வேட்டைக்காரனுக்கு விளம்பரம் செய்யும் வெளிநாட்டு தமிழர்கள்

எல்லா வெளிநாட்டு தமிழர்களும் வலைதளங்களில் வேட்டைக்காரனை புறக்கணிக்க சொல்லி கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருக்க. உலகில் நடப்பதற்கு எதிராக என்ன தலைப்பு இது என வியப்பவர்களே. நான் உண்மையைதான் சொல்கிறேன்.

புறக்கணிப்பு –

விஜய் நடித்து, சன் பிக்கசர்ஸ் வாங்கிக்கொண்ட வேட்டைகாரனை தமிழர்கள் எதிர்ப்பதற்கு காரணம் உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக ஒரு சிறு குறிப்பு.

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் செயலை இலங்கை ராணுவம் செய்யும் போது ராணுவத்தை கடவுளாக உருவம் செய்து எழுதப்பட்ட பாடலுக்கு இசை அமைத்தவர் இராஜ் வீரறட்ணே. அவர் வேட்டைக்காரன் படகுழுவுடன் இணைந்து பாடல்களை தயார் செய்திருக்கிறார். எனவே அதை புறக்கணியுங்கள் என்பது தமிழர்களின் கோரிக்கை.

Original- Bambara Pattikka
Sampled – Chinna thamarai
படங்கள்

உண்மையை உணரவில்லை –

புலம்பெயர் தமிழர்களுக்கு நம்முடைய தமிழர்களைப் பற்றியே தெரியவில்லை. உயிர் என்ற படம் நம் உறவுகளை கொச்சை படுத்துகிறது யாரும் பார்க்காதீர்கள் என்று வைகைப்புயல் வடிவேல் சொல்லும் வரை படம் சுமாராக மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அதன் பின் படம் பெரிய வசூல் செய்துவிட்டது. நல்லது சொன்ன வடிவேலுக்கு ஏன்டா இப்படி சொன்னோம் என ஆகிவிட்டது.

ஒன்றைச் செய்யாதே என்று சொல்லும் போதுதான், அந்த செயலை செய்யும் ஆவல் மக்களுக்கு ஏற்படுகின்றது. இங்கு மட்டுமல்ல உலகமெங்கும் மக்கள் ஒரே மாதிரியாகதான் இருக்கின்றார்கள். டாவின்சி கோட் எனும் புத்தகம் ஏசுவின் மனைவியைப் பற்றி கூற, உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் படிக்காதீர்கள் என்றார்கள். ஆனால் நடந்தது என்ன. உலக சாதனை செய்யும் அளவிற்கு அந்த புத்தகம் விற்றதுடன். படமாகவும் வந்து சாதனை செய்தது. எழுதிய டான் பிரவுன் விரும்பியிருந்தால் கூட இப்படி விளம்பரம் செய்திருக்க முடியாது.

என்னுடைய தனிப்பட்ட கருத்து –

உண்மையாக எதிக்கவேண்டும் என்றால் நீங்கள் அந்தப் படத்தினைப் பற்றி பேசாமல் இருந்தாலே போதும். படம் நன்றாக இருந்தால் அதன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் வீணான ஒரு படத்திற்கு தேவையில்லாமல் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு அதிக லாபம் பெற நீங்களே காரணமாக இருந்துவிடாதீர்கள்.

அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு என மூன்று மோசமான படங்களுக்கு பின்னால் வருகின்ற நடிகரின் விஜயின் படம் என்பதால், படம் நன்றாக இருக்கிறது பார்க்கலாம் என விமர்சனங்கள் வந்தால் மட்டும் தான் என்னைப் போல பலர் பார்க்க முடிவு செய்திருப்பது எல்லோருக்கும் தெரியும். கதாநாயகி நடிகை அனுஸ்கா இருப்பதால் வேண்டுமானால் சிலர் முதல்நாள் போய் பார்க்கலாம். நீங்க என்ன முடிவு செஞ்சிருக்கீங்க.

என்னுடைய இன்னொரு தளமான பட்டாம்பூச்சியில் வெளியிடப் பட்ட வேட்டைக்காரன் கற்பனைக் கதை , மற்றும் விஜய் காமெடியை விருப்பமுள்ளவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

2 comments on “வேட்டைக்காரனுக்கு விளம்பரம் செய்யும் வெளிநாட்டு தமிழர்கள்

  1. IQBAL SELVAN சொல்கிறார்:

    Unmai thaan nanparae….. summa irukkura sangai oothi kedupathu poal. oaadatha padathai oaada vaikum muyarachi ithhu. en bloggil vettiakaran pattriya oru comdey post undu paarthu comment kudukkavummm , thxxxxxx

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s