சிவனடியார்கள் இசைஞானியார் மங்கையற்கரசியார் புராணம்

ஆன்மீகப் பெருமக்களுக்கு வணக்கம்.

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிலார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

அறுபத்தி நான்கு நாயன்மார்களின் பெருமை சொல்லும் பெரியபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் அன்பர்களில் மூவர் மட்டுமே பெண்கள். அதில் ஒருவரான காரைக்கால் அம்மையாரை எல்லோரும் அறிவர். ஈசனே அம்மை என்று அழைத்தனால், புனிதவதி தேவியார் காரைக்கால் அம்மையானர்.

இரண்டாமவர் இசைஞானியார்.

“இசைஞானி காதலன் திருநாவலூர்க் காதலன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே”

இசைஞானியார் புராணம் –

இசை என்பது தமிழோடு இணைந்த ஒன்று. தமிழில் இசையே இசைத் தமிழ் என்று தனியே விளங்கிவந்த மகத்துவம் கொண்டது. அத்தகைய இசையில் ஞானம் உடையவர் இசைஞானியார். திருநாவலூரில் ஆதிசைவர் மரபிலே உதித்த சடையனாருக்கு வாழ்க்கை துணையாக இருந்தவர். இவருடைய கற்புநெறி நின்று அறம் பலபுரிந்து அன்புடையவராய் வாழ்ந்தவர்.

இசைஞானியாரின் மகனே சமயக்குரவர்களில் ஒருவரான சுந்திரமூர்த்தி நாயனார். மற்ற சமயக்குரவர்களுக்கு இல்லாத பெருமை சுந்திரமூர்த்தி நாயனாருக்கு உண்டு. அது தாயார் இசைஞானியார் மட்டுமல்ல தந்தை சடைய நாயனாரும் பெரியபுராணத்தில் நாயன்மார்களாக குறிப்பிடப்படுகின்றார்கள். பெற்ற இருவரும் பெரும்புகழ் கொண்ட ஈசனின் பக்தியில் திளைத்தவர்கள் என்பது மகனுக்கு பெருமையல்லவா. அதே சமயம் மகன் சமயக்குரவர்களில் ஒருவன் என்பது பெற்றவர்களுக்கு பெருமைதானே.

மங்கையற்கரசியார் புராணம் –

இவரின் இயற்பெயர் மானி என்பதாகும். பெண்மணிகளுக்கெல்லாம் தலைவியாம் பேறு பெற்றதனால் மங்கையற்கெல்லாம் அரசி என்று போற்றப்பட்டவர்.

“மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை”

மங்கையற்கரசியார் சோழமன்ன்னுடைய திருமகளார். அவர் சிறுவயது முதலே இளமையிலிருந்து சிவபெருமான் திருவடியை மறவாது சிந்தித்து வந்தார். திருநீற்றில் அளவில்லா அன்புடையவர்.

இவர் பாண்டிநாட்டு மன்னவர் கூன்பாண்டியரை மணந்து கொண்டார். சமண சமயம் மாறியிருந்த அரசனை சைவத்திற்கு மாற்றியது மட்டுமல்லாமல், எல்லா சைவத் தொண்டர்களுக்கும் உதவி செய்தவர்.

திருஞான சம்மந்தரை பாண்டிய நாட்டிற்கு அழைத்து பாட வைத்தமையால் நன்றி மறவாது ஞானசம்மந்தர் “மங்கையர்க்கரசி யென்று வளவர்கோன்பாவை வரிவளைக் கைம்மடமானி” என சிறப்பித்து பாடுகின்றார்.

“பொங்கொளிவெண் திருநீறு பரப்பினோரைப் போற்றுவார் கழல்எம்மால் போற்ற லாமே” என்று சேக்கிலார் அடிகள் கூறுவாராயின் இவர் பெருமை இமய மலையினும் உயர்ந்ததன்றோ.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s