பெரிய கோவிலின் சிறப்புக்கள்

(பத்து நூற்றாண்டைக் கடந்த பயணம் இடுகையின் தொடர்ச்சி….)

இத்தலத்திற்கு கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார். ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் – சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்துரைக்கிறது.

தலைச்சிறந்த சிற்பக் கலையழகு வாய்ந்த இந்த திருக்கோயில் கலைப்பராமரிப்பு, தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இருந்து வருகின்றது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்குச் சொந்தமான திருக்கோயில், கோயில் வழிபாடு, நிர்வாகம் அரண்மனை தேவஸ்தானத்தின் மூலம் நடைபெறுகிறது.

இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் உள்ள “தளிக்குளம்” வைப்புத் தலமாகும். அப்பர் பெருமான் திருவீழிமிழலைத் தாண்டகத்துள் “தஞ்சைத் தளிக் குளத்தார்” என்று பாடியிருக்கிறார். இந்த சிவகங்கையில் நீர் குறைந்திருக்கும் காலத்தில் சிவலிங்கம், நந்தியைக் காணலாம்.

கோயிலின் முதற் கோபுர வாயிலுக்குக் கேரளாந்தகன் வாயில் என்றும், இரண்டாம் கோபுர வாயிலுக்கு இராசராசன் வாயில் என்றும், தெற்குக் கோபுர வாயிலுக்கு விக்கிர சோழன் வாயில் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலின் சுவாமி விமானம் 216 அடி உயரமுள்ளது – இதை தக்ஷிணமேரு எனச் சொல்கிறார்கள்.

சோழ மன்னர்களுக்குத் திருவாரூர்த் தியாகராசாவிடத்தில் அளவற்ற பற்றுண்டு, எனவே அவர்கள் இங்குள்ள சோமாஸ்கந்த மூர்த்தியை தியாகராசாவாகவே எண்ணி, அதற்குரிய சிறப்புக்களைக் குறைவின்றிச் செய்து போற்றி வழிபட்டனர். இம்மூர்த்தி “தஞ்சை விடங்கர், தக்ஷிணமேரு விடங்கர்” என்றும் போற்றப்படுகிறார்.

இக்கோயிலில் உள்ள திருமேனிகளை இராசராசனும், அவன் மனைவியர்களும், அவன் குலத்தவர்களும், அமைச்சர்களும் தந்தனர் என்று இங்குள்ள கல்வெட்டுக்களின் மூலம் அறியப்பட்டுள்ளது.

கோயிலின் முதல் தளத்தின் உட்சுவர்களில் 108 வகையான நடன அமைப்புகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள சிவதாண்டவம், திரிபுராந்தகர், சுப்பிரமணியர், விநாயகர், காளி முதலிய வண்ண ஓவியங்கள் கலைக்குச் சிறப்பு சேர்க்கின்றன.

இங்கு அம்பாள் கோயிலை எழுப்பியவன் “கோனேரின்மை கொண்டான்” என்கிறார்கள். இங்கு எழுந்தருளுவித்த அம்பாளிற்கு “உலகமுழுதுடைய நாச்சியார்” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

விநாயகர் திருமேனிகளை இராசராசனே பிரதிஷ்டை செய்வித்துள்ளதாகவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இக்கோயிலில் சதய விழா, கார்த்திகை விழா, பெரிய திருவிழா முதலியவை பண்டை நாளில் நடைபெற்றன. பெரிய திருவிழா எனப்படும் பிரம்மோற்சவம் “ஆட்டைத் திருவிழா” என அழைக்கப்பட்டது. வைகாசியில் நடைபெற்ற இவ்விழாவில் இராசராச நாடகம் நடித்துக் காண்பிக்கப்பட்டது. இதில் நடித்த சாந்திக்கூத்தன் திருமுதுகுன்றனான விஜயராசேந்திர ஆசாரியனுக்கு இதற்காக 120 கலம் நெல் தரப்பட்டது என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

சுவாமிக்கு முன்பு திருப்பதிகம் விண்ணப்பிக்க நாற்பத்தெட்டு பிடாரர்களும், உடுக்கை வாசிக்க ஒருவரும், கொட்டு மத்தளம் முழக்க ஒருவரும் ஆக 50 பேர்களை இராசராசன் நியமித்தான் என்றும், இவர்களுடைய பெயர்கள் அனைத்தும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன என்றும், அப்பெயர்கள் அனைத்தும் அகோரசிவன், ஞானசிவன், தத்புருஷசிவன், பரமசிவன், ருத்ரசிவன், யோகசிவன், சதாசிவன் என்று முடிவதால் இக்கோயிலில் தீட்சை பெற்றோரே திருப்பதிகம் விண்ணப்பிக்க நியமிக்கப்பட்டனர் என்றும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராசராசன் கோயிற் பணிகளுக்காகப் பல ஊர்களிலிருந்து கொண்டு வந்த 400 நடனப் பெண்களை 2 நீளமானத் தெருக்களில் குடியமர்த்தினான். இப்பெண்டிர் தளிச்சேரி பெண்டிர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வசித்த தெரு தளிச்சேரி என்று பெயர் பெற்றது. இவர்களுக்குப் பட்டங்களும் அளித்துச் சிறப்பு செய்யப்பட்டன என்றும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது போல் கானபாடிகள், நட்டுவர், சங்குகாளம் ஊதுவோர், மாலைகள் கட்டித் தருவோர், விளக்கேற்றுவோர், பரிசாரகர்கள், மெய்க்காவலர்கள் முதலியோர்களையும் இராஜராஜன் நியமித்திருந்தான் என்றும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராஜராஜன் கோயிலுக்குத் தந்துள்ள ஆபரணங்களின் பெயர்களைப் படித்தாலே பிரமித்துப் போகும் அளவுக்கு அதிகமான ஆபரணங்களை இந்தக் கோயிலுக்கு வழங்கியிருக்கிறான்

கல்வெட்டுக்களில் இறைவனின் பெயர் ஆடல்வல்லான், தக்ஷிணமேருவிடங்கர் எனவும், பின்னர் இராசராசேச்சரமுடையார், இராசராசேச்சமுடைய பரமசுவாமி எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் குறித்து பிரகதீஸ்வர மகாத்மியம், சமீவன க்ஷேத்ரமான்மியம் எனும் தலபுராண நூல்கள் சமஸ்கிருதத்தில் படைக்கப்பட்டுள்ளன.

இக்கோயில் குறித்து கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்பவர் “பெருவுடையார் உலா” பாடியுள்ளார்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள், இராசராச சோழன் பொறித்து வைத்துள்ள 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் அனைத்தையும் அச்சிட்டு “சிவபாதசேகரன் கல்வெட்டுக்கள்” என்னும் நூலை வெளியிட்டதுடன் இங்கு பூசைகள் தடையின்றி நடைபெற நிரந்தர வைப்புநிதி ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார்.

கோயில் வளாகத்தில் சுற்றுப்புறச் சுவரின் உட்புறத்தில் உள்ள சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள் பல வடிவங்களிலான 108 சிவலிங்கங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுவற்றில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்தக் கோயிலைச் சுற்றி அக்காலத்தில் வெட்டப்பட்ட அகழிகள் இன்னும் உள்ளன.

பொக்கிசங்களை கொள்ளையடிக்க கோவில்களை சிதைத்து சென்ற பல மனித நேயமில்லா அரசர்களின் கைகளில் சிக்காமல் தஞ்சை கோவில் தப்பியதே பெரிய வியப்பு தான். தமிழனின் கட்டிக் கலைச் சிறப்பை உலகமே அறியும் வண்ணம் யுனெஸ்கோ அமைப்பும் அங்கிகாரம் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. இருக்கும் பொக்கிசங்களை போற்றி பாதுகாப்போம்.

நன்றி –

முத்துகமலம்
விக்கிபீடியா

5 comments on “பெரிய கோவிலின் சிறப்புக்கள்

  1. Surendran சொல்கிறார்:

    பல புதிய விவரங்களை காண முடிந்தது. நல்ல பதிவு. நன்றி.

  2. madurai saravanan சொல்கிறார்:

    payanulla thakaval. niraya theriyaatha visayangkalai padiththen. vaalththukkal.

  3. VIJAYAKUMAR, MADURAI சொல்கிறார்:

    KALIVANNAM KANDOM KANNILE YANGAL KANINIELAY AUTHUVUM UNALALALAY

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s