என்னைப் பற்றி

வலைபூக்களில் தேன் எடுக்க வந்திருக்கும் பட்டாம்பூச்சிகளே,

இந்த சகோதரனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னைப் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. என்னுடைய பெயர் ஜெகதீஸ்வரன். என்னுடைய துறை கணினி மென்துறை இப்படி நிறைய. ஆனால் அவையெல்லாம் உங்களுக்கு எந்தவிதத்திலும் பயண்தருவதாக இருக்காது என நினைக்கின்றேன். மற்றபடி…

யாரென்றே அறியாமல் சினேகமாய் சிரிக்கும் குழந்தை முதல், பிரபஞ்சத்தை தோற்றுவித்த மகாசக்தி வரை, ஆச்சிர்யங்களை அமைதியாக ரசித்து செல்லும் உங்களை போலவே நானும் ஒரு ரசிகன்.

பரிணாமக் கொள்கை புத்தி ஏற்றுக் கொண்டாலும் ஏதோவொரு காரணத்திற்காக பரமேஸ்வரனையும் கையோடு பிணைத்துக் கொண்ட உங்களைப் போலவே நானும் ஒரு பக்தன்.

ஊர் முழுக்க நாணயம் பேசிவிட்டு கீழே கிடக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து செல்லும் உங்களைப் போலவே நானும் ஒரு கயவன்.

ஈழத் தமிழர்களை காக்க முடியாத இயலாமையை நினைத்து வருந்திவிட்டு ஒட்டிப்போன வயிறு நிரப்ப வேலைக்கு போகும் உங்களைப் போல நானும் ஒரு மனிதன்.

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும் தாய் மொழியை காக்க வேண்டுமென எண்ணங்களை தமிழில் பதிவிடும் உங்களைப் போல நானும் ஒரு தமிழன்.

தொடர்பு கொள்ள –

sagotharan.jagadeeswaran@gmail.com

77 comments on “என்னைப் பற்றி

 1. padmahari சொல்கிறார்:

  /நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும் தாய் மொழியை காக்க வேண்டுமென எண்ணங்களை தமிழில் பதிவிடும் உங்களைப் போல நானும் ஒரு தமிழன்/

  வணக்கம் ஜெகதீஸ்வரன், முதல்ல உங்களுக்கு ஒரு சபாஷ்! உங்க கருத்துக்கள் எல்லாமே மேற்கோள் காட்டக்கூடியவைதான் என்றாலும் நான் மேற்கோள் காட்ட எடுத்துக்கொண்ட கருத்து இப்போதைக்கு மிகவும் அவசியமான ஒன்று என்பதாலும், நானும் இதே காரணத்திற்காக வலைப்பதிய முற்பட்டவன் என்பதாலுமே!

  உங்கள் வலைப்பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்.

  என் வலைப்பக்கத்தை நேரமிருக்கும்போது பாருங்கள். நன்றி!
  http://www.padmahari.wordpress.com

 2. ஜோதிஜி சொல்கிறார்:

  ஓரு சுய அறிமுகத்தின் வாயிலாக படித்தவனை வெட்கம் கொள்ளச் செய்ய முடியுமா? என்பதை இப்போது உணர்ந்து கொள்ள துவங்கி உள்ளேன்.

  வேர்ட்ப்ர்ஸ் மிக அற்புதமாக வடிவமைப்பு உள்ளது என்றாலும் உங்களைப் போன்றவர்களை நிரந்தரமாக பின் தொடர்பவர்களுக்கு நிச்சயம் இடுகை போன்ற வசதிகள் அதிகம் உள்ளவை வேண்டும் நண்பா?

  வாய்ப்பு இருந்தால் பலருக்கும் வழி கிடைக்கும்.

  தேவியர் இல்லம் திருப்புர்

 3. surya சொல்கிறார்:

  அருமையான அறிமுகம்.

  வாழ்த்துகள்.

 4. butterfly surya சொல்கிறார்:

  உலக சினிமா பதிவுகளை காண அன்புடன் அழைக்கிறேன்.

 5. ஆதிரா.. சொல்கிறார்:

  அறிமுகம் தந்த உண்மையில் எங்களுள் ஒருவராக இணைந்த உங்கள் படைப்புகளை இனிதான் பார்க்கத்தொடங்குகிறேன். அங்கே கருத்துகள் தொடரும். இங்கே தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்..

 6. balamurali47 சொல்கிறார்:

  nantri

 7. seasonsali சொல்கிறார்:

  ஆனால் அவையெல்லாம் உங்களுக்கு எந்தவிதத்திலும் பயண்தருவதாக இருக்காது என நினைக்கின்றேன்.

  அடக்கம்

 8. parthiban சொல்கிறார்:

  ஐயா வணக்கம். ஏன் பெயர் பார்த்திபன். என்னுடைய வலைதள முகவரி www .partchil .blogspot .com
  நான் திருச்சி இல் உள்ளேன்.
  எனக்கு விக்கிபீடியா வில் கட்டுரை எழுத எப்படி என்று சொல்லுங்கள். நன்றி.

  buduparthee @live .com

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது எளிமையான ஒன்று!.

   இங்கு சொடுக்கி விக்கியின் பக்கத்திற்கு சென்று பாருங்கள்!. உங்களுக்குத் தேவையான அனைத்தும் இருக்கின்றன@. விக்கிப்பீடியாவில் விரைவில் ஜொலிக்க வாழ்த்துகள்!

 9. செவத்தப்பா சொல்கிறார்:

  //ஊர் முழுக்க நாணயம் பேசிவிட்டு கீழே கிடக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து செல்லும் உங்களைப் போலவே நானும் ஒரு கயவன்.//

  நியாயமாக நிதர்சனத்தை உணர்த்தியிருக்கும் பாங்கு அருமை நண்பரே!

  தங்களுடைய பெரும்பாலான பதிவுகள் மிகவும் உபயோகமாயிருக்கிறது எமக்கு; வாழிய தங்களுடைய பதிவுகள்…

  தங்களுடைய பதிவுகளை வாசித்து, நல்லவைகளை வாழ்க்கையில் ஏற்றெடுத்து பயன் பெறட்டும் இவ்வையகம்!

  மிக்க நன்றி!

 10. kalpana சொல்கிறார்:

  பல்வேறான இடுகைகள் பயனுள்ளதாக இருக்கிறது!,.
  தொடரட்டும் உந்தன் சேவை!

 11. ருத்திரன் சொல்கிறார்:

  பல பயனளிக்கும் பதிவுகள். குறிப்பாக பாலியல் கல்வியைப் பற்றி. வாழ்க,…
  வளர்க,…

 12. vasudevan சொல்கிறார்:

  கணினியில் உன் கருத்து கண்டேன்
  மற்றவை அனைத்தையும் மறுத்து விட்டேன்
  வலைபூவில் கரம் பதித்து
  தமிழர் நெஞ்சில் தடம் பதித்த நண்பனே
  நீ தமிழ் உள்ளவரை நீடுழி வாழ்வாயாக

 13. படைப்பாளி சொல்கிறார்:

  உன்னை பற்றி எழுதாமல் ஒட்டு மொத்த தமிழனின் முகவரியை எழுதியுள்ளாய்..அருமை நண்பா உன் அறிமுகம்

 14. SUBA.GANESAN சொல்கிறார்:

  good good good ….jagdi ….good to read your website !!! enjoyble.

 15. Tamizhan சொல்கிறார்:

  //ஊர் முழுக்க நாணயம் பேசிவிட்டு கீழே கிடக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து செல்லும் உங்களைப் போலவே நானும் ஒரு கயவன்.//
  கண் முன் ஒருவரிடமிருந்து தவறி விழும் 1 ரூபாயை அவரிடம் கொடுக்காமல் எடுத்து கொண்டல் தவறு. அவனை கள்வன் எனலாம். ஆனால்
  ஆள் அரவமற்ற சாலையில் செல்லும் பொழுது கீழே கிடக்கும் 1 ரூபாய் எடுத்து என்ன செய்ய முடியும்.
  எனவே கள்வன் என்று சொல்வதை அந்த இடத்தில் தவிர்த்திருக்கலாம்.

 16. pandian சொல்கிறார்:

  jegan,

  in mexico script one main intersting point was miising pl go thro

 17. sankili சொல்கிறார்:

  yatharthamai

 18. இராமசாமி ரமேஷ் சொல்கிறார்:

  தமிழ் செய்யும் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.
  மென்மேலும் தொடரட்டும்.

 19. STEPHEN சொல்கிறார்:

  thanks to u ……… you clared many doubts about sexual problem…..

 20. purushoth சொல்கிறார்:

  jagadeesh sir yenaku tamiz nalla theriyum aana yepadi tamizla letters use pana theriya, irunthalum parava ila really your great. ungaloda intoduction super….

  thank you…

 21. கவிஞர் கங்கை மணிமாறன்
  வணக்கம் நண்பரே..!
  சராசரியாய் இல்லாமல்
  சரியாய்த்தான் எழுதியுள்ளீர்கள்!
  ஆனாலும் …
  ‘கயவன்’ பிரயோகம்
  கண்டனத்துக்குரியது!
  கண்ணில் பட்டதைக்
  கையில் எடுக்கிறோம் !
  ஒருரூபாய் நாணயத்தை
  உள்ளே போடுவதில் தவறில்லை!
  அதுவே ஒருபவுனாக இருந்தால்தான் தவறு!
  உரிமையாளரைத் தேடித் தரமுடியாவிட்டாலும்
  உரிய வழிமுறைகளைக்
  கையாள வேண்டும் -அப்போது!
  எதுவும்
  கனமாய் இருந்தால்…நாம்
  கவனமாய் இருக்கவேண்டும்!
  மற்றபடி நம்போன்ற
  கவிஞர்கள் பெரும்பாலும்
  கயமைப் பட்டியலில்
  கண்டிப்பாய் வரமாட்டார்கள்!
  நன்றி..நண்பரே..!
  என் வலைதளம் பாருங்கள்!
  கருத்துகள் கூறுங்கள்!
  கவிஞர் கங்கை மணிமாறன்
  சென்னை-120 gangaimanimaran.wordpress.com

 22. Dharani சொல்கிறார்:

  vaazhthugal nanba…..

 23. Bala சொல்கிறார்:

  Dear sir..,
  Super Introduction…..!!

 24. durairajv சொல்கிறார்:

  என்னை உங்கள் ரசிகனாக மாற்றிவிட்டன உங்களைப் பற்றிய உங்கள் சுய விளக்கம்…

 25. kpkaran சொல்கிறார்:

  அன்புள்ள நண்பரே உங்கள் தமிழ் மீதான பற்று தொடர எனது அன்புகலந்த நல்வாழ்த்துக்கள்.
  அன்புடன் .
  k- பிரபாகரன்

 26. பெ.அ. தேவன் சொல்கிறார்:

  அறிமுகம் அருமை.
  தமிழ் இனத்தின் மீதும், தமிழின் மீதும் தாங்கள் வைத்திருக்கும் பற்றுக்கு தலை வணங்குகிறேன்.

  ஆனால் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொள்வதை கயமை என்று கூறியதற்கு நானும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். பணம் ஒரு சக்தி என்ற வகையில் கீழே கிடக்கும் ஒரு ரூபாயை எடுப்பதில் தப்பில்லை. அதனை தேடுபவர் அருகே இருந்தால் கொடுக்கலாம். யாரும் இல்லை என்றால் வைத்துக்கொள்ளலாம். தொகை பெரியது என்றால் உரியவரிடம் சேர்க்க முயற்சிக்கலாம். அதேபோல இன்றைய காலத்தில் பெருந்தொகையை கீழே போடுபவர்கள் நிச்சயம் ஏழைகளாய் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தும் உள்ளது.

  எப்படியோ பணத்தை பற்றிய சரியான கருத்தை பரப்புங்கள் இனத்திற்காக குரல் கொடுங்கள்.
  நன்றி,
  வணக்கம்.

 27. பெ.அ. தேவன் சொல்கிறார்:

  அருள் இல்லாருக்கு அவ்வுலகு இல்லை
  பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை

  என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

 28. பெ.அ. தேவன் சொல்கிறார்:

  பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால் அன்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று பொருளில்லை.

 29. vijaiArumugam சொல்கிறார்:

  anpu nanpare enathu anpana vanakkangal mugavum payanulla,palla natgal kulapikonda visyathai miga arumaiyaga puriya vaithamaikku ennathu nantrigal….

 30. லதா சொல்கிறார்:

  உங்க கவிதை super

 31. ramalingam சொல்கிறார்:

  naan ipothuthan ungalai patri therinthukonden naan niraiya gnanam peravendum eannakku udavi seiyungal

 32. கோவை கவி சொல்கிறார்:

  மிக வித்தியாசமாக உள்ளது.அறிமுகம் . வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

 33. Raaga சொல்கிறார்:

  வணக்கம் நண்பரே! தங்களின் தொடக்கம் மிகவும் நன்றாக உள்ளது.

 34. kapilashiwaa சொல்கிறார்:

  அறிமுகம் அருமை…

 35. s.muthu rathinam சொல்கிறார்:

  ungalai ponravargallal than tamil thalaiyodu erukkirathu. ellai enral athan thalayai vetti eruppargal,sila aangila karuppu adugal.

 36. சரண் குமார் சொல்கிறார்:

  ஏங்கள் குல தெய்வம்:

  கற்குவேல் அய்யனார் கோவில்
  வரலாறு பகுதி 1
  கற்குவேல் அய்யனார் கோவிலின்
  வரலாற்றையும் , கோவில் குறித்த
  தகவலையும் பகிர்ந்து கொள்வதில்
  எனக்கு மிகப் பெரிய உள்ளார்ந்த
  திருப்தி.
  கற்குவேல் அய்யனார்
  நீதி கூறி மக்களை நல்வழிப்படுத்தி
  அவர்களின் வாழ்வில்
  மகிழ்ச்சி பொங்கச் செய்து அருள்
  பாவித்து வருகிறார்.
  இங்கு எழுந்தருளியிருக்கும்
  கற்குவேல் அய்யனார், பொற்கலை ,
  பூர்ணம், பேச்சியம்மன்,
  பெரியாண்டவர், சுடலை மாடன்,
  கருப்பன், பட்டவராயன், வன்னிய
  ராஜா, பலவேஷக்காரன்,
  முன்னடியான், பின்னடியான்,
  தளவை நல்ல மாடசாமி, உதிர
  மாடன், ஐவர் ராஜா, பிரம்ம சக்தி,
  இசக்கியம்மன், சங்கிலி மாடன்,
  பகைடைச் சாமி, சொல்கேளா வீரன்,
  சிவனனைந்த பெருமாள், நாகரிக
  சிவனனைந்த பெருமாள்,
  செருக்கன், சூர்யர் பீடம், இலாட
  சன்னியாசி,ஆளியப்பர், பொங்கத்த
  அய்யனார் முதலிய பரிவாரத்
  தெய்வங்களும்
  எழுந்தருளி மக்களுக்கு அருள்மழை பொழிந்து வருகின்றனர்.
  கற்குவேல் அய்யனார் கோவில்
  வரலாற்றை யாரிடம் எழுத
  ஒப்படைக்கலாம் என்று எண்ணிய
  பொழுது, சிறுதெய்வ
  வழிபாடு என்ற நூலை எழுதிய
  முனைவர் பேராசிரியர்
  கணபதி ராமன் அவர்களிடம்
  ஒப்படைத்தனர்.
  கோவில் வரலாறு:
  குதிரை மொழி:
  ஆதித்த மன்னர்கள்
  குதிரை மொழி பகுதியை ஆட்சி புரிந்து வந்தனர்.
  மானவீர வளநாடு,
  வடபத்து தென்பத்து மன்னர்களும்
  குதிரை மொழியில் உள்ள சுந்தர
  நாச்சியம்மன் கோவிலுக்கும்
  வெளிநின்ற பத்ர காளியம்மன்
  கோவிலுக்கும், கலியுகவரத
  அய்யனார் கோவிலுக்கும்
  நிலங்கள்
  வழங்கி பூஜை நடைமுறைக்கு வழிவகை செய்தனர்.
  இக்கோவில் கிபி 1639
  லேயே அமைந்துள்ளது. கடந்த 500
  வருடங்களுக்கும் முந்தைய
  வரலாறுடையது.
  அய்யனார் அருள் காட்சி:
  அரக்கர் வம்சத்தில் வல்லரக்கன் என்ற
  அரக்கன் பிறந்தான்.
  சிறுவயது முதல்
  சிவனை நினைந்து வழிபட்டு வந்தான்.
  வல்லரக்கன்
  ஒற்றைக்காலை ஊன்றி மறுகாலை ஊன்றிய
  காலின் மீது வைத்து நீண்ட தவம்
  புரிந்தான். ஆண்டுகள் பல ஓடின.
  சிவன் அறிந்தும் அறியாமலும்
  இருப்பதைக் கண்ட பார்வதி,
  பெருமானே அவன்
  தவத்திற்கு செவி சாய்க்கக்
  கூடாதா என்றார்.
  பார்வதியின் விருப்பத்திற்கேற்ப
  வல்லரக்கனிடம் என்ன வரம் வேண்டும்
  என்று கேட்டார்களாம்.
  அதற்கு வல்லரக்கன் நான் யார்
  தலையில்
  கை வைக்கிறேனோ அவன்
  உடனே மரணமடைந்து விட
  வேண்டும் என்றானாம். சிவனும்,
  தந்தேன் என்றாராம். வரம் கிடைத்த
  மகிழ்ச்சியிலும் அகங்காரத்திலும்
  சிவன் தலையில் கை வைக்க
  நினைத்தானாம். இதையறிந்த
  விஷ்ணு வல்லரக்கனை மயக்க
  மோகினி வடிவமெடுத்து சென்றாராம்.
  மோகினி வடிவத்தில் இருந்த
  விஷ்ணுவின் அழகில் மயங்கி ,
  நான் உன்னைத் திருமணம் செய்ய
  ஆசைப்படுகிறேன்
  என்று மோகினியிடம்
  முறையிட்டானாம்.
  உன்னை மணக்கிறேன். ஆனால்
  நான் செய்வதை நீயும் செய்தால்
  மணம் புரிகிறேன் என
  மோகினி வடிவில் இருந்த
  விஷ்ணு சொல்ல வல்லரக்கன்
  தலையாட்டினான்.
  உடனே விஷ்ணு தன் தலையில்
  கைவைக்க, தான் வாங்கிய
  வரத்தை மறந்து தன்
  தலையிலேயே கைவைத்தான்
  வல்லரக்கன். அவன் வாங்கிய
  வரமே அவனுக்கு சாபமாய்
  மரணத்தைக் கொடுத்தது. சிவ
  விஷ்ணுவின்
  திருவிடையாடளுக்குப் பின்
  மோகினிக்கும், சிவனுக்கும்
  பிறந்த குழந்தைதான் ஹரிஹரன்
  என்ற அய்யனார் பிறந்தார்.
  இந்தக்
  கதையை கோவிலுக்கு வில்லுப்
  பாட்டு பாட வருபவர்கள்
  சொல்வதுண்டு.
  கற்கை என்பதற்கு யானை மீது போடும்
  பலகை என்றும், வேலிப் பருத்திச்
  செடி என்றும் அகராதிகள்
  கூறுகின்றன.
  கற்கி என்பதற்கு கோவில் என்றும்
  பொருள் உண்டு.
  யானை மீது வைக்கப்படும்
  ஆசனத்தில் அய்யனார்
  அமர்ந்தருள்வதால் கற்கை அய்யனார்
  என்று சொல்லப்
  பெற்று பிற்காலத்தில்
  கற்குவேலை அய்யனார்
  என்று சொல்லப் பட்டிருக்கலாம்.
  கற்கு என்பதற்கு கூர்மை என்ற
  பொருளும் உண்டு. சிலர்
  கூர்மையான வேல் – ஐக் கொண்ட
  என்பதைக் குறிப்பதானால்
  கற்குவேல் அய்யனார் என்று
  அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும்
  சொல்கின்றனர்.
  வேறு சிலர் கருவேல மரத்தில்
  எழுந்தருளி காட்சி தந்ததால்
  கருக்கோ அய்யனார்
  அன்று சொல்லப் பெற்றார். ”
  கற்கு வா” என்ற மரத்தின் மீதிருந்து
  அருள் பாலித்ததால்
  “கற்குவா அய்யனார் ”
  என்றழைக்கப்பட்டு நாளடைவில்
  அதுவே கற்குவேல் அய்யனார் என
  மருவி இருக்கலாம் என்றும்
  சொல்லப்படுகிறது.
  கற்கு என்றால் கூர்மையான
  பகுதி என்ற பொருளும், மேலும்
  இப்பகுதி பனை மரங்கள் நிறைந்த
  பகுதியாதலால் அதன்
  பொருட்கொண்டும் இப்பெயர்
  அமையப் பெற்று இருக்கலாம் .
  அய்யனார் சன்னதியின்
  மகா மண்டபத்தில் விநாயகப்
  பெருமான் அமர்ந்தருளியுள்ளார்.
  இலாட
  சன்னியாசி விநாயகருக்கு அருகில்
  அமர்ந்திருக்கிறார். முனிவர்
  கோலம் முனீஸ்வரர்,
  அய்யனாருக்கு ஆலோசனை கூறும்
  அமைச்சர் போன்றோர்
  வலது பக்கத்தில் உள்ளனர். மேலும்
  வலது பக்கத்தில்
  பரந்தாமனே ஆளியப்பராக
  அமர்ந்துள்ளார்.
  அய்யனாரின் வாகனமாக
  குதிரை ஏன், மேலும்
  எவ்வாறு அய்யனார்
  அப்பகுதி மக்களுக்கு அருள்
  பாலித்தார் என்பது பற்றிய
  வரலாற்றை அடுத்த பகுதியில்
  காண்போம்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அய்யனின் வரலாற்றினை பகுதியாக பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே. முழுவதையும் sagotharan.jagadeeswaran@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப இயலுமா? அத்துடன் இக்கதையை எவ்விடத்திலிருந்து தாங்கள் அறிந்து கொண்டீர்கள் என்பதையும் தெளிவுப் படுத்த வேண்டுகிறேன். நிறைய சிறுதெய்வங்களின் கதைகள் இன்னுமும் அவணம் செய்யப்படாமலேயே இருக்கின்றன. நன்றி.

  • சுகந்தன் சொல்கிறார்:

   தங்களைப் போற்றுகிறேன் நல்ல தேடல்

 37. சுகந்தன் சொல்கிறார்:

  அன்புள்ள ஜெகதீஸ்வரன் வணக்கம். தங்களைப்போலவே அடியேனும் எமமைப்பற்றி எமது வரலாறு பற்றி சாதனைகள் பற்றி யுகங்கள் கடந்தும் வாழும் எமது ஆன்மீகம் பற்றி எம்மினத்தின் மானுடவியல் தத்துவங்கள் பற்றி அறியல் பற்றி தற்காலத்திலும் நீதிநெறி வழுவாது வாழும் எமது இனத்துவ அடையாளம் பற்றி தேடல் உள்ள ஒருவன். இந்த வகையில் தங்களது வலைப்பூ எனக்கு வரமே. வாழ்க தாங்கள் நீடூழி, வளர்க தங்கள் பணி.

 38. ஸ்ரீவிஜி சொல்கிறார்:

  நான் வாசித்த அறிமுகங்களில் இது ஒரு வித்தியாசமான அறிமுகம். 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s