இளையராஜாவுக்கு என்னாச்சு

தமிழனுடைய தொழில் எது என்றால் அது நிச்சயம் திரைத் துறையாகத் தான் இருக்கும். மொழி கடந்த துறை அறிவும், ஆர்வமும் திரைத் துறையைச் சார்ந்தே நமக்கு இருக்கிறது. ஒரு கிராமத்து இளைஞனுக்கு தமிழ் இலக்கியவாதிகளின் பெயர்களோ, வரலாற்று ஆசிரியர்களின் பெயர்களோ தெரிவதற்கு முன்பே ஹாலிவுட் நடிகர், நடிகைகளின் பெயர்கள் தெரிந்துவிடுகின்றன. அரசியலும் திரை துறையும் பொது மக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாய் மாறிவிட்டது. அதனால் தான் தமிழ் திரைப் படங்களையும் தாண்டி நம்மால் பயணப் படவும் விவாதிக்கவும் முடிகிறது.

கலை உலகில் கடவுளாக, தனி வாழ்க்கையில் பழுத்த ஆன்மீக வாதியாக திகழும் இளையராஜா, மிக சமீப காலமாக கவலை கொள்ள வைக்கின்றார். ஆன்மீகவாதியாக கோயில்களுக்கு சேவை செய்வதும், ஜெயேந்திரர் விழாக்களில் கலந்து கொள்வது பற்றியும் சிலர் விமர்சனம் எழுதியதை படித்தேன். லட்சக்கணக்கான பணத்தினை ஆன்மீக வழியில் அவர் செலவு செய்வதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு உரிமையில்லை. அது அவரது உழைப்பில் கிடைத்த பணம். ஏழைக்களுக்கு தானமாக வழங்குவதற்கோ, கோவில்களுக்கு தங்கக் கட்டிகளாக வழங்குவதற்கோ அவருக்கு உரிமை இருக்கிறது.

(கைகளில் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் குடிக்காக செலவு செய்து வாழ்க்கையையே அழித்து கொண்டிருக்கும் குடிகார மக்களுக்கு இலவசங்கள் கேடு விளைவிக்கும் என்பது என் எண்ணம். உழைத்து வாங்கும் பணத்தினையே அழித்துவிடும் மக்களுக்கு பணக்காரர்கள் கொடுக்கும் இலவச பணங்கள் நிச்சயம் கேடு தான் விளைவிக்கும்.பொங்கல், தீபாவளிக்கு அவர்களுக்கு கிடைத்த பணமெல்லாம் எங்கு போனது என்பதை டாஸ்மார்க் விற்பனை சாதனை மூலம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இதை மறுத்து கூற விரும்பும் நண்பர்கள் தக்க காரணத்துடன் கூறவும்.)

சரி அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விலகி இசைக்கு வருவோம்.

சூரியன் மறையும் மாலை நேரம், நம்மை சுற்றி புல்வெளி படர்ந்திருக்கும் மிக ரம்மியமான சூழல் தொலைவில் மிக மெல்லியதாக பாடல் ஏதாவது ஒலித்தால் மனம் நிம்மதியாக இருக்கும். இது தான் இசையின் வலிமை. அந்த வலிமையான இசையை இளையராஜா தொலைத்துக் கொண்டிருக்கின்றாறோ என்று தோன்றுகிறது. பழசிராஜா, பா போன்ற படங்களின் பாடல்கள் கவணத்தை ஈர்க்காமல் போனதை நினைவு படுத்துகிறேன்.

இந்த இரண்டு படங்களை தவிற நிறைய படங்களுக்கு அவர் இசையமைத்துக் கொண்டுதான் இருக்கின்றார். தினத்தந்தியின் பட விளம்பர பகுதியில் இசைஞானி இளையராஜாவின் இசையில் என்ற வாசகத்துடன் ஏகப்பட்ட படங்களை பார்த்து விட்டேன். புதிய இயக்குனர்களுக்கு ராஜாவின் இசை ஒரு மாபெரும் பலமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நிறைய படங்கள் தோல்விகள். ஒரு படத்தின் தோல்விக்கு இயக்குனர் மட்டுமல்ல இசையமைப்பாளர்களும் காரணம். இசைக்காக தமிழகத்தில் ஓடிய படங்கள் ஏராளம்.

நான் கடவுள் படத்திற்கு பாலாவிற்கு கிடைத்த தேசிய விருதிற்கு பலர் மகிழ்ச்சியடையவே இல்லை. இளையராஜாவிற்கு கிடைக்காமல் போனதற்காக வருத்தமே பட்டிருக்கின்றார்கள். இளையராஜாவிற்கு கிடைத்திருந்தால் நான் கண்டிப்பாக அதிர்ச்சியாகி இருந்திருப்பேன். கண் தெரியாத புஜா பாடும் பாடல்களில் இசையமைத்து ஒரு ஆர்கெஸ்ரா போல செய்தவருக்கு எப்படி தேசிய விருது. ரயிலில் பாடும் ஒரு பிச்சைகாரியின் காட்சியையே மனதில் நிற்காமல் செய்து விட்டார். பாடல் பாடும் பாடகியின் குரலுக்கும், படத்தில் புஜாவின் குரலுக்கும் துளி கூட சம்மந்தமே இல்லை.

ஒரு புது இசையமைப்பாளர் கூட இந்த தவறை செய்திருக்கமாட்டார். இளையராஜா அப்படி செய்தமைக்கு காரணம் அவர் இசையறிவு . தேசிய விருது கிடைக்காமல் போனதற்கும் அவர் அதிமேதாவி தனம் தான் முக்கிய காரணம். விருதுகளுக்கு அப்பாற்பட்டவர் எங்கள் இசைஞானி என்றெல்லாம் என்னால் சொல்லமுடியாது. பாடல்களை ரசிக்கின்ற ரசிகனாக இருப்பதற்கும் எல்லா தவறுகளையும் சரியென வாதிடுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

சிலர் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும், சொற்களையும் எடுத்து கொண்டதால் அவரை எதிர்க்கின்றார்கள். எழுத்தாளர் சாருநிவேதிதா எதையும் வெளிப்படையாக பேசுபவர். அவருடைய நான் கடவுள் விமர்சனத்தில் நான் உணர்ந்த தவறை கூட சொல்லியிருப்பார். அவர் இளையராஜாவின் இசையை தனக்கு பிடிக்கவில்லை என்று எழுதியிருக்கிறார். ஆனால் அவரே நந்தலாவில் இளையராஜாவின் இசையை பாராட்டி இருக்கிறார். இளையராஜாவின் எதிர்ப்பாளர்களும் சில சமயங்களில் இளையராஜாவை ரசிக்கின்றார்கள்.

தன்னுடைய இசையால் தமிழகத்தை கட்டிப் போட்டிருந்த இளையராஜா இப்போது தடுமாறுவது ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை சரக்கு தீர்ந்து விட்டதா என்ற கேள்வியையும் நண்பர்கள் எழுப்புகிறார்கள். இளையராஜா இசைக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக நினைக்கின்றார்கள். கலைஞர் கருணாநிதியின் வசணங்கள் எடுபடாமல் போனது போல இசைஞானியின் இசையும் போய்விட்டதோ என்றோ எண்ணத் தோன்றுகிறது.

இத்தனை காலம் இசையால் கற்றதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்துவிட்டு, திரை இசை தவிர்த்து சிறந்த ஆல்பங்களை இளையராஜா தயாரிக்க வேண்டும். நாட்டுப்புற பாடல்கள் அவரது இசையில் காலம் காலமாக ஒலிக்க வேண்டும் என்பது என் ஆசை. செய்வாரா இளையராஜா.

3 comments on “இளையராஜாவுக்கு என்னாச்சு

  1. Joe சொல்கிறார்:

    Like say, Ilayaraja’s time has come and gone.

    Now it’s upto A. R. Rahman, Yuvan et al to rule the tamil music world!

  2. சந்தனபாண்டியன் சொல்கிறார்:

    ஐயா, இளையராஜாவுக்கு ’இசைச்சரக்கு தீர்ந்து’ பல ஆண்டுகளாகிவிட்டன! நீங்கள் சொல்வது போலுள்ள விமர்சனங்களைக் கடந்த 15 ஆண்டுகளாகவே நாம் அனைவரும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம். ஆனால் என்ன செய்ய, அவரை ஒப்பந்தம் செய்யும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இந்த ’உண்மை’யைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்! பாருங்கள் கடந்த ஆண்டு கூட அவரைச் சுமார் இருபது படங்களுக்கு இசையமைக்க வைத்துவிட்டார்கள்! அதில் நிறைய பாடல்கள் சூப்பர்ஹிட்டாக வேறு ஆகிவிட்டன! என்ன செய்ய? எல்லாம் ‘விதி’! தமிழனை யாராலும் திருத்தவே முடியாது! சரி தானே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s