பெரிய சாதனைதான். ஒரு சாக்பீஸ் கட்டியை வைத்து சிற்பம் வடிக்க முயன்றுபோதுதான் கல் சிலையின் வியப்பும் உழைப்பும் புரிந்தது. நம் முன்னோர்கள் திறமைசாலிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s