சுஜாதா அவாட்ஸ் 2009

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக சுஜாதா அவாட்ஸ் கொடுத்தால் யார் யாருக்கு தரலாம் என எண்ணிப்பார்த்தேன். கற்றதும் பெற்றதுமில் அவர் கொடுத்த அவாட்ஸை மாதிரியாக எடுத்துக் கொண்டு நான் முயற்சித்தவை இவை. வலைப்பூக்களில் அவருடைய மாணக்கர்கள் பலர் இருக்கின்றார்கள். இருந்தாலும் அவரை ரசித்த லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதால் என் பங்கிற்கு முயன்றிருக்கிறேன்.

எனக்கு அரசியல், திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிக்கை மட்டுமே பழக்கம் அவை மட்டும். (சுஜாதாவும், சுஜாதாவின் ரசிகர்களும் மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்).

தொலைக்காட்சி –

சிறந்த நிகழ்ச்சி – தமிழ் டிஸ்கவரியின் எல்லா நிகழ்ச்சிகலும்
சிறந்த தொடர் – கிருஷ்ண லீலை – ராஜ்
சிறந்த பேட்டி – காபி வித் அனு – விஜய்
சிறந்த போட்டி நிகழ்ச்சி – மானாட மயிலாட (எல்லோரும் பார்த்து தொலைக்கிறாங்க)
சிறந்த சிறுவர் நிகழ்ச்சி – டோரா புஜ்ஜி – சுட்டி (குழந்தைகளுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கு).
சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சி – லொல்லு சபா (விரசங்கள் இருந்தாலும் விரும்படி இருக்கிறது).
சிறந்த தொலைக்காட்சி – மக்கள் தொலைக்காட்சி. (எண்ணற்ற நல்ல நிகழ்ச்சிகள் ).
சிறந்த செய்தி – ராஜ் செய்திகள் (ஓரளவு நடுநிலை தன்மையுடன் இருப்பதால்).

அரசியல் –

சிறந்த செயல் – பாராளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டது.
சிறந்த அறிக்கை – கலைஞரின் விளைவுகளை எண்ணி மௌனமாக அழுகிறோம் .
சிறந்த எதிர்கட்சி அறிக்கை – கலைஞர் காப்பிட்டு திட்ட விளம்பரத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அறிக்கை.
சிறந்த குழப்பம் – ராமதாஸ் (ஒரு கட்சி கூடவும் நிரந்திரமா இருக்கமாட்டேங்கிறார்).
சிறந்த முட்டுக்கட்டை – நதிநீர் இணைப்பு திட்டம் எதிர்த்த ராகுல்.
சிறந்த தேர்தல் – திருமங்களம் – மக்கள் லாபம் பார்தத்தால்
சிறந்த மாநிலம் – வேற எது?. இது எல்லாம் நடக்கும் நம்ம தமிழ்நாடு தான்.

விளம்பரம் –

சிறந்த நேரடி விளம்பரம் – போத்திஸ் – சுயம்வரம்
சிறந்த மறைமுக விளம்பரம் – டாடா பைதான் – உங்கக்கிட்ட என்ன இருக்கு
சிறந்த நகைச்சுவை விளம்பரம் – வோடோபோன் –

சினிமா –

சிறந்த நடிகர் – கமல் – உன்னைப் போல் ஒருவன்
சிறந்த நடிகை – வேகா – பசங்க
சிறந்த படம் – மாயாண்டி குடும்பத்தார்
சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் – கண்டேன் காதலை
சிறந்த டைரக்டர் – எஸ்.பி.ஜனநாதன் – பேராண்மை
சிறந்த இசையமைப்பாளார் – இளையராஜா – பழசிராஜா
சிறந்த குணச்சித்திர நடிகர் – மோகன்லால் – உன்னைப் போல் ஒருவன் (வேற யாரும் பக்கத்துல கூட வரல)

பத்திரிக்கைகள் –

சிறந்த புதுவரவு – புதிய தலைமுறை
சிறந்த வார இதழ் – சிறுவர் மலர் (இன்னும் பெரியவங்க படிக்கிறாங்க)
சிறந்த மாத இதழ் – அவள் விகடன் (இது அம்மாவோட சாய்ஸ்)

சிறந்த இடது கைப் பரிசுகள் –

இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.

ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக டெல்லி போய் வந்த தாத்தா கலைஞர் கருணாநிதிக்கு ஈழத்தின் சுடுகாடு பரிசு.

ஏழு வருடம் இழுத்துக் கொண்டிருந்த கோலங்கள் கிளவியை சொர்கத்துக்கு அனுப்பிய சன் குழுமத்திற்கும், இயக்குனருக்கும் தாய்மார்கள் அழுது மூக்கு சிந்திய கைகுட்டை பரிசு.

நதியை இணைக்க எதிர்ப்பு காட்டிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுலுக்கு ஒரு காலியான ஓட்டை குடிநீர் குடம் பரிசு.

வேற்று மொழி நல்ல படங்களையெல்லாம் தமிழில் எடுத்து பழைய படங்களின் மதிப்பையும் சேர்த்து கெடுத்துவிடும் எல்லா இயக்குனர்களுக்கும் நல்ல திருட்டு வீசிடி பரிசு. (யோகிக்கு என்னா பில்டப்பு?)

அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்து எல்லோரையும் பயம் கொள்ள செய்த நடிகர் விஜய்க்கு பூச்சாண்டி பொம்மை பரிசு.

விபச்சார நடிகைகளை பட்டியல் போட்ட பூனைக்கண் புவனேஸ்வரிக்கு ஒரு கால்குலேட்டர் பரிசு.

கலைஞர் வீட்டுக்கு வந்த பாபாவிடம் மோதிரமும் செயினும் வாங்கிக் கொண்ட நாத்திக மேதாவிகள் ஆர்காட்டாருக்கும், தயாநிதிமாறனுக்கும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வீரமணி, அன்பழகன் எல்லோருக்கும் பெரியாரின் அழுகிய வெங்காயம் பரிசு.

வேற்று நாட்டில் இருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்று சொல்லி பார்பன சிறுவர்களை இகழ்ந்து கொண்டு அவர்களுக்கு பின்னே இந்தியாவிற்கு வந்த முகமதியர்களையும், கிறிஸ்துவர்களையும் வாழ்த்திக் கொண்டிருக்கும் கருப்பு சட்டைகாரர்களுக்கு இந்திய வரலாறு புத்தகம் பரிசு.

இன்னும் கிரிக்கெட்லிருந்து விடைபெறாமல் இருந்து இளைய தலைமுறைக்கு வழிவிடாமல் இருக்கும் சச்சின் போன்ற மூத்த வீரர்களுக்கு அடுத்த கருணாநிதி என்ற பட்டம் பரிசு.

இவை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் திருவாளர் பொது ஜனத்திற்கு சிறப்பு பரிசாக உப்பு ஒரு மூட்டை.

எப்படி இருக்கிறது என் முயற்சி?. கொஞ்சமாவது உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகின்றதா?.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s