பெருகிவரும் குலதெய்வ வழிபாடு

இந்து மதத்தின் ஈடு இணையற்ற வரலாற்று சின்னங்களில் குலதெய்வங்களும் ஒன்று. தமிழர்களின் பழங்கால பண்பாடுகளை எடுத்து சொல்ல இன்னமும் வரலாற்று ஆய்வாளர்கள் குலதெய்வ வழிபாட்டை நம்பியிருக்கின்றார்கள். சைவர்களும், வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும், விஷ்னுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு மக்களிடையே பெருகி வருகிறது.

நம் முன்னோர்கள் –

குலதெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்றுவிக்கப்பட்டதோ, ஆகாசத்திலிருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். வெள்ளாளர்களின் வரலாறு சொல்லும் பழைய நூல்களில் எல்லாம் நீலி கதையும் சொல்லப்பட்டிருப்பதாக அறிந்து வியந்து போகிறேன்.

மதுரைவீரன், கருப்பு, பெரியசாமி, செல்லாயி, மருதாயி என நம் முன்னோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னிபினைந்த வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும்.

அழிவு –

தெய்வங்களை அரசியலாக்கிய காலகட்டத்தில், திடீரென வெளிபட்ட பார்பாணிய எதிர்ப்பினால் அதிகம் பாதிக்கப்பட்டது குலதெய்வங்கள் தான். பல சிறு தெய்வங்களின் வரலாற்று உண்மைகள் தெரியாமல் போய்விட்டன. அவற்றின் முக்கியத்துவத்தினை உணராமல் பல கோயில்கள் பராமரிக்கப்படாமலும், அழிந்தும் விட்டன.

குலதெய்வம், மதுரைவீரன் என வரலாற்றை சொல்லி வந்த திரைப்படத்துறை கூட பின்நாளில் மாற்றம் கண்டுவிட்டது. விருமாண்டி என்ற தெய்வத்தின் பெயரை வைத்து எடுக்கப்பட்ட படத்தில்கூட அதன் வரலாற்றை சொல்லாமல் விட்டுவிட்டார் கமல். சர்ச்சைக்கு உள்ளான அந்த படத்தின் ஒரு வில்லு பாட்டில் விருமாண்டி வரலாற்றை அறிந்தேன். அந்தப் பாடல் படத்தில் இடம் பெறாமலே போய்விட்டது.

இப்படி எல்லா தரப்பும் செய்த சதியால், சில தமிழர்களுக்கு குலதெய்வ பெயரைத் தவிர மற்ற எந்த செய்தியும் தெரியவில்லை. அதிலும் சிலருக்கு தெய்வங்களின் பெயர்களும் கூட தெரிவதில்லை. இது மிகவும் வேதனையான செய்தி. நம் முன்னோர்களின் வரலாறுகளை நாம் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.

மாசி பெரியண்ணன் –

எங்களுடைய குலதெய்வம் மாசி பெரியண்ண சுவாமி. அதன் வரலாற்றை அறிய மிகவும் சிரமமாக இருந்தது. அப்பாவோ, தாத்தாவோ சில சம்பவங்களை மட்டும் தான் கூறினார்கள். அதன் பின் எழுந்த ஆவலில் கொல்லிமலைக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடமுடம், பெரிய பூசாரிகளிடமும் கேட்டு வரலாற்றை அறிந்து கொண்டேன்.

மாசி பெரியண்ண சாமி பற்றி படிக்க –

கொல்லிமலை மகிமைகள்
பெரியசாமி கதை கோயில் படங்களுடன்
மாசி பெரியண்ண சாமி் (விக்கிசோர்சில்)

(நன்றி – நண்பர் ஞானப்பித்தன் (எ) வெற்றிக்கதிரவன் அவர்கள் லிங்க் பற்றி ஞாபகம் செய்தமைக்காக)

மறந்துவிட்ட மீடியாக்கள் –

மகாபாரதத்தையும், ராமயணத்தையும் மட்டும் மீண்டும் மீண்டும் பல வடிவங்களில் ஒளிபரப்பு செய்யும் மீடியாக்கள் சிறுதெய்வங்களின் வரலாற்றையும் பதிவு செய்து ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். சிறுதெய்வங்களின் கதைகளில் தியாகம், வீரம், அன்பு, அறிவு என பல விதமான சுவைகள் இருக்கின்றன. என்னுடைய குல தெய்வத்தின் வரலாற்றை எப்படியோ அறிந்துகொண்டேன். ஆனால் மற்ற தெய்வங்களின் வரலாற்றை கண்டறிய கொஞ்சம் சிரமாக உள்ளது. நண்பர்களுக்கு அவர்களின் தெய்வங்களைப் பற்றி தெரியவில்லை.

குலதெய்வம் பற்றி வலையில் தேடினால் பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் படத்தினைப் பற்றிய செய்தி தான் வருகிறது. அப்போதும் சில பெரியவர்கள் இட்ட குலதெய்வ கட்டுரைகளை சேமித்து வைத்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவை மிக சொற்பமான அளவே இருக்கின்றன. சிறு தெய்வங்களின் கதைகள் சொல்லும் புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் எல்லாவற்றையும் இணையத்தில் வெளியிடுவேன்.

ஆவணப்படுத்துங்கள் –

ஒரு தனி மனிதனாக எல்லாவற்றையும் ஆவணம் செய்ய இயலாது. உங்களுடைய குலதெய்வத்தினை பற்றி முழுமையாக அறியுங்கள். அதன் வழிபாட்டு முறைகள், வரலாற்று கதைகள் என எல்லாவற்றையும் ஆவணப்படுத்துங்கள். வலைப்பூக்கள் தொடங்கியுள்ள நண்பர்கள் இந்த பணியை செம்மையாக செய்துவிடுவார்கள். சிலர் செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.

வலைப்பூக்களில் எழுதி பழக்கமில்லாதவர்களும், வலைப்பூகளை தொடங்காதவர்களும் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள் –

தமிழ் எழுதியான என்.எச்.எம்ஐ உங்கள் கணினியில் பதிவிரக்கம் செய்து கொள்ளுங்கள். இது மிகவும் எளிமையான தமிழ் எழுதி, தட்டச்சு பலகையின் மாதிரியும் இதோடு உள்ளது. (மற்ற தமிழ் எழுதிகளின் இணைப்புகள் இந்த தளத்திலே இடது புறமாக கொடுக்கப்பட்டு உள்ளது).

உங்கள் குலதெய்வ வழிபாட்டு முறை, சிறப்பான பெயர்கள், வரலாறு, அமைவிடங்கள் என எல்லாவற்றையும் தமிழில் எழுதிக் கொள்ளுங்கள்.

அவற்றை விக்கியில் பதிவு செய்து விடுங்கள். அவ்வளவுதான். உங்களுடைய குலதெய்வம் பற்றி அறிய விரும்பும் உலக தமிழர்கள் அனைவரையும் அது சென்றடைந்துவிடும்.

வேண்டுகோள் –

தங்களுடைய குலதெய்வம் பற்றிய செய்தியை நீங்கள் எழுதியிருந்தாலோ, அல்லது வலைப்பூவில் ஏதேனும் ஓர் இடத்தில் படித்திருந்தாலோ அவற்றின் இணைப்புகளை கண்டிப்பாக கொடுத்து செல்லவும். வரலாறு கதை சரியாக தெரியவில்லை என்றால் தங்கள் குலதெய்வப் பெயரை பதிவு செய்தால் கூட நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

10 comments on “பெருகிவரும் குலதெய்வ வழிபாடு

 1. அன்பு சொல்கிறார்:

  மதுரை வீரன் எங்களோட குலதெய்வம் , ஆனால் அவரோட வரலாறு சின்னதா தெரியும் , திருவேற்காடு கோயில்ல இருந்தும் போய் கும்பிடற மாதிரி வழியில்ல !
  நீங்க சொன்ன மாதிரி ஒரு வலைப்பூ செய்தியா போட்டுட வேண்டியதுதான்
  அன்புடன்,
  அன்பு

 2. நீங்க சேகரிச்ச லிங்க் எதையும் கொடுக்கவே இல்லையே 😦
  உங்கள் குல தெய்வத்தை பற்றி அறிந்த பிறகு ஏதேனும் இடுகை எழுதிருந்தால் அதனையும் கொடுங்கள்.

  ***
  சிறந்த மனிதர்களை மட்டும் அல்லது சில கொடியவர்களும் தெய்வமான கதையும் உண்டு -:)

  ***
  “தெய்வங்கள் முளைக்கும் நிலம்” தமிழினி வெளியீடு படிச்சி பாருங்க எழுத்தாளர்
  பெயர் ஞாபகம் இல்லை

  ***

  குறிப்பு : இதுக்கும் இந்து மதத்துக்கும் (வழிபாடு என்றால் ஒன்லி இந்துமதமா ?) தொடர்பு இல்லை என்பதால் இந்து மதத்துக்கும் குலதெய்வங்களுக்கும் தொடர்பு இல்லை என்று இங்கு தீர்ப்பு எழுதுகிறேன் -:)

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே.

   இந்து மதத்தில் தான் நான் இருகிறேன். குலதெய்வ வழிபாட்டை செய்கிறேன்.

   நீங்கள் குறிப்பட்ட புத்தகத்தினை நான் படித்ததில்லை. என்றாலும் தேடிப்பார்க்கிறன்.

  • ஆம் வழிபாடு என்றால் இந்துமதத்தில் மட்டும் தான். குலதெய்வம், கிராமதெய்வம் இந்துக்களைத்தவிர யாரிடம் உள்ளது. கிறிஸ்தவரானவர்கள் குலதெய்வம் இருக்குமிடத்திற்கு கூட வரமுடியாது. ஹிந்து சமயம் மட்டுமே குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும் என்று கூறுகிறது. கிராமதேவதைகளையும் வழிபட்டுவிட்டு இஸ்ட தெய்வவழிபாடு நிகழ்த்தச்சொல்கிறது. மனிதன் தெய்வமாகலாம். அத்தகு தெய்வங்களை, முன்னோர்களை தலை தாழ்த்தி மண்டியிட்டு வணங்கலாம் என்பது ஹிந்துமதம். இந்திய தேசம் முழுது இது நடைமுறை.

 3. கலையரசன் சொல்கிறார்:

  நிறைவாவும், நினைக்கும்படியாவும் சொன்னீங்க தலைவா!!

 4. vasantha சொல்கிறார்:

  hello sir,
  Really I proud of u about your kulatheyvangal collection job… I am very interested to know about my husband’s kulatheyvam (called as Aanadhaaey amman) and it’s place hence their family not atall interested in those prayer commitments.I wish you to tell about the importance of praying my husbund’s kulatheyvam than my parental house god…if it is possible tell me how can i pray my husbund’s god in home itself… please help me sir….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s