கதர கதர காட்டிற்குள்

இது அருகில் உள்ள கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம். பெயரும் ஊரும் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறது.

சூரியன் சுட்டெரிக்கும் கிராமம் புதூர். வெள்ளாம்மைக்கு வழியில்லாத மக்கள் பெரிதும் நம்பியது, வெள்ளாட்டை தான். புகுந்த வீட்டிறகு அனுப்பும் சீருடன் ஒரு செனை வெள்ளாட்டையும் கொடுத்தனுப்பும் பழக்கமும் உள்ள ஊர். அந்த ஊரில் இரண்டு தலைமுறைக்கும் மேல் புகழோடு வாழ்ந்த குடும்பம் ராமசாமியுடையது.

ராமசாமிக்கு இரண்டு மகள்கள். வயதுக்கு வந்த இரு பெண்களையும் மணம் முடித்துவிட்டார்கள். ராமசாமியின் மனைவி சென்ற வருடம் இறந்து போய்விட்டார்கள். இரு மகள்களும் ஆதரவு தராததால் ராமசாமி புதூர் கிராமத்திலேயே வயலை பார்த்துக் கொண்டு தங்கி விட்டார்.

அதே ஊரில் வசிக்கும் சசி சென்ற வருடம் தான் வயசுக்கு வந்தாள். அப்பா இல்லாத அவளை மணம் செய்ய உறவுகள் யாரும் முன் வரவில்லை. காரணம் வறுமையுடம் அவளுக்கு பேச்சு வராது என்பது தான். அவளுக்கு ஒரே துணை அம்மா வசந்தி மட்டும் தான்.

வெள்ளாடுகளை மேய்க்க ராமசாமியின் வயலுக்கு அருகிலுள்ள காட்டுக்குதான் சசி ஓட்டிவருவாள். கிராமத்தை விட்டு தள்ளியிருந்த அந்த காட்டில் சசியை தனியாக பார்த்த ராமசாமிக்கு ஒரு துணை கிடைத்தது. வயது வந்த பெண்ணுடன் வயதான ஆணின் நெருக்கம் காமமாக மாறியது. ராமசாமி சசியை கற்பழித்து விட்டு வீட்டிற்கு ஓடி விட்டார்.

இரவாகியும் வீட்டிற்கு வராத சசியை வசந்தியும் அக்கம் பக்கத்தினரும் தேட ஒரு முள் காட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார் சசி. சசியை தேடிவந்த கூட்டதில் ராமசாமியும் இருந்த்தால் யாருக்கும் ராமசாமியின் மீது சந்தேகம் வரவில்லை. மருத்துவமனையில் இருந்த சசி சிகிச்சைக்கு பின் உண்மையை அம்மாவிடம் சைகையில் கூற, இப்போது ராமசாமி சிறையில்.

இருபது வயதில் காமம் ஏற்படுத்தும் வலியை விடவும், அறுபது வயதில் காமம் ஏற்படுத்தும் வலி மிகவும் கொடூரமானது என்று கதாவிலாசத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் கூறியிருப்பார். வாலிபர்களிடம் மட்டுமல்ல வயோதிக மனிதர்களும் கூட விலகியே இருக்க வேண்டிய அவசியத்தை நம் முன்னோர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். வயது வந்த பெண்ணை தகப்பன், தமயனிடமே ஒதுக்கி வைத்திருந்த சமூகம் கலாச்சாரம் ஒரு விதத்தில் ஞாயமாகவே தெரிகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s