தமிழர்களின் வரலாறு திரிக்கப்படுகிறது – ஓர் உண்மை

இந்த இடுகையை உலக தமிழர்களிடம் கொண்டு உங்கள் கடமையும் கூட என்பதை மிகவும் மன வேதனையோடு எழுதுகிறேன். நம்முடைய இளைய தலைமுறைக்கு நாம் கொடுத்து செல்லும் மிகப் பெரிய பொக்கிசம் வரலாறு. ஆனால் அந்த வரலாற்றினையே திரித்து வருங்காலத்தை தங்கள் புனைகதைகளால் நிரம்பிட வைக்கும் ஒரு சதி பற்றி இங்கு விவாதிக்கப் படுகிறது.

ஒரு சமூகத்தின் வரலாற்றை சில புனைவுகள் மூலம் மாற்ற முடியுமா. இதோ செய்திருக்கின்றார்கள். படியுங்கள்.

புனைக் கதை-

இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள் வடக்கே பரவி வடக்கே உள்ள பிராகிருதம் போன்ற பண்படாத மொழிகளை உருவாக்கினார்கள். சிந்துசமவெளிநாகரீகம் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவர்கள் சிவன் அல்லது பசுபதி போன்ற கடவுள்களை வழிபட்டார்கள். பண்பாட்டுவளர்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கை இங்கே நிலவியது. இக்காலத்தில் தமிழர்களின் ஆன்மவியல் [soulology] வளர்ச்சியுறாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் வடக்கில் இருந்து வந்த சமணர்களும் பௌத்தர்களும் தமிழர்களின் நிலத்தைக் கைப்பற்றி ஆண்டார்கள். தமிழர்களின் சிந்தனையையும் அவர்கள் அழித்தார்கள். அவர்கள் கடவுளை உணரக்கூடிய ஞானம் இல்லாதவர்கள்.இவர்களால் தமிழர்களின் ஆன்மவியல் முழுமையாக அழிந்தது. இக்காலகட்டத்தில் வடக்கே இருந்து வந்த அன்னியர்களான ஆரியர்கள் தமிழர்களின் பண்பட்டை அழித்து அவர்களை சாதிகளாகப் பிரித்து அவர்களை அடிமையாக்கி சுரண்டினார்கள்.

இந்நிலையில் கிறிஸ்துவின் சீடரான புனித தோமையர் [தாமஸ்] இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார். இவர் மேலைக்கடற்கரைக்கு வந்து அங்கிருந்து கீழைக்கடற்கரைக்கு வருகைதந்தார். அவர் கிறித்தவ ஆன்மவியலை தமிழர்களுக்கு கற்றுத்தந்தார். தமிழர்களின் தொன்மையான ஆன்மவியலில் கிறிஸ்தவத்தின் இறைச்செய்திகள் சில உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அதன் வெளிச்சத்தில் அவர் தமிழ்-கிறித்தவ ஆன்மவியலை உருவாக்கினார்.

அதை அரைகுறையாக புரிந்துகொண்டவர்களால் அந்த தத்துவ சிந்தனைகள் திரிக்கப்பட்டன. இவ்வாறு திரிபுபட்ட கிறித்தவமே சைவம்,வைணவம் என்ற இருபெரு மதங்களாக உருவெடுத்தது. இதுவே பக்தி இயக்கம் ஆகும். இந்த பக்தி இயக்கமானது பௌத்தர்களையும் சமணர்களையும் துரத்தியது

புனித தோமையர் பிராமணர்களால் கொல்லப்பட்டார். அவர் கற்பித்த தமிழ்-கிறித்தவச் சிந்தனைகள் பிராமணர்களால் மேலும் திரிக்கப்பட்டன. அவ்வாறாக சைவத்தையும் வைணவத்தையும் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆதிக்கிறித்தவ சிந்தனைகளை அவர்கள் தங்களுடைய சிந்தனைகளாக மாற்றிக் கொண்டார்கள். இதன்பொருட்டு அவர்கள் சமசுகிருதம் என்ற மொழியை உருவாக்கினார்கள். இந்தமொழியில் வேதங்கள் உபநிடதங்கள் போன்ற நூல்களை எழுதிக்கொண்டார்கள். அவற்றில் உள்ள ஞானம் கிறித்தவ ஞானமே என்று வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவற்றை யாரும் கற்கக் கூடாது என்று சொன்னார்கள். சாதிப்பிரிவினைகளை நிலைநிறுத்திய அன்னியர்களான பிராமணர்கள் தமிழர்களை இந்தியா முழுக்க அடிமையாக்கி வைத்திருந்தார்கள்.

எண்ணற்ற நூல்களை இப்படி பட்ட கருத்துகளை மையப்படுத்தி எழுதி தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். எல்லா கிறிஸ்துவ சபைகளிலும் இந்த வரலாறு தமிழனுடையதாக்கப் படுகிறது. திராவிடம் என்பது தமிழனால் ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டதால் திராவிடத்தையே கிறிஸ்துவமாக மாற்ற பார்க்கின்றார்கள். சம அளவு வரலாற்று உண்மைகளையும் அப்படியே இடைச் சொருகள்களாக புனைவுகளையும் எழுதும் திறனை தமிழனிடமிருந்துதான் கற்க வேண்டும்.

இந்த கருத்துகளில் உள்ள பொய்கள் –

தாமஸ் இந்தியா வந்தாரா என்பதே பெரிய கேள்விக் குறி. மிகவும் பிற்காலத்தில் எழுதப்பட்ட வரலாற்றில் கூட தாமஸ் இந்தியா வந்து ஒரு மன்ன்னை மதம் மாற்ற முயன்று அதில் தோற்று அந்த மன்ன்னால் கொல்லப்பட்டார் என்கிறது.

ஆனால் இவர்கள் தாமஸை கொலை செய்தது பிராமணர்கள் என்று படமிட்டு பரப்பி வருகின்றார்கள்.

ஔவையை ஏவாள் என்கிறார்கள். என்ன ஒரு கொடுமை இது.

தமிழ் ஆன்மீகத்தின் மிகச் சிறந்த கூறான சிவஞானபோத்த்தை கிறித்துவ நூலாக மாற்ற பார்க்கின்றார்கள். சிவஞான போதம் சைவத்தை சார்ந்த்து என்று வாதாடுபவர்களை. அன்பே சிவமென்பது கிறித்துவம் என்கிறார்கள். ஏற்கனவே திருக்குறளை தங்கள் நூலாக்க இவர்கள் செய்த பித்தலாட்டங்களை எல்லோருக்கும் சொல்ல கடமை படுகிறேன். 1970 களில் ஆர்ச்பிஷப் அருளப்பா காலத்தில் மோசடியாக செப்பேடு ஒன்று உருவாக்கப்பட்டு திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று சொல்லப்பட்டது. பின்பு அது மோசடி என்று நிரூபிக்கப்பட்டது. ஆர்ச் பிஷப் மன்னிப்பு கோரினார்.

நாத்திகர்களின் பங்கு –

பிராமணர்களை எதிர்க்கும் விதமாக இந்த தாமஸ் கதை சொல்லப்பட்டிருப்பதும், தமிழர்களின் அடையாளங்களை பிராமணர்கள் அழித்தார்கள் என்பதும், அந்த அடையாளங்கள் தாமஸின் கிறித்தவம் என்பதும் நாத்திகர்களின் ஆதரவிற்காக எழுதப்பட்டது. இங்கு இருக்கும் நாத்திகர்களின் முதல் குறிக்கோள் பிராமர்களை ஒழிப்பது. அதை நன்றாக உணர்ந்து கொண்டு கதை கட்டியிருக்கின்றார்கள்.

சரி இந்த கதைகளை தங்கள் பகுத்தறிவு மிக்க அறிவுஜீவிகள் என்று தாங்களே சொல்லிக் கொள்ளும் நாத்திகர்கள் ஏற்றுக் கொண்டார்களா என்றால். ஆம் ஏற்றுக் கொண்டு இதை பரப்பியும் வருகின்றார்கள். நாத்திக நடிகன் கமலே இதற்கு உதாரணம். மிக சமீபத்திய பேட்டியில், ‘திருவள்ளுவரை சிலர் சம்ணர் என்ற்கிறார்கள் சிலர் சைவர் என்கிறார்கள் சிலர் கிறிஸ்தவர் என்கிறார்கள்…’ என்று சொல்லியிருக்கின்றார். 50 ஆண்டுகள் திரை துறையில் சாதனை செய்தவருக்கு ஒரு வேளை திருக்குறள் கிறித்துவ நூலாக இருக்குமோ என்ற ஐயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சோழ பாண்டிய வரலாறுகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழனுடைய வரலாற்றையும் அழித்து வரலாறில்லாத தமிழனுக்காக பாடுபடுபவர்களில் மேதாவி தமிழர்களும் இருப்பதை என்னவென்று சொல்லுவது.

சாத்தியம் –

பல நாட்களாக திட்டமிடப்பட்டு ஆராய்ச்சியின் விளைவு என்று சொன்னால் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கின்றார்கள். இது சாத்தியமா என்றால் 100 சதவீதம் சாத்தியமே. ஏனென்றால் ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளின் சரித்திரங்களை ஏற்கனவே மாற்றி எழுதிவிட்டார்கள். மக்களும் தங்கள் மூதாதையர்கள் சுய அறிவு கிடையாது என்று ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

ஏழாம் நூற்றாண்டில் கால் பதித்த தாமஸ் குழு இரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட இந்து சமய நூல்களுக்கு சொந்தம் கொண்டாடுவது நகைச்சுவையாக இருந்தாலும். கிறித்துவ மதம் பரவுவதற்கு இத்தனை திருட்டு தனங்களை கையாலுபவர்களை கண்டு மனம் எரிச்சலடைகின்றது. வரும் காலத்தில் எல்லா நூல்களையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு வரலாறுகளை மாற்றி தமிழர்கள் புனைவுகளை வரலாறாக படித்தும் சொல்லும் கொண்டிருக்கும் நிலையை நினைத்தால் வேதனையாக இருக்கின்றது.

அதிகார பலமும், பணபலமும், சில அறிவு ஜீவிகளின் புனைகதைகளும் வரலாற்றினை மிக மௌனமாக அடியோடு மாற்றுவதற்கு வேலை செய்து கொண்டிருக்கின்றன. தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள். உலகிற்கே சிறந்த நாகரீகம் கற்று கொடுத்த நமக்கு இவர்கள் புனைக் கதைகள் வரலாறாக அமைந்துவிடக் கூடாது என்பது என் கருத்து.

12 comments on “தமிழர்களின் வரலாறு திரிக்கப்படுகிறது – ஓர் உண்மை

 1. manohar சொல்கிறார்:

  yes very true

 2. Stephen Raj சொல்கிறார்:

  I like this & It’s my country,people.

 3. dravidan சொல்கிறார்:

  nallathu ippadippatta aaraichikal ikkala ilaingarkalai nichayam perumaikolla cheyum

 4. ஜீவா சொல்கிறார்:

  நன்றி நன்பரே , மெலும் வரலாற்று சான்றுகள் மற்றும் ஆண்டுகளை குறிப்பிட்டு சொன்னால் மிக எளிதில் மக்களை சென்றடையும்………………………. நன்றி !!!………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s