“இஸ்லாம் அன்பு மதம்”

. உலகம் முழுவதும் “மை நேம் இஸ் கான்” படம், முகமதியோர் எல்லோரும் தீவிரவாதிகள் அல்ல. என்று சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முகமதியோர்கள் என உலகம் சொல்லிக் கொண்டிருக்கின்றது. கடனுக்கு விட்டு பிழைப்பு நடத்துவதைக் கூட எதிர்க்கின்ற முகமதியர்களின் புனித நூலான குரான். தீவிரவாதத்திற்கு துணை போகின்றதா?

நான் குரானை வாசித்ததில்லை. (ஆனால் ஆர்வமாக வாங்கி மட்டும் வைத்திருக்கின்றேன்.) முகமதிய நண்பர்கள் யாராவது என் கேள்விக்கு பதில் கூறவும். அப்படியே சானியா மிர்சா பர்தா போடவும், ஷகிலா பர்தா போடாமல் இருக்கவும் போராட்டங்களை நடத்தும் “உண்மையான” இஸ்லாமியர்கள். தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அதையும் சொல்லவும்.

என்னுடைய முகமதிய நண்பன் இப்படி சொன்னான் ” தீவிரவாதிகள் யாரும் உண்மையான முஸ்லிம் இல்லை”. இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்.

25 comments on ““இஸ்லாம் அன்பு மதம்”

 1. குட்டிபிசாசு சொல்கிறார்:

  உலகின் எல்லா மதங்களும் அன்பை போதிப்பது போல காட்டிக் கொண்டாலும், மறைமுகமாக தீவிரவாதத்தை ஊக்குவிக்கத்தான் செய்கின்றன. நீங்கள் முழுமையாக மதநூல்களை வாசித்தால் நிச்சயம் புரியும்.

 2. செவத்தப்பா சொல்கிறார்:

  //நான் குரானை வாசித்ததில்லை. (ஆனால் ஆர்வமாக வாங்கி மட்டும் வைத்திருக்கின்றேன்.) //

  நண்பரே, ஆசையோடு வாங்கி வைத்திருக்கும் குர்ஆனை இயன்றால் முதலில் வாசித்துப் பாருங்கள், பிறகு தங்களுடைய சந்தேகங்களுக்கு விடை கிடைத்துவிடும் என நம்புகிறேன்.

  தயவுசெய்து குறிப்பிட்ட இனத்தவரை இப்படியெல்லாம் சங்கடப்படுத்த வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

  நன்றி!

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இதில் மற்றவர்களை சங்கடப்படுத்தும் விசயம் இல்லை. உண்மையை எடுத்துச் சொல்லதான் இந்த இடுகை.

   இரட்டை கோபுர தகர்ப்பையும், மும்பை சம்பவத்தையும் நீங்கள் மறந்து போகலாம். உலகம் மறக்காது.

 3. A.Rahman சொல்கிறார்:

  தீவிரவாததிற்க்கு காரணம் மதமோ, மார்க்கமோ அல்ல. மாறாக மனிதனின் அறியாமை. அந்த அறியாமை மிக குறைவாக இருப்பது இஸ்லாமியர்களுக்கே … (காரணம் மார்க்கம்) வரலாற்று ஆதாரத்தை முழுமையான தொகுப்புடன் தந்துள்ளது இந்த விடியோ .உண்மையான தொலைனோக்கு பார்வையுடன் முழுமையாக பார்க்கவும் ( 11 part)

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   ஒரு புறம் தாக்குதல்களை நடத்திவிட்டு, எங்களுக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என மேடையேறிப் பேசுவதால் அறிவில்லாத மக்களை வேண்டுமானால் ஏமாற்றி விடலாம் நண்பரே!.

   ”அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்” என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!

   அல்குர்ஆன் 4:89

   அல்லா வந்து தந்து போனதாக கூறப்படும் குரானில் இந்த வாசகம் இருக்கிறது. மறுப்பு சொல்ல மனம் இருக்கிறதா உங்களுக்கு!. இதையே தெய்வ வாக்காக கருதிதான் எத்தனை தீவிரவாதம், எத்தனை தாக்குதல்கள். இது வரை தீவிரவாதிகள் யாரையாவது தடுத்திருக்கிறாரா அல்லா!. இல்லையே.

   உங்கள் இறைவனை ஏற்றுக்கொள்ள மறுத்ததற்காக எண்ணற்ற உயிர்கள் இதுவரை விண்ணுக்கு சென்றிருக்கின்றன. அந்த கொலைகள் செய்தவர்களுக்கு தண்டனை கூட கொடுக்க இயலாது சட்டம் சமநிலையற்றுப் போயிருக்கிறது. சட்டத்தை நம்பி நாங்களும் பயணற்றுப் போயிருக்கிறோம். நெடுநாட்கள் தொடராது இந்த நிலை. மாறும்.மாற்றிக் காட்டுவோம்.

   “தர்மம் மீண்டும் வெல்லும்!”

   • mass சொல்கிறார்:

    பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?

    காஃபிர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதே, இஸ்லாத்தை ஏற்காதவர்களை காஃபிர்கள் என்று வசைபாடுகிறதே, முஸ்லிமல்லாத மக்களுடன் சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் கட்டளையிடுகிறதே?

    மேற்கூறியவை இஸ்லாத்தின் மீது பரவலாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களை சில விஷமிகள் பொதுமேடையில் பேசியும், இன்னும் சிலர் தற்போது இணையத்தளங்களின் எழுதுவதன் மூலம் முஸ்லீம்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் பகைமை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

    இவை, உண்மை கலப்பில்லாத குற்றச்சாட்டுக்களாகும்.

    முஸ்லிமல்லாதவர்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது உண்மை தான். காஃபிர்கள் என்பது ஏசுவதற்குரிய வார்த்தையன்று. அரபு மொழியில் காஃபிர்கள் என்பதற்கு மறுப்பவர்கள், நிராகரிப்பவர்கள் என்று பொருள். இஸ்லாத்தை மறுப்பவர்கள், இஸ்லாத்தை நிராகரிப்பவர்கள் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன் படுத்தப்படுகிறது.

    இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எனக் கூறுவதில் இழிவுபடுத்துதல் ஏதுமில்லை. காஃபிர்கள் என்பதன் பொருள் தெரியாத காரணத்தினால் அது ஏதோ திட்டக்கூடிய வார்த்தை என எண்ணிக் கொள்கின்றனர்.

    ‘காஃபிர்களைக் கொல்லுங்கள்! காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள்’ என்றெல்லாம் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளதே? என்ற குற்றச்சாட்டும் தவறாகப் புரிந்து கொண்டதனால் ஏற்பட்டதாகும். முதலில் அவர்கள் சுட்டிக் காட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

    அவர்களைக் கண்ட இடத்தில் நீங்கள் வெட்டுங்கள்! உங்களை அவர்கள் வெளியேற்றியது போல் அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்! குழப்பம் கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராம்(கஃபா வளாகம்)அருகில் அவர்கள் உங்களுடன் போர் செய்யாத வரை அவர்களுடன் நீங்கள் போர் செய்யாதீர்கள்! அவர்கள்(அங்கே) உங்களுடன் போர் செய்தால் நீங்களும் அவர்களுடன் போர் செய்யுங்கள்! (அல்குர்ஆன் 2:191)

    இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்.

    இவ்வசனத்தில் ‘அவர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

    இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

    உங்களுடன் போருக்கு வருபர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறி விடாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:190)

    உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

    ஒரு ஆட்சிநடைபெரும் நாட்டில் இன்னொரு இன்னொரு நாட்டவர் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொடுக்குமா?

    போர் என வந்து விட்டால் எல்லா விதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் திருக்குர்ஆன் ‘அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்’ எனக் கூறி போர்க்களத்திலும் புதுநெறியை இஸ்லாம் புகுத்துகிறது.

    நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

    அல்குர்ஆன் 4:89, 4:90, வசனங்களில் போர்ப் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் எதிரிகளை வெட்டுங்கள் எனக் கூறப்படுகிறது.

    அந்தச் சமயத்தில் கூட நீங்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் உடன்படிக்கை செய்திருந்தால் அவ்வாறு உடன்படிக்கை செய்த மக்களுடன் எதிரிகள் சேர்ந்து விட்டால் அவர்களைக் கொல்லாதீர்கள் எனவும் அவ்வசனங்கள் கூறுகின்றன. முஸ்லிமல்லாத எத்தனையோ சமுதாயத்தவர்களுடன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்துள்ளனர்.

    போர் செய்ய வந்த எதிரிகளுக்கு உடன்படிக்கை செய்தவர்கள் அடைக்கலம் கொடுத்தால் அவர்களை விட்டு விடுமாறும் இஸ்லாம் கூறுகிறது.

    போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நேரத்தில் எந்த ஆட்சியாளரும் செய்வதை விட பெருந்தன்மையுடன் நடக்கக் கூறும் இவ்வசனங்களைத் தான் சிலர் தங்களின் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

    இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் போது ‘எதிர்த்து வருவோரை சுட்டுத் தள்ளுங்கள்’ என்று இந்தியப் பிரதமர் ஆணையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த உத்தரவுப்படி பாகிஸ்தானிய முஸ்லிம் வீரர்கள் சுட்டுத் தள்ளப்பட்டால் இந்தியா முஸ்லிம்களை கொன்று குவிக்கிறது என யாரும் கூறமாட்டார்கள். சுடப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள் சுடப்படவில்லை. போருக்கு வந்த எதிரிகள் என்ற காரணத்திற்காகத்தான் இவர்கள் சுடப்படுகின்றனர்.

    ஆனால் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் இவ்வாறு புரிந்து கொள்ள மறுப்பது தான் விசித்திரமாக உள்ளது.

    நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாம் மதீனாவிலும், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்பட வில்லை.

    இஸ்லாம் எவ்வளவு சகிப்புத் தன்மையுடைய மார்க்கம் என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் தவறான எண்ணம் கொண்டவர்கள் முன் வைப்பது பொருத்தமாக இருக்கும்.

    நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா நகர் சென்றதும் இறைவனை வணங்குவதற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப்பள்ளி வாசலில் நபிகள் நாயக்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அமர்ந்திருந்த போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வருகிறார். பள்ளிவாசலுக்குள் நுழைந்து அதன் ஒரு மூலையில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட நபித்தோழர்கள் ஆத்திரமுற்று அவரைத் தாக்கத் தயாரானார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை விட்டு விடுங்கள்’ எனக் கூறினார்கள்.

    அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்தனர். அவரிடம் மென்மையாக ‘இது அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம். இங்கே அசுத்தம் செய்யக் கூடாது’ என்று கூறி அனுப்பினார்கள்.

    பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவரைக் தண்டிக்காமல் அவர்கள் விட்டு விட்டது சாதாரணமான ஒரு செயலாக யாருக்கும் தோன்றலாம். ஆனால் சிறுநீர் கழிப்பதைக் கண்டு, அவர் கழித்து முடிக்கும் வரைக் காத்திருந்து மென்மையாக அறிவுரை கூறியதைச் சாதாரணமாகக் கருதமுடியாது. இத்தகைய சகிப்புத்தன்மையை எந்த மதவாதியிடமும் காணமுடியாது.

    இஸ்லாம் ஒரு கடவுளைத்தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடிய கற்சிலைகளுக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்துகிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக்கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.

    அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு ஏசினால் அறியாமை காரணமாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

    தான தர்மங்கள் செய்வதில், உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப்பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளை பிறப்பிக்கிறது.

    மார்க்க விஷத்தில் உங்களுடன் எதிர்த்துப் போர் புரியாதவர்களுக்கும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. (அல்குர்ஆன் 60:8)

    விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டக் கூடியவராகவும் நீதிக்குச் சாட்சிகளாகவும் ஆகி விடுங்கள்! ஒரு சாரார் மீது(உங்களுக்குள்ள) வெறுப்பு(அவர்களுக்கு) நீதி செலுத்தாதிருக்கும்படி உங்களைத் தூண்டக் கூடாது. நீங்கள்(அனைவரிடமும்) நீதியாக நடந்து கொள்ளுங்கள்! அதுவே இறையச்சத்துக்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 5:8)

    இத்தகைய மார்க்கத்தைத் தான் வன்முறை மார்க்கம் எனத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    நியாய உணர்வுடையோர் இதை உணர்வார்கள்.

   • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    போர் முறைகளுக்கு சொல்லப்பட்டதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்று சொல்கின்றீகள். அப்படி தவறாக புரிந்து கொண்டவர்கள் மாற்று மதத்தினர் மட்டுமல்ல என்பதையும் அறிவீர்கள் அல்லவா. ஒரு புறம் இஸ்லாமிலேயே இந்த பிரட்சாரம் செய்யப்படுகிறது.

    சிறுநீர் கழிக்கும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு பிறகு அறிவுரை கூறியுள்ளதாக கூறியுள்ளீர்கள். இன்று மசூதிக்கு சென்ற பெண்ணின் மூக்கை அறுத்து எறிந்ததாக செய்தி வருகிறதே ஏன்.

    குரானில் தவறிருக்கிறது என்று ஆராய்ந்து சொல்ல இங்கே ஏகப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் நான் சொல்வது அதை படிப்பவர்களின் மனதில் அது செய்யும் அழுக்கைதான்.

    உலகில் எந்த மதத்தின் பெயராலும் இத்தனை வன்முறைகளும், கொடுமரணங்களும் நிகழவில்லை. இஸ்லாமின் பெயரால் நடந்துகொண்டிருக்கிறது. அதை அறியாது போல இருக்க வேண்டாம்.

 4. பவித்ரா சொல்கிறார்:

  இந்த சைட் அடிக்கும் பிரச்சனைதான் “புர்கா” என்றதும் இசுலாமியர்களை கொதித்தெழவைக்கிறது. சமூக ஆர்வாலர்கள் அப்பெண்களுக்கு புர்காவினால் ஏற்படும் சிரமங்களை முன்வைக்கும் போது அது அப்படி இல்லை என்று மறுப்பதும் அதனையே பெண்களை விட்டு பேசவைப்பதும் விவாதத்தில் எட்டப்படாத முடிவாக உள்ளது.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   வலைமனையை கண்டேன். இஸ்லாமியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று ஒரு இடுகையில் சொல்லப்படடிருக்கிறது. காத்தவராயன் திருவிழாவிற்கு ஏன் விடுமுறை விடுவதில்லை என்று கேள்வியுடன்.

   அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

   உங்களின் மறுமொழிகள் என்னுடைய கவனத்திற்கு வந்தபின்பே, பதிவேற்றப்படுகின்றன என்பதால் தாமதம் ஆனால், கொஞ்சம் பொருத்துக்கொள்ளவும்.

 5. kani சொல்கிறார்:

  மனிதர்களுக்குள்ளே நடைபெரும் கலவரங்களுக்கு மதத்தை குறை கூறுவது ஏற்க்ககூடியது அல்ல.
  “இந்து மதத்தை பற்றி அறிய வேண்டுமானால் இந்துக்களை பார்க்காதீர்கள் இந்து மத நூல்களை படிக்க வேண்டும்.
  அதே போல் இஸ்லாத்தை பற்றி அறிய வேண்டுமானால் இஸ்லாமியர்களை பார்க்காதீர்கள்.இஸ்லாமிய மத நூலான குரானை படியுங்கள்.”
  மதங்களே இல்லையென்றாலும் வேறு எதையாவது காரணம் காட்டி கலவரம் நடக்கத்தான் செய்யும்?
  சில மனிதர்கள் மதத்தை தங்களின் சுயலாபத்திகாக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்கிறார்கள் மேலும் அப்பாவி மக்களை அதற்க்கு பகடை காய்களாக்கி(பலிகடா)விடுகிறார்கள் என்பதே உண்மை!

  thanks.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   மதநூலிகளில் இருப்பவையை அடிப்படையாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள். அதனுடைய தவறான புரிதலோ, இல்லை அதிலிருக்கும் தவறோ இன்று எல்லைற்ற விபரீதங்களுக்கு காரணமாக இருக்கிறது. அதைதான் தடுக்கவேண்டும். நன்றி நண்பா.

 6. kani சொல்கிறார்:

  நேரம் கிடைக்கும் போது குரானை வாங்கி முழுமையாக படியுங்கள்.

 7. kani சொல்கிறார்:

  அப்படியே முடிந்தால் இந்து வேதங்களான ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேதங்களையும் படியுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s