நோ டே – நியூட் டே கலாட்டா 18+

கலாச்சார பாதுகாவலர்களும், கற்புள்ளவர்களும் இதை படிக்கவேண்டாம்.

நோ பேன்ட் டே –

உங்கள் முன் வரும் ஒருவர் டை உட்பட எல்லாவற்றையும் சரியாக அணிந்து கொண்டு வந்தாலும் நம்ப ரஜினி ஒரு படத்தில் வேஸ்டியை மறந்துவிடுவாரே அதுபோல பேன்ட் இல்லாமல் வந்தால் எப்படியிருக்கும். சரி ஒருவர் என்றால் பாவம் மறதி என்று நினைவு படுத்தலாம், ஆனால் எல்லோருமே அப்படியென்றால் அது நிச்சயம் நோ பேன்ட் டேவாக இருக்கும்.

அட இதென்னய்யா கலாட்டா…

வேலை வேலை என்று சந்தோசத்தை தொலைத்துவிட்ட மேலை நாட்டு மக்களின் அரிய கண்டுபிடிப்புதான் இந்த நோ பேன்ட் டே. இதன் நோக்கம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு கொஞ்சம் சந்தோசமாக இருப்பது. இந்த கொண்டாட்டத்திற்காக பல நிறுவனங்கள் செலவு செய்கின்றன. மக்களிடம் தங்களுக்கு அன்பு இருப்பதாக காட்டிக்கொள்ள இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் ஏது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொண்டாத்தின் உச்சியில் இந்த விழாவை கொண்டாடுகின்றன. ஏதோ வெட்கம் கெட்ட சிலர் மட்டும் கொண்டாடுவார்கள் என எண்ண வேண்டாம், குடும்பத்துடன் கொண்டாடும் குதுகலப் பிரியர்களும் இதில் உண்டு. சிறுவர்கள், வயதுவந்த பெண்கள், தள்ளாடும் பெரியவர்கள் என பாரபட்சம் இல்லாமல் கலந்து கொள்வார்கள்.

இப்போது இந்த நோ பேன்ட் டே பல்வேறு வடிவங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று நோ பேன்ட் சப்வே டே. இந்த நாளில் ரயிலுக்குள் கூத்து நடக்கும். ஆட்டம், பாட்டம் கொண்டாட்ம் தான். இதில் நீங்கள் கலந்து கொள்ள உங்கள் பேன்டை இழக்க வேண்டியிருக்கும்.

நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும் இதில் கொஞ்சம் ஆபாசமும், அருவருப்பும் இருப்பது உண்மைதான். மேலைநாட்டின் கலாச்சாரத்தை விரும்பி ஏற்கும் நம் மக்கள் இதையும் ஏற்றுக்கொணடு கடைபிடித்தாலும் ஆச்சிரியம் கொள்வதற்கில்லை.

அது சரி, நோ பேன்ட் டேஐ கொண்டாடினால் அடுத்து நியூட் டேவை கொண்டாட வேண்டியிருக்குமே. இன்னும் கொஞ்ச வருடங்கள் கழித்து மெரினா நிர்வாணப் பிரியர்களால் நிரம்பியும் போயிருக்கலாம். யார்கண்டது.

பயபுள்ளைங்க செஞ்சாலும் செய்வாங்க.

4 comments on “நோ டே – நியூட் டே கலாட்டா 18+

  1. madurai saravanan சொல்கிறார்:

    sir ithellam thamil naattilaa no chance … aana neengka arampuchchu vachchutaathingka …neengkal enraal neenkalaaka alla ..intha irukai parththu enna maathiri emaantha paya pullaika thaan… onnum theriyaama no pantu day kku no/ naalla karuththu . kalaachchara alivu . mana maarraththirkku valiyaa ilai . suthanthiraththai unara …uruppatiyaana yosanai kovil kulam …. s ippa ursurralaaam ulakaththa purinchukkalaam .

  2. Varadharajan சொல்கிறார்:

    இது நல்ல ஐடியாவா தான் தோணுது. பார்க்கலாம் யார் start பண்ணுகிறார்கள் என்று. ஆனால் இந்த கலாச்சார சீரழிவை வலிமையாக எதிர்க்க ஒரு மொக்கை reason சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். அப்போ தான் டிவி முதற்கொண்டு பேப்பர் வரை எல்லாரும் காசு பார்க்க முடியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s