அழகான நிர்வாணம்

நிர்வாணம் என்பது மிகச் சாதாரண விசயம் என்று தான் எண்ணியிருந்தேன். ஆனால் அது மிகவும் அசாதாரண விசயம் என சொல்ல வைத்தது என் நண்பனின் அனுபவம்.

என்னுடைய நண்பர்களில் ஒருவன் ஜென் மத்த்தினை சார்ந்தவன். அவனுடைய வீட்டிற்கு ஒரு முறை ஜென் துறவிகள் வருகை தந்தார்கள். துறவிகள் என்றால் முற்றும் துறந்தவர்கள் அவர்கள். ஒரு குழந்தையின் நிர்வாணத்தினை கேலிப் பொருளாக மட்டுமே பார்ப்பவர்கள் நாம். அப்படியிருக்க வளர்ந்த இரண்டு துறவிகளின் நிர்வாணத்தை எப்படி எல்லாம் எள்ளி நகையாடுவோமோ அப்படி நகைப்புடனும் அருவருப்புடனும் அண்டை வீட்டினர் பார்க்க. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு உணவருந்திவிட்டு சென்றிருக்கின்றார்கள் அவர்கள்.

அவன் சொன்னதில் பெரிய விசயம் அவர்களுக்கு சாப்பாடு பரிமாறியது, அவன் அன்னையும், வயது வந்த தங்கையும். இதை எப்படி ஏற்றுக் கொண்டாய் என நான் வினவியபோது. அவன் சிரித்துக் கொண்டே சொன்னான், நீ நினைப்பது போல அவர்கள் தவறான எண்ணங்களை உடையவர்கள் அல்ல. ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்தால் கூட அவர்களுக்கு காம உணர்ச்சி வராது என்றான்.

அவர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், இரண்டு பெண்கள் நிர்வாண கோலத்தில் இருக்கும் ஆண்களுக்கு உணவு பரிமாருதல் எவ்வித்த்தில் ஞாயம் என்றேன். விரும்பி அழைத்து உணவிட்டதே அந்த பெண்கள் தான். தெய்வீகம் எனும் போது பிற எண்ணங்களுக்கு அங்கு இடமில்லை என்று சொன்னான். ஒரு பெண்ணின் நிர்வாணத்தை இங்கு கலையாகப் பார்க்கும் பலர் இருக்கின்றார்கள். ஆனால் ஆண் நிர்வாணத்தினை அவ்வாறு பார்ப்பதில்லை. ஏனென்றால் ஓவியர்களும், கலைஞர்களும் பெரும்பாலும் ஆண்கள் என்பதால்.

எது எப்படி இருந்தாலும் யாருமில்லா காடுகளில் அவர்களைப் போன்ற நிர்வாணப் பிரியர்களுடன் வாழும் போது பெரியதாக அவர்கள் எதையும் எதிர் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு நகரத்தின் வீதியிலோ, கிராமத்தின் வீதியிலோ அவர்கள் நிர்வாணம் நிச்சயம் கேலிக் குறியதாக மட்டுமே இருக்கும். ஜென் மதத்தில் மட்டுமல்ல இந்து மத்த்திலும் இத்தகைய சாமியார்கள் இருக்க தான் செய்கின்றார்கள்.

இமயமலைப் பகுதியில் காடுகளில் இருக்கும் இந்த இந்துச் சாமியார்கள் கும்பமேளாவில் குளிக்க வரும் போது மட்டுமே தரிசனம் தருகின்றார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பமேளாவில் தங்களது லிங்கங்களில் கம்புகளை சொறுகியும், கற்களை சுமந்தும் வித்தை காண்பிக்கின்றார்கள். மென்மையான சதைப் பகுதியில் இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. இவர்களை அகோரிகளுக்கும் மேளான சாமிகளாக மக்கள் பார்க்கின்றார்கள். இந்த சாமியார்களில் பெண்கள் இருப்பதையும் நான் ஆங்கில இதலின் புகைப்படத்தில் பார்த்திருப்பதாக ஞாபகம்.

நிர்வாணம் என்றால் அம்மணம் என்றே பொருள் கொள்கிறோம். அதாவது உடலில் உடை அணியாத நிலை. மணம் என்றால் வாசனை. அகரம் சேர்ந்து அம்மணம் ஆவதால் மணமில்லா நிலை என்று பொருள் கொள்ளலாம். பற்றற்ற நிலைக்காக துணியையும் துறந்து வாழும் இவர்கள் நிச்சயம் வினோதமானவர்கள் தான்.

4 comments on “அழகான நிர்வாணம்

  1. karuna சொல்கிறார்:

    only Good Tips Pls.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s