விஷ்னுவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் மூன்று

மனித உருவில் வாழ்ந்த தெய்வத்தை பற்றியும், மனித உருவெடுத்த தெய்வத்தை பற்றியும் தெரியவந்த ஆச்சிரியமான செய்திகள் இக்கட்டுரை.

எம்.ஜி.ஆர் செய்த உதவி –

மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் வியக்கதக்க பல விசயங்கள் இருக்கின்றன. தமிழினத் தலைவர் என்று மார்தட்டிக் கொள்ளும் கருணாநிதியும், அவரது ஜால்ராக்களும் ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எம்.ஜி.ஆர் ஈழத் தமிழர்களுக்கு உதவிய விஷயம் எல்லோருக்கும் தெரியாது. என்ன வியப்பாக இருக்கிறதா. எனக்கும் அப்படிதான் இருந்தது.

1987- இல் அவர் முதலமைச்சராக இருந்த போது 15 கோடி ரூபாயை ஈழத் தமிழர்களின் உணவு, உடை, மருந்துச் செலவுக்காகக் கொடுத்திருக்கிறார். அந்தக் காலக் கட்டத்தில் மத்திய அரசு வழக்கம் போல இலங்கை அரசுக்கு தான் ஆதரவு தந்திருக்கிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழர்களுக்கு உதவி செய்திருக்கிறார் தலைவர்.

இந்தக் கட்டுரைக்கும் ஈழத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாலும் எம்.ஜி.ஆரின் உதவியை சுட்டிகாட்டுவது அவசியம் என தோன்றியது. இப்போது செய்திக்கு போவோம்.

விஷ்னுவுக்கும் மூன்று –


திருவரங்கத்திற்கு குடும்ப சகிதமாக நான் சென்ற போது, ஆண்டாளின் கண்ணாடி சேவையை பார்க்க நேர்ந்தது. ஒரே ஒரு சிலைதான் அதைச் சுற்றிலும் அத்தனை கண்ணாடிகள். எல்லா பக்கங்களிருந்தும் அந்த சிலையின் அழகை ரசிப்பதற்காக ஒரு ரசிகன் செய்த ஏற்பாடு அது. ரசித்த எனக்கு ஆச்சிரியம் ஒன்று காத்திருந்தது. அது நீளா தேவி. பெருமாளுக்கு அருகே நீளா தேவி என்ற பெண் சிலை.

பெருமாளுக்கு ஸ்ரீ தேவி, பூதேவி என்ற மனைவிகள் இருப்பது தெரியும், இது யார் நீளா தேவி என அர்ச்சகரிடம் கேட்க, இவரும் பெருமாளின் மனைவி என்றே பதில் சொன்னார். ஏகப்பட்ட கதைகள் உலாவரும் மதம் என்பதால் இதற்கும் ஒரு கதை இருக்குமே என தோன்றியது. சமீபத்தில் அதற்கு விடையும் கிடைத்தது.

மக்களை மயக்கும் மண், பொன், பெண் என்னும் மூன்று சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து மக்கள் விடுபட்டால் தான் வீடு பேறு கிடைக்கும், எனவே தான் இந்த சக்திகளுக்கு மூலமாக மூன்று தேவியரை திருமால் ஆட்கொண்டுள்ளார். (மண்- பூதேவி, பொன்- ஸ்ரீ தேவி, பெண்- நீளா தேவி).

எம்.ஜி.ஆருக்கு மூன்று –


எம்.ஜி.ஆருக்கு மண்,பொன்,பெண் என்ற கோட்பாடெல்லாம் அவருக்கு கிடையாது. 1940-ல் தங்கமணி என்ற பெண்ணை எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு குழந்தையில்லை. மிகுந்த வறுமையில் இருந்ததால் தங்கமணியை அவரின் பெற்றோர்கள் சொந்த ஊருக்கே அழைத்துப் போய்விட்டனர். வறுமை காரணமாக தங்கமணி இறந்துவிட எம்.ஜி.ஆர் வந்து பார்ப்பதற்கு முன்னரே புதைத்தும் விட்டனராம்.

1942-ல் எம்.ஜி.ஆருக்கு இரண்டாம் திருமணம் சதானந்தவதியுடன் நடந்தது. இதயக் கோளாறு, குறைப்பிரசவம், காச நோய் போன்ற காரணங்களால் சதானந்தவதியும் இறந்து போனார்.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி போன்றவை உட்பட 25 பிரபலமான படங்களில் நடித்தவர் கணபதி பட். இவர் தான் ஜானகி அம்மையாரின் கணவன். இவருக்கும் ஜானகிக்கும் சுரேந்திரன் என்ற மகனும் இருந்திருக்கிறான். இருப்பினும் 1950- இல் வெளிவந்த ‘ மந்திரி குமாரி ‘ என்ற படத்தில் கணேஷ் பட்டும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் படப் பிடிப்பின் போதுதான் எம்ஜியாருக்கும் ஜானகிக்கும் காதல் உண்டாகியிருக்கிறது. உடனே , கணபதி பட்டை விவாக ரத்து செய்து விட்டு எம்ஜியாருடன் வாழத் தொடங்கியிருக்கிறார் ஜானகி.

இரண்டு புதியதாக தெரிந்த செய்திகளை இங்கு சொல்லியிருக்கிறேன். இது போல பல தலைவர்கள் வாழ்க்கையில் வெளிச்சத்திற்கு வராத பக்கங்கள் அதிகம் இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

2 comments on “விஷ்னுவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் மூன்று

  1. காளிதாசன் நாகப்பன் சொல்கிறார்:

    உண்மைதான் எம்.ஜி.ஆர் ஓர் அதிசயப்பிரவி. அவர் பிறவித்தமிழர் இல்லாவிட்டாலும், தமிழுக்கும், தமிழருக்கும் அவர் செய்த பங்கு அலப்பரியாதது. என்னைப்பொறுத்தவரை அவர்தான் தமிழ் நாட்டை ஆண்டவர்களில் உண்மையான தமிழன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s