ஒன்று முதல் பத்து கவிதை

நான் குறுங்கவிதைகளின் காதலன். சிறுமுயற்சியாய் ஒருவரி கவிதை முதல் பத்துவரி கவிதை வரை எழுதியுள்ளேன். படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளை சொல்லுங்கள். என்னை மேலும் வளர்த்துக் கொள்ள உதவுங்கள்.

1
போன்சாய்

வீட்டிற்கு(ள்) ஒரு மரம்!

2
காட்டுத்தீ

நெருப்பை கொடுத்தன அருகிலிருக்கும் மரங்களுக்கு
கொடுத்தே பழக்கப்பட்ட மரங்கள்!

3
தலைமுறை

தேங்கிய மழைநீரில் விட்ட கப்பல் மூழ்கிப்போனதற்காக
அழுகின்ற மகளை அடிக்க செல்கிறேன் நான்
புதுகப்பல் செய்துகொண்டிருக்கிறார் என் அப்பா!

4
கதரல்

ஆசையாய் உண்ண வாங்கிய பழத்தை
அவசரமாய் வெட்டும் போது
உடைபட்ட விதையிலிருந்து கேட்கின்றன
உயிர்பலவற்றின் கதரல்கள்!

5
உண்மை

தனியார் கண் மருத்துவமனையின்
சிறப்பு அறையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்
நேற்று மேடையில்
பார்வையில்லாதவருக்கு பார்வை கொடுத்த
கிறிஸ்துவ பாதிரியார்!

6
தனிமை துணை

அறைநண்பன் அவனூருக்கு சென்றுவிட்டான்
சன்னலில் இருட்டைதவிற யாருமில்லை
இன்றிரவை எப்படி கழிக்கப் போகின்றேன
பயந்து கொண்டே படுத்திருந்தேன் – ஆனால்
இரவுமுழுதும் உடனிருந்து பேசிப் போனது
பருவ மழை!

7
ஏன்

ரயில் பெட்டியின் நான்கு அடிக்குள்
எட்டு குட்டிகரணம் போட்டது
அந்த பிஞ்சு குழந்தை

நான் வியந்து போய்
பத்து ரூபாய் கொடுத்தேன்
அம்மா சந்தோசமாய் வாங்கிப்போனாள்
என்னை முறைத்தவாறே சென்றது குழந்தை!

8
கவிதை

இரவுமுழுதும் கண்விழித்தும்
கவிதைக்கரு கிடைக்காமல்
திண்டாடிக் கொண்டிருக்கின்றேன்
லட்சரூபாய் போட்டிக்கு
நாளைதான் கடைசிநாள்
சேவலின் கூவலில் மனைவி எழுந்துவிட்டாள்
சினுங்கிய மகளோ மெல்ல கைகளை உயர்த்தி
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறாள்

9
தத்து

வருசம் மூனாகி போச்சு
பேரப்பிள்ளைப் பார்க்க வழியில்லாமலேயே
சொர்கத்துக்கு போயிடுவோம்முன்னு
கவலை படுர அம்மாவுக்காக
ஒரு குழந்தையை தத்து எடுத்து வந்தோம்
யாருக்கோ பொறந்தத எப்படி கொஞ்ச சொல்லறவென
கோபித்து கொண்டு ஊருக்கு போய்விட்டாள்
நான் எப்படி சொல்ல
எனக்கு அந்த வரம் இல்லையென

10
உறவு

இரவுப்பயண பேருந்தில்
மடியில் உறங்குவதும்
மார்பில் விளையாடுவதுமாய்
எனக்குமுன் ஒரு இளம் ஜோடி

அசைவில்லா பேருந்தால்
தூக்கம் கலைந்து கீழிரங்குகிறேன்
உந்துதல் தவிர்ப்பதற்காக

தேநீர் அருந்துகையில் அவன்
எனக்கு அறிமுகம் செய்கிறான்
தன் தங்கையென அவளை!

5 comments on “ஒன்று முதல் பத்து கவிதை

  1. kamalesh சொல்கிறார்:

    very nice and intresting…..

  2. surya சொல்கிறார்:

    அனைத்தும் அருமை..

    வாழ்த்துகள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s