மாலை மாற்று எனும் தமிழின் பொக்கிசம்

பொக்கிசங்கள் –

கலி விருத்தம், ஆசிரிய விருத்தம், கலித்துறை, கொச்சகங்கள், ஆசிரிய துறை, வஞ்சி விருத்தம், வஞ்சித் துறை, குறாட்டாழிசை, நாலடிமேல் வைப்பு, பதிகங்கள், ஈரடிமேல் வைப்பு, இணைகுறள் ஆசிரியம், திருவியமகம், திருச்சக்கர மாற்று, ஏகபாதம், கோமூத்திரிகை, மாலை மாற்று, எழுகூற்றிருக்கை என பலவகையான செய்யுள் முறைகளை உள்ளடக்கியது திருஞான சம்மந்தரின் தேவாரம் எனும் பொக்கிசம்.
தேவாரத்தினை பொக்கிசம் என்று சொல்ல காரணம், அந்த பாடல்களில் தவழும் பக்தி மனம் மட்டுமல்ல படைப்பின் நயமும் தான். தமிழில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட அதிசயதக்க செய்யுள் முறைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் இருப்பது சித்திரக் கவி எனப்படும் செய்யுள் வகை. அந்த செய்யுள் முறைகளையும் உள்ளடக்கிய பாடல்கள் தேவாரத்தில் காணப்படுகின்றன.

மாலை மாற்று –

சித்திரக்கவி வகையில் மாலை மாற்று எனப்படும் பாலிண்ட்ரோம் (Palindrome) அடங்கும்.

மாலை மாற்று என தமிழில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கப்பட்டாலும் ஆங்கிலத்தில் பாலிண்ட்ரோம் என்றால்தான் பலருக்கு தெரியும். வலம் இடமாக அல்லது இடம் வலமாக எந்த திசையில் (முன்னாகவும் பின்னாகவும்) வாசித்தாலும் ஒரே வடிவம் மற்றும் பொருள் தரும் வார்த்தை அல்லது வாக்கியம் மாலை மாற்று.

இதன் இலக்கணம் –

“ஒரு செய்யுள் முதல்,
ஈறு உரைக்கினும்,
அஃதாய் வருவதை
மாலை மாற்றென மொழி”

பொருள் –

ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்குவர வேண்டும்.

சிறு உதாரணம் தமிழில் –

“பூவாளை நாறு நீ பூ மேகலோகமே
பூநீறு நாளை வா பூ”

பொருள் –

பூச்சூடி, திருநீறு பூசிக்கொண்டு, நாளைக்கு வா

சிறு உதாரணம் ஆங்கிலத்தில் –

MAHAMAHAM

ஞானசம்மந்தரின் மாலை மாற்றுத் திருப்பதிகம் –

திருச்சிற்றம்பலம்

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா பொலேமே

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ

நேணவரா விழயாசைழியே வேகதளோய ளாயுழிகா
காழியுளாய ளேதகவே யேழிசையாழவி ராவணனே

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

வோயுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுவே

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயா தமிழாகரனே

திருச்சிற்றம்பலம்

முதற்பாடல் –

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாம் = சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள்
ஆமா = கடவுள் என்பது பொருந்துமா?
நீ = நீ ஒருவனுமே (கடவுள் என்றால்)
ஆம் ஆம் = பொருந்தும், பொருந்தும்
மா = பெரிய
யாழீ = யாழை ஏந்தியிருப்பவனே!
காமா = அனைவராலும் விரும்பப் படுபவனே!
காண்நாகா = காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்துள்ளவனே!
காணா = காண முடியாதவாறு
காமா = மன்மதனை(அனங்கனாக)செய்தவனே!
காழீயா = சீர்காழிக்குத் தலைவனே!
மாமாயா = பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே!
மா = காய(கொடிய)
மாயா = மாயையினின்றும்
நீ = எம்மை நீக்கிக் காத்தருள்வாயாக!

மேலும் சில உதாரணங்கள் –

திகதி
தத்தா
விகடகவி
மாடு ஓடுமா
தேரு வருதே
கருவாடு வாருக
மாலா போலாமா
சிவகுரு முருகுவசி

சகோதரர்கள் தங்களுக்கு தெரிந்த தமிழ் மற்றும் ஆங்கில மாலை மாற்றுகளை கூறி சென்றால் தன்னியனாவேன்.

One comment on “மாலை மாற்று எனும் தமிழின் பொக்கிசம்

  1. ஜோதிஜி சொல்கிறார்:

    தமிழ் எனது தாய்மொழி என்று சொல்லும் நம்மிடம் எத்தனை பேர்களுக்கு இந்த மொழி புலமையை எதிர்பார்க்க முடியும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s