ஓசை ஒத்தப்பாக்கள்

தமிழென்னும் தங்க தாய்க்கு அவள் மக்கள் இன்னும் பெருமை சேர்க்க எப்படி உழைக்கிறார்கள் என என்னும் போது சிலிர்ப்பாய் இருக்கிறது. என்னிடம் யாராவது வந்து காசிற்காகவும், புகழுக்காகவும் அல்லாமல் சேவை செய்யும் மனிதர்களை காட்டு என்றால் ஒட்டு மொத்த வலைப்பூ நண்பர்களை காட்டுவேன். தமிழுக்காக பாடுபடும் எண்ணற்ற வலைப்பூகளை காணும் போது மிகவும் மகிழ்சியாய் இருக்கிறது.

மரபு கவி எழுதி வியக்கவைக்கும் சில நண்பர்களின் வலைப்பூக்களை பார்த்தேன். இதற்கு முன் நான் பார்த்திராத ஒன்றை எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அதன் பெயர் ஓசை ஒத்தப்பாக்கள். நான் அவற்றை முயற்சி செய்து பார்த்தேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இதனுடைய இலக்கணம் –

1.மூன்று அடிகளில் இருக்க வேண்டும்.
2.முதல் அடியில் கடைசி சீரும், கடைசிஅடியில் கடைசி சீரும் ஓசை ஒத்து வரவேண்டும்.
3.முதல் அடியின் சீரின் எண்ணிக்கையும், கடைசி அடியின் சீரின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
4.ஒரு அடிக்கு குறைந்தது இரண்டு சீரும் அதாவது குறளடியாக அல்லது அதிகமாக நான்கு சீரும் அதாவது அளவடியாக தான் இருக்க வேண்டும்.
5.அடிமோனையும்,சீர்மோனையும் அமைத்து எழுதினால் நன்று.
6.கடைசி அடி ” நச் ” என்று முத்திரை பதிக்க வேண்டும்.

சில உதாரணங்கள் –

1. விண்ணைத் தொடும் விலைவாசி
கண்ணைக் கட்டும் பொழுது
மண்ணில் யாரப்பா சுகவாசி.

2. திருடன் என்றால் கம்பு
அரசியல் வாதி என்றால்
நமக்கு ஏன் வம்பு.

3. அன்று மணத்தது பூக்கடையாய்
அரசியல், இன்றோ
அசுத்தம் நிறைந்த சாக்கடையாய்.

4. கருத்தும் கதையும்
மாறிப் போய் இன்று திரைப்படத்தில்
விரசமும் சதையும்.

5. சூறாவளியால் எண்ணற்றோர் பலி
எவ்வளவு நிவாரணம் கொடுத்தாலும் தீராது
பாதிக்கப் பட்டோரின் வலி.

நான் முயன்ற சில ஓசை ஒத்தபாக்கள் –

1. அவள் கொடுத்தாள் முத்தம்
அவனுடைய உதட்டில்
அடுத்து வந்தது யுத்தம்

2. அரசு லாபம் பார்த்தது லட்சம்
சாராயம் விற்று, குடித்தவனுக்கோ
குடல் நோய் தான் மிட்சம்

3. அன்பு தான் அம்மா
அவள் முன்
மற்றவை யெல்லாம் சும்மா

4. ஒத்துப் போனது ஓசை
எல்லாம் எந்தன்
கவி எழுதும் ஆசை

5. ஆடினான் சிவன்
எட்டுதிற்கும் அவனை
வெல்பவன் எவன்

நீங்களும் முயன்று பாருங்கள். எளிமையாக பா அமைத்து கவியாக மாறிடுங்கள்.

3 comments on “ஓசை ஒத்தப்பாக்கள்

 1. biopen சொல்கிறார்:

  அண்பு நண்பரே –

  உங்கள் படைப்பு அருமை!

  நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.
  அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி

  என் வலைப்பூ முகவரி: http://eluthuvathukarthick.wordpress.com/

 2. திக‌ழ் சொல்கிறார்:

  க‌விஞ‌ர் ஈரோடு த‌மிழ‌ன்ப‌ன் அவ‌ர்க‌ளின் லிமிரிக்கூவைப் ப‌டித்து விய‌ந்து ஓசை ஒத்த‌ப்பாக‌ளென‌ பெய‌ரிட்டு அத‌ன் இல‌க்க‌ண‌ம் இதுவென‌ வ‌ரைய‌றுத்து பாக்க‌ளை எழுதினேன்.

  த‌ங்க‌ளின் பாக்க‌ளைப் பார்க்கும்பொழுது மிக்க‌ ம‌கிழ்ச்சியாக‌ இருக்கிற‌து.

  அத்த‌னையும் அருமை

  வாழ்த்துக‌ள்

  நேர‌ம் கிடைக்கும்பொழுது முடிந்தால் பாக்க‌ளை எழுத‌ அன்புட‌ன் வேண்டுகின்றேன்.

  த‌மிழின்ப‌த்தைப் ப‌ருகும் அவாவுட‌ன்

  அன்புட‌ன்
  திக‌ழ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s