காந்தியும் ஹிட்லரும் – ஒரு ஒப்பீடு

காந்தி, ஹிட்லர் இந்த இரண்டு தலைவர்களின் மரணங்களைப் பற்றி பல்வேறு பட்ட கருத்துகள் உலா வரத் தொடங்கியுள்ளன. இந்த இரண்டு தலைவர்களுக்கும் கொள்கை ரீதியாக வேற்றுமைகள் இருந்தாலும் சில ஒற்றுமைகள் இருக்கதான் செய்கின்றன. மகாத்மாவோடு சர்வதிகாரியை ஒப்பிடுவதா என நீங்கள் கேட்டால் என்னுடைய பதில் மிகவும் சிறியது. எவரையும் எவருடனும் ஒப்பிட்டு எழுதுவது எழுத்தாளனின் வலிமை. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதுமில் இரண்டு பெருந்தலைவர்களின் கருத்துகளை ஒப்பிட்டு எழுதியிருப்பார். இங்கும் அதைப் போல ஒரு தேவை ஏற்பட்டுவிட்டது.

காந்தி – ஹிட்லர் ஓர் ஒப்பீடு

1. காந்தியடிகளும் ஹிட்லரும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள். பின் நாட்களில் மாபெறும் தலைவர்களாக மாறினார்கள்.

2. காந்தியின் குழந்தை பருவமும், ஹிட்லரின் குழந்தை பருவமும் கூச்சத்தினாலும், அறியாமை பயத்தினாலும் நிரம்பியிருந்தது. இருவரும் அந்த பயத்தினையும், கூச்சத்தினையும் படிப்படியாக வென்றனர்.

3. இருவரின் புகழும் வெளிநாட்டில்தான் ஆரம்பமானது. காந்திக்கு தென்ஆப்பிரிக்கா போல ஹிட்லருக்கு ஜெர்மனி. (ஹிட்லருடைய தாய் நாடு ஆஸ்திரியா).

4. தன்னை தொடர்வண்டியிலிருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தின் மூலம் ஆப்பிரிக்காவில் இந்திய மக்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதை பார்த்த காந்தி வெகுண்டார். இது காந்தியின் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம். ஹிட்லர் ராணுவத்தில் இருந்து போர் செய்யும் போது கைது செய்யப்பட்டார். அந்த முதல் உலகப் போரில் ஜெர்மனி தோல்வி அடைந்தை கண்டு வெகுண்டார். இது ஹிட்லரின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்.

5. அடிமை தனங்களை தகர்த்தெரிய இந்தியாவும் ஜெர்மனியும் ஒரு தலைவருக்காக காத்துகிடந்தன. அந்த சூழ்நிலை இருவருக்கும் சாதகமாக இருந்தது.

6. காந்தியடிகள் செய்த செயல்கள் எப்படி தொடக்க காலம் முதல் இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டனவோ, அதே போலதான் ஹிட்லரின் செயல்களையும் ஜெர்மனி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. விடிவு காலத்திற்காக காத்திருந்தவர்கள் அதற்காக எதுவும் செய்ய துணிந்திருந்தார்கள்.

7. இருவரும் பல முறை தங்களுடைய போராட்டங்களுக்காக சிறைக்கு சென்றவர்கள். கொண்டிருந்த எண்ணங்களில் மிகவும் உறுதியானவர்கள்.அந்த எண்ணம் தவறென பலர் சொன்னாலும் ஏற்க மறுத்தனர். இதனால் கட்சிக்குள் ஏகப்பட்ட பெரும் தலைவர்கள் எதிரிகளாயினர்.

8. மற்றவர்களின் கருத்துகளை காந்தி ஏற்றுக் கொண்டதே இல்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. அம்பேத்கார், நேதாஜி போன்ற தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் மதிக்கப்படாமல் போனார்கள். தன்னை ஆதரிப்பவர்களை மட்டுமே காந்தியடிகள் விரும்பினார். ஒரு சர்வதிகாரியாகவே காந்தி விளங்கினார் என்று சில சம்பவங்கள் நிறுபிக்கின்றன. ஹிட்லரின் சர்வதிகாரத்தினால் எதிர்த்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது கொலை செய்யப்பட்டார்கள்.

9. காந்தியடிகளின் பேச்சு திறன் பற்றி சொல்லத் தேவையில்லை. நாடு முழுதும் அவர் செய்த பிரச்சாரம் மிகவும் பிரம்மிக்கதக்கது. இன்றளவும் ஹிட்லரின் பேச்சு திறமையை வியந்து பேசும் அளவிற்கு ஹிட்லரும் மிக திறமையான பேச்சாற்றல் கொண்டவர். சிறந்த உலக பேச்சாளர்களின் பட்டியலில் ஹிட்லர் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கிறது.

10. காந்தியடிகளும் சரி ஹிட்லரும் சரி மது, மாது போன்ற பழக்கங்களிலிருந்து விலகி இருந்தவர்கள். மாமிசம் உண்ணும் பழக்கமும் இருவருக்கும் இல்லை. அகிம்சையை போற்றிய காந்தியடிகளுக்கு இருந்த அடிப்படை தனியொழுக்கம் ஹிட்லருக்கும் இருந்து வியப்பான ஒன்றுதான்.

11. காந்தி கஸ்தூரிபாய் மீது அளவுகடந்த காதல் கொண்டிருந்தார். அவரும் கணவனுக்காக பல துன்பங்களை தாங்கி கொண்டார். ஹிட்லரும் நடிகை மீது காதல் கொண்டிருந்தார். ஹிட்லருக்காக மரணம் வரை எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார் அந்த நடிகை.

12. சுகந்திரத்திற்காக பாடுபட்ட காந்தி இறுதியில் இஸ்லாமிய மத தலைவர்களுடன் (ஜின்னா) ஒன்று சேர்ந்து இந்திய நாட்டின் சிந்து சமவெளி பகுதியை பாக்கிஸ்தான் என பிரித்துக் கொடுக்க சம்மதம் சொன்னார். அவர்கள் பங்களாதேஸையும்(அப்போது கிழக்கு பாக்கிஸ்தான்) சேர்த்து கேட்டனர். அதற்கும் யோசிக்கமலேயே சரியென்றார். தங்கள் நாடு இரண்டாக (இப்போது மூன்றாக) பிளவுபடுவதை சுகந்திர வீரர்கள் விரும்பவில்லை. நாடெங்கும் கலவரங்கள் வெடித்தன. ஹிட்லர் அமைதியாக இருந்த நாட்டினை போரில் ஈடுபடுத்தினார். பொருளாதாரம் சரிவடைந்ததனால் ஜெர்மனியிலும் மக்கள் கொதித்தெழுந்தனர்.

13. காந்தி, ஹிட்லர் இருவரின் இறுதி வாழ்க்கையும் துன்பமயமாகவே கழிந்தது. தான் தொடங்கிய அகிம்சை கொள்கை தன் கண்முன்னே அழிவது கண்டு மிகவும் நொந்து போனார் காந்தி. காந்தி சுடப்பட்ட போது கோட்சேவை மக்கள் அடித்தனர். இதுவரை கட்டிகாத்த அகிம்சை அவருடனே செத்து போனது. நாசிசம் அழிவது கண்டு மனம் குழைந்தார் ஹிட்லர். இரண்டு கொள்கைகளும் பின் நாட்களில் யாரினாலும் கடைபிடிக்கப்படுவதில்லை. அப்படி பின்பற்றுதலும் சாத்தியமில்லாமல் போயிற்று.

14. சுகந்திரம் வாங்கும் வரை காந்தியின் பேச்சை கேட்டவர்கள். சுகந்திரம் வாங்கிய பின்பு கேட்கவில்லை. காங்கிரசை கலைத்துவிட்டு அல்லது அதிலிருந்து விலகி எல்லா தலைவர்களும் நாட்டிற்காக பாடுபட வேண்டுமென அவர் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் (நேரு உட்பட) பதவிக்காக செயல்பட்டனர். காந்தி செல்வாக்கிழந்து காணப்பட்டார். ஹிட்லருடைய மரணம் நிகழ்வது தெரிந்த ஒன்றான பின் பலரும் படையிலிருந்து விலக ஆரமித்தனர். ஹிட்லரின் செல்வாக்கும் குறைந்தே காணப்பட்டது.

15. இந்துகள் இஸ்லாமியர்களால் (வேறு நாட்டிலிருந்து குடியேரியவர்கள்) படுகொலை செய்யப்பட்டார்கள். பாக்கிஸ்தானிலிருந்து பல ஆயிரம் இந்துகளை நிர்வாணமாக அடித்து துரத்தினார்கள். இந்து பெண்களின் கற்பு முகமதியர்களால் சூரையாடப்பட்டது.(ஹே ராம் படத்தில் கமலின் மனைவி கற்பழிக்கப்படுவது போல சித்தரிக்கப்பட்டது அதனால்தான்). நாடே ரத்த வெள்ளத்தில் மிதந்தது.இனி அகிம்சை செல்லாது என இந்துகளும் ஆயுதம் எடுத்தனர். எல்லாவற்றையும் காந்தி ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. யூதர்கள் சித்திரவாதை செய்யப்பட்டார்கள். யூத பெண்களின் கற்பு சூரையாடப்பட்டது. ஜெர்மனியிலும் இந்தியாவின் நிலையே காணப்பட்டது. இரண்டு இனப்படுகொலைகளையும் வரலாறு மிகவும் கோரமாக கருதுகிறது.

16. காந்தியின் மீது அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருக்கும் தாக்குதல்களினால் அவரை பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாமென தொண்டர்கள் அறிவுருத்தினர். ஆனால் காந்தி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஹிட்லரை பதுங்கு குழியில் தங்காமல் வேறு நாட்டிற்கு தப்பி ஓடிவிடும்படி அவரது விசுவாசிகள் சொன்னார்கள். ஹிட்லர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு வேளை விசுவாசிகளின் கருத்தினை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்னும் கொஞ்ச காலம் அவர்கள் வாழ்ந்திருப்பார்கள்.

17. இருவரின் மரணமும் இயற்கையாக நிகழவில்லை. காந்தியடிகள் கொலை செய்யப்பட்டார். ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

18. இருவரும் தங்கள் வாழ்க்கையை மக்களுக்கு செய்தியாக விட்டு சென்றவர்கள். அமைதியென்றால் உலக அளவில் உடனே நினைவுக்கு வந்துவிடுவார் காந்தி. சர்வதிகாரம் என்றால் ஹிட்லரை தவிற வேறுயாருமில்லை.

19. உலக சமாதான அரசர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் காந்தி. உலக கொடுங்கோல் அரசர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் ஹிட்லர். அலேக்சான்டர், நெப்போலியன் போன்றவர்கள் நிகழ்த்திய பேரழிவைவிட அதிகம் ஏற்படுத்தி முன்னிலை பெருபவர் ஹிடலர் மட்டுமே.(அறுபது லட்சம் யூதர்களை கொன்றார் என கணக்கு காட்டப்பட்டிருக்கிறது).

20. இறந்து பல வருடங்கள் ஆன பின்பும் இருவரின் தாக்கமும் உலக அளவில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

என்னதான் இரு வேறு துருவங்களாக இருந்தாலும் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் வியப்பை அளிக்கின்றன என்பதைவிட வேறென்ன சொல்ல முடியும்.

காந்தியும் ஹிட்லரும் மக்களால் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். பின்பு தலைவர்களானதும் இருவரின் செயல்கள் மூலம் மக்கள் மிகவும் துன்பப் பட்டார்கள். இனி இவர்களின் தலைமை வேண்டாம் என நினைக்க தொடங்கி வேளையில் இருவரின் வாழ்க்கையும் முடிக்கப்பட்டுவிட்டது.
மரணத்திற்கு பிறகு தொடரும் சர்ச்சை

மகாத்மா மோகன்லால் கரம்சந்த் காந்தி –
காந்தி இறந்த போது ஹேராம் என சொல்லவில்லை என்ற கருத்து இப்போது வலுபெற்றிருக்கிறது.

சர்வதிகாரி அடால்ப் ஹிட்லர் –

மண்டையோடு ஹிட்லருடையது அல்ல. எனவே அவர் இறந்திருப்பதற்கான ஆதாரம் இல்லை எனவும் கூறப்படுகிறது.

வாழும் போதும் மட்டுமல்ல சிலர் இறந்த பின்பும் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அந்த வகையிலும் இருவருக்கும் ஒத்துப் போகிறது.

2 comments on “காந்தியும் ஹிட்லரும் – ஒரு ஒப்பீடு

  1. kapilashiwaa சொல்கிறார்:

    இது தனி தனியாக எல்லோருக்கும் தெரிந்த செய்திகளே என்றாலும் ஒப்பீட்டு முறையில் படிப்பது சற்று வியப்பை அளிக்கிறது சசோதரன். நல்ல முயற்ச்சி. மேலும் தொடர வாழ்த்திக்கள்.
    http://www.kapilashiwaa.wordpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s