சுஜாதா சொன்ன ஏ ஜோக்

நான் என் நண்பர்களுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தால், அங்கு வேறொருவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். அதுவே நான் அமைதியாக இருந்து மற்ற நண்பர்கள் சிரித்துக் கொண்டிருந்தால்… வேறென்ன என்னை வைத்து கலாய்க்கின்றார்கள் என அர்த்தம்.

ஒருவரை தாழ்த்தாமலோ, முட்டாளாக்காமலோ நகைச்சுவைக்கு வாய்ப்பில்லை என்பது என் வாதம். உங்களுக்கும் அது தெரிந்திருக்கும். இந்த இடுகையில் எல்லா தரப்பிலும் ஒவ்வொரு நகைச்சுவை.

ஏ ஜோக் மட்டும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னது. அவருடைய பிரபலமான ஜோக்குகளுக்கு தனி ரசிகப்பட்டாளமே இருக்கிறது.

ஏ ஜோக் –

வயதான ஒருவரை டாக்டர் ஸ்டெதாஸ்கோப் வைத்துப் பரிசோதித்துவிட்டு “ஐயா உங்க இதயத்தில் மர்மர் இருக்கு. சிகரெட் பிடிப்பீங்களா?”
“இல்லை டாக்டர்!”
“குடிப் பழக்கம் உண்டா?”
“ம்ஹூம்!”
டாக்டர் தயக்கத்துடன்… “செக்ஸ் வாழ்க்கை உண்டா?”
“உண்டு”
“அதனால என்ன பரவால்ல, அதைப் பாதியாக குறைச்சுக்கிரது நல்லது!” என்றார் டாக்டர்.
“எந்தப் பாதி?. பார்க்கிறதையா, நினைக்கிறதையா?”

டாக்டர் ஜோக் –

“டாக்டர் இந்தப் பல் நேத்து ஒரு நாள் மட்டும் ஆடினது”
“அப்ப அது ஒன்டே மேட்சுன்னு சொல்லுங்க”

திருடன் ஜோக் –

“ஏட்டையா வீட்டு ரேசன் கார்டைப் பார்த்து, கபாலி ஏன் கண் கலங்கிறான்..”
“அதுல அவன் பேரும் இருந்துச்சாம்”

மன்னர் ஜோக் –

“மன்னா இளவரசர் தங்களை அப்படியே உரித்து வைத்திருக்கிறார்”
“எதில் அமைச்சரே?”
“புறாவை உரிப்பதில் தான்!”

குடிமகன் ஜோக் –

“ஏர்ப்போட்ல அந்த குடிகாரப் பயணி என்ன கலாட்டாப் பண்றாரு?”
“சரக்கு விமானத்துலதான் போவேன் அடம்பிடிக்காரு”

நடிகை ஜோக் –

“அந்த ஆள் பயங்கர சோம்பேறின்னு எதை வைச்சு சொல்றே…”
“புடவை துவைக்க பயந்துக் கிட்டு கவர்ச்சி நடிகையை கட்டிக்கிட்டார்னா பாரேன்”

பாகவதர் ஜோக் –

“அந்த பாகவதரோட கச்சேரிக்கு போனா நூறு ரூபாய் செலவாகும்”
“உள்ளே போக பணம் கொடுக்கணுமா”
“இல்ல… பாதியில வெளியே வர பணம் கொடுக்கனும்”

கடவுள் ஜோக் –

“கடவுளே நான் ஜனாதிபதியாக ஆகும் வரம் வேண்டும்”
“பல மக்களை காக்கும் பணி அது. வேறு வரம் கேள்”
“தளபதி படம் 100 நாள் ஓட வேண்டும்”
“நீ அமெரிக்க ஜனாதிபதியாக ஆக வேண்டுமா, இல்லை இந்திய ஜனாதிபதியாகவா”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s