பிள்ளைமார் சமூகம்

பெரியாரும் அவரது சீடர்களும் இன்றும் தோல்வி அடைவது கடவுள் மறுப்பு கொள்கையிலும், சாதி ஒழிப்பிலும் தான். தமிழகத்தில் தெருக்கு தெரு முளைத்திருக்கும் கோவில்களும், சாதிச் சங்கங்களும் இதை நன்கு உணர்த்துகின்றன. சாதியின் அடிப்படையில் மட்டுமே ஓட்டுகள் கிடைக்கும் என அரசியல் வாதிகள் அதனை வலு சேர்க்க, சாதியின் அடிப்படையில் மட்டுமே சலுகை கிடைக்கும் என மக்களும் சாதியை வளர்க்க தொடங்கி விட்டார்கள்.

வன்னியர் சமூகம் அரசியலில் பெரும் பங்கு கொண்டுவிட்டதை முன் உதாரணமாக கொண்டு, சாதியின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகளுக்காக எல்லா சாதி மக்களும் தங்களை குழுவாக ஒருங்கினைக்க பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளன. சாதிச் சங்கம் அமைப்பது, தங்களுக்கென திருமண மண்டபம் அமைப்பது, தங்களுடைய குல தெய்வங்களின் கோவில்களை அமைப்பது என மிக தீவிரமாக செயல்பட்டு வரும் மக்களுக்கு, இப்போதைய உடனடித் தேவை தலைவர்கள்.

தங்களுடைய சாதியில் பெரிய மனிதராக விளங்கியவரையோ, அல்லது பெரிய மனிதர்களில் தங்கள் சாதியை சார்ந்தவர்களையோ தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவர் சமூகத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க அய்யாவும், நாடார் சமூகத்திற்கு காமராசர் அய்யாவும் உள்ளது போல பிள்ளைமார் சமூகத்திற்கு யாரை தேர்ந்தெடுப்பதென தேடிக் கொண்டிருக்கின்றார்கள். மிகவிரைவில் புதிய ஜாதிக் கட்சி மிகுந்த பலத்தோடு அரசியலில் குதிக்கும் எனவும் தெரிகிறது.

பிள்ளைமார் சமூகத்தில் உள்ள பெரியவர்களின் பட்டியல் இது –

வ.உ.சிதம்பரம் பிள்ளை – கப்பலோட்டிய தமிழன்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை – தமிழ்தாத்தா உ.வே.சாவின் ஆசிரியர்
மனோன்மணியம் சுந்திரம் பிள்ளை – தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர்
தேசிக விநாயகம் பிள்ளை – கவிமணி
ஆனந்தரங்கப் பிள்ளை – கப்பல் ஓட்டிய முதல் தமிழர்
எஸ்.வையாபுரிப் பிள்ளை – தமிழறிஞர்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை – தமிழ் நாவலாசிரியர்
சுப்ரமணியபிள்ளை – கட்டபொம்முவின் மந்திரி
சர்தார் வேதரத்தினம் பிள்ளை – சுகந்திர போராளி
ஜெய்ஹிந்த் செண்பகராமன் – சுகந்திர போராளி
வடலூர் வள்ளலார் – சைவ சன்மார்க்கத் தலைவர்
மறைமலையடிகள் – தமிழ்த் தொண்டர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் – புலிகளின் தலைவர்
தோழர் ஜீவா – கம்யூனிச தலைவர்
ஏ.சி.பி. வீரபாகு – முன்னால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
எம்.சி. வீரபாகு – சுகந்திர போராட்ட தியாகி
பரலி. சு. நெல்லையப்பர் – பாரதியின் உற்ற நண்பர்
சி.வை. தாமோதரம் பிள்ளை – பதிப்புப் பணியில் முன்னோடி
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை – விடுதலைக் கவிஞர்
கி.ஆ.பெ. விஸ்வநாத பிள்ளை – தமிழ் வளர்த்த மகாஞானி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – சிறந்த திரையுல கவிஞர்
கணிதமேதை எஸ்.எஸ். பிள்ளை – உலகப் புகழ் பெற்ற கணித மேதை
அகிலன் – இலக்கிய எழுத்தாளர்
வல்லிக்கண்ணன் – பிரபல எழுத்தாளர்
சுகிசிவம் – ஆன்மீகப் பேச்சாளர்
ஜெயகாந்தன் – பிரபல எழுத்தாளர்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம். பிள்ளை என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், சோழிய வெளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.

இந்தப்பட்டியலில் இடம் பெறாத தலைவர்கள் மன்னிக்கவும், சாதித் தலைவர்கள் யாரேனும் இருந்தால் நண்பர்கள் தெரிவிக்கவும். பெயரோடு அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் கொடுத்தால் வருங்கால கட்சிக்கு உதவியாக இருக்கும்.

நன்றி –

இரா. மணிகண்டன், குமுதம்

28 comments on “பிள்ளைமார் சமூகம்

 1. poovalingam சொல்கிறார்:

  idea kotukireeingala alla sathi katchi varuvathu nallathu ilai endru varuthapadukintreerkala

 2. போச்சு போ சொல்கிறார்:

  ஐயா இப்படி ஒரு பதிவு போட்டு உங்க பேரா ரிப்பேர் பண்ணிக்கணுமா நீங்க?
  இந்தக் கேடு கெட்ட லிஸ்டுல பிரபாகரன் பேருமா?
  வேலுப்பிள்ளை என்றிருந்தால் அது பிள்ளைமார் சமுகப் பேராகத் தான் இருக்கணுமா? அடப் பாவிங்களா, அவர் அந்த சமூகத்த சேர்ந்தவர் இல்ல.
  இவங்க சமூகத்துக்கு சரியான தலைவரா ஜாதிலாம் இருந்தாத்தான் வாழ்வு சுவாரசியமானதென இயம்பிய ஜெய ஜெய ஜெய ஜெயகாந்தனப் போடலாம். பெருந்தலைவரா இந்த ஜாதிவெறிக்கு சமஸ்கிருதம் துணைகொண்டு வழி சமைத்த வையாபுரிப் பிள்ளைய எடுத்துக்கட்டும்!

 3. வே.நடனசபாபதி சொல்கிறார்:

  ஆனந்தரங்கம் பிள்ளை கப்பலோட்டிய முதல் தமிழர் என குறிப்பிட்டு உள்ளீர்கள்.உண்மையில் அவர் புதுவையில் பிரெஞ்சு அரசின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். அவரது கட்டுரைகள் சரித்திர சான்றுகளாக இன்றளவும் உபயோகிக்க படுகின்றன. மேலும் பிள்ளைமார் சமூகத்தினர் தங்களை அடையாளம் காட்ட தலைவரை தேடுவதாக எழுதியுள்ளீர்கள். அது அவ்வளவு சுலபமல்ல. ஏனெனில் பிள்ளைமார்களில் அநேக பிரிவு உண்டு. நீங்கள் எழுதியுள்ள தலைவர்கள் அனைவருமே ஒரே பிரிவைச்சேர்ந்தவர்கள் அல்ல.

 4. தமிழன்பன் சொல்கிறார்:

  பிரபாகரன் கரையார் எனப்படும் பரவர் சமுகத்தை சார்ந்தவர்(மீன்பிடி தொழில்) அவர் பிள்ளைமார் எனப்படும் வேளாளர் சாதியை சார்ந்தவர் அல்ல. ஆனால் ஈழத்தில் இருந்த/இருக்கும் பெரும்பான்மையான அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் பிரபாகரனால் கொல்லப்பட்ட பல தலைவர்களும் வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்களே.

 5. balaji chola சொல்கிறார்:

  dai thambi jagadeeswara,methagu tamil desia thalaivar VELU PILLAI PRABHAKARAN
  VEELAR inathavarey . VANGA KADALAYE VANAGA VAITHA VELLA KULA SATHRIYANADA. His native is TRICHY DA. YENDA ADUTHA JATHI KARANLAM ONU KUDURATHU THERIYALLA , NANGA ONU KUDUNA UNNAKU ENNADA. MUTHLA ADUTHAVANUNGALA NIRUTHA SOL , APPURAM NANGA NIRUTHUROM. MALIKKOTTAI HIGHT VELLALANODA WAITU DA. MODHATHA ODNCHIDUVA.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அண்ணே, பட்டியலில் வேலுப்பிள்ளை பிரபாகரன் – புலிகளின் தலைவர் என்று இருப்பதை பார்க்கவில்லையா!. மத்த சமூகம் எப்பவோ ஒன்னு சேர்ந்திடுச்சு. இன்னும் இங்கே தலைவரையே தேர்ந்தெடுக்கலைன்னு உங்களுக்கு தெரியாதா!.

   எத்தன விழாவுல வ.உ.சி படத்தை நீங்க பார்த்திருக்கீங்க. வாசன் கூட நடந்த பிரட்சனை தெரியுமா. சோழிய சங்கத்தலைவர் தேர்தல் தோத்துபோய் அரசியலே வேனாமுன்னு ஒதுங்கிட்டதா ஊருல சொன்னாங்க. இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் நீங்க, மலைக்கோட்டை ஹைட்டு அப்படின்னு பஞ்ச் பேசினா நான் என்ன பண்ணறது.

   • balaji chola சொல்கிறார்:

    தம்பி ஜெகதீஸ்வரா , முதலில் திருச்சியோட வரலாற தெரிஞ்சிகிட்டு அப்புறம் என்கிட்ட பேசு , திருச்சியில முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாமே நம்ப ஆளுக, திருச்சி தி.மு.க வின் தூண்கள் மா. பாலகிருஷ்ணன் பிள்ளை . பா. பரணிகுமார் , அய்யா . மலர்மன்னன் . சேர்மன் .கிருஷ்ணமூர்த்தி பிள்ளை .எக்ஸ்.எம்பி. அடைக்கலராஜ் , இன்றைய மேயர் சுஜாதா உள்பட நம்ப ஆளுங்கப்பா சும்மா எதுவுமே தெரியாம ,ஐயோ வுங்க ஜாதிகரவுங்க தோதிடங்க்கா, சீட்டு தரல , அப்டி ,இப்டின்கிற , ஆமா நீ யாரு ? எந்த ஊருகார பயபுள்ள?

   • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    அண்ணாத்தே, ஜெயபால் தொட்டியம் – பாலசமுத்திரம் பகுதியில் போட்டியிட்டத பற்றி சொன்னேன். அப்புறம் விசாரிச்சிக்கிட்டு சொல்லுங்க. நீங்க சொல்ல ஆளுகளெல்லாம் வேறு கட்சியை மையமா வைச்சுதான் இருக்காங்க. தனியா நின்னா ஜெயிக்க முடியுமா. யோசிச்சுட்டு சொல்லுங்க. நம்ப ஆளுகளை நம்பின என்னாகுமுன்னு ஜெயபாலன் அண்ணாச்சிக்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.

 6. balaji chola சொல்கிறார்:

  OTHER VELLALARS IN TAMIL FILM INDUSTRY,
  N.S.KRISHNAN – CINE ACTOR (KALAI VANAR)
  VIJAY – ILAYA THALAPATHI
  S.A.CHANDRA SEKAR – CINE DIRECTOR
  VIJAYAKUMAR – ACTOR,
  ARUN VIJAY – ACTOR,
  SUNDAR.C – ACTOR& DIRECTOR,
  VADIVEL – FAMOUS COMEDY ACTOR IN TAMIL FILM INDUSTRY
  G.VISWANATHAN PILLAI – FOUNDER OF G.V.N CANER CENTRE IN TAMIL NADU

 7. balaji chola சொல்கிறார்:

  தம்பி ஜெகதீஸ்வரா, ஜெயபால் எப்பயா எலேய்க்க்சன்ல நின்னாரு, எந்த கட்சியில நின்னாரு ? எனக்கு தெரிஞ்சு இல்லப்பா , உனக்கு தெரிஞ்சா சொல்லு . அப்படியே நின்னாலும் அவர் ஏன்யா தொட்டியம் தில நிக்கணும் அங்க முத்திரையர் ஒட்டு தானே அதிகம் . தம்பி நீ தெரிஞ்சு பேசுறியோ , இல்ல தெரியாம பேசுறியோ ? தெரியலப்பா . அண்ணல் ஒன்னு மட்டும் உறுதி நம்ம மக்கள் தான் பா திருச்சி -1 ,௨ பூராவும் , அதனால தான் விஜய் இந்த தொகுதியில நிக்கலாம்னு யோசிகிராராம். அது மட்டும் இல்ல திருச்சில இப்ப வ.உ.சி பேரவையை பற்றி தான் பேச்சே தெரியுமுல . இவ்வளவு காலம் நமக்குளே அடிசிக்கிடோம் . இப்ப தான் நாம யாருன்னு நமக்கே புரியுது . இனி ஒன்னு மண்ணா கடபோம்ல

 8. selvakumar சொல்கிறார்:

  பிள்ளைமார் சமூகத்தில் உள்ள M.L.A பட்டியல் please

 9. BALU சொல்கிறார்:

  HAI NAM INA MAKKALE VELUPILLAI PIRABHAKARAN SOZHIYA VELLALAR INAM ENTRU HISTORYE SOLLUTHU APPARAM THALAIVAR PATHY EVANACHUM THAPA SONNAN MAVANE VETUTHAN VIZHUM INTHA SOZHA DESAME ONU KODI VETTUVOM BY TAMIL NADU SOZHIYA VELLALAR INAM

 10. தமிழன்பன் சொல்கிறார்:

  பாலு எப்பையா பிரபாகரன் கரையார்(பரவர்) சாதிலருந்து சோழியவேளாளருக்கு மாற்றமானவர்… கருநாய்நிதியின்ர சமச்சீர்கல்வி வரலாற்றிலயோ?

 11. raja சொல்கிறார்:

  mr tamilanpan neenga veena pona thirumavalavan mathiri alunga pesurathai kettu pesathinga talaivar prabhakaran pillaimar samugam than,,,,, melum vivarangalukku today vellalar histry book vankavum,,,,,,,,,,,,,,,,,,,,,,valka prabhakaran pugal,, valga v o c pugal,,,,,,,,,,,,,

 12. boominathan சொல்கிறார்:

  வேளாளர் உட்பிரிவுகளை தவிர்த்து விட்டு “வேளாளர் சங்கம்” என்ற பெயரில் அணி திரள்வோம் பிறகு கட்சி, ஆட்சி, அதிகாராம் எல்லாம். இதற்கு உடனடி தேவை முழுநேரம் உழைக்க கூடிய இன பற்றுள்ள சிலநபர்கள், சிலகால உழைப்பிற்கு பிறகு வெகுமக்கள் திரளும் வலுமிக்க தலைமையும் தானே அமையும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s