இவர்கள்தான் கவிஞர்கள்

பணத்திற்காக ஆபாச பாடல்களை திரையுலகிற்கு தரும் தருணங்களை மறந்து கவிஞர்களை இப்படியும் பார்க்கலாம்.

இவர்கள்தான் கவிஞர்கள்
****
புகையோ
மதுபுட்டியோ
அழகான பெண்ணோ
ஆபாச பேச்சோ இல்லாதவனை
எப்படிச் சொல்வது
பிறவிக் கவிஞனென!
****
இரவு முழுவதும் கண்விழித்து
நிலவை ரசித்தவன்
கவிதையை எழுதியது காலையில் என்கிறான்
நம்ப மறுக்கிறேன்!
****
ஒரு கவிதாயினியின் கவிதை தொகுப்பை
நண்பனின் அறைக் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்தேன்
அவளின் வசவுகள் வலியை கொடுக்க
தூக்கியெறிந்தேன் சிந்தனையோடு!
அந்த தொகுப்பு இப்போது….
என்னறை குப்பைத்தொட்டியில்!
****
மண்ணில் புரண்டு
ஓவியம் வரைந்து
கோட்டை எழுப்பி
கொண்டாட்டத்தில் திளைத்திருந்த
அந்த இரட்டைசடைப் போட்ட கவிதையை
கூட்டிப் போகின்றாள்
அதை எழுதியவள்
****

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s