குவா குவா தகுதியிழக்கும் பெண்கள்

ஆண்களுக்கு நிகராய் வளர்ந்து கொண்டிருக்கும் பெண்களில் சிலர் பெண்மையை மட்டுமல்ல தாயாகும் தகுதியையும் இழந்து கொண்டிருக்கின்றார்கள் என வெளிச்சம் போட்டுக் காட்வே இந்த கட்டுரை.

பெண்கள் தங்களது 30வது வயதில் பெருமளவு கருமுட்டைகளை இழந்து விடுகின்றனர் என்று தினமலர் நாளிதலில் ஒரு செய்தி வெளிவந்தது. பிரிட்டனினுள்ள இரண்டு பல்கலைக் கழகங்கள் பெண்களின் சினை முட்டைகளைப் பற்றி ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளன.

ஒரு பெண் பிறக்கும் போது சராசரியாக மூன்று லட்சம் கருமுட்டைகளோடு பிறக்கின்றாள். வயதாக வயதாக கருமுட்டை குறைந்து கொண்டே வருவதால் குழந்தைப் பேரு என்பதே கனவாகி வருகிறது. அதில் குறிப்பிட்டுள்ளபடி பெண்களுக்கு 40வது வயதில் வெறும் 3 சதவீத கருமுட்டைகளே தங்குகின்றன.

இந்த ஆய்வுக்காக அவர்கள் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து 325 பெண்களை பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கின்றார்கள். அந்தப் பெண்களில் 30 வயதான 95 சதவீத பெண்களுக்கு 12 சதவீத கருமுட்டைகள் மட்டுமே இருந்தன. அதுவே 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 3 சதவீத கருமுட்டைகளே இருந்துள்ளன.

மேலும் அந்த ஆய்வில் பெண்களிடம் உள்ள கருமுட்டைகளின் அளவில் பல மாறுதல்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சில பெண்களுக்கு 20 லட்சம் முட்டைகள் இருப்பதும், சிலருக்கு பரிதாபமாக 35 ஆயிரம் முட்டைகள் மட்டுமே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு 21 வயதிலிருந்து 30 வயதிறகுள் திருமணம் முடித்து குழந்தையை பெற்றுக் கொள்வது தான். இல்லையென்றால் பலர் மருத்துவர்களையும், ஆசிர்மங்களையும் தேட வேண்டியிருக்கும்.

அந்த ஆய்வு சொல்லும் முடிவு குவா குவா வேண்டுமானால் சீக்கிரம் முயற்சியில் இறங்குங்கள், காலம் குறைவாகவே உள்ளது என்பது தான். அடிப்படையான கருதரிப்பதற்கே இத்தனை சிக்கல் என்றால், கருவாக குழந்தை வளர்வதற்கும், பல சிக்கல்கள் உள்ளன. என்னுடைய தாய் கிளவிக்கு எட்டு குழந்தைகள், என் பாட்டனுக்கு (தந்தையின் தந்தை) மூன்று தங்கைகள், இரண்டு அண்ணன்கள்.

உங்கள் மூதாதையர்களையும் அலசிப் பாருங்கள். இப்படி ஆறு, ஏழு பெற்ற பெண்கள் ஏகம் இருப்பார்கள். அதுவும் எப்படி திடமான உடலுடன் தன் வேலைகளை தானே செய்யும் அளவிற்கு. ஆனால் இன்று இருக்கும் பெண்களுக்கு ஒரு குழந்தை பெற்றுக் கொடுக்கவே தகுதியில்லை என ஒரு பெண்கள் மாத இதலின் ஆசிரியர் வருத்தம் கொண்டிருந்தார்.

சுகப்பிரசவம் நடத்த பெண்களின் உடம்பில் சக்தி இல்லாததால் பல இடங்களில் சிசேரியன் செய்தே குழந்தைகள் வெளியே எடுக்கப்படிகின்றன. வேலையே செய்யாமல் உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஆசைப் பட்டு நவீன பெண்கள் சிலர் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளும், மருந்துகளும் பிற்காலத்தில் குழந்தையை பாதிக்கின்றன. கருதரித்த சில பெண்களிடம் இருக்கும் தவறான உணவு பழக்கத்தால் குழந்தை கருவிலேயே பாதிக்கப்படுதல் எல்லோரும் அறிந்த்தே.

அளவுக்கு அதிகமான எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் மட்டுமே காரணம் என அவர் சொல்லுகின்றார். குழந்தை பிறக்கும் வரை, தாய்க்கும் சேய்க்கும் வாய் ஒன்றுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திருமண பந்த்ததின் முக்கிய காரணமே குழந்தை என்பதை மனதில் வைத்து எய்ட்ஸ் சர்ட்பிக்கெட் மற்றும், குழந்தை பேரு தகுதி சர்ட்பிக்கெட் இரண்டையும் பரிமாரிக்கொண்டால் இல்லறம், நல்லறமாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s