பெண் “குறி”க் கவிதைகள்

முலைகள்

கோலம் போட குனிகையில்
கொலை வெறியுடன் பார்க்கின்றன!
அவசரம் கருதி ஓடுகையில்
தவறான இடங்களை தடவுகின்றன!
பார்வையில் இருக்கும் கொடூரம்
சுருக்கென குத்தும் வலிகளால்
துடித்துப் போகின்றேன் நான்!
அடுத்த ஜென்மமும் எனக்கு
பெண்ணாக பிறக்க பாக்கியம் இருந்தாலும்
வேண்டாமிந்த முலைகள்!

யோனி

ஆடையைப் பற்றி
மேடைமீது பேசிடும்
எல்லா ஆணாதிக்கமும்
இல்லாமல் போகிறது
கண்களில் தென்படாத
பெண்களின் சிறுதுவாரத்திற்குள்!

பெண்ணியம் பேசுகின்ற பெண் கவிஞர்கள் பலர் அவர்களுக்கு மட்டும் சொந்தமானதாக நினைத்து “குறி”கள் பற்றி குறிப்பட்டு எழுதுகின்றார்கள். அதையே ஆண்கள் எழுதினால் ஆபாசம் என்கிறார்கள். இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகின்றார்கள் என தெரியவில்லை.

கம்பனின் பாடல்

தழல்விழி ஆளியும் துணையும் தாழ்வரை
முழைவிழை, கிரிநிகர் களிற்றின் மும்மத
மழைவிழும் ,விழும்தொறும் மண்ணும் கீழுற
குழைவிழும் , அதில் விழும் கொடித்திண்தேர்களே!

விளக்கம்

தீவிழி கொண்ட சிம்மமும் துணையும் மலைக்குகைகளைத் தேடும். களிற்றுயானையின் மதநீர் விழுந்து மண் நனைந்து குழிவிழும். அதில் கொடித்தேர்கள் வழுக்கிப்புதையும்.

கம்பன் சொல்லாத காமமில்லை, ஔவை சொல்லாத கொங்கையில்லை, பாரதி சொல்லாத அக்னி குஞ்சில்லை. அவர்கள் சொல்லாததை சொல்லி செல்ல இங்கு ஒருவருமில்லை. ஒரு வினோத முயற்சி தான் இக்கவிதைகள். இனியும் வெக்கப்படுபவர்கள் கருத்துகள் சொல்ல வேண்டாம்.

23 comments on “பெண் “குறி”க் கவிதைகள்

 1. நாதன் சொல்கிறார்:

  நண்பரே, கவிதைகள் அற்புதம். உமது இரண்டாவது கவிதையைப் படிக்கும்போது, இவ்வாறு ஆண் பெண்குறியினுள் தோற்றுப்போவதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, இயலாமை என்பவைதான் அவன் மற்றைய நேரங்களில் பெண்களை ஆதிக்கம்செய்யக் காரணமோ என எண்ணத் தோன்றுகின்றது.

 2. chittoor.s.murugeshan சொல்கிறார்:

  நண்பரே நல்ல முயற்சி,
  ஒரு ஆணின் பார்வையில் ஆணின் உணர்வுகளை நீங்கள் எழுதியிருக்கலாமே !

 3. ஜோதிஜி சொல்கிறார்:

  சமீபத்தில் திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலன் சொன்னது, ரொம்ப சோர்வு வரும் போது அப்படியே லைட்டா ஒரு பொராட்டு பொரட்டுவேன். கம்பன் வரிகளை படிக்கும் போது ரீசார்ஜ் ஆயிடும் அடுத்த ஒருமாத பாடல்களுக்கும் தயார்.

  உங்கள் ஆக்கமும் எடுத்த வரிகளும், யோனிக்கு தேர்ந்தெடுத்த படமும் மிக அற்புதம்.

  வரிகளுக்கு தனியாக பாராட்டு இல்லை.

 4. ஜோதிஜி சொல்கிறார்:

  வெளியேறும் முன்பு ஒரே ஒரு குறை. மின் அஞ்சல் முகவரியை பொருத்துங்கள். ஆதரவு தந்தவர்கள் என்று மாற்றுங்கள்.

 5. govindharaj சொல்கிறார்:

  super one it is

 6. anandkumar சொல்கிறார்:

  nalla kavithaigal

 7. சி ஐ ரமேஷ் சொல்கிறார்:

  முடியுமா உம்மைபோல் என்னால் பெண்குறி சொல்ல ….
  முயற்சிக்கிறேன்…….

  வாழ்த்துகள்……

 8. ChakraVarthi சொல்கிறார்:

  கவிதைக்கு என்றும் காமம் எல்லை என்று உணற்ந்தேன் நன்றி………..

 9. C.Sugumar சொல்கிறார்:

  இந்து மதம் குறித்து அருமையான கட்டுரைகளை அளிக்கும் தாங்கள் பிரம்மச்சரியம் என்ற வார்த்தையை மறந்ததுபோல் உள்ளதே.பிரம்மச்சரியம் பிரதிபன்னம் வீரிய லாப என்ற வரிகளை தங்களுக்கு பணியுடன் நினைவுட்டுகிறேன்.பிரம்மச்சரியம் பேணாத காரணத்தால் மனித வளம்குன்றி புருஷார்த்தம் குன்றி இந்தியா வீட்சியுற்றது என்கிறார் சுவாமி விவேகானந்தர்.பிரம்சச்சரியத்தின் சிறப்பு அவசியம் குறித்து கட்டுரைகள் வெளியிடக் கேட்டுக் கொள்கிறேன்.சுயஇன்பம் தவறானது.தேவையற்றது.நல்ல பண்பாட்டுக் சுழ்நிலையில் விந்து அபுர்வமாகவே தானாகவே வெளியேறும். இது விதிவிலக்கு.ஆனால் சுயஇன்பம் பழகி மனைவியை ரசிக்க தோன்றாமல் திருணம் செய்தும் மனைவியைப் புணராமல் சுயஇன்பத்தில் முழ்கி 4 ஆண்டுகளாய் குழந்தையின்றி வாழ்ந்த ஒரு மடையனை நான் திருத்தி 6 மாதத்தில் மனைவி கருவுற்றாள். இன்று 4குழந்தைகளுக்கு தகப்பன். இயற்கைக்கு விரோதமான பாலியில் வழக்க வழக்கங்கள் உள்ளவர்களும் ஒருவகையில் குடிகாரர்களைப் போல்தான். அப்பழக்க்களுக்கு அவர்கள் அடிமையாகிவிடுகின்றனர். நோ்வழிக்கு வரமுடியாமல் தவிக்கின்றனர். வரவிருப்பாதவர்கள் பலர. மனைவியை நண்பனுக்கு கொடுத்துவிட்டு நண்பனோடு கோமோ செக்ஸ் வைத்துக் கொண்ட ஒரு நபரை நான் அறிவேன். சுயஇன்பம் தவறா சரியா ன என்ற விவாதமே தவறானது. மக்கள் அதை மறக்க அது குறித்து எழுதக்கூடாது.பிரம்மச்சரியம் குறித்து கட்டுரைகள் எழுதவேண்டும். Self-control or self-indulgence என்ற காந்திஜி எழுதிய புத்தகத்தில் நிறைய கருத்துக்கள் உள்ளன. சுவாமி சிவானந்தர் மற்றும்சித்தர்கள் பாடல்களில் நிறைய கருத்துக்கள் உள்ளன. விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது சித்தர்கள் பாடல்தானே? மறந்தது எனோ ? முறையாக உணவு பழக்கங்கள் கொண்டு, யோகா பயின்று வந்தால் -திரைப்படங்களை முற்றிலும்தவிர்த்து வாழ்ந்தால் பிரம்மச்சரியம் சாத்தியமே. ஒப்வொரு ஆண்மகனும் தன் தாய்,மனைவி, சகோதரி அண்ணி பாட்டி அனைவரும் பிரம்மச்சரியம் பேணுகிறார்கள் என்று நம்புகிறான். அவர்களுக்கு சாத்தியமானது இவனுக்கும் சாத்தியமானதுதான். நமது இளைஞர்களை புலிக்கேசிகளாக ஆக்கி வருகின்றோம. விளைவு பச்சைக்குழந்தைகள் கூட பாலியல் வன்முறைக்கு ஆனாகிவரும் செய்து நிறையவே வருகின்றதே. ராகத்தை மாற்றுவோமா!

 10. MAHA MAYA சொல்கிறார்:

  பாரதியார் சொன்ன ”அக்னிக் குஞ்சு” என்பது நெருப்பின் சிறு பொறி என்று பொருள்படும். நீங்கள் கை கொள்ளும் அர்த்தத்திலள்ள…
  தமிழை கருத்து சிதையாமல் அர்த்தமப்படுத்தி கொள்ளவும் இல்லையேல் அனர்த்தமாகிவிடும்

 11. கிருட்டிணமூர்த்தி சொல்கிறார்:

  பெண் கடவுளர்களின் மற்றும் மனிதப் பெண்களின் உடலுறுப்புகளை வர்ணித்தல் என்பது சமசுகிருத இலக்கியங்களில் கட்டாயமாக இருக்க வேண்டும் என விதி உள்ளது. தமிழ் காவியங்களில் அத்தகைய வழக்கம் இல்லை. முதன்முதலில் காவியத்தலைவியின் உள்ளங்கால் முதல் உச்சி வரை மிக விரிவாக வர்ணித்தவர் கம்பரே. கம்பரின் வர்ணனைகளை, ‘கம்பரசம்’ எனும் தலைப்பில் அறிஞர். அண்ணா, நூலாக வெளியிட்ட பின்னர்தான், இலக்கிய நயம் தெரியாத மக்களுக்கு இவ்வர்ணனைகள் தெரிந்தது.

 12. கண்ணன் சொல்கிறார்:

  கவிக் கண்கொண்டு நோக்கின் அழகு அருமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s