கோயில்களில் தலைவிரித்தாடும் குற்றங்கள்

கொடுமை கொடுமையின்னு கோவிலுக்கு போனா, அங்கே ஒரு கொடுமை அவுத்து போட்டு ஆடுச்சாம் என தமிழில் ஒரு பழமொழி உண்டு. இப்போது அது தான் நடந்து கொண்டிருக்கின்றது. திருவிழா நாட்களில் பெரிய கோவிலுக்கு சென்றால் நீண்ட நெடு வரிசையில் ஏழை மக்கள் நின்று கொண்டிருக்க, அரசு அதிகாரிகளும், பெரிய பணக்கார்ர்களும் கருவரைக்கு அருகே சென்று கடவுளை பார்த்து வருகின்றார்கள். காத்து கிடக்கும் மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே இருபதடிக்கு முன்பே இரும்பினால் ஆன தட்டி. எப்படி மக்களுக்கு பக்தி வருமென தெரியவிவல்லை.

செருப்பையும், பொருளை பாதுகாக்கவும் பணம் வாங்கிக் கொள்கிறார்கள். அதன் அவசியத்தை உணர்ந்து நாம் தருகிறோம். பின்பு கோவிலுக்கு உள்நுழைய சீட்டு, அர்ச்சனை செய்ய சீட்டு, தேங்காய் பழம் உடைக்க சீட்டு, புகைப்படம் எடுக்க சீட்டு, வீடியோ எடுக்க சீட்டு என அடுக்கிக் கொண்டே போகின்றார்கள். கார்களில் வரும் பணக்கார்ர்களுக்கு மட்டும் என்றால் பரவாயில்லை. கால்நடையாக வரும் ஏழைகளுக்கும் இதே சீட்டு முறை. இதற்கு பணம், அதற்கு பணம் என பணம் பிடுங்கும் குரங்குகளினால் ஏழை மக்கள் பிய்த்து எறியப்படுகின்றார்கள்.

இத்தனைக்கும் கோயில்கள் நஸ்டத்தில் இல்லை. அவர்களுக்கென தனியான கோவில் சொத்துகளும், நிலங்களும் இருக்கின்றன. எல்லா பெரிய கோவில்களுக்கும் தினம் தினம் பல கோடி வருமானம் வருகின்றது. அதையெல்லாம் பங்கிட்டு கொள்ளும் கோவில் நிர்வாகிகள் பக்தர்களுக்கு வசதி செய்வதாக சொல்லி இன்னும் இரண்டு மூன்று இரும்பு வேலி வரிசைகளை கோவிலுக்குள் அமைக்கின்றார்கள். நடமாடும் உண்டியல்கள் செய்கின்றார்கள். கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையே இடைவெளியை உண்டு செய்ய இவர்கள் யார்.

நாமக்கல் ஆஞ்சினேயர் முன்பு மிக தொலைவிலிருந்து பார்த்தாலே தெரிவார். இப்போது அவரை சுற்றி சுவர் எழுப்பி விட்டார்கள். அருகிலியே இரும்பு கம்பிகளை அமைத்துவிட்டார்கள். வசுல் வேட்டை ஆரமித்துவிட்டார்கள். பிசாதம் என்றால் பிறருடைய சாதம், கோவிலுக்கு வரும் பக்தர்களை கொடுக்கும் பொருட்களில் அதை செய்து அவர்களிடமே அதை விற்கின்றார்கள். அவர்கள் பணக்காரர்களுக்கு தான் கடவுள் என்று நினைத்துவிட்டார்கள். மனதில் ஏதாவது குறையிருந்தால் கடவுளிடம் போய் முறையிட செல்பவர்களென்றால் கூட பரவாயில்லை. வருமானத்திற்கு வழி செய்து கொடு என வேண்டிக் கொள்ள செல்பவரிடம் இருப்பதையும் பிடுங்கிக் கொண்டால் அவர்கள் என்ன தான் செய்வார்கள்.

முன்பாவது ஜாதியை வைத்துதான் பாகுபடுத்தி வந்தார்கள். இப்போது பணத்தினை வைத்து செய்ய ஆரமித்துவிட்டார்கள். விசேச நாட்களில் கோவிலுக்கு செல்வதென்றாலே மனதிற்குள் கசக்க தொடங்கி விடுகிறது. நீண்ட வரிசையில் நெடு நேரம் நின்றாலும் கடவுளை தரிசிக்க சில நொடிகள் தான். அதுவும் இலவச வரிசை, கடைசி தரிசன சீட்டு என போய்விட்டால் பத்தடி இருபதடிக்கு முன்பே ஒரு மேடையில் ஏறி கடவுளை எட்ட நின்று பார்த்துவிட்டு சென்றுவிட வேண்டும். எத்துனை அநியாம் இது. காசிற்காக ஆசைப்பட்டும் சிலர் செய்யும் வேலையால் இந்து மதம் அழிந்து கொண்டே இருக்கின்றது. இந்த கொடுமையை ஒழித்தால் மட்டுமே இந்து மதம் ஒளிரும்.

நம் மதம் வளரவோ, இல்லை அழியாமல் காக்கவோ நாம் செய்ய வேண்டியது.

1. பணத்தினை மட்டும் குறிக்கோளாக கொண்டிருக்கும் மனிதர்களை கோவில் பொறுப்புகளிலிருந்து முழுவதுமாக நீக்க வேண்டும்.
2. கோயில்களில் எல்லோரையும் கருவறை வரை அனுமதி செய்யவேண்டும். அதற்கு தற்போதுள்ள கோயில் கட்டமைப்பு வழி வகை செய்யாது. சென்னையில் இருக்கும் பாபா கோயில், திருச்சியில் இருக்கும் ஐயப்ப சாமி கோயில் போல கட்டமைப்பு வேண்டும்.
3. குளங்களை மக்களின் பயண்பாட்டிற்கு கொடுக்க வேண்டும். அது அமைக்கப்பட அடிப்படை காரணமே அதுதான்.
4. அறநிலையதுறையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஏழை மக்களுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் தந்து உதவு வேண்டும்.
5. சேரி மக்களும், மலைவாழ் மக்களும் பொருளாதாரதாரத்தில் உயர வழி வகை செய்ய வேண்டும்.
6. இறைவிக்கு வரும் பட்டுப்புடவையை ஏலத்தில்விடும் பணத்தில் ஏழைகளுக்கு ஆடை வாங்கி கொடுக்க வேண்டும்.
7. எல்லா கோவில்களிலும் அண்ணதானம் செய்ய வேண்டும்.
8. ஆன்மீகம் பணக்காரர்களுக்கு மட்டும் தான் என்று ஆன்மீக புத்தகங்களின் விலைகளும் சொல்லுகின்றன. அவற்றை ஏழை மக்கள் படிப்பதற்கு ஏற்ற விலையில் விற்பனை செய்ய வேண்டும். முடிந்தால் இலவசமாக கொடுக்க வேண்டும்.
9. இந்து ஏழைகளை வளமாக்குவது எப்படி என சிந்தியுங்கள். அவர்களிடம் எப்படியெல்லாம் சுரண்ட வேண்டுமென சிந்தனை செய்யும் மனிதர்களை அடித்துவிரட்டுங்கள்.
10. விழாகளை சிறப்பாக நடத்துவதோடு நம் பண்பாட்டு கலையையும் வளர்க்க வேண்டும்.

மக்களை விரோதித்துக் கொண்டு மதநெறியை பரப்பி லாபமில்லை. அவர்கள் நல்வாழ்விற்காக தோற்றுவிக்கப்பட்ட இந்து மதத்தினை அவர்களுக்கு எதிராக மாற்றுவது மிகவும் கொடுமையானது. அடிப்படைகளை மத நெறியை அறிய சொல்லுவோம், அதை மாற்றுபவர்களுக்கு புத்தி புகட்டுவோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s