விடுமுறை சிந்தனைகள்

மிக நீண்ட நாட்களுக்குப் பின் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. பேச வேண்டிய எத்தனையோ செய்திகளை கடந்து நிற்கிறோம். அதனால் சிறிய பார்வை மட்டும்.

தேசிய விருது – “நான் கடவுள்” எனும் அற்புத படத்தால் பிச்சைக்கார்ர்களின் வாழ்க்கை முறையை கண் முன் கொண்டுவந்தமைக்காக இயக்குனர் பாலாவிற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. காதல் எனும் தளம் விட்டு பயணித்த தமிழ் படத்திற்கு கிடைத்திருக்கும் அங்கிகாரம், இன்னும் சில தரமுள்ள படங்களுக்கு அடிகோலும் என்பதில் மகிழ்ச்சி.

ஆயிரத்தில் ஒருவன் – இயக்குனர் செல்வா என்ன சொல்ல வருகிறார் என புரியவில்லை. சோழனும் பாண்டியனும் 21ம் நூற்றாண்டிலும் சண்டை போட வேண்டும் என ஆசைப் பட்டிருக்கிறாரா. இல்லை வித்தியாசமான படம் என்று சொன்னால் படம் ஓடி விடும் என்று நினைத்தாரா. எப்படியிருப்பினும் படத்தில் பாரட்ட வேண்டிய இரண்டு விசயங்கள் கதாநாயகியை கதாநாயகனோடு சேர்த்து வைக்காமல் முடித்திருப்பது, சோழர்கள் என்று சொல்லி ஈழத் தமிழர்களை ஞாபகம் செய்தது அவ்வளவே.

திருட்டு விசிடி – ஒரு டிவிடியில் பல படங்களைப் பார்க்கும் நிலை வந்துவிட்ட போதிலும் இன்னும் புலம்பல்கள் திருட்டு விசிடி என்று தான். தியேட்டர் சென்று ஒருவர் படம் பார்க்க கொடுக்கும் பணத்தில் ஒரு டிவிடி வாங்கினால் குடும்பமே பார்த்து மகிழலாம் எனும் போது மக்களிடம் எப்படி எதிர்ப்பு வரும். மாஸ்டர் பிரிண்ட் போட்டு விற்பவர்களுக்கு என்ன லாபமோ என தெரியவில்லை. ஆனால் ஒரு கணினி ஒரு காப்பி படம் இருந்தால் கொட்டுகின்ற வருமானம் மிக அதிகம் தான். இதைத் தடுக்க குண்டர் சட்டம் தேவையில்லை, தரமுள்ள சிந்தனை போதும்.

ஆசிரியர்களின் அலம்பல் – தொழில்களில் மிகவும் உயர்வானது ஆசிரிய பணி. சாலையில் நடந்து செல்லும் ஒரு சராசரி தொழிலாளி வணக்கம் வைத்து மரியாதை தரும் தொழில் அது. ஆனால் இந்த நாட்களில் அதன் புணிதம் மிகக் கேள்விக்குறியதாக மாறியிருக்கிறது. அன்னையாகவும் தந்தையாகவும் இருக்க வேண்டிய ஆசிரியர்கள் மாணவர்களிடம் காதல் செய்து கொண்டிருக்கின்றார்கள். சிலர் வெறும் காமத்தை மட்டும் காட்டுகின்றார்கள். பாலியல் வக்கிரங்களும், காதல் பாடங்களும் பள்ளியறையில் பாடங்களாக்கப் பட்டு வருவது மிக வேதனையான செய்தி.

இலக்கணம் அறியாமலே – சமீபத்தில் ஒரு பெண்களுக்கான இதழில் ஹைக்கூ ஒன்றை படித்தேன். ஒரு சிறிய கதையையே எழுதிவிட்டு தலைப்பை ஹைக்கூ என்று வைத்திருக்கின்றார்கள். சில புதுக் கவிதைகளின் முயற்சி அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருக்கிறது. ஹைக்கூவுக்கென்ற வரன்முறை எதுவும் அறியாமல் ஒரு வாசகி எழுதி அனுப்பியிருக்கும் அந்த கவிதையை வெளியிட்டிருக்கும் பத்திரிக்கையின் ஞானத்தினை நான் என்னவென்று சொல்லுவது. இலக்கணம் அறியாமல் பல தரப்பட்ட கவி புனைய இயலாது என்பதையும், இலக்கண அறிவில்லாதவர்களை பத்திரிக்கை துறையில் வைத்து தவறுகளுக்கும் தவறு செய்பவர்களையும் என்ன சொல்வது.

கருத்துகளை பற்றி சிந்தனை செய்யுங்கள். வரும் நாட்களில் விவாதிப்போம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s