அரசியல்வாதிகளாகும் வலைபதிவர்கள்

பெருமதிப்பிற்குரிய ரத்தத்தின் ரத்தங்களே, அன்பு தம்பிகளே,

அனைவருக்கும் என் வணக்கங்கள். எல்லோரையும் கவலையில்லாமல் கலாய்க்கும் உலகம் வலைப்பதிவுலகம். எந்த ஒளிவு மறைவில்லாமல் எனக்கு இது பிடித்திருக்கிறது, இது பிடிக்கவில்லை என எல்லா விசயங்களையும் அலசும் மேடை. சிதரிக்கிடக்கும் தமிழர்கள் எல்லோரும் தேவைக்காக்கவோ, பொழுதுபோக்கிற்காகவோ அவசியம் வந்து போகின்ற இடம். இப்படி பல சிறப்புகள் உள்ள ஒரு தளத்தில் நானும் ஒருவனாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி.

(சும்மா ஒரு ஜாலிக்காக வலைப்பதிவர்களை அரசியல்வாதிகளாக மாற்றிப்பார்க்கும் ஒரு வேலையற்றவனின் வேலை தான் இந்த கட்டுரை. மனம் நோகும் படியெல்லாம் இதில் எதுவுமில்லை, என்றாலும் வழக்கமாக விடும் அறிக்கையை விட்டு விடுகிறேன்.)

இந்த இடுகை யார் மனதையும் புண்படுத்த அல்ல.

அரசியல்வாதிகள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தொகுதிப் பக்கம் வந்து சொல்லும் போடுங்கம்மா ஓட்டு என்ற கோசம் வலைபதிவுகளில் அதிகம். அவர்களாவது ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தான் கேட்பார்கள். என்ன இங்கே ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கேட்கும்.(அப்படியே நமக்கு ஓட்டு போட மறக்காதீங்க).

சுற்றி கிடக்கும் புறம்போக்கு நிலங்களையெல்லாம் வலைத்துப் போடும் அரசியல்வாதிகள் போல ஏகப்பட்ட வலைதளங்களை வைத்திருப்பர்கள் சிலர்.(நம்பகிட்ட கூட பல இருக்கு).

சுயநலமில்லாத சில நல்ல அரசியல்வாதிகள் போல சில வலைதளங்களில் நல்ல விசயங்கள் மட்டுமே இருக்கும். அந்த வலைப்பூவில் ஒரு பூச்சியைகூட திட்டி எழுதியிருக்க மாட்டார் வலைப்பதிவர். (இந்த வகையில் நிச்சயம் நான் இல்லை).

அடிக்கடி நலதிட்டங்களை அறிவித்து மக்களை குசிப்படுத்தும் அரசியல்வாதி போலவே அடிக்கடி பின்னூட்டமிட்டு பின்னியெடுப்பார்கள் சில வலைப்பதிவர்கள். (சாரி பாஸ். நமக்கு கொஞ்சம் பொருளாதார நெருக்கடி).

பல கட்சி கூட்டனி போல பல பதிவர்கள் இணைந்து ஒரு வலைப்பூவை நிர்வகிக்கும் முறையும் இருக்கிறது.

எதிரணியினரை எதிர்த்து அறிக்கை விடுவது போல பல வலைப்பூக்களில் அறிக்கை போர் சாரி கருத்துப் போர் நடக்கும்.

எல்லாவற்றையும் பொறுமையாக படித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. மொக்கை போட வேற வழி தெரியலை.அதான்.

2 comments on “அரசியல்வாதிகளாகும் வலைபதிவர்கள்

  1. குந்தவை சொல்கிறார்:

    //.(அப்படியே நமக்கு ஓட்டு போட மறக்காதீங்க).
    .(நம்பகிட்ட கூட பல இருக்கு).
    ..
    🙂
    உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s