எட்டாவது உலக அதிசயம் காதலர்களா

நெருங்கிக் கொண்டிருக்கிறது காதலர் தினம். காதலர்கள் பேரைச் சொல்லி கொண்டாடுவதற்கு காதல் திருமணம் செய்து கொண்டவர்களும், கணவன், மனைவிக்கு தெரியாமல் காதல் செய்து கொண்டிருப்பவர்களும் தயாராகிக் கொண்டு இருக்கின்றார்கள். நம்ம பங்கிற்கு இதோ…

உலகில் ஏழாவது அதிசயமாக இருப்பவர்கள் காதலர்கள் என்றால் நம்புவீர்களாக. நம்பித்தான் ஆகவேண்டும்.

தமிழ்நாட்டிலேயே வெப்பம் மிகுந்த பகுதி சென்னை. அதிலும் நடுபகலில் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் அப்போதும் மெரினா கடற்கரை சுடுமணலில் கடலை போட்டுக் கொண்டிருக்கும் ஜோடிகளை பார்த்திருக்கின்றீர்களா. பிறகென்ன காதலர்கள் எட்டாவது உலக அதிசயம் தானே.

யாரிடமாவது பேச வேண்டும் என்றால் முதலில் நலம் விசாரிப்புகள், பிறகு கொஞ்சம் தொழில் விசயங்கள், ஆண்கள் என்றால் அரசியல், பெண்கள் என்றால் சினிமா. எப்படி தேனோழுக பேசினாலும் நம்மால் இரண்டு மணி நேரம் பேச முடியுமா. ஆனால் இருபத்தி நாலு மணி நேரமும் நேரில் பேசுவது மட்டுமல்லாமல் போனிலும் பேசித்தீர்க்கும் காதலர்கள் எட்டாவது உலக அதிசயம் தானே.

வீட்டில் அப்போவோ, அம்மாவோ திட்டிவிட்டாலே சோறு இறங்காது நமக்கு. ஆனால் வீட்டில், தெருவில், சமூகத்தில் என எல்லோரும் கரித்துக் கொட்டினாலும், அதை இயல்பாக எடுத்துக் கொண்டு தங்கள் போக்கில் சென்று கொண்டிருக்கும் காதலர்கள் எட்டாவது உலக அதிசயம் தானே.

கண்டிப்பாக நீங்கள் ஒத்துக் கொள்ளுவீர்கள் என தெரியும். யோசித்து யோசித்து மண்டை காயந்து போனவர்கள் கீழிருக்கும் நகைச்சுவைகளை படித்து மனதை தேற்றிக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

காதலர் தினச் சிரிப்புகள் –

காதலன் – நான் உன்னை கடைசி வரைக்கும் கைவிட மாட்டேன்
காதலி – நான் உங்க வீட்டுல யாரையுமே நம்ப மாட்டேன்
காதலன் – ஏன்
காதலி – உங்க அண்ணனும் இப்படிதான் சொன்னான்.

காதலன் – சுதா… உன்னை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை..
காதலி – அப்ப சுரேஸ் கிட்ட ஐடியா கேளுங்க. அவன் சூப்பரா வர்ணிப்பான்.

நண்பன் 1- என் காதலி மனைவி ஆனபின்னாடி என் கிட்ட சரியா பேசமாட்டேங்கிறா
நண்பன் 2- ஏன்
நண்பன் 1- அவ புருசன் திட்டுவானம்..

10 comments on “எட்டாவது உலக அதிசயம் காதலர்களா

 1. madurai saravanan சொல்கிறார்:

  irunthaalum kaathalarkalai ivvalavu kevalaama pesakkuttathu … apparum naan aluthiduveen… amputtuthaan solliputten. negative + negative =possitive.
  merinavum veppaam + kaathalarkalum veppam = ? enna sari thaane.

 2. Surendran சொல்கிறார்:

  ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற நம் பண்பாடு கலாச்சாரம் எங்கே போய்கொண்டிருக்கிறது?….

 3. Om Santhosh சொல்கிறார்:

  இப்படி ஒரு காதலர்களை இப்பதான் பார்கிறேன் . சூப்பர் ஜோடி

 4. பவித்ரா சொல்கிறார்:

  நல்லவே யோசிங்கரிங்க தோழா. எட்டாவது உலக அதிசயம் காதலர்கள் மட்டுமே.!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s