உலகநாயகனும் உயிர்கொல்லி நோயும்

சிலந்திகள் பெண்கள்!
ஆண்கள் பூச்சிகள்!!

வரிகளின் ஆளுமை என்றவுடன் எனக்கு வைரமுத்து தான் ஞாபகம் வருவார். உலகநாயகன் கமலின் ஆளவந்தான் திரைப்படத்தில் நந்து என்ற கதாபாத்திரத்தின் கவிதைகளை மிகவும் ரசித்திருக்கிறேன். வைரமுத்து அவர்கள் உலகநாகனுக்காக அவர் எழுதிய கவிதைகளுடன் உலக உயிர்கொல்லி நோய் எய்ட்ஸ் பற்றி அவர் எழுதிய கவிதைகளையும் கொடுத்திருக்கிறேன். மகிழுங்கள்.

பெண்ணைநம்பி பிறந்தபொழுதே –

பெண்ணைநம்பி பிறந்தபொழுதே தொப்புள்கொடிகள் அறுபடுமே
மண்ணைநம்பும் மாமரம் ஓர்நாள் மாபெரும்புயலில் வேரருமே
உன்னைநம்பும் உறுப்புகள்கூட ஒருபொழுது உன்னைகைவிடுமே
பெண்ணைமட்டும் நம்பும் நம்பகம் பிணநாள்வரையில் பின்வருமா

சிற்பமான பெண்ணீரென்று –

சிற்பமான பெண்ணீரென்று தேடிஓடும் மானிடா
அற்பமான மாதரோடு ஆசை கொள்வதேனடா
கற்பொன்று இருக்குதோ காவலொன்று இருக்குதோ
கற்பமேறு பையினோடு கவசமிட்டிருக்குதோ

உயிர்க்கொல்லி நோய் –

போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் – காதை
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய்.

அறிவூட்ட வேண்டும் –

பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை ‍- இன்றே
எரியூட்ட வேண்டும் இளையகுலம் வாழ‌
அறிவூட்ட வேண்டும் அறி !

மானுடத்தை வாழ்விப்போம் வா –

துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை – மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த‌
மானுடத்தை வாழ்விப்போம் வா.

கற்பனையை வீட்டுக்குள் காட்டு –

தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
வேகையிலும் விட்டு விலகாதே – ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு.

ஓரினச் சேர்க்கை உறவாலே –

ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் – பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ .

வையத்தில் மானுடம் வாழமோ –

ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே பாரடா
வையத்தில் மானுடம் வாழமோ என்னுமோர்
அய்யத்தில் உள்ளோம் அடா.

3 comments on “உலகநாயகனும் உயிர்கொல்லி நோயும்

  1. vimalini சொல்கிறார்:

    rombavum nenjai thottuvittathu ikkavidai….. paadhai thavaraparrkkum yarum paarthu padikka vendiya varigal ivai…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s