ஆயிரத்தில் ஒருவன் – தமிழனுக்கு அவமானம்

தமிழ் திரைப்படத் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் படமாக தான் ஆயிரத்தில் ஒருவனை எண்ணியிருந்தேன். ஆனால் அப்படிப் பட்ட படமாக இது தெரியவில்லை.

இசை, ஒளிப்பதிவு, கலை போன்றவைகளை மற்ற தளங்கள் விவாதித்து விட்டதால் இயக்குனரின் தவறுகளை மட்டும் இங்கு சுட்டி காட்டுகிறேன்.

தமிழ் இயக்குனர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என தெரியவில்லை. சிலர் யோகி போல முழு படத்தையும் திருடிவிட்டு தங்கள் பெயர் போட்டுக் கொள்கின்றார்கள், இல்லையென்றால் நன்றாக ஓடிய படங்களை காப்பி அடிக்கின்றார்கள். செல்வா இதையெல்லாம் விட்டுவிட்டு தன் போக்கிற்கு ஒரு கதைகளம் அமைத்து படத்தினை கொடுத்திருக்கின்றார்.

அவதார் படத்தினை முழுமையாக அலசி ஆராயந்தும் எங்களால் ஒரு ஓட்டையை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதி காட்சியில் மூச்சு திணரும் கதாநாயகனுக்கு கதாநாயகி சரியாக சுவாச கருவியை வைப்பது மட்டுமே நெருடலாக தெரிந்தது.அவதார் படத்தினை தமிழில் பார்த்து ரசித்துவிட்டு இப்படி அபத்தமான படங்களையும் பார்க்க தமிழனுக்கு மட்டும் தான் மனது இருக்கிறது. அப்படி படம் முழுக்க லாஜிக் பொத்தல்கள் நிறைய.

சோழர்கள் பற்றியோ, பாண்டியர்கள் பற்றியோ இல்லாத வரலாற்றை எடுத்துக் கொண்டு இப்படி அவதி பட்டிருக்க வேண்டாம். இரண்டு இனத்திற்கும் வேறு பெயர்கள் வைத்திருக்கலாம். பாண்டியர் சோழர் பகையை 21ம் நூற்றாண்டு வரை கொண்டுவந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதிலும் பாண்டியர்களை மக்களோடு மக்களாக கலந்துவிட்டு, சோழர்களை மட்டும் ஆதிவாசிகள் போல காட்டியிருப்பது கடுப்பை வரவழைக்கின்றது.

எம்.ஜி.ஆர் ரசிகர்களாக கூலி தொழிலாளிகள் காட்டப்பட்டிருப்பது, தொடக்கத்தில் கை தட்டல்களை வாங்கி தந்தாலும், மதுவையும் புகைப் பழக்கத்தையும் வன்மையாக எதிர்த்தவரின் பாடலை பாடிக் கொண்டு கூத்தடிப்பது பெரும் வேதனை. கருப்பு நிறம் கொண்டவனாகவும், தமிழில் கெட்ட வார்த்தைகளை உதிர்த்து வேலை வாங்குபவனாகவும் கார்த்தியை கதாநாயகனாக மாற்றியிருப்பது நலம். இந்த இரண்டு விசங்களை வைத்தே சாதாரண மக்களைடம் படத்தை ஓட வைத்துவிடலாம் என தப்பு கணக்கு போட்டிருக்கின்றார்கள்.

நீண்ட கடல், அதன் பிறகு பெரும் காடு, பிறகு பாலை நிலம் என அவர்கள் காட்டுவது தீவா இல்லை கண்டமா என குழப்பம் வருகிறது. இங்கு சிவனை ஒரு சின்ன கண்ணாமூச்சிக்கு மட்டும் பயண்படுத்தியிருக்கின்றார்கள். சூரியன் மறையும் நேரம் மலையின் நிழல் நடராஜர் உருவத்தில் விழுவது புதுமையாக இருக்கிறது. ஆனால் காலையிலும் சூரியன் மேற்கே உதிக்குமாறு செய்திருப்பதை என்னவென்று சொல்வது. கிழக்கும் மேற்கும் அறியாத ஒருவனா தமிழன். எங்கே தெரிந்து விடப் போகிறது என்று விட்டுவிட்டார்களா. இல்லை கிழக்கும் மேற்கும் புரியவில்லையா. சிவன் மேல் கோயில் எழுப்பும் அளவிற்கு பக்தி கொண்ட சோழர்கள் வழிபடுவது அம்மனை என்கிறார்கள்.

உணவிற்காக சண்டையிடும் மக்களை அடித்து துரத்துபவனாக, பெண்களுடன் சல்லாபமிடும் அல்ப சந்தோசியாக இருக்கும் மன்னன், திடீரென மக்களுக்காக வருத்தம் கொள்வதும், சாகத் துணிவதும் பெரும் முரண். சோழப் பரம்பரை சேர்ந்த மக்களுக்கு நடனம் தெரியாதோ. எல்லா பெண்களும் தலையை விரித்து போட்டுக் கொண்டு மார்பில் அடித்தாடுகின்றார்கள். ரீமா கதாபாத்திரத்திற்காக மட்டும் இயக்குனர் மெனக் கெட்டிருக்கிறார். ஆன்ட்ரியா கதாபாத்திரமும், அவர் அப்பா கதாபாத்திரமும் படத்திற்கு தேவையில்லாத ஒன்று. பெரும் புதையலுக்காக சோழர்களை தேடி பயணப்படுவதாக காட்டியிருந்திருக்களாம்.

நீர், ஷர்பம், காட்டுவாசிகள், பசி, மாயம் என பல்வேறு அரண் அமைத்த சோழர்களின் மந்திரம் ரீமாவிடம் எடுபடாடது போவதும், திடீரென ரீமா சூனியக்காரி போல மந்திரங்கள் சொல்வதும் காதில் பூ சுற்றும் வேளை. அடுத்து ராணுவம். தொல்பொருள் ஆராட்சிக்காக அவ்வளவு ராணுவத்தை குவிப்பதும், சோழர்களோடு சண்டையிடுவதும் மிகவும் அபத்தம். அடுத்த நாட்டிற்கு சொந்தமான தீவில் நமது ராணுவம் நுழைந்தால் என்ன விழைவு ஏற்படும் என்ற பொது அறிவு கூட இல்லையா. எல்லாவற்றையும் யோசிக்க வேண்டாம் என்கிறார்கள். கார்த்தி சோழர்களின் தூதுவன் என்று மக்களும் மன்னரும் கொண்டாடுவதும், மன்னருடன் சேர்ந்து போரிடுவதும் கதாநாயகனை என்ன செய்வது என்று தெரியாமல் இயக்குனர் செய்த கோமாளித் தனம்.

எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு கதைகளத்தையே லாஜிக் பார்க்காமல் ஏற்றுக் கொண்டாலும், முடிவில் சோழ இளவரசனை ராணுவத்தின் பிடியிலிருந்தும், கதாநாயகனின் குடும்ப உறுப்பினர்கள் வரை அறிந்திருக்கும் ரீமாவிடமிருந்தும் எப்படி காப்பான் கதாநாயகன். கேள்விகளுக்கு விடை சொல்லாமலேயே முடிந்துவிடுகிறது. ஒருவேளை அடுத்த பாகத்திற்கான வேளை நடக்கிறதோ என்னவோ.

இதைத் தவிற அரசியல் சிந்தனைகள் நிறைய இருக்கிறது.ஆனால் அவை தமிழனுக்கு பயன்படாது என்பதால் எழுதவில்லை. இப்படத்தின் தலித் மற்றும் அரவாணிகள் அவமதிப்பு தகுந்த மக்களால் பேசப்படும் என்றே எண்ணுகிறேன். எல்லா லாஜிக் பொத்தல்களையும் சகித்துக் கொண்டு படம் பார்க்கும் சிந்திக்க தெரியாத்த மக்களாக தமிழர்கள் இருந்தால் மட்டுமே படம் ஓடும்.

4 comments on “ஆயிரத்தில் ஒருவன் – தமிழனுக்கு அவமானம்

  1. அ.நம்பி சொல்கிறார்:

    //எல்லா லாஜிக் பொத்தல்களையும் சகித்துக் கொண்டு படம் பார்க்கும் சிந்திக்க தெரியாத்த மக்களாக தமிழர்கள் இருந்தால் மட்டுமே படம் ஓடும்.//

    படம் ஓடும் என்கிறீர்கள். சரிதானே?

  2. prashanthan சொல்கிறார்:

    //அடுத்த நாட்டிற்கு சொந்தமான தீவில் நமது ராணுவம் நுழைந்தால் என்ன விழைவு ஏற்படும் என்ற பொது அறிவு கூட இல்லையா//
    அண்ணே ! ஹாலிவுட் படங்களை தூக்கி பேசி மேற்சொன்ன வசனத்தை சொன்னிர்களே ….. நீங்கள் transformers 2 படம் பார்க்க வில்லையா ?????

அ.நம்பி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி