ஆர்.எஸ்.எஸ், பாபர் மசூதி, காந்தி கொலை மறுபுறம்

ஒரு புறம் மட்டுமே பேசப்படுகின்ற வழக்குகளின் மறுபுறங்களையும் அலசியிருக்கிறேன். சிந்தனை செய்யுங்கள்.

ஆர்.எஸ்.எஸ் –

இந்தியாவின் சுகந்திரத்திற்கு காங்கிரஸ் போல ஆர்.எஸ்.எஸின் பங்கும் அளவிட முடியாதது. இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸை விட அதிகமாக உழைத்தது ஆர்.எஸ்.எஸ் தான். காங்கிரஸ் ஆங்கிலேயர்களை அரசியல் எதிர்கட்சி போல மட்டுமே பார்த்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் எதிரியாக பார்த்தது. இது பலருக்கும் தெரியாத உண்மை.

ஆர்.எஸ்.எஸ் என்றாலே இந்து அமைப்பு என்றே எல்லா மக்களிடையேயும் கருத்து நிலவுகிறது. நடிகர் கமலை வாழ்த்தி நான் பட்டாம்பூச்சி இணையதளத்தில் செய்தி வெளியிட்ட போது. ஒரு நண்பர் கிறித்துவ அமைப்பு மட்டும்தான் தொண்டு செய்கிறாதா என கேட்டிருந்தார். என்னுடைய நண்பனும் ஆர்.எஸ்.எஸூம் தொண்டு செய்து வருகிறது என சொன்னான்.

எனக்கு அதில் நம்பிக்கையில்லாமல் இருந்தது. காரணம் நான் செய்திகளால் மட்டுமே சூழப்பட்டிருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா, சிவசேனா, ராம் சேனா என எல்லாம் இந்துக் கட்சிகள் என நினைத்திருந்தேன். என்னுடைய ஆர்குடில் இருந்த ஆர்.எஸ்.எஸ் நண்பரின் புகைப்படங்களை காணும் போது தான் ஆர்.எஸ்.எஸூன் தொண்டுள்ளம் புரிந்தது. அவர்கள் செய்யும் பெருந்தவறு அவர்களின் தொண்டை விளம்பரம் செய்யாததுதான். ஆனால் உண்மையான தொண்டர்கள் விளம்பரங்களையும், பாராட்டுதல்களையும் எதிர்ப்பார்ப்பதில்லை.

ஆர்.எஸ்.எஸ் பற்றி ஜெயமோகன் –

ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தன் வலைதளத்தில் கூறியிருந்தது.

என்னிடம் இங்கே வந்த ஒருநண்பர் சொன்னார். காட்டுநாயக்கர் அவர். ‘இத்தனைபேசுறாங்க சார், பெந்தேகொஸ்துகாரனை விட்டா எங்க சேரிக்கு ஒண்ணு நக்சலைட்டுக்காரன் வருவான் இல்லாட்டி ஆர்.எஸ்.எஸ்காரன் வருவான்…வேற எவன் வந்தான்?’ இது ஒரு நடைமுறை உண்மை. உங்கள் பக்கத்துச் சேரிக்குச் சென்றால் இதை காணலாம். ஆனால் ஊடகங்களில் அது தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமண இயக்கமாகவே எப்போதும் சொல்லப்படும். ஒரு மாற்றுக்கருத்துகூட இருக்காது. அந்த பிற்போக்குத் தரப்பைச் சொல்லக்கூடிய ராதா ராஜன் போன்றவர்களை மட்டுமே ஊடகங்கள் ஆர் எஸ் எஸின் குரலாகக் காட்டும்.

எந்த தேசியப்பேரிடரிலும் முதன்மையான மீட்புப்பங்களிப்பு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்ததாகவே இருக்கும். இந்தியாவின் மாபெரும் தொண்டர் இயக்கங்கள் எவையுமே அப்பக்கம் நடமாட மாட்டார்கள். சிறந்த உதாரணம் சமீபத்திய சுனாமி. அதைப்பற்றி நான் எழுதியிருக்கிறேன். இத்தனைக்கும் இங்கே பாதிக்கப்பட்டவர்களில் இந்துக்கள் மிகமிகக் குறைவு. கிறித்தவ அமைப்புகளுடனும் இஸ்லாமிய அமைப்புகளுடனும் இணைந்தே அவர்கள் பணியாற்றினார்கள்.

ஆனால் ஊடகங்களில் நீங்கள் ஒருவரிகூட அவர்களைப்பற்றி எழுதப்பட்டு பார்க்கமுடியாது. சுனாமிக்காலத்தில் தவறுதலாக ‘தி ஹிந்து’ ஒரு புகைப்படம் வெளியிட்டது. யாரோ அமைச்சர் பேட்டி கொடுக்கும்போது பின்பக்கம் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடையில் சடலம் சுமந்து செல்கிறார்கள். மறுநாளே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இந்து சடலங்களை மட்டுமே தூக்கினார்கள் என்று ‘யாரோ’ சொல்ல ஒருவரியை வெளியிட்டார்கள். அந்த அழீக்கல் கடற்கரையில் இந்துக்களே இல்லை. ஆர்.எஸ்.எஸ் கிறித்தவப்பெண்மணிகளின் தாலிகளை பறித்துச் செல்கிறது என்று வாய்மொழிப்பிரச்சாரம் கூட அவிழ்த்து விடப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் பங்களிப்புகள் இருட்டடிப்பு செய்யப்படு படுகின்றன. அவர்களை மதவாதிகள் என முத்திரை குத்திவிட்டு இதையெல்லாம் செய்யலாம் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இவையே அவர்களுக்கு பலமாக ஆகிறது. இச்செய்திகள் வழியாக அவர்களை அறிமுகம் செய்துகொள்பவர்கள் நேரில் அறிமுகமாகும்போது இவை பொய்கள் என அறிந்ததும் அந்தப்பக்கம் தாவி விடுகிறார்கள்.கின்றன. அவதூறு செய்யப்படுகின்றன. திரிபுச்செய்திகள் வெளியிடப்

பாபர் மசூதி –

நீங்கள் இந்தியாவின் வரலாறுகளை நன்கு அறிவீர்கள் என்றால் பாபர் மசூதி இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டீர்கள். அதற்கென்று அச்செயலை சரியென நான் சொல்லவில்லை. ஆனால் அதை பாபர் செய்த தவறு என்று தான் சொல்லுவேன். இஸ்லாமிய அரசர்கள் கோயில்களை அழித்ததும், செல்வங்களை கொள்ளை அடித்ததும் மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே உள்ள கோட்டைகளையும், கோயில்களையும் அழித்து அதிலிருக்கும் கற்களைக் கொண்டே தங்கள் ரசனைக்கு தக்கவாறு அரண்மனைகளை அமைத்துக்கொள்ளும் முறை அப்போது இருந்திருக்கிறது. எழுத்தாளர் மதன் அவர்களின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் பல இடங்களில் இதை குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த புத்தகம் இஸ்லாமியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததையும் வென்றதையும் சொல்லுகின்றன புத்தகம். வரலாறுகளில் இந்து கோயில்களை இப்படி செய்தமை ஒத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. ஒருவனுக்கு சொந்தமான புத்தகத்தினை திருடி அவன் பெயரை அழித்துவிட்டு மற்றொருவன் தன்னுடைய பெயரை எழுதி வைத்துக் கொண்டால் அது திருடப்பட்டவனுக்கு சொந்தமானதா. உண்மை தெரிந்ததும் என்ன நடக்கும் அது தான் பாபர் மசூதியிலும் நடந்தது. இந்தியா மதசார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் மக்கள் எல்லோரையும் அப்படியே எதிர்பார்க்க இயலாது அல்லவா.

நாதுராம் கோட்சே –

இதில் கோட்சேவை இழுக்க காரணம், அவரும் விடுதலைவீரர் என்பதற்காக தான். ஒரு நாட்டின் பெருந்தலைவர் கொல்லப்படும் போது நமக்கு பெரும் அதிர்ச்சியாய் இருக்கின்றது. சிறுவயதிலிருந்தே கோட்சேவை நான் எதிரியைப் போலவே எண்ணி வந்தேன். ஏனென்றால் காந்தியென்றால் மிகவும் பிடிக்கும். என்னுடைய தாத்தா காந்தியைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டே இருப்பார். அதனால் காந்தி மீது தனிப் பிரியம் எனக்கு. வளர்ந்த பிறகு “ஹேராம்” படம் வந்தது. காந்தியை கொல்ல ஒரு கூட்டமே இருந்தது என பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன.

அவற்றையெல்லாம் படித்தும் கூட என்னால் சரியான முடிவிற்கு வர முடியவில்லை. சமீபத்தில் இணையத்தில் கோட்சேவை தேடினேன். மாலை மலரில் காந்தி கொலை வழக்கு என்ற தொடரை படித்தேன். கோட்சேவின் நியாயங்களும், காந்தியின் தவறுகளும் புரியத்தொடங்கின. இப்போது வெளிவருகின்ற படங்கள் வன்முறையாளர்களின் பக்கங்களையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆனால் கோட்சேவின் பக்கம் இருக்கும் வாதம் எல்லோரையும் சென்றடையவில்லை என்பது கொஞ்சம் வருத்தம் தான்.

மாலை மலர் வலைதளம் வசதியாக இல்லையென்றால் அதே தொகுப்பு தெரிந்து கொள்ளலாம் வாங்க இணையத்திலும் வெளியிடப் பட்டிருக்கிறது. படித்து பாருங்கள்.

4 comments on “ஆர்.எஸ்.எஸ், பாபர் மசூதி, காந்தி கொலை மறுபுறம்

  1. akbarali சொல்கிறார்:

    halo man,
    Not only india,every country belongs to muslims only.
    we are the right person to rule the country.wherever (we)muslims go,we will insha allah establish the truth. we have right to abolish what is not true.

  2. akbarali சொல்கிறார்:

    Insha allah, We will rule india.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s