சாதி

சாதி –

சாதி எதிப்பு என்று சொல்லி நம்மை நாம் முட்டாள்களாக்கி கொண்டிருக்கிறோம். சாதிகள் வேண்டாமென்றால் எப்போதோ நாம் அவற்றை தூக்கி எரிந்திருக்க முடியும். ஆனால் இன்று சாதியை இன்னும் வலுவாக்கி கொண்டிருக்கிறோம். இந்தியாவின் கிறிஸ்துவர்களையும், முஸ்லிம்களையும் கூட தலித் கிறிஸ்து, தலித் முஸ்லிம் என அடையாளம் காண விளைகிறோம். அவர்களும் அதையே தான் விரும்புகிறார்கள். காரணம் சலுகை.

சாதியை மதியாமல் கலப்பு திருமணம் நடந்து செய்து கொண்டாலும் குழந்தைக்கு சாதியை வைக்கிறோம். சாதிச் சான்றிதல்கள் இன்றி அரசு வேலையிலோ, கல்விக் கூடங்களிலேயே நுழைய இயலாது. சாதியில்லாமல் குழந்தையை பள்ளியில் சேர்க்க நீங்கள் கோர்ட் படிக்கட்டுகளை மிதிக்க வேண்டும். அப்படி செய்து வெற்றி பெற்றாலும் பொதுப் பிரிவுக்கு உங்கள் குழந்தை போய்விடும். எத்தனை பெரியார் தொண்டர்கள் அப்படி தங்கள் பிள்ளைகளை பொதுப்பிரிவின் கீழ் சேர்த்திருக்கின்றார்கள் என தகவலில்லை. நாம் அப்பா சாதியோ, அம்மா சாதியோ எதற்கு சலுகைகள் அதிகம் கிடைக்குமோ அதற்கு குழந்தை மாற்றி விடுகிறோம். அம்பேத்கார் மிகப் பெரிய மேதை. அவர் சட்டங்களால் சாதியை வலுவாக்கி விட்டு வேறு மதத்திற்கு அழகாக போய்விட்டார். சாதியை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கோ, பெரியாருக்கோ இருந்த்தாக தெரியவில்லை.

நான் இப்படி சொல்ல காரணம், பெரியார் இஸ்லாமிய மதத்திற்கு போய்விடுங்கள் என்றார். அம்பேத்கார் ஒரு படி மேலே போய் இந்து மத்திலிருந்து தோன்றிய புத்ததிற்கு போய்விட்டார். இவர்கள் யாருமே கிறிஸ்துவ மதத்தினை சிபாசு செய்யவில்லை. ஆனால் நம் மக்கள் அதிகம் போனது கிறிஸ்துவ மதத்திற்கு தான். சாதியை அழிக்க முடியாது என கிறிஸ்துவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். விளைவு கிறித்துவப் பிள்ளை, கிறிஸ்துவ முதலியார், கிறிஸ்துவப் பள்ளன் என சாதிகள் கிளைபரப்பின. (எம்.ஜி.ஆர் என்ற மகான் தான் சாதி அடிப்படையிலான கல்விச் சலுகையை நிறுத்திவிட்டு பொருளாதார அடிப்படையில் கல்விச் சலுகையை அறிவித்தவர். ஆனால் அறிவித்த நேரத்திலேயே ஏகப்பட்ட எதிர்ப்பு மக்களிடமிருந்து கிளம்ப. அந்த திட்டத்தை வாபஸ் பெற்றார். அந்த திட்டம் மட்டும் இருந்திருந்தால் ஏழைகளுக்கு இன்னும் ஒரு நல்ல திட்டம் நடைமுறையில் இருந்திருக்கும்.)

சில குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் அதிக சலுகைகள் தருவதைப் பார்த்தும் மற்ற சாதிக்காரர்ளும் தங்களுக்கும் அந்த சலுகைகள் வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றார்கள். குறிப்பாக கல்வியிலும், வேலையும் . காரணம் அதுதான் வாழ்வாதாரம். 60 சதவீத மதிப்பெண் வாங்கிய இரண்டு மாணவர்களில் ஒரு மாணவனுக்கு மட்டும் அவனுடைய சாதியின் அடிப்படையில் மேல் படிப்பிற்கு இடம் கொடுத்தால், கிடைக்காத மாணவனுக்கு ஏமாற்றத்திற்கு பதில் கோபம் தான் வருகிறது. அது சாதியடிப்படையான அரசுமீதானால் வரவேற்க தக்கது. ஆனால் அவனோ இன்னொரு சாதியை வெறுக்க தொடங்குகிறான். தன்னைப் போலவே இருக்கும் அவன் சாதிக்காரர்கள் மேல் பற்று வருகிறது. இடம் கிடைத்தவனுக்கோ தன் சாதியின் மீது அளவு கடந்த பற்று உண்டாகிறது. இதையெல்லாம் நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருக்க கூடும்.

ஒரே செயல் இரண்டு சாதியையும் வலுபடுத்துகிறது. சாதியை காக்க சங்கங்கள் அமைத்து பின் அவற்றைக் கொண்டே கட்சியாக மாற்றி அரசியலில் சாதிக்கு எத்தனை ஓட்டுகள் என கணக்கிட வைத்திருக்கிறோம். சாதி அழிப்பதாக சொல்லிய திமுகவோ என்னன்ன வழியில் சாதியை வழுபடுத்த முடியும் என்றே பார்க்கின்றது. தேர்தலின் போது அதிக சாதியுள்ள மக்களிடைய அந்த சாதிக்காரனை நிறுத்துகிறது. எல்லா கட்சிகளும் அந்த நிலைக்கு வந்துவிட்டன. அவர்களுக்கு சாதி ஓட்டுவங்கி தான் பலமாக இருகிறது.

ஆனால் சமத்துவபுரம் அமைத்து பெரியாரின் சிலை அமைத்து வெளியில் சாதியொழிப்பிற்காக பாடுபடுவதாய் காட்டிக் கொள்கின்றார்கள். வன்னியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மெத்தனம் காட்டிய பாமகவின் நிலைமூலம் எல்லோருக்கும் சாதியின் வலிமை தெரிந்துவிட்டது. போட்டியிட்ட ஏழு தொகுதியிலும் மண்ணைக் கவ்விக் கொண்டு இருந்த்தை மறந்துவிட முடியாது. அதனால் எல்லா சாதிக்காரர்களும் தங்களுக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் என்றில்லை பொழுதுபோக்கு அம்சமான திரையுலகிலும் அதன் தாக்கத்தினை இன்னும் முறியடிக்க முடியவில்லை. நாத்திகன் கமல் எடுத்த “தசவதாரத்தில்” பல இடங்களில் சாதிகள் தெரித்து ஓடின. சாதியே வேண்டாம் ஒழித்துக் கட்டுங்கள் என சொன்ன பெரியாரின் சாதியையும் சுட்டிகாட்டி கொண்டார்கள். இன்று கூட தேசத்தலைவர்களை சாதியடிப்படையில் பிரித்து வைத்திருக்கின்றார்கள். காமராசர், முத்துராமலிங்க தேவர், வா.உ.சிதம்பரம் பிள்ளை என எவரையும் விட்டுவைக்கவில்லை.

மிகப்பெரும் சக்தியாக மாறிக்கொண்டு இருக்கும் சாதியை ஒழிக்க முடியுமா என கேட்டேன். பதில் வந்தது.
முடியும், ஆனா முடியாது.

நீங்க என்ன சொல்றீங்க?.

2 comments on “சாதி

 1. vasudevan சொல்கிறார்:

  அனைவரும் மிருக நிலையில் இருந்து மாறினால் ,சாதிகளை ஒழிக்கலாம்.
  ஆனால் அது முடியாதகாரியம் . எப்போது உலக வரைபடத்திலிருந்து எல்லை கோடுகள் மறைகிறதோ அப்போதுதான் சமத்துவம் பிறக்கும்

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   சாதிகள் கட்டமைப்புக்காக உருவாக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து இனி சாதியை ஒழிப்போம் என குரல் கொடுப்பது வீண். அந்த வேலையை மேல் சாதியினர் செய்து வர ஆரமித்துவிட்டார்கள். சலுகைகளுக்காக தங்களை தாழ்த்தப்பட்டவர்களாகவும் மாற்ற கோரிக்கை வைக்கின்றனர்.

   சாதி ரீதியான சலுகையை நிறுத்திவிட்டாலே சாதி அழிந்துவிடும். ஏழை பணக்காரன் என்ற முறையில் சலுகை வழங்கலாம்.

   இதில் பிள்ளையார் சுழி பள்ளியிலிருந்து போடவேண்டும். பள்ளி ஏடுகளில் சாதி காலத்தை நீக்கிவிட்டாளே பாதி சாதனை முடிந்துவிடும் என்பது என் எண்ணம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s