தமிழ் நாட்டை சொர்க்க பூமியாக்க சில யோசனைகள்

அறிவு மிக்க தமிழர்களை (நாம் மட்டும் தான் சொல்கிறோம்) அதிகம் கொண்ட நாடு தமிழ்நாடு. ஊற்றி வைத்த பாத்திரத்தின் உருவத்திறகு தக்கவாறு மாறிடும் நீர் போல (நன்றாக கவணியுங்கள் பச்சோந்தி என சொல்லவில்லை) உலகமுழுதும் தன்னை நிலைபடுத்தி கொண்டிருக்கும் தமிழனை ஈன்றெடுத்த தாய் நாடு. தமிழ் படங்களைப் பார்த்தும் தமிழ் தாகம் அடங்காமல் வேறு மொழி படங்களையும் தமிழில் பார்க்க துடிக்கும் தாய்மொழி நேசர்களின் நாடு. இப்படி எத்தனையோ சிறப்புகள் இருந்தும் தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறவில்லை.

அரசாங்கமும் தமிழச்சியின் தாலிகயிற்றை (இப்ப நிறைய பேர் தாலியே வேணாங்கராங்களாம், விஜய் தொலைக்காட்சியில் பார்த்தேன்) அடகுகடையில் வைத்து டாஸ்மார்க் நடத்திவருகிறது. (அடகுகடையில் வைத்த தாலியை சில பெண்கள் மீட்டு வந்தாலும் தாலியை அணிவதில்லை. ஏன் தெரியுமா. அதற்குள் கணவன்மார்களெல்லாம் பரலோகம் போய்விடுகின்றார்கள்). பாரத பிரதமரே காலில் விழுந்து வணங்கிய சின்னபிள்ளை அவர்கள் ஐந்தாம் முறை தமிழக முதல்வராக சேவை செய்துகொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதியை நேரில் பார்த்து மதுவை ஒழிக்க நடவெடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டாராம். அதற்கு கருணாநிதி அதிக வருமானம் வருகின்ற துறை அதில் கைவைக்க முடியாது என மறுத்துவிட்டாராம். மிகவும் வருத்தப்பட்டு மகளிர் மாத இதழ் ஒன்றில் கூறியிருக்கிறார் அவர்.

தீப ஒளி திருநாளுக்காக 200 கோடி விற்பனை என இலக்கு நிர்ணயம் செய்து, 240 கோடி விற்பனை ஒரே நாளில் ஈட்டிக் கொடுத்த துறையை பற்றி தெரியாமல் புகார் செய்துவிட்டார்.

பாஸ்மார்க் எடுக்கவில்லையென
கவலை கொள்பவர்களுக்கெல்லாம் இருக்கிறது
டாஸ்மார்க்

இப்படி டாஸ்மார்க் ஹைக்கூ எழுதி உங்களை வேதனைப்படுத்த விரும்பவில்லை. அதற்கு பதிலாக தமிழ் நாட்டை சொர்க்க பூமியாக்க சில யோசனைகளை சொல்லப் போகின்றேன். யாராவது அரசுக்கு சொந்தக்கார்கள் இருந்தால் சொல்லவும்.

முதல் யோசனை

கணவன் குடித்துவிட்டு இறந்து போக பெண்களெல்லாம் இங்கே கைம்பெண்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும் அதன் காரணமாய் பணம் சம்பாதிக்கவும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தலாம். புரோக்கர் தொழிலில் மிக அதிக லாபம் கிடைப்பதாக தின நாளிதளில்களில் புரோக்கர்கள் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். எனவே அந்த துறையையும் அரசே ஏற்கலாம்.

இரண்டாவது யோசனை

இப்போது தமிழகத்தில் குழந்தைகளை கற்பழித்து கொலை செய்வது பெருகி இருக்கின்றது. அதை உடனடியாக கவணத்தில் கொண்டு வேறு மாநிலத்திலிருந்து குழந்தைகளை இறக்குமதி செய்யலாம். அந்த குழந்தைகளுக்கு விலை நிர்ணயம் செய்து ரேசன் கடைகள் மூலமாக விற்கலாம்.

மூன்றாவது யோசனை

கள்ளுக்கடை மறியல் நடத்திய புண்ணியவான் பெரியாரின் வாரிசு என்பதால் கள்ளை மட்டும் விட்டுவிட்டு அபின், ஹெராயின் போன்ற பொருட்களையும் பாக்கெட் போட்டு டாஸ்மார்கில் விற்கலாம்.

நான்காவது யோசனை

இளைஞர்களுக்கு தொழில் கல்விதான் மிகவும் முக்கியம். தகவல் தொழிநுட்பம் சற்று சரிந்து போய் உள்ளதால்

உங்களுக்கும் ஏதாவது யோசனை தோன்றினால் கண்டிப்பாக குறிப்பிடவும். ஏனென்றால் தமிழகத்தை சொர்க்கமாக மாற்றுவது நம் கடமை. அட என்னடா இப்படி கேடு கெட்ட யோசனையெல்லாம் சொல்லிவிட்டு சொர்கமுன்னு சொல்லரான்னு நினைக்காதீங்க, எல்லோரும் செத்து போய் நரகத்துக்கு போயிட்டா தமிழ்நாடு சொர்கமாக தானே இருக்கும். அததான் சொன்னேன். எப்பூடி….

மிகவும் வேதனையான விசயத்தை கையாண்டு இருக்கின்றேன் என தெரியும். இதை படிப்பவர்கள் மனமும் வேதனை அடைந்தால் அது தான் உண்மையான மனம். அந்த மனதிற்கு நான் தலை வணங்குகிறேன்.

2 comments on “தமிழ் நாட்டை சொர்க்க பூமியாக்க சில யோசனைகள்

 1. ஜோதிஜி சொல்கிறார்:

  நேற்று ஒரு திருமண விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மனம் வெதும்பி பேசியிருந்தார். ஒரு வகையில் சிரிப்பாக இருந்தாலும் அவர் சாதீ ரீதியாக தன்னுடைய குமுறலை வெளிக்காட்டி இருந்தாலும் அவர் சொல்லும் பல விசயங்களை ஆதங்கமாய் தாங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால் ஒரு வகையில் இந்த அளவிற்கு நெகடிவ் பார்வை தேவையில்லை என்றாலும் நடந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு கலாச்சார சீரழிவும், அதை பெருமையுடன் பொத்திக்கொண்டு பாதுகாப்பாய் தன் இடுப்பில் வைத்துக்கொண்டு பயணிப்பதும் யோசிக்கத் தான் வேண்டி இருக்கிறது.

  1. முந்தாளை விலகினால் பதறிப்போகும் தாய்மார்கள் வீட்டுக்குள் வந்து தொலைக்காட்சி வாயிலாக முக்கால் நிர்வாண நடிகையை ரசிப்பது ஏன்?

  2. நெஞ்சு முழுக்க சளி இருந்தாலும் புகையை பகையாய் கருதாமல் நாகரிகமாய் மாற்றியது எது?

  3. வார்த்தை தவறுதலாய் பேசிய காரணத்தால் மனம் உடைந்த குடும்பத் தலைவர்கள் தலைவிகள் மத்தியில் கோடிக்கணக்கில் ஊழல் செய்தாலும் தொலைக்காட்சியில் சற்று கூட வெட்கம் இல்லாமல் கையாட்டிக்கொண்டு செல்வது ஏன்-

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நன்றி நண்பரே!.

   மக்களின் சொரனைக் கெட்டவர்களாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள். என்னுடைய தாத்தா காலத்தில் கடன் என்றாலே பிழைக்க தெரியாதவன் என்று சொன்னார்கள். இப்போது கடன் வாங்காவிட்டால் பிழைக்க தெரியாதவன் என்கிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s