சோழியன் குடுமி சும்மா ஆடுமா

சோழர்கள் வம்சத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் என்பதாலேயே சோழியர் என்ற பட்டம் வந்திருக்கலாம். சோழியன் குடுமி சும்மா ஆடுமா சோழியன் தனக்கு லாபமில்லா எந்த செயலிலும் ஈடுபடமாட்டான் என்று எண்ணக் கூடியாத இருக்கிறது.

ஆனால் இதை மறுக்கும் ஆன்மீகப் பேச்சாளர் சுகி சிவம் “சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள் . இதற்கு சும்மாடு என்று பெயர். ( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) . ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது.ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.” என்கிறார்.

இதற்கும் மேல், கிராமங்களில் சொல்லப்படுகின்ற கதை இது –

எருதூரில் வாழ்ந்து வந்த சோழியன் என்பவன் அதிகம் படிப்பறிவு இல்லாதவனாக இருந்தாலும் எதை செய்தாலும் அதற்க்கு ஒரு காரணம் இல்லாமல் செய்யமாட்டான் என்று அந்த ஊரில் உள்ள அனைவரும் நம்பினர். இதனால் அவனிடம் அந்த ஊரில் உள்ள பல படித்தவர்கள் உள்பட அனைவரும் அவனது செய்கைகளை கவனித்து வந்ததுடன், அந்த செய்கைகளுக்கு பெரிதும் மதிப்பளித்தும் வந்தனர்.
அந்த காலத்தில் எல்லோருமே குடுமி வைத்திருந்தனர், யாரோ ஒரு சிலர் மட்டுமே சதுரவட்டை என்று சொல்லக்கூடிய முடித்திருத்தம் செய்வது வழக்கம், சோழியனுக்கும் அவனது தந்தையை போலவே குடுமிதான். சோழியனுக்கு ஐந்து வயதிருக்கும் போது அவன் பெற்றோர் அவனை கூத்துப்பட்டறையில் சேர்த்து விட்டனர், இதற்க்கு காரணம் இவனது இரண்டு அக்காள்களும் நாட்டியம் பயின்று வந்ததுடன், அந்த காலத்து திண்ணைபள்ளிக்கூடம் சென்று வந்தனர், அவர்களிருவரும் திறைமைசாலிகள் என்றும் பெயரெடுத்து வந்தனர்.

சோழியனை திண்ணை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிய போது அவன் அங்கே படிக்காமல் விளையாடுவதும் சுட்டித்தனங்கள் செய்வதுமாக இருந்து வந்ததால் திண்ணை பள்ளிக்கூட வாத்தியார் அவனது பெற்றோரை வரச் சொல்லி, இவனுக்கு படிப்பில் ஆர்வமில்லை, அவன் மற்ற மாணவர்களையும் படிக்க விடாமல் குறும்புத்தனம் செய்கிறான், கண்டித்தாலும் செவி கொடுப்பதில்லை இதனால் அவனுக்கு வேறு எதில் ஆர்வமிருக்கிறதோ அதில் சேர்த்து விடுமாறு சொல்லி இனி திண்ணை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேண்டாம் என்றும் கூறி அனுப்பிவிட்டனர்.

அடுத்த ஊரிலிருந்த கூத்துப்பட்டறைக்கு சிறுவர்களை சேர்த்துகொள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோழியனை அங்கே சேர்த்துவிட்டனர். சோழியனுக்கு வேறு வழியில்லாமல் போகவே கூத்துப்பட்டறையில் சேர்ந்து காலம் ஓட்டி வந்தான், சோழியனை கூத்தில் சாமரம் வீசுவது இன்னும் பல வசனம் பேசாத வேடங்களில் நிற்க வைத்தனர், ஒருநாள் பாட்டு பாடும் சிறுவன் ஒருவனுக்கு காய்ச்சல் என்பதால் அந்த சிறுவனுக்கு பதில் அரிச்சந்திரன் கூத்தில் அச்சிறுவனின் வேடத்தில் இவனை நிறுத்திவிட்டு பின்னாலிருந்து இவனுக்கு பதில் வேறொரு பெரியவர் வசனம் பேசி சோழியனை அந்த பையனுடைய வேடத்தில் நிற்க வைத்து அன்றைய கூத்தை முடிக்க வேண்டியதாகிவிட்டது.

அந்த கூத்தை சோழியனின் ஊர் மக்களில் சிலரும் சோழியனின் பெற்றோரும் பார்த்ததிலிருந்து சோழியன் ஒரு நடிகனாகிவிட்டது போன்ற பரவசமடைந்தனர். சோழியன் வளர வளர, சிறு சிறு வேடங்கள் கொடுத்து கூத்து நடத்தி வந்தனர். சோழியனின் அம்மாவிற்கு உடல் நலம் சரியின்றி போனதாலும் சோழியனின் தமக்கைகள் இருவருக்கும் திருமணமாகி அவர்கள் கணவன் வீட்டிற்கு சென்றுவிட்டதால் வீட்டில் துணைக்கு வேறு ஆள் இல்லை என்ற காரணமும் சோழியனை நிரந்தரமாக கூத்து பட்டறையிலிருந்து கூட்டி வந்து வீட்டில் அவனுடைய பெற்றோர் அவனை தங்களுடனேயே வைத்துக்கொண்டனர்.

சோழியன் ஆற்றிலோ குளத்திலோ கிணற்றிலோ குளித்து முடித்து விட்டு தன்தலை முடியை உலர்த்தி கொண்டு நின்று கொண்டிருக்கும் சமயங்களிலும், மற்ற பல சமயங்களிலும் தான் கற்றுக்கொண்ட கூத்தை நினைவு படுத்திகொள்வான், தன்னை மறந்து அந்த கூத்தின் கதாபாத்திரங்களின் நினைவில் ஒன்றி விடுவான், அப்போது அவன் தனது தலையை ஆட்டி ஆட்டி வசனங்களையும் பாடல்களையும் தனக்குத் தானே சொல்லி கொள்வான், அப்போது அவனது தலைகுடுமி ஆடி கொண்டே இருக்கும், அவனிடம் அவனது குடுமி ஆடுவதற்கு காரணம் கேட்ட சிலரிடம் ‘ நான் கூத்துப் பட்டறையில் கற்றுக்கொண்ட முழுவதும் உங்களுக்கு சொல்லி விளக்க முடியாது, அதனால் என் குடுமி ஆடினால் அதற்க்கு ஒரு காரணமிருக்கும்’ என்பானாம். சோழியனின் குடுமி ஆடினால் கிராம மக்கள் சோழியன் எதைசெய்தாலும் அதற்க்கு ஒரு காரணம் இருக்கும் அவனது குடுமி ஆடினால் கூட அதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்து கொள்வார்களாம்,

அதனால் சோழியனின் குடுமி காற்றில் ஆடினால் கூட நிச்சயம் அதற்கொரு காரணமிருக்கும் என்று ‘ சோழியன் குடுமி சும்மா ஆடாது ‘என்ற வழக்கு வந்ததாக கதை.

சோழிய வேளாளர் –

சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப் பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில் இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர் சமூகத்திலும் பளிங்கில்லம், மஞ்சநாட்டு இல்லம், தோரணத்தில்லம், மூட்டில்லம், சோழிய இல்லம் எனும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பி.கு –

பிள்ளைமார் சமூகத்தில் சோழிய வெள்ளார் என்ற சிறு பிரிவு இருக்கிறது. இந்த பழமொழி அவர்களைக் குறிப்பதாகவே எண்ணியிருந்தேன். சைவ பிள்ளைகளைப் பற்றி தேடலில் இந்த பழமொழியையும் இணைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது காலத்தின் கட்டாயம் போல.

நன்றி –
தமிழில் எழுதுவது இன்பம்

4 comments on “சோழியன் குடுமி சும்மா ஆடுமா

 1. balaji chola சொல்கிறார்:

  CHOLIYA VELLALAR IS NOT A SMALL GROUP. THEY ARE REAL CHOLAS. THEY ARE DOMINATING IN TRICHY, THANJAVUR, KUMBAKONAM, ARUPPUKOTTAI, PUDUKKOTTAI,ARANTHANGI,NAGAI, KERALA. SRILANGA.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அதிகம் உள்ள பகுதிகளெல்லாம் ஆட்சி செய்யும் பகுதிகள் ஆகாது நண்பரே!,. சோழிய வெள்ளாள தலைவர் ஒருவர் தேர்தலில் நின்று படுதோல்வி அடைந்ததை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

  • Anand சொல்கிறார்:

   Everybody know that all community is very good community comparing then STUPID SUGI SIVAM COMMUNITY. இவன் சுகி சிவமல்ல; சுகி சவம். பேசிப்பேசி பிழைப்பு நடத்துகிற பரதேசி. யார் பணம் கொடுத்தாலும் சொரணையில்லாமல் கத்தும் கழுதை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s