மனம் வந்தது எப்படி மச்சான்

அம்மனமாகவே பார்த்திட்ட அம்மாவிடம் கூட
அந்தரங்கம் பகிர முடியாமல் விழிப்பவன்
சரியாக முகவரிகூட தெரியாத அறைத்தோழனிடம்
பகிர்ந்து கொள்ள மனம் வந்தது எப்படி?

அவசரத்திற்கு அப்பாவின் சட்டையில் கைவைக்க
திருடன் பட்டம் கிடைக்குமோ எனபயந்தவன்
நண்பனின் பணத்தை செலவு செய்தாலும்
பயமின்றி இருக்கும் மனம் வந்தது எப்படி?

பழைய சட்டையை தம்பி எடுத்தாலே
கோபம் வரும் குணம் எனக்கு
புது சட்டையை நண்பர்களுக்கு போட்டு
அழகு பார்க்க மனம் வந்தது எப்படி?

உறவுக்கார பெண் வந்து பேசும்போது
கூச்சம் குடைபிடிக்க ஓடிப் போனவனுக்கு
வகுப்பறை தோழியை தொட்டு பேசும்
அளவிற்கு மனம் வந்தது எப்படி?

****

பி.கு – இல்லாத காதலுக்கு கவிதைகள் பல எழுதிவிட்டாலும், நட்புக்காக எழுதும் கவிதையில் இது இரண்டாவது மட்டுமே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s