யார் தமிழன் ? – முடிந்தால் கண்டுபிடிக்கவும்!

தமிழர்கள் என தங்களைச் சொல்லிக் கொண்டால்தான் தமிழ்நாட்டில் வாழ முடியும் என சிலர் தங்கள் பெயரில் தமிழைச் சேர்த்துக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களில் இரண்டு பேர் சந்திக்கும் போது தமிழில் உரையாடுவதே இல்லை. வெளியுலகிலேயே இப்படி இருக்கும் போது, வீட்டிற்குள் தமிழ் பேசவாப் போகின்றார்கள்.

தமிழ் கிறித்துவர்கள் -

தமிழ் முஸ்லிம்கள் -

தமிழ் பிராமின்கள் -

சாதாரண பக்தன் -

அவர்களின் மொழியின் மேல் பற்றோடு இருக்கட்டும். ஆனால் பாவப்பட்ட தமிழர்களை ஏமாற்ற தமிழை ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என்பதே என் எண்ணம்.!.

சிறு அறிவிப்பு -

சூர்யா, அனுஸ்கா நடித்த சிங்கம் படம் இணையத்தில் வந்துவிட்டது,. இலவசமாக காண இசைத்தென்றல் வலைப்பூவிற்கு செல்லவும்.

எம்.ஜி.ஆர் 25 – ஆனந்த விகடன்

ஒரு கடவுள் மனிதாக அவதரித்ததாக இன்றும் மக்கள நினைவுகளில் வாழும் தலைவன். அவருடைய ரசிகனாக நான் ஆரமித்திருக்கும் தளம் எம்.ஜி.ஆர். ஆனந்த விகடன் தொகுத்த தந்த 25 முத்துகள் இங்கே!…

  • எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936).கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
  • பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !
  • எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !
  • எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !
  • விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !
  • சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !
  • முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !
  • ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம் ’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !
  • நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும்,ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார் !
  • எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !
  • எம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !
  • காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !
  • நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள்.
  • சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !
  • எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !
  • தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 – ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்….‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும் !’
  • ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !
  • அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் – சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்!
  • ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !
  • ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !
  • அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !
  • எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !
  • முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !
  • அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்.
  • ‘நான் ஏன் பிறந்தேன்?’ – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !

உங்கள் வருங்கால மனைவிக்கு 10-10-10

உங்களுக்கு 20 20 தெரிந்திருக்கும். 10-10-10 தெரியுமா?
இது கிரிக்கெட் இல்லை. முடிவெடுப்பதற்கான ஓர் உத்தி. சமீபத்தில் வெளியாகியிருக்கும் 10-10-10 என்கிற புதிய புத்தகத்தில் இதனை விரிவாக அறிமுகப்படுத்தியிருப்பவர் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர், மேலாண்மை நிபுணர், ஆலோசகர் சூஸி வெல்ஷ்.
சூஸி ஏற்கெனவே சர்வதேச வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். தன்னுடைய கணவர் ஜாக் வெல்ஷûடன் இணைந்து இவர் எழுதிய வின்னிங் புத்தகம் கடந்த பல ஆண்டுகளாக பெஸ்ட்செல்லர்ஸ் வரிசையில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறது.

10-10-10 உத்தியின் விசேஷம், அதன் எளிமை.
பொதுவாக முடிவெடுக்கும் உத்திகள் அனைத்தும், அலுவலகச் சூழலில் பிஸினஸ் முடிவுகளை எடுப்பதற்காகப் பயன்படுகிறவை. அதனால்தான் பெரும்பாலான மேனேஜ்மென்ட் கல்லூரிகளில் இவற்றைக் கட்டாயப் பாடமாக வைத்துச் சொல்லித் தருவார்கள். ஆனால் 10-10-10 அப்படி உச்சியில் ஏறி உட்கார்ந்து கொள்வதில்லை இந்தச் சுலபமான உத்தியை நீங்களும் நானும், இன்னும் சாõரண பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் சிரமமில்லாமல் பயன்படுத்த முடியும்.

முடிவெடுப்பதற்கு மட்டுமல்ல, பொதுவாகவே எந்த ஒரு முக்கியமான வேலையையும் தொடங்குவதற்கு முன்னால் இந்த 10-10-10 ஃபார்முல்லாவைச் சில விநாடிகள் சிந்திக்கப் பழகினால், அவசர கோலத்தில் அள்ளித் தெளிப்பதைத் தவிர்க்கலாம். நிதானமாக எல்லாக் கோணங்களில் இருந்தும் யோசித்துச் செயல்படலாம்.

கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம். முதலில் 10-10-10ன் அர்த்தம், 10 நிமிடங்கள், 10 மாதங்கள், 10 வருடங்கள்.
இப்போது உங்களுக்குச் செம பசி. வீட்டில் ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று தேடுகிறீர்கள். கிச்சன் காலியாகக் கிடக்கிறது. இனிமேல் ஏதாவது சமைத்தால்தான் உண்டு. அதுவரை பசி பொறுக்கமுடியுமா? தெரியவில்லை.

சரி, ஃப்ரிட்ஜைத் திறந்து பார்ப்போம். ஆஹா இதோ ஒரு சாக்லெட் கிடக்கிறது. கடித்தால் உடனடி எனர்ஜி! கொஞ்சம் பொறுங்கள். அதற்கு முன்னால், 10-10-10 ஃபார்முலாவைப் பயன்படுத்தி யோசித்துவிட்டு அதன்பிறகு அந்த சாக்லெட்டைத் கடியுங்கள் என்கிறார் சூஸி வெல்ஷ்.

முதலில் 10 நிமிடங்கள். அதாவது, இந்த சாக்லெட்டைச் சாப்பிடுவதன்மூலம் அடுத்த பத்து நிமிடங்களில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய உடனடிப் பலன்கள் என்ன? பசி தீரும் நிம்மதியாக வேறு வேலையைப் பார்க்கப் போகலாம்!அடுத்த 10 மாதங்கள் இப்போது இந்த சாக்லெட்டைச் சாப்பிட்டுவிட்டால் பத்து மாதம் கழித்து என்ன ஆகும்?சாக்லெட்டில் கொழுப்புச்சத்து மிகுதி என்பது நமக்குத் தெரியும். ஆகவே பத்து மாதங்களில் இந்த சாக்லெட்டினால் நம் உடலில் சில கிராம் கூடுதல் கொழுப்பு சேரும். இது குறுகிய காலக் கண்ணோட்டம்.

கடைசியாக 10 வருடங்கள், இந்த சாக்லெட்டைக் கடிப்பதன் மூலம் பத்து வருடங்களில் (அதாவது நீண்ட கால நோக்கில்) என்ன விளைவுகளை எதிர்பார்க்கலாம்? ஆரோக்கியமாகச் சாப்பிடாமல் எந்நேரமும் சாக்லெட் தின்று கொண்டிருந்தால், அதன் மூலம் நம் வாழ்க்கை முறையே மாறிப்போகலாம். பல வியாதிகள் தேடிவரலாம். நம் வாழ்நாள் குறையலாம். பசிக்கு ஒரு சாக்லெட்டைப் பிரித்துத் தின்பதால் உங்கள் ஆயுள் குறைந்துவிடுமா என்றால் இல்லை. ஆனால், இப்படி ஒவ்வொரு நாளும் சாக்லெட் தின்றுகொண்டிருந்தால் நிச்சயமாக அதற்கு இப்படி ஒரு நீண்ட கால விளைவு இருக்கும்தானே? அதை யோசிக்காமல் இப்போது சாக்லெட்டைக் கடிப்பது புத்திசாலித்தனமில்லையே!

இதைத்தான் சூஸி வெல்ஷின் புத்தகம் அழகாகச் சுட்டிக்காட்டுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலுக்கும் உடனடி குறுகிய கால நீண்ட காலப் பலன்கள் உண்டு. அவற்றை 10-10-10 ஃபார்முலாவின்மூலம் சிந்தித்துப் பார்காமல் எதையும் செய்யாதீர்கள் என்பதுதான் இந்தப் புத்தகம் சொல்கிற மையக் கருத்து. முக்கியமான விஷயம் இந்த ஃபார்முலா சாக்லெட்டுக்கு மட்டுமில்லை (வேறு எதற்கும் பொருந்தக்கூடியது உதாரணமாக ஒருவருக்கு கல்யாணத்துக்குப் பெண் பார்க்கிறார்கள், அவர் தன்னுடைய வருங்கால மனைவியை முடிவெடுப்பதற்கு 10-10-10 கோணத்தில் யோசிக்கலாம். இன்னொருவர் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரலாமா, வேண்டாமா என்று தீர்மானிப்பதற்கு இதனைப் பயன்படுத்தலாம். இப்படி எங்கேயும் எப்போதும் பொருந்தக்கூடிய பொதுத்தன்மை இதற்கு உண்டு.

ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் 10 நிமிடம், 10 மாதம், 10 வருடம் என்று யோசித்துக் கொண்டிருப்பது கொஞ்சம் வெட்டி வேலையாகத் தோன்றலாம். ஆனால், இதைத் தொடர்ச்சியாகச் செய்து பழகிவிட்டால், வண்டி ஓட்டுவதுபோல, நீச்சலடிப்பதுபோல இதுவும் நம் மூளையில் ஒரு சிந்தனை உத்தியாகப் பதிந்துவிடும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த உத்தியைப் பழக்கிக் கொடுப்பது முக்கியம் என்கிறார் சூஸி.

ஒரு மாணவர் தன்னுடைய முதல் சிகரெட்டைப் பற்றவைக்கும்போது அல்லது முதன்முறையாக வகுப்புக் கட் அடிக்கும்போது அவர் 10-10-10 ஃபார்முலாவை யோசிக்கப் பழகியவராக இருந்தால் போதும். அதனால் உடனடியாகக் கிடைக்கும் சிகிச்சைவிட நீண்ட கால நோக்கில் தான் இழக்கக்கூடிய ஆரோக்கியம், நல்ல வாய்ப்புகள் போன்ற விஷயங்களை யோசித்துப் பார்த்து அந்த சிகரெட்டைக் கீழே போட வாய்ப்புகள் அதிகம்.

அடிப்படையில் 10-10-10 என்பது நம்முடைய ஒவ்வொரு செயலின் விளைவுகளையும் முழுமையாக உணர்ந்து செயல்படுவதற்குத் தூண்டும் சிறப்பான சிந்தனை உத்தி. சிக்கலில்லாத இந்த வழிமுறையைச் சரியானபடி பயன்படுத்திப் பழகினால் 10 நிமிடம் 10 மாதம் 10 வருடம், ஏன் 10 தலைமுறைகளுக்குக்கூட பயன்படும்படி வாழலாம்.

10-10-10 பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு சொடு்க்குங்கள்

வாத்தியாரம்மாவின் ஆன்மீக அனுபவம்

எனக்கு எழுத்துகளின் மீது ஆர்வத்தை தூண்டியவர்ளில் சுஜாதாவும் ஒருவர். அவருடைய புத்தகங்களில் ரெங்கநாதனும், திருவரங்கமும் கண்டிப்பாக இருக்கும், கடவுள் மீது அவருக்கு அத்தனை பற்று. அவர் மறைந்த பிறகு நாளிதள்கள் திருமதி சுஜாதாவின் அனுபவங்களை வெளியிடத் தொடங்கின. அத்தகைய கட்டூரைகளின் ஒன்றைப் பற்றி இந்த இடுகை.

தமிழ்கடவுளுக்கு வேல் கொடுத்தார்-

என் பையன்கள் இரண்டு பேரும் அப்பா வழி.
எங்கப்பா முருகன் கோயிலுக்கே வேல் வாங்கி தந்தவர். வேலூரிலுள்ள ரத்னகிரி சாமியார் என் அப்பாவுடன் வேலூர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்தவர். ஒரு நாள் மலைக்கு போனவர் மயக்கமடைந்து பிறகு கீழே இறங்கி வரவில்லை. இறையருளால் சாமியாராகி விட்டார். இன்றைக்கும் ரத்னகிரி கோயிலில் ஆடிக்கிருத்திகையன்று என் அப்பா வாங்கி தந்த வேலைத்தான் வைப்பார்கள். கோயில் வாசலில் இப்போதும் தந்தையின் பெயரை பார்க்க முடியும்.

பிள்ளையாரிடம் பேசுவேன் -

நான் வைணவக்குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் எனக்கு இஷ்ட தெய்வம் பிள்ளையார் தான். வீட்டுக்கு பின்னாலேயே பிள்ளையார் கோயில் இருப்பதை பார்த்து தான் இந்த வீட்டையே வாங்கினேன். விடியற்காலை எழுந்தவுடன் மாடியிலிருந்து கோயில் கோபுர தரிசனம் முடித்து விட்டு, அப்புறம் ஹாலில் இருக்கும் பிள்ளையாரிடம் கண்ணை மூடிக்கொண்டு சில ஸ்லோகங்கள் சொல்லுவேன். காலையில் பிள்ளையாரிடம் இன்னி பொழுது எப்படி? போகும் என்று கேட்பது என் நீண்ட நாள் வழக்கம். வினாயகரிடம் அவ்வப்போது பேசுவது எனக்கு பிடித்தமான விஷயம்.

சங்கடம் தீர்த்த சாய்பாபா-

என் பெற்றோர் வழி குடும்பத்தினர் சாய்பாபா பக்தர்கள். அவர்கள் அவ்வப்போது புட்டபர்த்தி போய் வருவ்து வழக்கம். அமெரிக்காவில் சான்பிராஸ்ஸிஸ்கோவில் இருக்கும் என் பையன் கேசவ பிரசாத்தின் வீட்டிலிருந்த போது எனக்கு திடீரென்று ஒரு மனக்கஷ்டம் தோன்ற ரொம்பவும் அவஸ்தை பட்டேன். மனதில் சட்டென்று சாய்பாபாவின் உருவம் தோன்ற, அங்குள்ள பாபாவின் கோயிலுக்கு மருமகளை அழைத்து போக சொன்னேன். சொன்னால் உங்களால் நம்ப கூட முடியாது. நான் பாபாவை தரிசித்து விட்டு வந்த மறு நாளே அந்த மனக்கஷ்டம் விலகிவிட்டது.

மரணம் வரை போய் வந்தவர் -

பத்ரிநாத்திற்கு குடும்பத்தோடு ஒரு தடவை சென்றிருந்தோம். டாக்ஸியில் என்னோவு அவரும் என் அம்மா, அப்பாவும் வருகிறார்கள். நாராயணன் என்கிற டிரைவர் வண்டியை ஓட்டினார். மழை பெய்து குளிர் வாட்டியது. ஒரு வளைவில் எதிரே சடாரென்று பஸ் வர நாங்கள் எல்லோரும் ஓ என்று கத்திவிட்டோம். மெதுவா மூடின கண்ணை திறந்து பார்த்தால் மலைப்பாதையில் வண்டி ரோடு ஓரமாக தொங்கி கொண்டு நிற்கிறது.

ஓர் அங்குலம் நகர்ந்திருந்தால் கூட அதாலபாதாளத்திற்கு போயிருப்போம். டிரைவர் ஒண்ணுமே நடக்காத மாதிரி சிரித்தார்.
இதெல்லாம் எனக்கு சகஜம்சார் நாராயணனை கூப்பிட்ட பிறகு எதுக்கு பயப்படறீங்க? என்று சொன்னாரே பார்க்கணும்.

படி பல சமயங்களில் பகவான் கடைசி நிமிஷத்தில் எங்களுக்கு கை கொடுத்து தூக்கி விட்டிருகிறார். அவர் இரண்டு தடவை பை பாஸ் செய்தவர் என்பதால் ஒவ்வொரு தடவையும் எனக்கு ஆபரேஷன் பண்ணும்போது எமனிடம் போய் வருகிறேன். ஆக, எனக்கு மரணத்தை பற்றி பயமில்லை என்பார்.

மனதைக் கவர்ந்த பிட்டு படங்கள்

பசி –

காட்சிப்பிழை –

புனிதம் -

தவிப்பு -

பி.கு -

பிட்டு படத்தை குறும்படமுன்னு சொல்லிக்கிறாங்க

சொல்ல சொல்ல இனிக்கும் சொலவடைகள்

எது சொலவடை –

தமிழின் தனி அடையாளமான வட்டார வழி தமிழ்க் கட்டுரைகளை வாசிக்கும் போது கிடைத்த வார்த்தை இது. பொது தமிழில் பழமொழி. சொலவடை என்பது நாட்டார் வழக்கு. (நாட்டார் என்றவுடன் ஏதோ புது ஜாதி என்று நினைத்துவிட வேண்டாம். கிராமத்தார்கள் என்பதன் சரியான தமிழ்ச் சொல் நாட்டார்.)

சொலவடைகளை பலர் விடுகதை என்று பொருள் கொண்டுவிடுகின்றார்கள். அது தவறு. சொலவடைகள் சிந்திக்கவைத்து தெளிவுபெற வைக்கும் பழமொழிகள் என்பதே உண்மை. மேலும் சொன்னால் பழமொழிகளின் மிக சமீபத்திய சொல்லியல் வடிவம் என்று சொல்லலாம்.

பழமொழிகள் அனுபவத்தினால் சொல்லப்படுபவைகள். எனவே பழமொழிகளில் ஒரு மேதாவிதனம் இருக்கும், அத்துடன் அறிவுரை தோனியும் இருக்கும். ஆனால் சொலவடைகளில் கொஞ்சும் கவிதையும், துள்ளும் எள்ளலும் இருக்கும்.

உதாரணத்திற்கு பிறருக்கு கெடுதல் செய்ய நினைத்தால் அது உனக்கே கேடாக முடியும் என்பது அறிவுரை .

‘ வினை விதித்தவன் வினை அறுப்பான்.தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ இது பழமொழி.

‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்பது சொலவடை.

சில சொலவடைகள் -

நான் வியந்த சில சொலவடைகள் இங்கே தொகுத்திருக்கிறேன்.

“ குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டுக்கிட்டேன்
மலடுன்னு இல்லாம பிள்ளப்பெத்துக்கிட்டேன்”

“கூந்தலுள்ள சீமாட்டி கொண்டையும் போடுவா, அள்ளியும் முடியுவா”

“கோவணத்தில ஒரு காசு இருந்தா
கோழி கூப்பிட பாட்டு வரும்”

“பேச்சுப் பிடிச்ச நாயி
வேட்டைக்கு உதவாது “

“வண்ணாத்தி மூத்திரம்
தண்ணியில “

“உடுத்தச் சேல இல்லன்னு
சின்னாத்தா வீட்டுக்குப் போனா
அவ ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு
எதுக்க வந்தாளாம் “

‘அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லே
உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லே’

“ ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன்
பாம்பே அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்”

“எள்ளு எண்ணெய்க்குக் காயுது
எலிப்புழுக்கை எதுக்குக் காயுது”

‘கோழி களவாணிப்பய குடம் கிடைச்சா விடுவானா’

பேச்சுவழக்கில் கேளுங்கள் -

தமிழ் திரையுலகின் அடிதடி கதைகளுக்கு அடித்தளமாக அமைந்த “தமிழ்” திரைப்படத்தில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகை ஊர்வசியின் சொலவடைகளை கேளுங்கள்.

“புள்ளையாரே பெருச்சாளியில சவாரி செஞ்சிக்கிட்டு இருக்காரு
பூசாரிக்கு புல்லட்டு கேட்குதாம்”

“படுத்துக்கிட்டு தூங்கும் நாய்
நின்னுக்கிட்டு தூங்குமாம் பேய்”

“ஒடமரத்துல ஓநான் ஏறலாம்
பனமரத்துல பன்னி ஏறலாமா”

நன்றி –

ஜெயமோகன் – பழமொழிகள் ஓர் ஆய்வு

தீராத பக்கங்கள் – “மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்”

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்

ஒரே படத்தில் பல கெட்டப்புகள் -

கமல் -


அஜித் -

விக்ரம் -

சூர்யா-

யாரைங்கன்ன தேடிக்கிட்டு இருக்கிங்க,. விஜயையா.

அவரு வேற குரூப்.

ஒரே கெட்டப்பில் பல படங்கள்


கண் தெரியாதவங்களுக்கும் செக்ஸ் கதை புத்தகம்

பிரெய்லி எழுத்துகள் -

பார்வை இல்லாதவர்கள் படிப்பதற்காக பிரெய்லி எழுத்துகள் பயன்படுகின்றன. இதை உருவாக்கியவர் லூயிஸ் பிரெய்ல். இவரும் கண்பார்வை இழந்தவர்.

பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் பார்வையில்லாதவர்கள் இனங்கண்டு கொள்வர்.

பிளே பாய் -

பிரபல அழகிகளின் அரை நிர்வான மற்றும் முழு நிர்வாணப் படங்களை தாங்கி வரும் பத்திரிக்கை. பல உலக அழகிகள், மாடல்கள், விளையாட்டு வீராங்கனைகள் என ஏகப்பட்ட அழகிகளின் அதிரடி படங்களை வெளியிடுவது பிளேபாயின் சிறப்பு.

இந்தப் பிரபல செக்ஸ் பத்திரிகை, ‘பிளே பாய்,’ கண்பார்வை இல்லாதவர்களுக்காக சில ஆண்டுகளுக்கு முன், ‘பிரெய்லி’ எழுத்துக்களுடன் கூடிய, ஆபாச பத்திரிகையை வெளியிட்டது. படங்கள் இல்லாமல் எழுத்துகள் மட்டும் இருந்ததால் அதிகம் பிரபலமடையவில்லை.

படத்துடன் -

தற்போது கனடா நாட்டைச் சேர்ந்த லிசா மர்பி(Lisa Murphy) என்ற பெண், கண்பார்வை இல்லாதவர்களுக்கான ஆபாச படங்களுடன் கூடிய பத்திரிகையை துவக்கியுள்ளார்.இந்த புத்தகத்தில் ஆபாச படங்கள் சற்று மேடாக அச்சிடப்பட்டிருக்கும். கண்பார்வை இல்லாதவர்கள், புத்தகத்தின் பக்கத்தை தடவி பார்த்து ஆபாசத்தின் அளவை தெரிந்து கொள்வர்.

இந்த புத்தகத்தில், 17 கவர்ச்சி படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விலை 10 ஆயிரம் ரூபாய். பிரிட்டனில் இந்த புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.பார்வை இல்லாதவர்களுக்கு செக்ஸ் பட புத்தகங்கள் இல்லை என்ற குறையை போக்கவே, இந்த பத்திரிகையை ஆரம்பித்துள்ளதாக, லிசா தெரிவித்துள்ளார்.

பிளேபாய் இப்படிதான் இருக்கும் -

நீங்கள் பிலே பாய் புத்தகத்தினை படித்திருக்கின்றீர்களா. இல்லையென்றால் இங்கே சொடுக்கி படிக்கவும்.

ஆண்குறி அளவு + கருத்தடை முறை

ஆண்குறி அளவு -

பெண்களுக்கு மார்பக வளர்ச்சியில் இருக்கும் கவனம் போல சில ஆண்களுக்கு தங்கள் ஆண்குறி அளவின் மீது கவனம் இருப்பதுண்டு. இதனை பயன்படுத்தி பல மோசக்கார பண ஆசை பிடித்தவர்கள், மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் தொழில் நுட்பங்கள் என பயனில்லாத மருத்தவம் செய்து பண்த்தினை கொள்ளை அடிக்கின்றார்கள்.

குறியின் அளவு இன்னும் நீளமாகவோ, தடிமனாகவோ இருந்தால் தங்கள் இணையை மேலும் திருப்திப்படுத்தலாம் என்று நினைக்கும் சில ஆண்கள், உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். விறைத்த ஆண் குறிகளில் 90% 12-17 செ.மீ (5-7இன்ச்) நீளமும், 2.5-5 செ.மீ (1-2 இன்ச்) தடிமனும் உடையதாய் இருக்க வேண்டும். இது ஒரு சராசரி அளவு.

அளவிற்காக அறுவை சிகிச்சை -

குறி மிக மிகச் சிறியதாக இருந்தால் மருத்தவர் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால் இந்த அறுவை சிகிச்சையும் அபாயகரமானது மற்றும் சிக்கலானது. நிரந்தர வடு, உணர்ச்சியற்றுப் போதல், செயலிழத்தல் அல்லது அளவில் மாற்றம் ஏற்படாமல் மனதில் ஏற்படும் ஏமாற்றம் இவற்றில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே இந்த அறுவை சிகிச்சையின் சிக்கல்.

ஆண்களுக்கான எளிய கருத்தடை முறை –

பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை விட ஆண்கள் செய்துகொள்ளும் புதிய குடும்பநல கருத்தடை சிறப்பு வாய்ந்தது. பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை முறையானது பெண்களின் வயிற்றுப் பகுதியில் உள் உறுப்புகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டியுள்ளது. கத்தி, கத்திரிக்கோல் ஆகியவைகளை உபயோகித்து அறுவை சிகிச்சை செய்வதால் பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும்.

வலி ஏற்படும், தழும்பு தெரியும். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்கும். அன்றாட பணிகளை முன்போல செய்யமுடியாத சிரமம் ஏற்படும். அவர்களின் உடல் பலவீனமடையும். இரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே பெண்களை விட ஆண்களுக்கு செய்யும் No Scalpel Vasectomy கருத்தடை எளிமையானது.

No Scalpel Vasectomy (NSV)

ஆண்களுக்கான புதிய கருத்தடை முறையில் மயக்க மருந்து கொடுப்பதில்லை. உடலின் உள் உறுப்புகளில் எதையும் அறுவை செய்யாமல், வெளிப்பக்கத்தில் மட்டும் ஓரிரு நிமிடங்களில் செய்துவிடலாம். இது அறுவையில்லாத ஆண் கருத்தடை முறை என்று அழைக்கப்படுகிறது. ஆணுறுப்பை மரத்துப் போகச் செய்ய ஊசி போடுவதால், இதைச் செய்யும்போது வலி ஏற்படாது.

விரைப்பையில் சிறுதுளையிட்டு, உயிரணுக்கள் செல்லும் குழாயை கட் செய்து, இருபக்கமும் மூடி(seal) விடுவார்கள். அறுவையே இல்லாததால் தையல் போட வேண்டிய அவசியமே இல்லை. அதனால் தழும்பும் இருக்காது.

மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை. ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பிவிடலாம். இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் சாதாரண வேலைகள் செய்யலாம். எந்த உணவுக்கட்டுப்பாடும் தேவையில்லை. பின்விளைவுகள் ஏதும் இருக்காது.

இல்லற வாழ்வு -

சிகிச்சைக்குப் பின் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாது. உடலுறவின் உச்சகட்டத்தின் போது வெளியேறும் திரவத்தில், உயிரணுக்கள் ஒரு பங்கும் மற்ற திரவங்கள் ஒன்பது பங்கும் இருக்கும். இதில் உயிரணுக்கள் வருவதை மட்டும் இந்த சிகிச்சை முறை மூலம் தடை செய்வதால், மற்ற 9 பங்கு திரவம் வழக்கம் போல் வெளியேறும். இல்லற வாழ்க்கை முன்போலவே இருக்கும்.

கருத்தடைப் பற்றிய அதிக தகவலுக்கு -

திட்ட அலுவலர் குடும்ப நலப்பிரிவு எண் – 35,

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னை – 10.

தொலைபேசி: 28364951 Extn: 319. கைப்பேசி: 98413 08266

நன்றி -

கீற்று இதழ்

தொடர்புடைய இடுகைகள் -
ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்
ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
ஆண்கள் ஸ்பெசல் – ஆண்குறி அளவு + கருத்தடை முறை
காம வக்கிரம் – மருத்துவ பார்வை
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை
காமவியலில் இந்தியாவின் பங்கு

தாய்தமிழ் தாலாட்டு பாடல்கள் தொகுப்பு – 1

தாலாட்டு -

தால் என்பது நாவைக் குறிக்கும், நாவை ஆட்டி வரவழைக்கும் சத்தம் “தாலாட்டு” எனப்படுகிறது. ஆராரோ ஆரிரரோ என சந்தமிசைத்து பாடுவதால் ஆராட்டுதல் என்றும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் எங்களுக்கு தெரியாதான்னு முறைக்காதீங்க,.

பெரும்பாலும் குழந்தைகள் அழும் போது தூங்க வைப்பதற்காகவோ, சமாதானம் செய்யவோ பாடப்படும் இந்தப் பாடல்களில் பல்வேறான சுவாரசியங்களும் இருக்கின்றன. குழந்தையைப் பற்றி எதிர்கால சிந்தனைகள், பெருமைகள் இவற்றை தவிற கிண்டல், கவலை, தன் நிலை சொல்லும்படி பாடல்கள்கூட இருக்கின்றன.

உதாரணமாக தன் ஏழ்மை நிலையை உணர்த்தும் படியாக தாய் பாடும் பாடல்…

முத்துச் சிரிப்பழகா!
முல்லைப்பூ பல்லழகா!

வெத்து குடிசையிலே
விளையாட வந்தாயோ?

ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே

தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ

தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ?

சரி, இது மட்டும்தானா… இல்லை இன்னும் சுவாரசியங்கள் அதிகமுள்ளவையும் இருக்கின்றன. அவைகள் வரும் நாட்களில்.,

இந்து மதத்தில் இறைவனை சேயாக பார்க்கும் வழக்கம் இருக்கிறது. அதனால் தான் இன்றும் பல வீடுகளில் கிருஷ்ணன் குழந்தையாகவே இருக்கின்றான். ஆயர் பாடி மாளிகையில் எனும் கவிப்பேரரசர் கண்ணதாசனின் தாலாட்டு கேட்க கேட்க திகட்டாதது.

ஆயர்பாடி மாளிகையில் -

ஆயர்பாடி மாளிகையில்
தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான்
தாலேலோ

அவன் வாய்நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ
(ஆயர்பாடி…)

பின்னலிட்ட கோபியரின்
கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல்
லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா
ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா
ஆராரோ
(ஆயர்பாடி…)

நாகப்படம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான்
தாலேலோ
அவன் மோக நிலை கூட
ஒரு யோக நிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி…)

கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும்
போதை முத்தம் பெறுவதற்க்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
(ஆயர்பாடி…)

ஆயர்பாடி மாளிகையில் ஒளிச்சித்திரம் -

தாலாட்டுக்கென தனி வலைப்பூ -

மீனாமுத்து அவர்கள் தாலாட்டுக்கென ஒரு தனி வலைப்பூ நடத்தி வருகிறார். இது வரை முப்பத்தி இரண்டு பாடல்களின் வரிகள் பதியப்பட்டிருக்கின்றன. அதிலே எனக்குப் பிடித்த ஒன்று,.

சாலை வழியுறங்க
சமுத்திரத்தில் மீனுறங்க
நாடெல்லாம் தூங்க
நடுக்கழனி நெல் தூங்க
பாலில் பழந்தூங்க
பாதி நிலா தான்தூங்க

உன்னுறக்கம் நீ கொள்ள
உத்தமியா(ள்) தாலாட்ட
பொற்கொடியா(ள்)தாலாட்ட
புத்திரனே நித்திரை செய்
மங்கையர்கள் தாலாட்ட
மகராசா நித்திரை செய்!
கண்ணே என் கண்மணியே
கற்பகமே நித்திரை செய்
நித்திரையும் போவாயாம்
சித்திரப் பூந்தொட்டிலிலே!(ராராரோ..)

தலாட்டு வலைப்பூ