நக்கீரன் சிவன் – யார் சொன்னது சரி

ஆண்டாடு காலமாக ஒரு கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்து வருகிறது. அந்தக் கேள்வி.

“இந்த காரை வைச்சிருந்த சொப்பன சுந்தரியை யார் வைச்சிருக்காங்க” கரகாட்டகாரன் படத்தில் செந்தில் இந்தக் கேட்டு கவுண்டரிடம் வாங்கி அடிகள் ஏராளம் ஆனால் பதில் கிடைக்கவில்லையென ஒரு குறுஞ்செய்தி இப்போது சுற்றிக் கொண்டு வருகிறது.

இதே போல எனக்கும் ஒரு கேள்விக்கு பதில் நெடுங்காலம் தெரியாமல் இருந்தது. அது “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?”.

திருவிளையாடல் படத்தில் நக்கீரருக்கும் சிவனுக்கும் இடைய நடக்கும் வாதங்கள் கூட ஞாபகம் இருக்கின்றது. ஆனால் முடிவை சரியாக சொல்லாது, தருமி போல தனியாக புலம்ப வைத்துவிட்டார்கள் நம்மை. இருந்தாலும் முனைவர்.இரா.குணசீலன் அவர்களின் வலைதளத்தில் (gunathamizh.blogspot.com) முடிவை அறிந்து கொண்டேன்.

பாடல் 1 –

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.“

பொருள் –

தலைவன் தலைவியின் கூந்தல் மணத்துக்கு இணையான மணம் வேறு மலர்களில் எங்கும் உண்டா? என்று தும்பிடம் வினவுவது போல இப்பாடலை அமைந்திருக்கின்றது.

பாடல் 2 –

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

பொருள் –

இயற்கைப் புணர்ச்சிக்குப் (தலைவியைத் தலைவன் இயல்பாகப் பார்த்துக் காதல் கொள்ளுதல்) பின்னர் தலைவியைச் சந்திக்கும் தலைவன் அவளின் நாணத்தை நீக்குதல் பொருட்டு, மெய்தொட்டுப் பயின்று (தலைவியின் உடல் தொட்டு உரையாடல்) நலம் பாராட்டுதல் ( தலைவியின் அழகு நலத்தைப் பாடுதல்)

தலைவி நாணத்தோடு இருப்பதை உணர்ந்த தலைவன் அவளின் நாணத்தை நீக்க தும்பியைப் பார்த்துப் பேசுகிறான்.பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்க்கை வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே!

எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக, பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..?

அறிவியல் அடிப்படையில் –

கூந்தலில் “பீரோமோன்ஸ்“(Pheromones) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன. இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன.

இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் அழகான கட்டமைப்புப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்ச்சி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன. மேற்கண்ட கருத்துக்களின் வழியாகப் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்னும் கருத்துப் புலனாகிறது.

அப்பாடி சந்தேகம் தீர்ந்தது. உங்களுக்கு இது முன்பே தெரியும் என்றாலும் அவருடைய வலைதளத்தை பார்வையிடுங்கள், ஏகப்பட்ட அமுதுகள் இருக்கின்றன.

5 comments on “நக்கீரன் சிவன் – யார் சொன்னது சரி

  1. Varadharajan சொல்கிறார்:

    அட உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை போல இருக்கிறதே?
    சீக்கிரம் திருமணமாக என் வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s