காம வக்கிரம் – மருத்துவ பார்வை

எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டும் என முடிவு செய்துவிட்டு காமத்தை மட்டும் விட்டால் பெரிய தவறாகிவிடும். சமூகத்தில் நடைபெரும் குற்றம் பெரும்பாலும் காமத்தினை சார்ந்ததாகவே இருக்கிறது. சிசு கொலையை எடுத்துக்கொள்ளுங்கள் அதற்கும் பாலின வேறுபாடுதான் முக்கிய காரணம்.

பேருந்தில் போகும் பெண்களை இடிப்பது, கடத்தி கற்பழித்து கொலை செய்வது, ஆசிட் ஊற்றுவது, விபச்சாரத்திற்கு விற்பது, கள்ளக் காதல் அப்பப்பா பெரிய பட்டியலே இருக்கிறது. இதெல்லாம் நேரடியாக சம்மந்தம் பட்டவை. மறைமுகமாக இருப்பது சிசு கொலை, வரதட்சனை போன்றவை. யாருக்கும் தெரியாது ஒன்று இருக்கிறது. தெரிந்தாலும் அதை நாம் கண்டு கொள்வதே இல்லை, அது ஆண்களுக்கு எதிரான வன்முறைகள்.

என்னடா ஏதோ புதுசா சொல்லறானு நினைக்கின்றீர்களா. ஒன்றும் புதுசில்லை, இல்லறவாழ்க்கையை நடத்த முடியாமல் மனைவிக்கு பயந்து துறவிகளாக மாறியவர்களையும், கொடுமை தாங்காமல் பைத்தியங்களாய் அலைபவர்களையும் கொஞ்சம் யோசனை செய்தால் உங்களுக்கு புரியும். இந்த ஆணுக்கு எதிரான பாலியல் வன்முறையும், குடும்ப வன்முறையும் ஏனோ மக்களுக்கு தெரியாமலே போய்விட்டது.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் சிறுவயது கதாநாயகனை ஒரு இளம் பெண் தன் பெற்றோர்களிடம் மாட்டி விடுவாளே ஞாபகம் இருக்கின்றதா. ஆண்களுக்கு (ஆண் குழந்தைக்கு) எதிரான பாலியில் வன்முறை சுட்டி காட்டிவிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறையாகவே மாறிவிடுகின்ற படம் அது. இப்படி ஆண், பெண் மீது மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கின்றது என்று சொல்ல கொஞ்சம் மனவருத்தமாகதான் இருக்கின்றது.

பாலியல் வக்கிரங்கள் –

இயல்புக்கு மீறியது, சட்டத்தினால் அங்கிகாரம் செய்யப்படாதது, பிறர் விருப்பமின்றி செயல்படுவது, பிறருக்கு துன்பம் விளைவிப்பது போன்ற அடிப்படைகளினால் பாலியல் செயல்கள் வக்கிரங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவைகளை அனுமதியுடன் செய்தால் தவறில்லை எனவும் அவர்களின் அனுமதியை பெறாமல் செய்தால் வக்கிரங்கள் எனவும் சொல்லப்படுகின்றன.

இவைகளை படித்துவிட்டு நமக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என நீங்கள் சென்றுவிடுவீர்கள் என்ற பயத்தினால் சில இடங்களில் படங்களின் பெயரை பயண்படுத்தியுள்ளேன். என்னுடைய தலைவன் படத்தை எப்படி இதில் குறிப்பிடலாம் என கோபம் கொள்ளாமல் கொஞ்சம் அமையாக இருங்கள்.

வகைகள் –

வஸ்து உறவாடல் –

ஆடை போன்ற பொருட்களை பயண்படுத்தி காமசுகம் காணுதல். 7ஜி படத்தில் நடிகர் ரவிகிருஷ்ணா நடிகை சோனியா அகர்வாலின் உடையை திருடி வைத்திருப்பாரே அதுபோலதான். பெரும்பாலான படங்களில் நாயகனின் நினைவாகவோ, நாயகியின் நினைவாகவோ அவர்கள் பயண்படுத்திய பொருட்களை வைத்துக் கொண்டு அலையும் செயலின் இறுதிவடிவம் இது.

எதிர்பாலின உடையணிதல் –

காமஇச்சை ஏற்பட எதிர்பாலின உடையை அணிதல். இதில் வேலைக்கு போகும் பெண்களை விட்டுவிடுங்கள். அவர்களை இதற்குள் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். காமஇச்சைக்காக அணிவது மட்டுமே வக்கிரத்தில் சேரும்.

உரசல் –

மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் காம இச்சைக்காக உடலினை உரசுதல். ஏதோ ஆண் மட்டுமே செய்வதாக நினைத்துவிடாதீர்கள் பட்டியலில் பெண்களும் உண்டு.

குழந்தைகளோடு உடலுறவு கொள்ளுதல் –

பருவம் அடையாத குழந்தைகளுடன் உறவு கொள்ளல். மூன்று வயது சிறுமி, ஐந்து வயது சிறுவன் என்றில்லை, பச்சை குழந்தைகளும் இதில் அடக்கம். சமீப காலமாக தமிழகத்திலும் இது அதிகரித்துவருகிறது. சந்தேகம் உள்ளவர்கள் கடந்த ஒரு வார செய்திதாள்களை திருப்பி பாருங்கள். தடுக்க குழந்தைகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். காம கொடூர்ர்களிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

உறுப்பை பகிரங்கமாக காட்டுதல் –

இந்த செயல் மனமுதிர்ச்சி அடையாத ஆணிடம் காணப்படுகின்றது. வெளிநாடுகளில் இதற்காக தண்டனை பெற்றவர்கள் அதிகம்.

எட்டிப்பார்த்தல் –

பிறர் உடைமாற்றுவதையோ, உறவு கொள்வதையோ அவர்களின் சம்மதமின்றி எட்டிப் பார்த்தல். தமிழ் மசாலா திரைப்படங்களில் கதாநாயகன் சம்மதம் வாங்கி செய்யும் செயல். வில்லன் என்றால் சம்மதம் வாங்காமல் செய்வார்.

துன்பப்பட விரும்புதல் அல்லது துன்புருத்த விரும்புதல் –

பிறரை துன்புருத்தியோ, பிறரால் துன்பப் பட்டோ காம திருப்தி அடையும் வகை. மிகவும் கொடூரமான வகையில் இதுவும் ஒன்று.

சவத்துடன் உறவு கொள்ளுதல் –

இறந்தவர்களின் உடலோடு உறவு கொள்ளல். வள்ளுவப் பெருமானே ஒரு குரலில் இதைப் பற்றி குறிப்பிடுகின்றார். இதில் உயிரோடு இருப்பவர்களை பிணமாக்கி உறவு கொள்ளும் முறையும் உண்டு. கஜினி திரைப்படத்தின் இறுதிகட்டத்தில் வில்லன் ஒரு பெண்ணை கொன்றுவிட்டு நிர்வாணப்படுத்துவான். அந்த செயல் தான் இது.

விலங்கோடு உறவு கொள்ளுதல் –

இந்த முறை பண்டைய கிரேகத்தில் இருந்துள்ளது. இப்போதும் ஆங்காங்கே நடப்பதாக டாக்டர் ஷாலினி அவர்கள் ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.இப்போதும் இதற்கென பிரத்தியோக வலைதளங்கள் காணப்படுகின்றன.

ஒரே பாலின சேர்க்கை –

ஓரினச்சேர்க்கை என்ற பரவலாக அறியப்படுகின்ற ஒன்று. ஆண் மீது ஆணோ, பெண் மீது பெண்ணோ மோகம் கொள்ளும் வினோதம்.

இவைகளை நான் ஒன்றும் கண்டுபிடித்து உங்களுக்கு சொல்லவில்லை. மறைந்த மாபெரும் மனநல மருத்துவர் மாத்ருபூதம் அவர்கள் புதிரா புனிதமா நூலில் சில பாலியல் வக்கிரங்களை குறிப்பிட்டுள்ளார். டாக்டர் நாராயணரெட்டி அவர்களின் உயிர் புத்தகத்தில் இதற்கான முழு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. செக்ஸிக்காகவே தனியாக மருத்துவப்பிரிவும் மருத்துவர்களும் இருக்கின்றார்கள். மதங்களுக்கு அடுத்தபடியாக மூடநம்பிக்கை உலாவும் பகுதி பாலியலாகதான் இருக்கும். எல்லா துறைகளிலும் அறிவை வளர்த்துக் கொண்டாலும் வாழ்க்கையின் சில அடிப்படை அறிவு காமத்தை சார்ந்துதான் இருக்கின்றது என்பதை புரிந்துகொண்டால் நலமே.

தொடர்புடைய இடுகைகள் –
ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்
ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
ஆண்கள் ஸ்பெசல் – ஆண்குறி அளவு + கருத்தடை முறை
காம வக்கிரம் – மருத்துவ பார்வை
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை
காமவியலில் இந்தியாவின் பங்கு

14 comments on “காம வக்கிரம் – மருத்துவ பார்வை

 1. ரோஸ்விக் சொல்கிறார்:

  நல்ல பகிர்வு…வாழ்த்துக்கள்.

 2. kalai.chezhian சொல்கிறார்:

  நல்ல பகிர்வு… ஆனால் ஓரினச் சேர்க்கையைப் பாலியல் வக்கிரம் எனக் குறிப்பிட்டு உள்ளீர்கள். சம்மதத்தோடு அரங்கேறுபவை வக்கிரம் இல்லை என்றும் சொல்லி இருக்கிறீர்கள். அப்படியெனின் இரு ஆண்களின் அல்லது இரு பெண்களின் சம்மதத்தோடு நடைபெறும் ஓரினச் சேர்க்கையைப் பாலியல் வக்கிரம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   ஓரினச்சேர்ககையில் நீங்கள் சொல்லியிருக்கும் சம்மதத்தோடு நடப்பவைகளை அரசோ, சட்டமோ ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பல இடங்களில் ஓரினச்சேர்க்கைக்கு குழந்தைகளையும், ஆண்களையும் வற்புறுத்துவது நடக்கிறது. இதைத்தான் வக்கிரம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

 3. kalpana சொல்கிறார்:

  சவத்துடன் உறவு கொள்ளுதலும், விலங்கோடு உறவு கொள்ளுதலும் மனிதனின் வக்கிரத்தையே காட்டுகிறது.

  ஓட்டை இருந்தால் மட்டும் போதும் என நினைக்கின்றார்களோ!

 4. wrongan சொல்கிறார்:

  have insertion with a buffello you will never like to have sex with any lady.

 5. Baskar சொல்கிறார்:

  thanks for the information and i want to send the news to my email . more details…..

 6. N.RAJKUMAR சொல்கிறார்:

  நல்லா இருக்குது தங்கள் படைப்புகள்

  தொடரட்டும் உங்கள்பணி

  வக்கிரம் உள்ள உள்ளம் தானே திருந்த வேண்டும் அல்லது உங்கள் கருத்துக்கள் பார்த்தாவது திருந்தினால் படிக்கும்போது மிக வருத்தமாகத்தான் உள்ளது ………..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s