மகரிசி, ஜக்கி, நித்யா என் பார்வையில்

சர்வம் சிவ மயம் என்று எண்ணுகிற தீவிர சைவன் நான். “நான் கடவுள்” என்று யாராவது தன்னை அறிமுகம் செய்து கொண்டாலே தலைதெரிக்க ஓடிவிடுவேன். இருப்பினும் மூன்று சாமியார்கள் என்னுடைய வாழ்க்கையில் அவர்களுடைய எழுத்துகளாலேயே அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய சிந்தனை இக்கட்டுரை.

வேதாந்திர மகரிசி –

எனக்கு அறிமுகமான மகான்களில் முதலிடம் வகிப்பவர் வேதாந்திர மகரிசி. என் அம்மா அவருடைய தியான மையத்தில் சேர்ந்து பட்டங்களுக்கு மேல் பட்டங்களாக வாங்கி குவித்துக்கொண்டிருக்கின்றார். அ ம்மாவின் குரு என்பதாலும், தியானத்தினை கற்பிக்க பணம் வாங்குவதில்லை என்பதாலும், அவர்மேல் மிகுந்த மரியாதை எனக்கு. அவருடைய புத்தகங்களை படித்திருக்கின்றேன். அதிகமாக சுவாரசியம் என்றெல்லாம் சொல்ல இயலாது. ஆனால் ஓர் வகையான ஈர்ப்பு இருக்கும்.

அவரிடம் பிடித்தது அம்மாவுக்காகவும், அப்பாவுக்காகவும், நண்பர்களுக்காகவும், காதலர்களுக்காகவும் ஒருதினத்தினை மக்களை ஏற்று அனுசரிக்க, மனைவிக்காகவும் ஒருநாளை தேர்ந்தெடுத்து நடத்தி காட்டியவர். இன்றும் லட்சக்கணக்கான தம்பதிகள் அதை விழாவாக கொண்டாடுவதை பார்த்திருக்கின்றேன். கணவன்கள் மனைவிகளின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ளும் ஒரு திருவிழா அது. “வாழ்க வளமுடன்” என்ற மந்திரச் சொல்லாக மாறிய வாழ்த்து பல வீடுகளில் மாற்றங்களை கொண்டுவந்திருக்கும் என தெரியும். அவர் மறைந்து விட்டார் என்றாலும் அவருடைய பணிகளை மிகச்செம்மையாக சீடர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்.

வேதாந்திர மகரிசியின் மகிமை –

அவருடைய தலைநகரான ஆழியாருக்கு சென்றவர்கள் எல்லோரும் (என் அன்னை உட்பட) ஏதோ பரவச நிலை அடைந்ததாக தெரிவித்தனர். அந்த இடம் முழுக்க தெய்வீக மனம் வீசுவதாகவும், எல்லையற்ற ஆனந்தம் பெருகுவதாகவும் கூறினார்கள். அங்கு செய்யும் தியானதில் தான் முழுமையைக ஈடுபட்ட திருப்தி ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் பலரும் மிகவும் மரியாதையுடனும் கணிவாகவும் பேசுவதை கேட்டிருக்கிறேன்.

சற்குரு ஜக்கி வாசுதேவ் –

தியான லிங்கம் அமைத்து அதன் மகிமையை மதங்கள் கடந்து கொண்டு செல்லும் ஞானி சற்குரு ஜக்கி வாசுதேவ். இவருடைய எழுத்துகள் தான் எனக்கு நெருக்கத்தினை உண்டு பண்ணின. சில கேள்விகளுக்கு அவரிடமிருந்து பதிலாய் சாட்டையடி கிடைக்கும். சில கேள்விகளுக்கு அனுதாபம் கிடைக்கும். எப்படியிருப்பினும் எனக்கு சற்குரு முதல் குரு. அவருடைய எல்லா புத்தகங்களையும் கடனுக்காவது வாங்கி படித்துவிடுவேன். அவருடைய எழுத்துகளின் ரசிகன் என்று கூட சொல்லிக்கொள்ளலாம்.

சற்குருவின் வசியப்பார்வையும், உருவமும் எனக்குள் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பிரபல தொலைக்காட்சியில் அவருடைய உரையை கேட்டிருக்கிறேன். ஒருமுறை ஈசா என்ற தியானமைய முன்னுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றேன். தியானத்தின் அற்புதங்களை மக்கள் சொல்ல நேரில் கேட்டிருக்கிறேன். அதில் கடந்த ஒரு மாதத்தில் எத்தனை பேர் பட்டாம்பூச்சியை பார்த்து இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கை தூக்கிய சொற்ப ஆட்களில் நானும் ஒருவன். எனக்கு தியானம் இப்போதைக்கு தேவையில்லை என தோன்றவே, அதில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.

சற்குரு ஜக்கி வாசுதேவின் மகிமை –

தியான நிகழ்ச்சிக்கு சென்ற போது இவரைப் பற்றியும், தியானத்தினால் அடைந்த பயனையும் பற்றி ஒரு பெண்மணி சொன்னார். பல இன்னல்களை வாழ்கையில் அனுபவித்து, வாழ்க்கையை மிகவும் வெறுத்த நிலையில் இருந்திருக்கிறார். பெற்றோர்களிடம் யாரோ ஈசாவைப் பற்றிச் சொல்ல, அவர்கள் பெண்ணை சேர்த்துவிட்டிருக்கிறார்கள். பின்பு படிப்படியாக எல்லா துயரங்களையும் கடந்து வந்து இந்த நிலையில் இருப்பதாக சொன்னார். சொல்லும் போதே கண்களில் நீர் வந்து விழுந்தது அவருக்கு.

நித்யானந்த பரமஹம்சர் –

சிவசொருபத்தினை நித்யானந்த பரமஹம்சர் முழுமையாக ஏற்றிருக்கிறார் என்பதை அவருடைய ஊர்வலத்தில் பார்த்திருக்கின்றேன். வெகுஜனப் பத்திரிக்கையில் நித்தியானந்தரின் பல தொடர்களை படித்திருக்கிறேன். நான் நித்தியானந்தரை பார்த்து வியந்த விசயங்கள் அவருடைய இளமையும், அழகிய சிரிப்பும் தான்.பொதுவாக சாமியார்கள் என்பர்வர்கள் தாடி வைத்து முதிர்ந்த வயதை கொண்டிருக்க வேண்டும் என்ற இயல்பை முறியடித்தவர். கொஞ்சம் அதிகமாக சொன்னால் பெண்ணா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அழகு எனலாம்.

நித்யானந்த பரமஹம்சர் மகிமை –

நித்தியானந்தர் பற்றி எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களின் வலைதளத்தில் படித்திருக்கிறேன். சாரு நித்தியானந்தரை கடவுள் என்றே குறிப்பிடுகின்றார். கல்பதரு பற்றி வியந்து பேசுகிறார். தன்னுடைய அனுபவங்களைப் பற்றி அழகாக சொல்கிறார். அது அப்படியே.

நான் கேட்ட வரம் இதுதான்: ஸீரோ டிகிரி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அது ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. டெஹல்கா போன்ற முக்கியமான பத்திரிகைகளில் அது பற்றிய உற்சாகமான மதிப்புரைகள் வந்துள்ளன. ஆனால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அதை எடுத்துச் செல்ல ஆள் இல்லை.இந்த வரத்தைக் கேட்டு மூன்று வாரங்களுக்குள் உலகின் மிக முக்கியமான, 200 ஆண்டுகள் பழமையான ப்ரிட்டிஷ்/அமெரிக்கப் பதிப்பகம் ஒன்றிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. 50 Indian Classics இல் ஒன்றாக ஸீரோ டிகிரியும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், இது தங்களுக்கு ஒரு unconventional choice ஆக இருந்தது என்றும் அக்கடிதத்தில் கண்டிருந்தது. கடிதத்தில் அந்த இரண்டாவது வாக்கியத்தை நான் மிகவும் ரசித்தேன்.

பலர் மதிக்கின்ற பெரிய எழுத்தாளர் சாரு. அவரே வியந்து பேசியிருப்பதால் நித்தியானந்தர் மேல் ஓர் கவணம் ஏற்பட்டுவிட்டது.

ஒற்றுமைகள் –

இவர்கள் மூன்று பேரிடமும் பலபல வேற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் மூவரும் தியானத்தையும், யோகாவையும் கொண்டு மக்களின் பிரட்சனைகளை தீர்த்து வைக்கின்றனர். ஈசனினை நீங்கள் பெரும்பாலும் தியான நிலையில் மட்டுமே காண முடியும். காரணம் தியானம் ஒன்று தான் மனதை வெல்ல கூடிய வழி.

“சிவ மயம்”.

5 comments on “மகரிசி, ஜக்கி, நித்யா என் பார்வையில்

 1. முதல் இரண்டு ஓரளவுக்கு ஓகே.( கவனிக்க ஓரளவுக்கு )

  மூன்றாவது ஒன்னு படிச்சிட்டு நல்லா சிரிச்சேன் -:)))

  //ஈசனினை நீங்கள் பெரும்பாலும் தியான நிலையில் மட்டுமே காண முடியும். காரணம் தியானம் ஒன்று தான் மனதை வெல்ல கூடிய வழி.//

  தியானமே செய்யிலன்னு சொல்லிருகிங்க அப்பறம் எப்படி உங்களுக்கு இது தெரியும் ?

 2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  தியானமே செய்யிலன்னு சொல்லிருகிங்க அப்பறம் எப்படி உங்களுக்கு இது தெரியும் ?

  அம்மா சொல்லிதான்!

  கருத்துக்கு நன்றி

 3. gk சொல்கிறார்:

  இந்த மூன்று மகான்களையும் தரிசிக்கவும், நேரில் அவர்களது
  உரையை கேட்கவும் கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்தது !

  இறைவனைக் காண தனியாக நாம் எந்த முயற்சியையும்
  மேற்கொள்ள வேண்டாம் —

  உள்ளதைக் கொண்டு திருப்தி அடைதல்,
  பிறர் துன்பத்தைக்கண்டு இரங்கி தன்னால்
  இயன்ற உதவியை அவருக்குச் செய்தல்,
  யாருக்கும் எந்தக் கெடுதலும் எண்ணாமல்/செய்யாமல் இருத்தல் –

  ஆகிய நற்பண்புகளை வளர்த்துக்கொண்டால் போதும் –
  இறை தரிசனம் தானே கிடைக்கும் என்பது தான்
  இந்த மகான்களின் உபதேசங்களின் சாராம்சம்.

  கேட்பதற்கு மிகச்சாதாரணமாக இருக்கும் – ஆனால்
  இதைக்கடைப்பிடித்துப் பார்த்தால் தான் இதில் முழுமை
  பெறுவது எவ்வளவு கடினம் என்பது விளங்கும் !

  இருந்தாலும் – தொடர்ந்து முயற்சிப்போம்.
  இதில் வெற்றி பெற்றவர்கள் தான் மேற்கூறிய மகான்கள் !

  அன்புடன் – GK
  http://www.gkpage.wordpress.com

 4. ashwinjee சொல்கிறார்:

  செய்திகளுக்கு பாராட்டுக்கள். ஆனால் நீங்கள் வேதாத்திரி மகரிஷியின் பெயரை சரியாக உச்சரிக்கவில்லை. பின்னூட்டம் இட்டவர்களும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s