இந்துக் கடவுளா ஹாலிவுட் அவதார்?

11 ஆஸ்கர் அவார்டு, உலகெங்கும் கோடிக்கணக்கான டாலர் பணம் வசுல் டைட்டானிக் என்ற பிரம்மாண்ட படத்தினை எடுத்த இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனும் டைட்டானிக், ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2 போன்ற மிரட்டலான படங்களைத் தயாரித்த 20யத் சென்சுரி ஃபாக்ஸூம் இணைந்து கொடுக்கும் ஹாலிவுட் படம் அவதார்!.

படத்தின் கதை

பண்டோரா எனும் விசித்திர கிரகத்தில் இருக்கும் வினோதமான கனிமத்தினை சூரையாட செல்கின்றார்கள் மனிதர்கள். அங்கு வாழும் நவி என்ற விசித்திர இனத்தினை விரட்டி அடித்தால் தான் எல்லாவற்றையும் கைப்பற்ற இயலும். ஆனால் அங்கு மனிதனால் சுவாசிக்க இயலாது. எனவே மனித மற்றும் நவி கலப்பினத்தில் ஒரு மனிதனை உருவாக்குகின்றார்கள். அவர் தான் அவதார். ஆனால் அங்கு போகும் அவதார் காதல் வசமாகிறார். மனிதர்களை எதிர்க்க நவி கூட்டத்துடன் அவர் கைகோத்து செயல் படுவாரா அல்லது அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடிப்பாரா என திரையில் தெரியும்.

அவதார் யார்

இந்து மதத்தின் கடவுள் சாயலை கொண்டே இப்படத்தின் கதாநாயகன் உருவாக்கப்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. ஏனென்றால் அவதார் என்ற சொல் இந்து மதத்தின் கடவுள் அவதாரங்களை குறிப்பது. அவதாரம் எனும் சொல் தமிழில் இருப்பது எல்லோரும் அறிந்ததே. இந்தியாவின் மிகப் பெரும் கடவுளான சிவனின் வர்ணமும் விஷ்னுவின் வர்ணம் நீலம். நமக்கு எழும் ஒரே குழப்பம் அவதார் சிவனை வைத்து கற்பனை செய்யப்பட்டதா இல்லை விஷ்னுவை வைத்தா.


இதற்கும் தெளிவாக பதில் கொடுக்க இயலும். சிவனுக்கு நீலகண்டன் என பெயர், அதாவது அவருடைய கழுத்தில் மட்டும் நீல நிறம் இருக்கும். சிவன் என்றாலே சிவந்த மேனியுடையவன் என படித்திருக்கின்றேன். மேலும் சிவன் அவதாரங்களை எடுப்பதில்லை. அவதாரம் உலக நாயகனுக்கே சொந்தமானது. இந்தப் படத்தினை உற்று கவணித்தீர்களேயானால் அவதார் நாமத்துடன் இருப்பது தெரியும். ஆம் விஷ்னுவை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த அவதார் படத்தின் நாயகன் உண்டாக்கப்பட்டு இருக்கிறான்.

இங்குள்ளவர்களுக்கு தெரியாத இந்து மதத்தின் மகிமை வெளிநாட்டவர்களுக்கு தெரிந்திருக்கின்றது. அவதாரின் படங்களுடன் மேலும் செய்தி அரிய சகோதரர் சேவியரின் அலசல் தளத்திற்கு செல்லுங்கள்.

நன்றி –

கதைக்காக விகடனுக்கும்.
படங்களுக்காக அலசலுக்கும்.

6 comments on “இந்துக் கடவுளா ஹாலிவுட் அவதார்?

 1. eroarun சொல்கிறார்:

  அவதாரம் என்னும் சொல் தமிழ் அல்ல! சமஸ்கிருதம்

  ஆங்கிலம் மட்டுமல்ல, பல மொழிகளில் ஆரிய மொழி கலப்பு உண்டு

 2. eroarun சொல்கிறார்:

  அவதாரம் என்பது இந்து மதத்தில் மட்டுமல்ல கிருஸ்டுவமதத்திலும் உண்டு!

  இயேசு இறைதூதர் என்றாலும் ஆபிரகாம மதத்தில் பல இறைதூதர்கள் இறைவனால் அனுப்பபட்டவர்கள், அவர்கள் அனைவரும் அவதரமாகவே பார்க்கப்படுகிறார்கள்.

  அவதாரம் என்ற சொல் நேரடியாக கடவுளை குறிக்கும் சொல்லும் அல்ல, வேடம் பூண்டு வேறு மாதிரி காட்சியளித்தாலும் அது அவதாரம்(அரிதாரம்) என்று தான் அழைகப்படும்!

  அவன் பாட்டுக்கு ஒரு படம் எடுப்பான், நம்ம ஆளுங்க பண்ற அலும்பு இருக்கே!

 3. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  கருத்துகளுக்கு நன்றி!.

  விகடன் விஷ்னு என சொன்னது.

  அலசல் சிவன் என சொன்னது.

  என் கருத்தை நான் சொன்னேன். அவ்வளவுதான்

 4. ஜோதிஜி சொல்கிறார்:

  நீங்கள் அறிமுகப்படுத்திய அலசல் முழுமையாக அரை மணி நேரம் ஆக்ரமித்துவிட்டார்.

  ரெண்டு பேருமே ஒரே அலை வரிசையில் தான் இருக்கீங்கள்.

  தேவியர் இல்லம் திருப்பூர்

 5. சேவியர் சொல்கிறார்:

  விகடனுக்கு சிவன் என்று தான் எழுதிக் கொடுத்தேன். அவர்கள் தான் இது “விஷ்ணு” ப்பா.. உனக்கு விஷய ஞானம் பத்தாது என்று சொன்னார்கள் 😀

 6. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  நானே சொல்லலாம் என நினைத்து வந்தேன். அதற்குள் நண்பர் சேவியரே சொல்லிவிட்டார். விகடனில் எழுதியதும் இவர்தான். கேள்வி கேட்பதற்கு முன்னரே பதில் கூறியமைக்கு மிக்க நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s