ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்

என்னுடைய இந்த சகோதரன் தளத்தில் எந்த குறிச்சொல் கொண்டு மக்கள் தேடிவருகின்றார்கள் என வேர்ட்பிரஸ் காட்டிடும். அதில் லியோனி பட்டிமன்றம், கவர்ச்சி, கலவி சந்தேகங்களும் தீர்வுகளும் என பல குறிச்சொற்கள் இருந்தன. மற்றவர்கள் தேடி வந்தது கிடைத்திருக்கும், ஆனால் கலவி சந்தேகம் போக்கும் கட்டுரையை நான் இதுவரை எழுதவில்லை. நண்பர்களுக்கு அவசியமானதை தரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. என்க்காக எத்தனையோ கட்டுரைகளை நண்பர்கள் படித்து சென்று கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்காக ஒரு கட்டுரை எழுத வேண்டுமென துணிந்ததே இக்கட்டுரை.

தவறான விளம்பரங்கள் –

லேகிய சித்தர்களும், மூலம் பவுத்திர விற்பனை மருத்துவர்களும் பெரும்பாலும் குறிவைப்பது ஆண்களை தான். இயல்பாக இருக்கும் ஆண்குறியின் தன்மைகளையே நோயாக உருவம் செய்து மிரட்டுகின்றார்கள். இந்த தவறான விளம்பரங்களை படித்து பல முறை நான் அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன். ஏனென்றால் நான் தேடல் மூலமே கலவி பற்றி அறிந்து கொண்டவன். எனக்கு தெரிந்த அளவுக்கே அவர்கள் கூறுவது எத்தனை பெரிய பொய் என தெரியும். படித்த மருத்துவர்கள் எப்படி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கின்றார்கள் என தெரியவில்லை.

அறிவு –

மற்ற மதங்கள் எல்லாம் கலவியை இறைக்கு அப்பாற்பட்டே பார்க்கின்றன. இந்து மதம் மட்டும் தான் அதையும் இறையோடு சேர்த்தது. கடவுளுக்கு உருவம் கொடுத்து அவருக்கு திருமணமும் செய்து வைத்தது. பழைமையான கோயில் கோபுரங்களை நன்றாக உற்று நோக்குங்கள். அங்கே கலவி பாடமாக சிற்பங்கள் இருக்கும். ஆயிரமாயிரம் சிலைகளினுள்ளே அதை தேடுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் படியாய் செய்திருப்பார்கள் வல்லுனர்கள். வாஸ்தனையார் முதல் நாராயணரெட்டி வரை எல்லா அறிஞர்களும் அங்கே தான் வியந்துபோகின்றார்கள்.

மூடநம்பிக்கைகள் –

90% மூட நம்பிக்கைகள் ஆண்குறி சார்ந்தவையாக இருக்கின்றன என்கிறார் மாத்ரூ.

1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.

2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.

3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.

4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.

5. ஒரு சொட்டு விந்து 40 – 100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.

6. சுயஇன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.

7. இரவில் உறங்கும் போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.

8. ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.

9. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.

10. ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.

11. முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்திற்கு கொண்டுபோய் விடுவான்.

12. திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.

என்ன 12 மூடநம்பிக்கைகளைப் பற்றியும் படித்துவிட்டீர்களா. சரி இந்த 12 ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் கீழே செல்லுங்கள்.

விளக்கங்கள் –

1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத்தினை அடைந்துவிடும்.

2. விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.

3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.

4. விரைகள் சமமாக இருந்தால்தான் பிரட்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.

5. ஒரு முறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உடல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.

6. சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. அதிகமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் பிரட்சனை. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள் என ஒத்துக்கொள்கின்றார் மாத்ரூ)

7. சுயஇன்பம் செய்து வெளியேற்றாவிட்டால் நடக்கும் இயற்கை நிகழ்வு இது. உங்கள் வீட்டில் மோட்டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணிர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவறு என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கையே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.

8. உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.

9. இப்படியெல்லாம் கதைகள் தான் சொல்ல முடியும்.உண்மையில் நடக்காத காரியம் இது.

10. செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.

11. சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தனியலாம் என்கிறார் மாத்ரூ.

12. திருமணத்திற்கு முன் செய்யும் செயலால் ஆண்மை போய்விடும் என்றால், திருமணத்திற்கு பிறகு செய்தாலும் போய்விடும் அல்லாவா.

எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். வடிவேலுவின் பாணியில் ரூம் போட்டு யோசிக்கராங்களோ என்று கேட்டால். ஆமாம் தொலைக்காட்சிகளில் அப்படிதான் சொல்லுகிறார்கள். உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்திருக்கலாம், இல்லை அவசியமற்றதாய் இருந்திருக்கலாம். தேடி வரும் சிலருக்காக என்னால் முடிந்தது இதுதான்.

தொடர்புடைய இடுகைகள் –
ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்
ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
ஆண்கள் ஸ்பெசல் – ஆண்குறி அளவு + கருத்தடை முறை
காம வக்கிரம் – மருத்துவ பார்வை
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை
காமவியலில் இந்தியாவின் பங்கு

 

பி.டி.எப் கோப்பாக பதிவிரக்கம் செய்ய படத்தினை சொடுக்குங்கள்,…

 

100 comments on “ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்

 1. vijay சொல்கிறார்:

  wonderful & educational post

  wishes to u

  vijay

 2. ஜோதிஜி சொல்கிறார்:

  இன்று வலைதளத்தின் சகோதரன் என்று பெயரைப் பார்த்து ஆளுமையில் உள்ளே வந்தேன். மொத்த வடிவமைப்பு, பெயர், எழுத்தின் ஆளுமை, அக்கறை அத்தனையும் கவர்ந்தது.

  ஆண் உறுப்பு பகிர்வை படித்து முடித்ததும் இனிமேலும் இத்தனை எளிமையாக இதைப்பற்றி சொல்ல வேறு எவரும் இந்த வலை உலகில் வருவார்களா? என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்,

  வாழ்த்துக்கள்

  ஜோதிஜி
  http://deviyar-illam.blogspot.com

 3. இரா. ஆண்டி சொல்கிறார்:

  நல்ல தெளிவான விளக்கம். தொடரவும்.

 4. syed சொல்கிறார்:

  thank u so much sir , i have lot of doubts in my pennish u can cleared all those doubts

 5. syed சொல்கிறார்:

  romba nanri ayya

 6. raja சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்

 7. biopen சொல்கிறார்:

  Nanbare intha kalvi ellorukkum vendum!

 8. vinoth சொல்கிறார்:

  your answer is 100% true thank you sir

 9. jebachristy சொல்கிறார்:

  romba nalla vilipunarvu … pasanga ithanala romba thelivaiduvanga… ithu vallkaiku romba mukkiyam… keep it up…. thanks………………………………..

 10. படைப்பாளி சொல்கிறார்:

  கலக்கிட்டீங்க நண்பா..
  சிவராஜ் சித்தரை செருப்பால அடிக்கணும் ..அந்த நாய்தான் பல இளைய சமுதாயத்தோட மனசுல சந்தேகத்தை விதைக்கிறான்..

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   சிவராஜ் என்றில்லை பணம் பறிக்க ஏகப்பட்ட கூட்டம் இப்படி வதந்திகளைப் பரப்பிக் கொண்டு இருக்கிறது. சிவராஜ் தொலைக்காட்சியில் வருவதால், அவரின் கருத்துகள் மிக தீவிரமாக பரவி இளைஞர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே@!.

 11. jayaram சொல்கிறார்:

  sir edhanala memory power kurayuma very importent quastion sir
  sir i clear many drought in the parts please send
  this mail id
  thank u sir

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   எதனால ஞாபகத்திறன் குறையும் என்று நினைக்கிறீங்க,.

   சுயஇன்பத்தால் அப்படியெல்லாம் நடக்காது.

   எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சுயஇன்பத்தை எச்சில் துப்புவதோடு ஒப்பிடுவார். ஒரு முறை எச்சிலை காறி உமிழ்ந்தால், உடலில் எவ்வளவு இழப்பு ஏற்படுமோ அதே அளவு தான் சுய இன்பத்தினாலும் ஏற்படும் என்று சொல்லியிருக்கிறார்.

   வீண்பயங்கள் வேண்டாம்.

   தங்கள் வருகைக்கு நன்றி!.

 12. முஹம்மது சொல்கிறார்:

  மிகவும் பயனுள்ளதொரு கட்டுரை.. மிக்க நன்றி..

  மேலும் எல்லா ஆண்களும் நிச்சயம் அறிந்திருக்கவேண்டிய ஒரு விஷயம்… இதை எப்படியாவது எல்லா ஆண்களுக்கும் கொண்டு சேர்த்திட வேண்டும்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   தினந்தோறும் இருபது பேராவது இந்தக் கட்டுரையை படிப்பதாக வேர்ட்பிரஸ் காட்டுகிறது. மற்றவர்களுக்கும் கொண்டு சேர்த்திடுவோம் நண்பரே!.,

   தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!.

 13. Elamurugan சொல்கிறார்:

  சிவராஜ் சித்தரை செருப்பால அடிக்கணும் ..அந்த நாய்தான் பல இளைய சமுதாயத்தோட மனசுல சந்தேகத்தை விதைக்கிறான்..

  நன்றி வாழ்த்துகளுக்கு!

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   படைப்பாளி சொன்ன அதே கருத்து.

   நண்பர்களே, தவறு செய்யும் அத்தனை மனிதர்களையும் நம்மால் தேடிச்சென்று தண்டனை தரவோ, திருத்தவோ இயலாது. நம்மால் இயன்றது நம் வருங்கால சந்ததிகளுக்கு நல்ல கலவியை கல்விவாயிலாக தருவது தான் என்பது என் தாழ்மையான எண்ணம்.

   தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!

 14. mani சொல்கிறார்:

  romba thanks pa

 15. rajesh சொல்கிறார்:

  thanks for sagotharan

 16. kalpana சொல்கிறார்:

  Amazing Work Sagothara.

  Best Wishes to You.

  – Kalpana

 17. ஜெலிக்ஸ் சொல்கிறார்:

  பயனுல்ல தகவல்கள்……..வரவேற்கிறேன்…….
  நன்றி அய்யா ….நின் பனி தொடர்க்…………….

 18. Dinesh சொல்கிறார்:

  ethanai murai suyapalakkam seithal aanmai pari pogum

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   எத்தனை முறை சுயபழக்கம் செய்தால் ஆண்மை பரிபோகும்.

   நண்பரே,

   சுயபழக்கத்தால் ஆண்மையெல்லாம் பரிபோவதாக யாரும் சொல்லவில்லை.

   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!@

 19. abdulkhader சொல்கிறார்:

  அன்பு சகோதர .

  என் கோடான கோடி நன்றிகள். பலருடைய ஐயங்களுக்கு முற்று வைதது விட்டீர்கள். என்னையும் சேர்த்து. .பலருடைய தடுமற்றாங்க்ளுக்கு , பயத்திற்கு , மனசஞ்லங்களுக்கு . தெளிவான விளக்கம் அளித்துள்ளிர்கள்.

  நட்புடன்

  உங்கள் சகோதரன்

 20. sathiya சொல்கிறார்:

  Thanks for the informations.

 21. Zayeem சொல்கிறார்:

  ஒரு நோயும் இல்லாத ஒருவருக்கு எப்படி எய்ட்ஸ் ஏற்படுகிரது? எதன் மூலம் ஏற்படுகிறது?
  ஒர் ஆண் ஒர் பெண்ணுக்கும் எய்ட்ஸ் இல்லை. இப்போது எப்படி எய்ட்ஸ் ஏற்படுகிரது ?
  ஓரினச்சேர்க்கை (ஒர் ஆண் இன்னோர் ஆண்(இருவருக்கும் ஒரு நோயும் இல்லை))உடன் உறவு கொண்டால் நோய் ஏற்படுமா?
  ஓரினச்சேர்க்கை (ஒர் பெண் இன்னோர் பெண்(இருவருக்கும் ஒரு நோயும் இல்லை))உடன் உறவு கொண்டால் நோய் ஏற்படுமா?

 22. Tamilzan சொல்கிறார்:

  மிக்க நன்றி

 23. james சொல்கிறார்:

  well done
  well done
  well done
  really good info of humans

 24. muthupandi சொல்கிறார்:

  ayya enakku oru chinna vibathu 2 varudangalukku munbu nadandathu
  athil enakku shiru kaayangal than aanal en mudhil lasaha adi vilundu vittayhu athil irundu enakku muduhu adikadi valikum dr idam sendra poothu periya adi ondru illai muthuku javvu than vilaki sirithu vilaki irukirathu yendrar ithanaal en udal uruppkkuu allathu en aanmaikku yetheanum thingu varuma enakku bayamaha irukirathu
  ungal pathilludan nan kaathirupen

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   முதுகுத் தண்டிற்கு அருகில் விந்து உற்பத்தி மையம் இருக்கிறது என்று மட்டுமே எனக்கு தெரியும். மிக அதிகமாக முதுகு தண்டில் அடிப்பட்ட அஜித் கூட குழந்தை பெற்றுவிட்டார். நவீன மருத்துவத்தில் எல்லாம் சாத்தியம். நீங்கள் அனுக வேண்டியது நல்ல மருத்துவரை மட்டுமே!.

   இப்போதைக்கு படத்தினைக்காண இங்கு சொடுக்குங்கள்.

   காணோளியைக்காண இங்கு சொடுக்குங்கள்.

   நீங்கள் விரைவில் குணமடைய ஈசனை பிராத்திக்கிறேன். என்னால் முடிந்தது இது மட்டுமே!.

 25. manenthiraja சொல்கிறார்:

  meegavum nadree friend

 26. samy சொல்கிறார்:

  very very thank you

 27. ம‌கிடேஸ்வ‌ர‌ன் செ சொல்கிறார்:

  *அவசியமற்றதாய் இருந்திருக்கலாம்*

  மூட‌ ந‌ம்பிக்கைக‌ளுக்கு ஆட்ப‌ட்ட‌ ஆண்க‌ளில் சில‌ருக்குதான், நீங்க‌ள் அறிய‌க்கொடுத்த‌ அரிய‌ விப‌ர‌ங்க‌ள் அனைத்தும் அவ‌சிய‌ம‌ற்ற‌தாய் இருந்திருக்க‌லாம். உண்மையில் ஒவ்வொரு ஆணும் த‌னது ஆண்மையின் அடிப்ப‌டை ப‌ற்றி தெரிந்துகொள்ள‌த்துடிக்கும் உண்மையான‌ விஷ‌யங்க‌ளை அதே மூட‌ ந‌ம்பிக்கைக‌ளின் ஒப்புமையோடு விள‌க்கிய‌ வ‌லைப்பூ ச‌கோத‌ர‌னுக்கு எனது ந‌ன்றிக‌ள்.

 28. kalpana சொல்கிறார்:

  அருமையான பதிவு தோழரே!,…

  என்னுடைய வலைப்பூவான தமிழ்க்காமனில் இணைப்பு கொடுக்கலாம் என நினைத்திருக்கிறேன். அனுமதி கிடைக்குமா.

 29. kk karthi சொல்கிறார்:

  nalla vilakkangal

 30. kk karthi சொல்கிறார்:

  sex seiyum pothu vinthu eavalavu nerathil velivarum

 31. Mathew சொல்கிறார்:

  Thanks for great and valuable message, all doubts are cleared…
  this is very much useful me….

 32. முகில் சொல்கிறார்:

  மிகவும் அவசியமான பதிவு இளைய தலைமுறையினரை சென்றடைய வேண்டும். எனக்கு தெரிந்த நன்பர்களுக்கு பரிந்துரைத்துல்லேன்

  நன்றி

 33. thangarajnagendran சொல்கிறார்:

  மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

 34. sankar சொல்கிறார்:

  romba thanks frnddd evalau nall na payanthukittu erunthen etha partha udaney happpy,ethu ellam unmaithana frndddd

 35. எஸ்.முத்துவேல் சொல்கிறார்:

  நல்ல அருமையான மிக தெளிவான விளக்கம்.

  மிக்க நன்றி நண்பா………..

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   எழுதி பலநாட்கள் ஆனாலும் இன்னும் இந்த இடுகை முன்னிலை வகிக்கிறதென்றால் அது உங்களைப் போல நல்ல நண்பர்களால்தான், நன்றிகள் பல உரிதாகட்டும் நண்பரே! .

 36. venkatesh சொல்கிறார்:

  very nice explain…. thank you for the explian.

 37. mohan சொல்கிறார்:

  i am aware after read this artical. thanks to u

 38. ஜோசப் இருதயராஜ் சொல்கிறார்:

  அங்க சுத்தி, இங்க சுத்தி… எதையோ தேடிகொண்டிருக்க இப்பதிவு சிக்க இன்னைக்குதான் இத படித்தேன்..
  ரொம்ப பழைய பதிவு ( நான் மேட்டர செல்லலைங்க! பதிவு இட்ட டேட்ட சொன்னேன்)
  ஆனால் நல்ல பதிவு,…..

  மனித வாழ்வியலில் காதல், காமம், இரண்டும் இரண்டு பக்கமும் கூர் கொண்ட கத்தி மாதிரி…, கொஞ்சம் தவறினாலும் பாதகம் தான். இதை உணர்ந்தால், இது ஒரு ஒன்னுமேயில்லாத விடயம்.

  நம்ம ஏனோ இந்ந விடயத்தை போட்டு பூட்டி பூட்டி இறுக்கி வைக்கிறதால தான் இப்படியெல்லாம் நடக்குதோ?….. உங்களை போன்றவர்களால் சரி…. நம்ம சமூகம் விழித்தால் நல்லது.

  ஆனா ஒங்களோட ஒன்னாவதும், மூனாவதும், இருக்கிற சந்தேகம் இன்னுமும் வளர்ந்த பெரிய நாடுகளில் இருக்கிற ஆண்களிடமும் இருக்கே!….

  அட போங்கப்பா, ஆச யாரவிட்டது.

  வாழ்த்துகளுடன்
  ஜோசப் இருதயராஜ்

 39. boss2balaBALA சொல்கிறார்:

  Excellent
  &
  Lot of Thanks………!

 40. Neeraja Vishvanathan சொல்கிறார்:

  சுயஇன்பம் பெறுவதால் முகப்பரு போன்றவை வருமா?

 41. raja சொல்கிறார்:

  thelivana karuthukkal nandri

 42. sureshgovind சொல்கிறார்:

  அறிய தகவல் ., அருமையான தகவல் ., அற்புதமான தகவல்.., உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் !!!!!

 43. ராமன் சொல்கிறார்:

  எனது அனைத்து சங்நேகங்களுக்கும் விடை கிடைத்தது மிக்க நன்றி நண்பரே……

 44. ANANTHAKUMAR சொல்கிறார்:

  Romba thanks sir ….

 45. Dinesh சொல்கிறார்:

  ROMBA PERIYA THANKS SAGODHARA UNGALUKU…!
  VAARTHAIGALEY ILLAI… UNGALAI PAARAATTA…!
  NAANUM PALA KULAPATHIL IRUNDHAVAN THAAN…!
  IPO CLEAR AAGITEN…
  (ENNUDAIYA MANAMAARNDHA NANRIGALUM, VAAZHTHUGALUM)
  INDHA VAARTHAIKU MELA… ENNA SOLLA…

 46. giridharan சொல்கிறார்:

  Ematrathai thavirkalam ungaludan inaivadhan moolam…. theriyatha palla thagavalgal arumaiyaga vilakkapatirukirathu…. nanri.

 47. Kani சொல்கிறார்:

  என் ஆணுறுப்பின் முன்தோல் மூடப்பட்டிருக்கின்றது, உறவின் போதும் பின்னால் வருவதில்லை, சிறுநீர் மற்றும் விந்து வெளியேறுவதில் பிரச்சினை இல்லை , இதனால் வேறு ஏதும் பிரச்சினை உண்டாகுமா, நான் திருமணமான 26 வயது .

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   சிறுநீர் மற்றும் விந்து வெளியேற்றத்தில் பிரட்சனையில்லை எனும் போது இந்தக் கேள்வியே அவசியமில்லை நண்பரே. பிறகு முன்தோல் உங்களுக்கு முழுவதுமாக மூடியிருந்தால் இந்த துவாரங்கள் அடைப்பட்டிருக்கும் அது வேறுபிரட்சனை,. உங்களுக்கு இதைப் பற்றிய கவலை தேவையில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s