பெண்ணியவாதிகளின் கவணத்திற்கு சில கவிதைகள்

நாம் எல்லோருமே ஒரு வகையில் பெண்ணியவாதிகள் தான். ஆனால் பெண்களை அதிகம் கவணிக்கும் இந்த சமூகம் ஆண்கள் மறந்து கொண்டிருக்கிறது என தோன்றுகிறது. அது தான் இந்தக் கவிதைகளுக்கு மூலம்.

பெண்ணியத்தைப் பற்றி அவர்களின் கவிதைகளில் நிறைய வலிகள் நிறைந்திருப்பது புரிந்தது. ஒருவேளை இந்தக் கவிதைகளில் ஆண்களின் வலிகளும் அவர்களுக்கு புரியலாம்.

மழலை சொல்

ஐந்து வருடம் வெளிநாட்டில் உழைத்து
சேர்த்து போதுமென
ஊர்வந்து சேர்ந்தவனிடம்
ஒட்டாமல் சென்ற அவன் குழந்தை
ஓடி விளையாடுகிறது
பக்கத்து வீட்டுக்காரனிடம்!

தெண்டச் சோறு

வயது வந்தும் மணம் ஆகாதவளுக்கு
வருத்தம் கொள்ள சிலர் இருக்கின்றார்கள்
வாழ்வு கொடுக்க சிலர் இருக்கின்றார்கள்

ஆனால் அவர்களுக்கும் தெரிவதில்லை
திறமை யிருந்தும் வேலை கிடைக்காதவனை
தெண்டச் சோறென திட்டுவதை தவிற!.

மணத்திற்காக

உடன்படித்தவள் குழந்தையோடு
எதிரே வருகின்றாள்
பேச நேரமின்றி
ஓடிக் கொண்டிருக்கின்றேன்
எதிர்கால மனைவிக்கு சேமிக்க!

கொஞ்சம் உதவுங்கள்

பெண்ணியம் பேசவும்
பாரதியும் பெரியாரும் இருந்தார்கள்
பாவம் எங்களுக்குத்தான்
நாதியில்லாமல் போய்விட்டது!

கனிமொழியையும் தமிழச்சியையும்
தந்து உதவுங்களேன்
பெண்ணியவாதிகளே!.

கீழ்வரும் கவிதையில் பெண்ணியத்தையும் ஆணின் பார்வையிலேயே நோக்கியிருக்கிறேன்.

சகோதரி

அம்மாவை மதிக்காத அத்தை வந்தார்

நான் பேசாமல் சென்றேன்
“அவனுக்கு ரொம்ப திமிர்” என்றார்கள்

தங்கை பேசாமல் சென்றாள்
“பொண்ணுக்கு ரொம்ப வெட்கம்” என்றார்கள்

அவளுடைய கோபம் கூட
திரிந்திருப்பதை கண்டேன்
அழுதுகொண்டிருந்தாள் அவள்!

4 comments on “பெண்ணியவாதிகளின் கவணத்திற்கு சில கவிதைகள்

  1. Surendran சொல்கிறார்:

    மழலைச்சொல் அருமை.

  2. karthick சொல்கிறார்:

    it is better jega

ஜெகதீஸ்வரன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி