புகையும் அசல்

இது அஜித் படம் அசலின் விமர்சனமல்ல. பெட்டிக் கடைக்கு முன்நின்று புகைவண்டியுடன் போட்டி போட்டு புகைபிடிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எச்சரிக்கை செய்யும் கட்டுரை.

நாங்கள் கல்லூரி இன்பச் சுற்றுலாவுக்காக ஹைதராபாத்திற்கு சென்றிருந்தோம். அங்கு தெருக்கு தெரு பெட்டிக் கடைகள் போல பீடா பாக்கு கடைகளே இருந்தன. நான்கு அடிக்கு ஒரு கடை என்றாலும் அந்தக் கடையிலும் நான்கு பேர் என இருக்கத்தான் செய்தார்கள். அந்தளவிற்கு சென்னையில் இல்லையென்றாலும் பீடா கடைகள் அங்கிருந்து வந்தவர்களுக்காவே தொடக்கப்பட்டு இருக்கின்றன.

எங்கள் ஊர் பக்கம் உள்ள எல்லா பெட்டிகடைகளிலும் மான் மார்க் புகையிலையும், தாஜ்மஹால் புகையிலையும் ஒரு காலத்தில் அமோகமாக விற்பனையாயின. என் அம்மாச்சி கூட புகையில்லை இல்லாமல் இருக்க மாட்டார்கள். விசேச நாட்களில் கட்டுகட்டாக புகையிலை வாங்கி வந்து தந்த அனுபவம் கூட எனக்கு இருக்கிறது. புகையிலை தீமை என்றாலும் அதை போட்டுக் கொண்டு வேலை செய்தால், பசி தெரியது வேலை கெடாது என்ற கருத்தே எல்லோரிடமும் இருந்தது. புகையிலை அனாகரீகமாக மாற அடுத்த தலைமுறை அதை விட்டொழித்து.

இதே நிலை தான் சுருட்டுக்கும். ஒரு வீட்டில் சுருட்டு குடிக்கும் மனிதர் இருந்தால் அந்த தெருமுழுவதுமே நாற்றம் வீசும். அதை குடித்தவர் நம்மிடம் வந்து பேசினால் அப்படியே மயங்கிவிழுந்து விடுவோம். வாசனைக்காகவும், ரசனைக்காகவும் இன்று சுருட்டுகள் சாக்லெட் சுவையுடன் கூட கிடைக்கின்றன. அப்படியிருந்தும் சுருட்டுகளின் இடத்தை பீடி பிடித்துக்கொண்டது. மலிவு விலை என்பதால் உழைப்பார்கள் எல்லோரும் இதற்கு அடிமையானார்கள். இப்படி காலங்காலமாக நம் முன்னோர்களுடன் இருந்த புகையிலையின் நவீன வடிவம் சிகரெட்.

இந்த புகையிலையின் நவீன வடிவம் மிக வேகமாக இளைஞர்களை ஈர்த்துக் கொண்டது. ஆண்மையின் ஒரு குறியீடாக மக்களின் பார்வையில் இதை புகுத்தியவர்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமல்ல. சில சூப்பர் ஸ்டார்களும் தான். அந்த மயக்கத்தில் சிறுவர்களும் புகைப்பிடிக்க விரும்பினார்கள். சிகரெட் மிட்டாய் எங்கள் ஊருக்கு வந்த போது விற்பனை சூடு பிடித்ததை சாட்சியாகவும் வைத்துக் கொள்ளலாம்.

மற்ற பழக்கங்களான பீடா, பாக்கு, போதை பொருள், மது என எல்லாம் பயன்படுத்தும் நபர்களின் உடல்நலத்தை மட்டுமே பாதிக்கும். ஆனால் சிகரெட், சுருட்டு, பீடி எல்லாம் அருகில் நிற்கும் அப்பாவிகளையும் பாதிக்கிறது. இந்த கொடூரமான பழக்கம் இன்னும் வேறூன்றி இருப்பது கொஞ்சம் வருந்தத் தக்கது.

அன்பு மணி ராமதாஸ் அசல் படத்திற்காக வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த விளம்பரத்தில் அஜித் புகைப்பிடிப்பது தான் காரணம். இதைப் பற்றி பல இணையப்பூக்கள் தங்கள் கருத்தை வெளியிட்டுவிட்டன. ஆனால் எல்லோரும் அன்புமணியை தாக்கியோ, இல்லை அஜித்துக்கு அட்வைஸ் செய்தோ மட்டும் இருக்கின்றார்கள். எல்லாவற்றிக்கும் காரணமான புகையை காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள்.

அஜித்குமார் சர்ச்சையில் மாட்டுவது மிகவும் குறைவு. பத்திரிக்கையாளர்களை மதிப்பதிலும், ரசிகர்களை வழிநடத்துவதிலும் மிகவும் இனிமையானவர் என்பதால் கிசுகிசுக்களும் குறைவு. மோட்டார் விபத்தில் ஆண்மையிழுந்தவர் என்ற தனி மனித தாக்குதலும் ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. காத்திருந்து காதல் மனைவி குழந்தை பெற்றதில் அவதூறுகள் மறைந்தன. அல்டிமேட் பட்டத்தை துறக்க ரசிகர் இல்லாத திரைதுறை விசுவாசிகளிடம் கூட அஜித் குமாருக்கு புகழ் கூடியது. இந்த வேளையில் இப்படியொரு குற்றச்சாட்டு. எல்லாவற்றையும் தாண்டி படம் இன்று திரைக்கு வந்துவிட்டது. அடுத்த முறை அஜித் மட்டுமல்லாமல் எல்லா நடிகர்களும் புகைக்கு தடை சொல்லட்டும்.

சரி புகைக்கு மேலும் ஒரு குணம் இருக்கிறது தெரியுமா. வலைப்பதிவுகளை தொடந்து வாசிக்கும் நபர் என்றால் இது உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். அது ஆண்மை, பெண்மையை பாதிக்கும் என்பதே. கட்டுரை பெரிதாக மாறுவதால் சின்னதாய் மட்டும் அதன் விளைவிகள்.

புகையிலையுள்ள நிகோடின் (Nicotine) எனப்படும் நஞ்சினால் ஏற்படக்கூடிய குறைபாடுடைய கரு, கருச் சிதைவு போன்றவைகள் பற்றிய பல ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து தற்போது புகைப்பழக்கம் இனக்கவர்ச்சி ( Sex attraction) யை அழிப்பதுடன் ஆண்,பெண் உடலுறவைப் பெரிதும் பாதிக்கின்றது எனப்பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து புகைக்கின்ற பல ஆண்கள் உடலுறவில் நாட்டம் இன்றி போகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆண்குறிக்கு இரத்தத்தை எடுத்துச் செல்கின்ற இரத்தக் குழாய்கள் நிகோட்டினினால் பாதிக்கப்பட்டுக் குறுகிப் போவதே இதற்குக் காரணமாக இருக்கக் கூடுமென்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க மருத்துவர்கள் சங்க இதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி புகைப்பதை வழக்கமாகக் கொண்ட பெண்கள் பாலுறவில் ஆர்வம் குன்றியவர்களாக உள்ளனர். அத்துடன் அவர்களது கருவுறும் திறனும் 43 சதவிகிதம் குறைவு பட்டிருந்தது. மற்றுமொரு ஆய்வின்படி புகைக்கின்ற பெண்கள் பிற பெண்களை விட இரண்டாண்டுகள் முன்னரே மாதவிலக்கு நிற்கின்ற நிலையை (Menopause) அடைகின்றனர் என்று தெரியவந்தது.

பெண்கள் புகைப்பதில்லை என்று பெண்ணியவாதிகள் வாதிடும் அளவிற்கு அறிவில்லாதவர்கள் இல்லை என்றாலும், சந்தேகம் உள்ளவர்கள் வேளச்சேரி கால் சென்டர் அலுவலகம் எதிரேயிருக்கும் பொட்டிக் கடையில் பார்த்துக் கொள்ளவும்.

நன்றி – மாற்று மருத்துவம் இதழ்.

One comment on “புகையும் அசல்

  1. Kalpana சொல்கிறார்:

    hi its a wonderful post. keep rocking.

    lovely kalpana.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s