இது (கள்ளக்)காதல் மாதம்

காதல் பற்றிய சரியான புரிதல் இல்லாத காலங்களில் கூட காதல் மீது எனக்கு மதிப்பிருந்தது. நேசம் என்ற வார்த்தையை விடவும், காதல் என்பது சற்று கவித்துவமான வார்த்தையாக மாறிப் போனது காலத்தின் கோலம்.

காதலையும் கவிதையையும் பிரிக்கவே முடியாது. கசிந்துருகும் காதலை கவிதையின் முலம் மட்டுமே உணர முடியும் என்பது என் எண்ணம். 25 வருட தமிழ் சினிமா சொல்லாத காதலில்லை. என்றாலும் ஒரு மூன்று வரி கவிதை ஏற்படுத்தும் தாக்கத்தை தமிழ் சினிமா எனக்குள் ஏற்படுத்தவில்லை.

பள்ளிக் காலங்களில் ஏற்பட்ட எதிர்பாலின ஈர்ப்பை காதலாக நினைத்து கொண்டாடிய காலங்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கும். காதல் கைகூடாத ஒரு கசப்பும், நினைவுகளில் ஒரு இனிப்பும் கலந்த தனிச்சுவை அது. இந்த பால்ய காதல் பற்றி பல சிறுகதைகளை வாசித்துவிட்டேன். ஆனாலும் ஆனந்த விகடனில் வெளிவந்த செழியனின் கவிதைகள் மிகவும் மனம் மயக்கும். ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு காலக் கட்டம், வெவ்வேறு சூழ்நிலை என பல பால்ய காதல்களை அடங்கிய தொகுப்பு அது.

எங்கள் கிராமத்து பெண்கள் காதல் செய்து ஓடிப்போகும் மாதம் ஒன்று இருந்த்து. இப்போது இந்த சமாச்சாரங்கள் குறைந்து விட்டாலும், விட்ட குறை தொட்ட குறையாக சில தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த மாதம் பள்ளி படிப்பு முடிந்து விடுமுறையை கொண்டாடும் மே மாதம். 12ம் வகுப்பு முடித்த கையோடு தங்களுக்கென ஒரு தனி வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பெரும் பாலும் தங்கள் காதலனாக தேர்ந்தெடுப்பது டிரைவரையும், கண்டெக்டரையும் தான். மேலோட்டமாக பார்த்தால் இது காதல் என்று தோன்றும்.

ஆனால் உண்மையில் இது காதலில்லை. அப்பட்டமான ஒரு நாடகம். எத்தனையோ நபர்கள் இருக்க ஓட்டுனரையோ, நடத்துனரையோ இவர்கள் தேர்ந்தெடுக்க காரணம், உழைக்கும் மக்கள் என்பதாலும், தினம் தினம் அவர்களை காலை, மாலை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாலும் தான். வீட்டிற்கு தெரியாமல் சந்திப்பதிலும் பிரட்சனைகள் இல்லை. இதில் நடத்துனரை விடவும் ஓட்டுனருக்கு கொஞ்சம் மவுசு குறைவுதான் என்றாலும் மற்ற தொழிற்காரர்களை காட்டிலும் அது பெரிதல்ல.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஊர் அலசுவதற்கு முன்பே இவர்கள் காதல் சமாச்சாரங்களை ஊர் அலசியிருக்கும். காதலர்களை தேர்ந்தெடுப்பதில் ஆண்கள் விட பெண்கள் மிகவும் அறிவாளிகள் என்று அந்த ஜோடிகளை பார்க்கும் போது தெரியும். இந்த காதலை என்னால் உண்மையான காதல் என்று சொல்ல முடியவில்லை. நிரந்திரமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க பெண்கள் பயண்படுத்தும் துடுப்பு சீட்டுகளாக தான் எண்ணத் தோன்றுகிறது.

இத்தனை காதல்கள் இருந்தாலும் நம் பெண்கள் திருமணத்திற்கு பின் கணவன் மீது கொள்ளும் காதல், ஒருவித கட்டாயத்தினால் ஆனாது. இப்போது கள்ளக் காதல் என்ற ஒரு சங்கதி பரவலாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. திருமண பந்தங்களைத் தாண்டிய ஒரு உறவு சிலரால் அங்கிகாரம் செய்யப் படுகிறது. தங்களை பெண்ணின பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அமைப்புகளும், சமூக தொண்டு நிறுவனங்களும் கள்ளக் காதலை எல்லோரும் அங்கிகரிக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்கள்.

இது சில ஊடகங்களும், சில அமைப்புகளும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கள்ளக் காதலுக்காக கணவனையும், குழந்தைகளையும் கொல்லும் சிலர் இருந்தாலும், தற்கொலை செய்து கொள்ளும் நபர்களும் அதிகம் என தெரிகிறது.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.

One comment on “இது (கள்ளக்)காதல் மாதம்

  1. madurai saravanan சொல்கிறார்:

    nalla pathivu. kathal inru innum veku veraivaaka varukirathu. ettaam vakuppile ettatha kan ikku aasaipattu ottunarkalitam valvai tholaiththavarkal ennikkai athikam. inru kalla kaathal inikkum nilai aakivittathu. penkal suyamaai mudivedukkendranar enra ninappil thannai emaarri kolkinranai. vaalka unmai kaathal. kalla kathalarkalukku anpaana vendukol , thayavu seithu , diverce seithu kondu unmai kathalaaka ungkal anbai unmaiyaanathu aakkungkal.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s