சிற்பக்கலையை பாதுகாப்போம்

உலகம் முழுவதும் இந்தியா இனங்காணப்படுவது காந்திய நாடென்றும், கலையில் சிறந்த நாடென்றும் தான். பல்வேறான கோவில்கள் நிறைந்த பூமி என்பதால் சிற்பக்கலைக்கு பஞ்சமில்லா பூமி இந்தியா.

மற்ற நாட்டிலிருந்து வந்து புகைப்படம் எடுக்கவும், வரலாற்றை தெரிந்து கொள்ளவும் வருகின்ற கூட்டத்தினரிடையே இருக்கும் ஆர்வம் நம்மில் பலருக்கும் இருப்பதில்லை. திருவரங்கத்தின் தாயார் சன்னதியில் வெளிநாட்டினருக்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. வேறு மதத்தவருக்கு அனுமதி மறுக்கபடும் இடங்களில் எனக்கு கொஞ்சம் வருத்தம் வருவதுண்டு, என்றாலும் மகிழ்வும் வரும் இந்துவாக பிறந்தமைக்காக.

ஒருவேளை மாற்று மத்த்தில் பிறந்திருந்தால் அரிய பல சிற்பங்களும் கதைகளும் கிட்டாமலேயே போயிருக்கும். இதற்கே அதிக இடங்களை பார்க்க முடியாமல் வருத்தம் கொண்டிருக்கின்றேன். சுற்றிப் பார்க்க வேண்டிய கோவில்களுள் எனக்கு தாராசுரம் தான் முதல் இடம். அந்தக் குறையையும் தீர்த்து வைக்க கல்லிலே கலைவண்ணம் கண்டோம் எனும் வலைப்பூ இருக்கிறது. அதன் முகவரி இது http://www.poetryinstone.in/

படங்களை மட்டும் தராமல் விளக்கங்களும், நேர்த்தியான கலை நுனுக்கங்களை விவரித்து எழுதியிருக்கும் விதமும் அருமை. பலவகையான இடங்களுக்கு சென்று சேகரித்த விசங்களை படிக்கும் போது, எனக்கு பொறாமையாக இருக்கிறது, கடவுள் அவர்களுக்கு மட்டும் ஏதோ சலுகை காட்டிவிட்டது போல.

நான் பார்த்து ரசித்தவை,.

கற்சங்கிலி -

நவீன கருவிகளுன் செய்யப்படுகின்ற வேலைகளை விட சின்ன சின்ன உளிகள் கொண்டே முடித்திட்ட நம் சிற்பிகள் இன்னும் வியப்பு தருகின்றார்கள். பலருக்கும் திருச்சி என்றவுடன் மலைக்கோட்டைதான் ஞாபகம் வரும். அந்த மாபெரும் மலைக்கோட்டையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவிலில் அழகான ஓவியக் கூடம் இருக்கிறது.

நான்கு, ஐந்து உடல்களுடன் உள்ள குரங்கு ஓவியம் வெகுவாக ஈர்த்தது. அந்த ஓவியத்தின் நடுப்பகுதியில் மட்டும் ஒரு குரங்கு தலை காணப்படும். அந்த தலைக்கு தகுந்தாற்போல குரங்குகளின் உடல்கள் சுற்றி சுற்றி வரையப்பட்டிருக்கும். அந்தக் கூடத்தில் கல்சங்கிலி ஒன்றை கண்டேன். இரும்பு சங்கிலியைப்போலவே முழுக்க முழுக்க கற்கலால் நேரித்தியாக செய்யப்பட்ட அற்புதம் அது.

குடைவரைக் கோவில் –

இது நாமக்கல் மலையில் உள்ளது. நாமக்கல் என்றாலே பலருக்கும் ஆஞ்சிநேயர்தான் ஞாபகம் வருவார். சிலருக்கு முட்டையும், விவரம் அறிந்தவர்களுக்கு எய்சும் ஞாபகம் வரலாம். நாமகிரி என்ர அந்த மலையிலும் கோட்டை அமைந்துள்ளது. அந்த மலையில் இருக்கும் நரசிம்மர் சந்னதியில் இருக்கும் குடைந்து செய்யப்பட்ட சிலைகள் மனதை கொள்ளையடிப்பவை. நரசிம்மரின் இருபுறமும் தேவர்கள், புராண சிற்பங்களும் இருக்கும். எல்லாம் குடைந்து செய்யப்பட்டவை. பக்தனுக்கு கடவுளாக காட்சி தரும் சிலைகள். எனக்கு அருமையான கலையாகவும் தெரிந்த்தே பெரும் பாக்கியம்.

பெரிய நந்தி –

தஞ்சையை தவிற பெரிய நந்தியை நான் வேறெங்கும் பார்த்து இல்லை. மிகப்பெரிய கோவிலின் ஆவுடையாரும் சிறப்பு. கோவில் அமைப்பு மிகவும் பெரியது. எனக்கு தெரிந்து பல காலமாக வராகிக்கென தனி கோவில் இருப்பது அங்குதான். இப்போது சில இடங்களில் சப்த கன்னியர்களில் வராகிக்கும், கௌமாரிக்கும் கோவில்கள் அமைக்கப்படுகின்றன. தினமலர் ந்ந்தி அபிசேகத்தை எப்போதும் வண்ணப் படங்களுடன் வெளியிடும். அந்தப் படங்களைப் பார்க்கவே அத்தனை இன்பமாக இருக்கும் எனக்கு.

கோவிலுக்குள் இசைகலைஞர்கள் –

பறைகளை அடிக்கும் இருவரின் சிலைகள் தொட்டியம் மருதகாளியம்மன் கோவிலுக்குள் இருக்கும். மதுரையில் இருந்த காளியின் திருவிழாவிற்கு பறையடிக்க சென்ர இருவரின் இசையில் மயங்கி தேவி. அவரிகளுடனே தொட்டயத்திற்கு வந்துவிட்டதாக தளபுராணம் இங்கு சொல்லப்படுகின்றது. அதற்கு சாட்சியாய் இரண்டு பறையடிக்கும் மேதைகளும் அங்கே சிலையாய் இருக்கின்றார்கள். இந்த கோவிலில் எருமைமாடுகள் பலி கொடுப்பதை பார்த்திருக்கின்றேன். ஆடுகளைப் போல மாடுகள் பலி கொடுக்கும் இடம் எனக்கு தெரிந்து இது ஒன்று மட்டுமே.

நுண்ணிய வேலைபாடுகளுடன் இருக்கும் சிலைகள் சுற்றுப் பிரகாரங்களில் சில புராணக் கதைகள் முழுவதும் செதுக்கிஇருக்கும் சிற்பிகளுக்கு பாராட்டையும் நன்றியையும் அந்த சிற்பங்களை பலகாலம் பாதுகாத்து சொல்லவேண்டும். உயிருள்ள புலிகளை பாதுகாக்க அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது போல சிலைகளை காக்கவும் ஏதேனும் அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.

சகோதரனின் கருப்பு வெள்ளை ஓவியங்கள்

ஓவியங்களைப் பற்றியப் புரிதல்கள் இல்லாத ஒருவனின் கம்பியூட்டர் கிறுக்கல்கள். உங்களுக்கு ஓவியங்கள் மீது ஆர்வமிருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.

இவை கிட்டத்திட்ட இரண்டு வருடங்களுக்கும் முன்பு வரைந்தபடங்கள். இப்போது வரைவதன் மேல் ஆர்வம் குறைந்துவிட்டது.

ஓவியங்களை பெரியதாக பார்க்க சொடுக்கவும்.

பி.கு –
வாழ்த்துகள் சொல்வோர்க்கு இப்போதே நன்றிகள் கூறிக்கொள்கிறேன்.

பிச்சை எடுக்கும் கதாநாயகிகள்

சென்னையின் வெயில் தாக்கம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. நன்பகல் நடுவெயிலில் ஒருவர் சட்டை கூட அணியாமல் தெருவில் கிடந்தால் ஒன்று அவர் “தண்ணியடித்த” குடிமகனாக இருக்க வேண்டும், இல்லை கைகால் இழந்த குடிமகனாக இருக்க வேண்டும். “குடி”மகனாக இருந்தால் கண்டுகொள்ள தேவையில்லை. சுரனை வந்தவுடன் எழுந்து போய்விடுவார்கள். இந்த ஊனமுற்ற நண்பர் என்ன செய்வார்.

வெகு அதிகமான நடுத்தர வர்க்கம் வந்து போகும் டிநகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில் நிலையம் செல்லும் உஸ்மான் சாலையில் கைகால் இல்லாத இரண்டு பேரையாவது நீங்கள் பார்க்க முடியும். முதுகில் அடிக்கும் வெயிலுக்கு வியர்த்திருக்கும் உடலுடன், திரும்பி படுக்க கூட முடியாத அளவிற்கு ஊனப்பட்டு கிடக்கும் அவர்களுக்கு இங்கு உதவ ஏதேனும் அமைப்பு இருக்கிறதா.

உலகின் மிக நீளமான கடற்கறையா மெரினாவில் இன்னும் கொடூரம். ஒரு குரங்கு குட்டிக்கு பாவாடை சட்டை (பெண் மீது உள்ள அன்பு) போட்டு அங்கும் இங்கும் குதிக்க சொல்லிக் கொண்டிருக்க,. நான் அதை கவணித்துக் கொண்டிருந்தேன். நண்பன் சுட்டி காட்டிய இடத்தில் மிகவும் கூட்டம், அங்கு சென்றபின் தான் தெரிந்தது. இங்கே குரங்கு செய்வதை ஒரு சின்னப் பெண் செய்து கொண்டிருந்தது.

பொதுவாகவே நமக்குள் இருக்கும் கருணையை காசக்க வரும் இவர்கள். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்களா என தெரியவில்லை. சிட்டுக்குருவிகளுக்காகவும், தேனிக்களுக்காவும் இங்கே வருத்தம் கொள்ள ஆட்கள் உண்டு. விலங்குளின் தோலை உடையாக அணிய வேண்டாமென நிர்வாணமாய் நிற்கும் நடிகைகள் உண்டு. அழிந்து வருகிறது புலியென பிரச்சாரம் செய்யவே இங்கு ஏகப்பட்ட கோடிகளை செலவு செய்யும் நபர்கள் உள்ள நாட்டில்தான் இந்த கொடுமையும். புலிகளை பாதுகாக்க விழிப்புணர்வு செய்யும் நம் நண்பர்களுக்கு மனிதர்கள் கண்களில் தென்படவில்லை போலும்.

முன்பெல்லாம் சர்கசில் விலங்குகள் அதிகம் இருக்கும். அதையெல்லாம் தடுத்து அந்த விலங்குகளை பாதுகாத்த நண்பர்கள் அங்கு வேலைசெய்யும் நபர்களுக்கு ஏதேனும் செய்தார்களா என தெரியவில்லை. குழந்தைகள் மீதுதான் நமக்கு அனுதாபம் என சின்ன சின்ன பொருள் விற்க கூட ஒரு தூங்கமூஞ்சி குழந்தையை தோளில் இட்டுக்கொண்டு வந்து நிற்கின்றார்கள் பெண்கள். அந்தக் குழந்தைகளுக்கு ஏதோ மருந்து கொடுத்து இப்படி செய்கின்றார்கள் என வாரஇதழ் ஒன்றில் படித்தேன். ஓடிவிளையாடும் குழந்தைக்கு மருந்து கொடுத்து காசு பார்க்கும் கூட்டத்தை என்ன சொல்ல.

பெண்ணியவாதிகள் என்று பெருமைகொள்ளும் நண்பர்கள் இதற்கென தீர்வு காண முற்பட்டிருக்கின்றார்களா என தெரியவில்லை. குரங்கு பதிலாக குதித்து சாகசம் செய்யும் சிறுமிகளுக்கு எப்போது விடிவோ. குரங்கு, கரடி, யானை என வேடிக்கை காட்டும் விலங்குகளை வனவிலங்கு சரணாலயத்தில் விட்டுவிட்டு மனிதர்களைக் கொண்டே இங்கு வேடிக்கை காட்டி பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கின்றது.

ஊனமுற்றவர்களுக்காக மாற்றுதிறன் படைத்த பல தொழில்கள் வந்து கொண்டே இருக்கின்றன. கண் தெரியாதவர்கள் கூட சுயமாக புத்தகங்கள், பொருட்கள் விற்று பிழைப்பு நடுத்த, ஊனமில்லா சிறுமிகள் இங்கே குரங்காவதை உலகிற்கு சொல்லவே இக்கட்டுரை. இரண்டு ரூபாய் போடுவதும், இடுகை போடுவதும் மட்டும்தான் என்னால் முடிந்தது. இதை படிக்கும் அக்கரை உள்ள பதிவர்கள் தங்கள் வலைப்பூவிலும் இவர்களுக்காக குரல் கொடுப்பார்கள் என நினைக்கின்றேன். அப்படி செய்ய வேண்டும் என கேரிக்கையும் வைக்கின்றேன்.

சோழியன் குடுமி சும்மா ஆடுமா

சோழர்கள் வம்சத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் என்பதாலேயே சோழியர் என்ற பட்டம் வந்திருக்கலாம். சோழியன் குடுமி சும்மா ஆடுமா சோழியன் தனக்கு லாபமில்லா எந்த செயலிலும் ஈடுபடமாட்டான் என்று எண்ணக் கூடியாத இருக்கிறது.

ஆனால் இதை மறுக்கும் ஆன்மீகப் பேச்சாளர் சுகி சிவம் “சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள் . இதற்கு சும்மாடு என்று பெயர். ( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) . ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது.ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.” என்கிறார்.

இதற்கும் மேல், கிராமங்களில் சொல்லப்படுகின்ற கதை இது –

எருதூரில் வாழ்ந்து வந்த சோழியன் என்பவன் அதிகம் படிப்பறிவு இல்லாதவனாக இருந்தாலும் எதை செய்தாலும் அதற்க்கு ஒரு காரணம் இல்லாமல் செய்யமாட்டான் என்று அந்த ஊரில் உள்ள அனைவரும் நம்பினர். இதனால் அவனிடம் அந்த ஊரில் உள்ள பல படித்தவர்கள் உள்பட அனைவரும் அவனது செய்கைகளை கவனித்து வந்ததுடன், அந்த செய்கைகளுக்கு பெரிதும் மதிப்பளித்தும் வந்தனர்.
அந்த காலத்தில் எல்லோருமே குடுமி வைத்திருந்தனர், யாரோ ஒரு சிலர் மட்டுமே சதுரவட்டை என்று சொல்லக்கூடிய முடித்திருத்தம் செய்வது வழக்கம், சோழியனுக்கும் அவனது தந்தையை போலவே குடுமிதான். சோழியனுக்கு ஐந்து வயதிருக்கும் போது அவன் பெற்றோர் அவனை கூத்துப்பட்டறையில் சேர்த்து விட்டனர், இதற்க்கு காரணம் இவனது இரண்டு அக்காள்களும் நாட்டியம் பயின்று வந்ததுடன், அந்த காலத்து திண்ணைபள்ளிக்கூடம் சென்று வந்தனர், அவர்களிருவரும் திறைமைசாலிகள் என்றும் பெயரெடுத்து வந்தனர்.

சோழியனை திண்ணை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிய போது அவன் அங்கே படிக்காமல் விளையாடுவதும் சுட்டித்தனங்கள் செய்வதுமாக இருந்து வந்ததால் திண்ணை பள்ளிக்கூட வாத்தியார் அவனது பெற்றோரை வரச் சொல்லி, இவனுக்கு படிப்பில் ஆர்வமில்லை, அவன் மற்ற மாணவர்களையும் படிக்க விடாமல் குறும்புத்தனம் செய்கிறான், கண்டித்தாலும் செவி கொடுப்பதில்லை இதனால் அவனுக்கு வேறு எதில் ஆர்வமிருக்கிறதோ அதில் சேர்த்து விடுமாறு சொல்லி இனி திண்ணை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேண்டாம் என்றும் கூறி அனுப்பிவிட்டனர்.

அடுத்த ஊரிலிருந்த கூத்துப்பட்டறைக்கு சிறுவர்களை சேர்த்துகொள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோழியனை அங்கே சேர்த்துவிட்டனர். சோழியனுக்கு வேறு வழியில்லாமல் போகவே கூத்துப்பட்டறையில் சேர்ந்து காலம் ஓட்டி வந்தான், சோழியனை கூத்தில் சாமரம் வீசுவது இன்னும் பல வசனம் பேசாத வேடங்களில் நிற்க வைத்தனர், ஒருநாள் பாட்டு பாடும் சிறுவன் ஒருவனுக்கு காய்ச்சல் என்பதால் அந்த சிறுவனுக்கு பதில் அரிச்சந்திரன் கூத்தில் அச்சிறுவனின் வேடத்தில் இவனை நிறுத்திவிட்டு பின்னாலிருந்து இவனுக்கு பதில் வேறொரு பெரியவர் வசனம் பேசி சோழியனை அந்த பையனுடைய வேடத்தில் நிற்க வைத்து அன்றைய கூத்தை முடிக்க வேண்டியதாகிவிட்டது.

அந்த கூத்தை சோழியனின் ஊர் மக்களில் சிலரும் சோழியனின் பெற்றோரும் பார்த்ததிலிருந்து சோழியன் ஒரு நடிகனாகிவிட்டது போன்ற பரவசமடைந்தனர். சோழியன் வளர வளர, சிறு சிறு வேடங்கள் கொடுத்து கூத்து நடத்தி வந்தனர். சோழியனின் அம்மாவிற்கு உடல் நலம் சரியின்றி போனதாலும் சோழியனின் தமக்கைகள் இருவருக்கும் திருமணமாகி அவர்கள் கணவன் வீட்டிற்கு சென்றுவிட்டதால் வீட்டில் துணைக்கு வேறு ஆள் இல்லை என்ற காரணமும் சோழியனை நிரந்தரமாக கூத்து பட்டறையிலிருந்து கூட்டி வந்து வீட்டில் அவனுடைய பெற்றோர் அவனை தங்களுடனேயே வைத்துக்கொண்டனர்.

சோழியன் ஆற்றிலோ குளத்திலோ கிணற்றிலோ குளித்து முடித்து விட்டு தன்தலை முடியை உலர்த்தி கொண்டு நின்று கொண்டிருக்கும் சமயங்களிலும், மற்ற பல சமயங்களிலும் தான் கற்றுக்கொண்ட கூத்தை நினைவு படுத்திகொள்வான், தன்னை மறந்து அந்த கூத்தின் கதாபாத்திரங்களின் நினைவில் ஒன்றி விடுவான், அப்போது அவன் தனது தலையை ஆட்டி ஆட்டி வசனங்களையும் பாடல்களையும் தனக்குத் தானே சொல்லி கொள்வான், அப்போது அவனது தலைகுடுமி ஆடி கொண்டே இருக்கும், அவனிடம் அவனது குடுமி ஆடுவதற்கு காரணம் கேட்ட சிலரிடம் ‘ நான் கூத்துப் பட்டறையில் கற்றுக்கொண்ட முழுவதும் உங்களுக்கு சொல்லி விளக்க முடியாது, அதனால் என் குடுமி ஆடினால் அதற்க்கு ஒரு காரணமிருக்கும்’ என்பானாம். சோழியனின் குடுமி ஆடினால் கிராம மக்கள் சோழியன் எதைசெய்தாலும் அதற்க்கு ஒரு காரணம் இருக்கும் அவனது குடுமி ஆடினால் கூட அதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்து கொள்வார்களாம்,

அதனால் சோழியனின் குடுமி காற்றில் ஆடினால் கூட நிச்சயம் அதற்கொரு காரணமிருக்கும் என்று ‘ சோழியன் குடுமி சும்மா ஆடாது ‘என்ற வழக்கு வந்ததாக கதை.

சோழிய வேளாளர் –

சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப் பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில் இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர் சமூகத்திலும் பளிங்கில்லம், மஞ்சநாட்டு இல்லம், தோரணத்தில்லம், மூட்டில்லம், சோழிய இல்லம் எனும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பி.கு –

பிள்ளைமார் சமூகத்தில் சோழிய வெள்ளார் என்ற சிறு பிரிவு இருக்கிறது. இந்த பழமொழி அவர்களைக் குறிப்பதாகவே எண்ணியிருந்தேன். சைவ பிள்ளைகளைப் பற்றி தேடலில் இந்த பழமொழியையும் இணைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது காலத்தின் கட்டாயம் போல.

நன்றி –
தமிழில் எழுதுவது இன்பம்

பிள்ளைமார் சமூகம்

பெரியாரும் அவரது சீடர்களும் இன்றும் தோல்வி அடைவது கடவுள் மறுப்பு கொள்கையிலும், சாதி ஒழிப்பிலும் தான். தமிழகத்தில் தெருக்கு தெரு முளைத்திருக்கும் கோவில்களும், சாதிச் சங்கங்களும் இதை நன்கு உணர்த்துகின்றன. சாதியின் அடிப்படையில் மட்டுமே ஓட்டுகள் கிடைக்கும் என அரசியல் வாதிகள் அதனை வலு சேர்க்க, சாதியின் அடிப்படையில் மட்டுமே சலுகை கிடைக்கும் என மக்களும் சாதியை வளர்க்க தொடங்கி விட்டார்கள்.

வன்னியர் சமூகம் அரசியலில் பெரும் பங்கு கொண்டுவிட்டதை முன் உதாரணமாக கொண்டு, சாதியின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகளுக்காக எல்லா சாதி மக்களும் தங்களை குழுவாக ஒருங்கினைக்க பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளன. சாதிச் சங்கம் அமைப்பது, தங்களுக்கென திருமண மண்டபம் அமைப்பது, தங்களுடைய குல தெய்வங்களின் கோவில்களை அமைப்பது என மிக தீவிரமாக செயல்பட்டு வரும் மக்களுக்கு, இப்போதைய உடனடித் தேவை தலைவர்கள்.

தங்களுடைய சாதியில் பெரிய மனிதராக விளங்கியவரையோ, அல்லது பெரிய மனிதர்களில் தங்கள் சாதியை சார்ந்தவர்களையோ தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவர் சமூகத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க அய்யாவும், நாடார் சமூகத்திற்கு காமராசர் அய்யாவும் உள்ளது போல பிள்ளைமார் சமூகத்திற்கு யாரை தேர்ந்தெடுப்பதென தேடிக் கொண்டிருக்கின்றார்கள். மிகவிரைவில் புதிய ஜாதிக் கட்சி மிகுந்த பலத்தோடு அரசியலில் குதிக்கும் எனவும் தெரிகிறது.

பிள்ளைமார் சமூகத்தில் உள்ள பெரியவர்களின் பட்டியல் இது -

வ.உ.சிதம்பரம் பிள்ளை – கப்பலோட்டிய தமிழன்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை – தமிழ்தாத்தா உ.வே.சாவின் ஆசிரியர்
மனோன்மணியம் சுந்திரம் பிள்ளை – தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர்
தேசிக விநாயகம் பிள்ளை – கவிமணி
ஆனந்தரங்கப் பிள்ளை – கப்பல் ஓட்டிய முதல் தமிழர்
எஸ்.வையாபுரிப் பிள்ளை – தமிழறிஞர்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை – தமிழ் நாவலாசிரியர்
சுப்ரமணியபிள்ளை – கட்டபொம்முவின் மந்திரி
சர்தார் வேதரத்தினம் பிள்ளை – சுகந்திர போராளி
ஜெய்ஹிந்த் செண்பகராமன் – சுகந்திர போராளி
வடலூர் வள்ளலார் – சைவ சன்மார்க்கத் தலைவர்
மறைமலையடிகள் – தமிழ்த் தொண்டர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் – புலிகளின் தலைவர்
தோழர் ஜீவா – கம்யூனிச தலைவர்
ஏ.சி.பி. வீரபாகு – முன்னால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
எம்.சி. வீரபாகு – சுகந்திர போராட்ட தியாகி
பரலி. சு. நெல்லையப்பர் – பாரதியின் உற்ற நண்பர்
சி.வை. தாமோதரம் பிள்ளை – பதிப்புப் பணியில் முன்னோடி
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை – விடுதலைக் கவிஞர்
கி.ஆ.பெ. விஸ்வநாத பிள்ளை – தமிழ் வளர்த்த மகாஞானி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – சிறந்த திரையுல கவிஞர்
கணிதமேதை எஸ்.எஸ். பிள்ளை – உலகப் புகழ் பெற்ற கணித மேதை
அகிலன் – இலக்கிய எழுத்தாளர்
வல்லிக்கண்ணன் – பிரபல எழுத்தாளர்
சுகிசிவம் – ஆன்மீகப் பேச்சாளர்
ஜெயகாந்தன் – பிரபல எழுத்தாளர்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம். பிள்ளை என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், சோழிய வெளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.

இந்தப்பட்டியலில் இடம் பெறாத தலைவர்கள் மன்னிக்கவும், சாதித் தலைவர்கள் யாரேனும் இருந்தால் நண்பர்கள் தெரிவிக்கவும். பெயரோடு அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் கொடுத்தால் வருங்கால கட்சிக்கு உதவியாக இருக்கும்.

நன்றி -

இரா. மணிகண்டன், குமுதம்

நக்கீரன் சிவன் – யார் சொன்னது சரி

ஆண்டாடு காலமாக ஒரு கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்து வருகிறது. அந்தக் கேள்வி.

“இந்த காரை வைச்சிருந்த சொப்பன சுந்தரியை யார் வைச்சிருக்காங்க” கரகாட்டகாரன் படத்தில் செந்தில் இந்தக் கேட்டு கவுண்டரிடம் வாங்கி அடிகள் ஏராளம் ஆனால் பதில் கிடைக்கவில்லையென ஒரு குறுஞ்செய்தி இப்போது சுற்றிக் கொண்டு வருகிறது.

இதே போல எனக்கும் ஒரு கேள்விக்கு பதில் நெடுங்காலம் தெரியாமல் இருந்தது. அது “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?”.

திருவிளையாடல் படத்தில் நக்கீரருக்கும் சிவனுக்கும் இடைய நடக்கும் வாதங்கள் கூட ஞாபகம் இருக்கின்றது. ஆனால் முடிவை சரியாக சொல்லாது, தருமி போல தனியாக புலம்ப வைத்துவிட்டார்கள் நம்மை. இருந்தாலும் முனைவர்.இரா.குணசீலன் அவர்களின் வலைதளத்தில் (gunathamizh.blogspot.com) முடிவை அறிந்து கொண்டேன்.

பாடல் 1 -

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.“

பொருள் -

தலைவன் தலைவியின் கூந்தல் மணத்துக்கு இணையான மணம் வேறு மலர்களில் எங்கும் உண்டா? என்று தும்பிடம் வினவுவது போல இப்பாடலை அமைந்திருக்கின்றது.

பாடல் 2 -

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

பொருள் -

இயற்கைப் புணர்ச்சிக்குப் (தலைவியைத் தலைவன் இயல்பாகப் பார்த்துக் காதல் கொள்ளுதல்) பின்னர் தலைவியைச் சந்திக்கும் தலைவன் அவளின் நாணத்தை நீக்குதல் பொருட்டு, மெய்தொட்டுப் பயின்று (தலைவியின் உடல் தொட்டு உரையாடல்) நலம் பாராட்டுதல் ( தலைவியின் அழகு நலத்தைப் பாடுதல்)

தலைவி நாணத்தோடு இருப்பதை உணர்ந்த தலைவன் அவளின் நாணத்தை நீக்க தும்பியைப் பார்த்துப் பேசுகிறான்.பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்க்கை வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே!

எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக, பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..?

அறிவியல் அடிப்படையில் –

கூந்தலில் “பீரோமோன்ஸ்“(Pheromones) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன. இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன.

இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் அழகான கட்டமைப்புப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்ச்சி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன. மேற்கண்ட கருத்துக்களின் வழியாகப் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்னும் கருத்துப் புலனாகிறது.

அப்பாடி சந்தேகம் தீர்ந்தது. உங்களுக்கு இது முன்பே தெரியும் என்றாலும் அவருடைய வலைதளத்தை பார்வையிடுங்கள், ஏகப்பட்ட அமுதுகள் இருக்கின்றன.

“இஸ்லாம் அன்பு மதம்”

. உலகம் முழுவதும் “மை நேம் இஸ் கான்” படம், முகமதியோர் எல்லோரும் தீவிரவாதிகள் அல்ல. என்று சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முகமதியோர்கள் என உலகம் சொல்லிக் கொண்டிருக்கின்றது. கடனுக்கு விட்டு பிழைப்பு நடத்துவதைக் கூட எதிர்க்கின்ற முகமதியர்களின் புனித நூலான குரான். தீவிரவாதத்திற்கு துணை போகின்றதா?

நான் குரானை வாசித்ததில்லை. (ஆனால் ஆர்வமாக வாங்கி மட்டும் வைத்திருக்கின்றேன்.) முகமதிய நண்பர்கள் யாராவது என் கேள்விக்கு பதில் கூறவும். அப்படியே சானியா மிர்சா பர்தா போடவும், ஷகிலா பர்தா போடாமல் இருக்கவும் போராட்டங்களை நடத்தும் “உண்மையான” இஸ்லாமியர்கள். தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அதையும் சொல்லவும்.

என்னுடைய முகமதிய நண்பன் இப்படி சொன்னான் ” தீவிரவாதிகள் யாரும் உண்மையான முஸ்லிம் இல்லை”. இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்.

கற்பழிப்புக்கு காரணம் பெண்களே – ஒரு ஜொள்ளாய்வு தகவல்

கற்பழிப்புக்கு காரணம் பெண்களே என்று ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

லண்டனில் சமீபத்தில் கற்பழிப்பு குற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப் பட்டது. 18 முதல் 24 வயது பெண்களே அதிகம் கற்பழிக்கப்படுகின்றனர்.

காரணம் -

1. இளம் பெண்கள் குட்டையான பாவாடை போன்று தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக உடை அணிவது.
2. ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது.
3. ஆண் நண்பர்களின் வீட்டில் தங்குதல்.
4. விருந்து நிகழ்ச்சியில் மேலாடை விலகுவதுகூட தெரியாமல் நடணம் ஆடுவது.

இதனால் தான் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கின்றன.

மேலும் ஒரு செய்தி கற்பழிக்கப்பட்ட பெண்களில் 50% பேர் போலிசில் சொல்வதில்லை. மூன்றில் ஒரு ஆண் குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை.

நன்றி – தினமலர் நாளிதல்

? – கன்னியாஸ்திரியின் கன்னிதன்மை

அவர்கள் வலியுறுத்தும் கொள்கைக்கும் அவர்-களது நடத்தைக்கும் இடையே மிகப்-பெரிய இடைவெளி நிலவுகிறது. எனக்குத் தெரிந்த பெரும்பாலான கன்னியாஸ்திரீகளும் பாதிரியார்களும் கள்ள உறவு வைத்திருந்-தார்கள் அல்லது மோசமான ஊழலில் ஈடுபட்டிருந்தனர்
– கன்னியாஸ்திரி ஜெஸ்மி.

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வெளிவந்த கோவில் என்ற படத்தை பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் கதாநாயகியின் தந்தை காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மறுத்து அந்தப் பெண்ணை கர்த்தரிடத்தில் கன்னியாஸ்திரியாக மாற்றிவிட முயற்சி செய்வார். படத்தில் கதாநாயகியை கதாநாயகன் காப்பிவிட்டாலும், நிஜத்தில் எத்தனை கன்னிகள் கன்னியாஸ்திரிகளாக விருப்பமின்றி மாற்றப்படிகின்றார்கள் என தெரியாது.

இந்து மதத்தில் இருக்கும் பிராமணர்களைப் போல எல்லா மதங்களிலும் அடக்கி ஆள முயலும் இனம் இருக்கத்தான் செய்கிறது. புனிதமான இடங்களில் இருந்தாலும் அதிகார வர்கம் என்பதால் கவலைகள் இல்லாமல் தவறுகளுக்கும் மேல் தவறுகள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

புனிதம் –

ஆலயங்கள் கோவில்கள் என எல்லாவற்றிலும் கடவுள் இருக்கும் இடங்களாக நம்புகின்ற பாமர மக்கள் உள்ள சமூகம் இது. எந்தக் கடவுளை வணங்கினாலும் மற்ற மதங்களின் கடவுள்களையும் மதிக்கின்ற குணம் இங்கு அதிகம். வேளாங்கன்னி, சமயபுரம், நாகூர் என மதநல்லினக்கன பூமீயாக திகழ்வது தமிழகம். இந்துவாக இருந்தாலும் ஏசுவின் மீது தனிப்பிரியம் உள்ள மக்கள் ஏகப் பேரை நான் பார்த்திருக்கிறேன். கிருஷ்ண லீலையும் கருணாமூர்த்தி தொடரையும் பார்க்கும் கிராம மக்களுக்கு எந்தக் கோவிலும், கடவுளும் புனிதம் தான்.

கலையும் வேடம் -

மனித உடலில் ஏற்படும் வேதி-மாற்றங்-களால் உடல் இச்சை என்பது தவிர்க்க முடியாதது; மாற்றுப் பாலினத்தின் மீதான ஈர்ப்பு என்பது இயற்கையானது. அதனைத் தவிர்ப்பது இயலாதது. ஆனால், இதனைக் கடந்து மனதை ஆண்டவனுக்கு அர்ப்பணித்து இறைப்பணி செய்வோர் இவர்கள் என்றே மதபீடங்கள் மார்தட்டுகின்றன. என்றாலும் அவ்வப்போது மதப்பீடங்களில் திருச்சபை-களில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து மதக்கட்டுகளை அறுத்தெறிந்து வருகின்றன.

கன்னியாஸ்திரீ ஜெஸ்மி -

கேரளாவில் ஒரு கன்னியாஸ்திரீ “ஆமென் – ஒரு கன்னியாஸ்-திரியின் ஆத்ம கதை” என்ற நூல் பல உண்மைகளை உரைத்துவிட்டது. ஒரே மாதத்தில் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்ட இந்த நூலை எழுதியவர் கன்னியாஸ்திரீ ஜெஸ்மி.

இவரது இயற்பெயர் மியாமி ரபேல். தனது 25ஆம் வயதில் காங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃப் கார்னல் (CMC) என்னும் திருச்சபையில் இணைத்துக் கொண்ட ஜெஸ்மி, இங்கிலீஷ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்லூரியில் விரிவுரையாளர், முதல்வர் எனப் பணியாற்றிய இவர் தமது 30 ஆண்டுகால கன்னியாஸ்திரீ வாழ்வில் தமக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து இந்நூலில் எழுதியுள்ளார்.

மதச்சபைக்குள் –

புனித மடங்கள் எனச் சொல்லப்படும் மதச்சபைக்குள் நிகழ்ந்து வரும் பாலியல் எல்லை மீறல்களை விவரித்துள்ளார் கன்னியாஸ்திரீ ஜெஸ்மி. கன்னியாஸ்திரீ-களிடையே ஓரினச் சேர்க்கை தடைகளின்றி இருக்கிறது. கன்னியாஸ்திரீகள் பாதிரியார்-களுடனும் வெளியாட்களுடனும் பாலியல் உறவு வைத்திருப்பது தொடர்புடைய பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன என்று கூறும் ஜெஸ்மி, பாதிரியார்கள் தன்மீது நிகழ்த்திய பாலியல் வன்புணர்ச்சியையும் கூறுகிறார்.

“நான் பெங்களூருக்குச் சென்றபோது வரவேற்க வந்த பாதிரியார் என்னை இறுக அணைத்து அதிர்ச்சி கொடுத்தார். அங்கு லால் பூங்காவுக்கு அழைத்துச் சென்று மரங்-களின் அடியில் அந்தரங்கமான நிலையில் அமர்ந்திருந்த ஜோடிகளைக் காண்பித்தார். பின்னர் உடல் ரீதியான காதலின் தேவை குறித்தும், பெண்களுடன் முறைகேடான உறவு வைத்-திருந்த பாதிரியார்கள் மற்றும் பிஷப்பு-களின் கதைகளையும் சொன்னார். பிறகு தனது படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று அவரது கட்டிலில் அமரவைத்து என்னை இறுக அணைத்தார். ஓர் ஆணை முழுமையாய் பார்த்திருக்கிறாயா எனக்கேட்டு விட்டு ஆடைகளைத் துறந்தார்” இதைத் தொடர்ந்து ஜெஸ்மி எழுதியுள்ள சில வரிகளை நாம் இங்கு எழுதமுடியாது.

ஓரினச்சேர்க்கையும் வன்புணர்வும் -

கன்னியாஸ்திரீகளின் மடத்தில் பல கன்னியாஸ்திரீகள் ஜோடியாகவே இருப்பார்-கள்; வேறு சிலரிடையே பாலியல் நடவடிக்-கைகள் இருந்தது என்று எழுதியுள்ள ஜெஸ்மி, சிஸ்டர் லிமி என் மீது ஈர்ப்பு கொள்ளத் தொடங்கினார். எனக்கு காதல் கடிதங்கள் எழுதினார். அதற்கு நான் பதில் எழுதவில்லை. சிஸ்டர் லிமி எனக்கு எதிராகத் திரும்பவே அவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் வேறு வழியில்லாமல் அவரின் பாலியல் இச்சை-களுக்கு நான் சிலகாலம் பலியாக நேர்ந்தது என்று எழுதியுள்ளார்.

புனிதமானவர்கள் என்றும் இறைப்-பணியாளர்கள் எனவும் கூறப்படும் கிறித்துவ திருச்சபையின் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்-திரீகள் மீதான ஜெஸ்மியின் இந்தக் குற்றச்-சாட்டுகளைக் கண்டு கேரள கிறித்துவ அமைப்பு-கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன. ஜெஸ்மியின் குற்றச்சாட்டுகளுக்கு சி.எம்.சி. அதிகாரபூர்வமான எந்தப் பதிலையும் இதுவரை கூறாமல் மவுனம் காக்கிறது. ஆனால் அதன் செய்தித் தொடர்பாளர் பாதிரியார் பால் தேலக்காட், ஜெஸ்மி எழுப்பியுள்ள பிரச்சினைகளை புறக்கணித்து-விட முடியாது. சர்ச்சும், சி.எம்.சியும் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளிடையேயான பாலியல் உறவுகள் உண்மையாக இருக்கலாம்; திருச்சபைகளில் ஆங்காங்கே இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஆணும் – பெண்ணும் இணைந்து வாழ்தல் என்பது உலகியல் இயல்பு. இதற்கு எதிராக புனிதத் தன்மையை கற்பித்து மதங்கள் செயல்படும்போது அதன்மீதான இயற்கையின் தாக்குதலே இதுபோன்ற குற்றச்சாட்டுகளாக எழுகின்றன. வரம்பு மீறி புனிதப்படுத்தி விட்டதன் காரணமாகவே இந்தத் தவறுகள் அரங்கேருகின்றன. கன்னீயாஸ்திரிகளுக்கும் பாதிரியார்களுக்கும் திருமணம் கூடாதென்ற முடிவை கிறித்துவர்கள் நீக்கினால் ஒருவேளை இந்த சம்பவங்கள் குறையலாம்.

நன்றி –

உண்மை இதழ்

அழிந்துவிடுமா பார்பனீயம்?

பிராமணர்கள் தமிழர்களா
ஆரிய படையெடுப்பு உண்மையா
இந்து மத அழிவுக்கு பிராமணர்கள் காராணமா

இது போன்ற கேள்விகள் வலையுலகில் அதிகம் காணப்படுகின்றன. முறையான விளக்கமும் வரலாறு நிகழ்வுகளும் இரு தரப்பிலும் முன்வைக்கப்படுகின்றன. என்றாலும் இந்த இடுகை முற்றிலும் மாறுபாடானது.

பார்பாணியம் என்பது “தாங்கள் தான் மேலான மக்கள்” என்ற எண்ணம் என எல்லா நாத்திக நண்பர்களும் சுட்டி காட்டி விட்டனர். “தங்களுடைய மொழியான சமஸ்கிருதம் தான் உயர்ந்தது” என்பதும், “கடவுளுக்கு தொண்டு செய்ய தாங்கள் தகுதியானவர்கள்” என்பதும் பார்பனியமாகிறது. இதனை எதிர்க்கும் பலர் பிராமணர்களை மட்டுமே எதிர்க்கின்றார்கள். ஆனால் பார்பனீய வியாதி எல்லா மக்களிடமும் ஊறி போய்க்கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

கருவறையில் இருக்கும் கடவுளை தரிசனம் செய்ய அங்கிருக்கும் பிராமணர்களுக்கு தட்சனை கொடுக்க வேண்டும் என்பதும், தங்களுடைய குறைகளை அவர்கள் சொன்னால் மட்டுமே கடவுளுக்கு கேட்கும் எனவும் மக்கள் நம்பிக்கொண்டேயிருக்கின்றார்கள். பார்பாணியம் பிராமணர்களால் மட்டுமல்ல, நம்பிக்கை கொண்டவர்களாலும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்” என்பது சாதாரண பழமொழி. தட்சனை கொடுக்கும் நபர்களுக்குதான் சாமி தரிசனம் நன்கு கிடைக்கின்றது.

இலவசமாக தரிசனம் செய்யும் மக்களுக்கு என தனி வரிசையை பல பிரபல கோவில்கள் இந்த பிராமணர்கள் செய்து வைத்திருக்கின்ரார்கள். அந்த வரிசை கருவறையில் இருக்கும் கடவுளுக்கு வெகு தொலைவிலேயே திருப்பி விடப்படுகின்றது. கருவறைக்கு அருகில் செல்ல காசு கொடுக்க வேண்டும். அதிக காசு கொடுப்பவர்கள் மிக அருகில் சென்று தரிசனம் செய்யலாம். ஏழை தொலைவிலிருந்தே பார்த்துக் கொண்டு போய்விட வேண்டும்.

மக்களுக்காக கட்டப்பட்ட கோவில்களில் இந்தப் பேதங்களை புகுத்தி அரிவு ஜீவி யார் என எல்லோருக்கும் தெரியும். மாதக் கோவில்களில் வெகு அருகே சென்று மெழுகு தீபமேற்றி தங்கள் குறைகளையும், பிராத்தனைகளையும் சொல்லி திரும்பும் மக்களுக்கும், இருட்டான கருவறையில் இருக்கும் கடவுளை தொலைவிலிருந்து எட்டிப் பார்த்தும் செல்லும் மக்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று புரிகின்றதா.

தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று பலகை வைத்திருந்தாலும் எத்தனை கோவில்கள் மக்கள் விரும்பி தமிழில் அர்ச்சனை செய்ய முன்வருகின்றார்கள் என பாருங்கள். மிக அபூர்வமாக தான் இருக்கும். எங்கள் ஊரில் இருக்கும் பெருமால் கோவில் அய்யரிடம் நான் தமிழில் அர்ச்சனை செய்ய சொன்னபோது, அவருடைய முகமே மாறிப்போனது. அருகில் உள்ள சிலரும் அதன் பிறகு தமிழில் அர்ச்சனை செய்ய சொல்லவில்லை. மக்களே விரும்பி கேட்டாலும் முகம் சுழிக்கும் பிராமணர்களை என்ன செய்ய. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை என கட்டளை இட்டால் தான் கருவறையில் தமிழ் வாழும். அதற்கு நிச்சயம் பிராமணர்கள் இடம் தர மாட்டார்கள். கோவில்களில் மட்டுமல்ல பல வீடுகளிலும் இதே நிலைதான்.

என்னுடைய ஊர்கார் ஒருவரின் வீட்டிற்கு வேலை விசயமாக சென்றிருந்தேன். ஜ.டி துறையில் இலட்சக்கணக்கில் பணம் வாங்குபவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். தன்னுடைய மகனுக்கு ஸ்லோகமெல்லாம் தெரியும், தினமும் அதை சொல்லிதான் சாமி கும்பிடுவான் என சொல்லி அவனை சொல்ல சொல்ல,. அவன் சொன்னது எல்லாம் சமஸ்கிருத மந்திரங்கள். தமிழில் மந்திரங்கள் தெரியாத என நான் சந்தேகம் கேட்க, தமிழிலா என்ற ஏளன தோணியில் கேட்டார்.

சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்காத வீடுகளே இப்போது இல்லை என்ற அளவிற்கு மந்திரங்களை சொல்லும் கருவிகள் எல்லா இடங்களுக்கும் பெருகிவிட்டது. சிறிய கருவி ரூபாய் 50 லிருந்தே சந்தையில் கிடைக்கின்றது. குழந்தைகளுக்கு தமிழில் பாடல்கள் சொல்லி கொடுத்து பக்தி பரப்புவது இல்லை. காயத்திரி மந்திரமும், குரு ஸ்லோகமும் மட்டுமே குழந்தைகளுக்கு தெரிந்திருக்கின்றன. சிதம்பரம் கோவிலில் கூட தமிழ்பாடலுக்கு போராடி அங்கிகாரம் வாங்கிவிட்டோம். ஆனால் நம் அருகிலிருக்கும் வீட்டின் சாமி அறைகளில் சம்மனமிட்டு உட்காந்து கொண்டிருக்கும் சமஸ்கிருதத்தை மறந்துவிட்டோம்.

வராகி, கௌமாரி என புதிது புதிதாய் தெய்வங்கள் கண்டெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கன்னிமார்களுக்காக மந்திரங்கள் எல்லாம் புனையப்பட்டு புத்தகங்களாக வெளிவருகின்றன. திருமந்திரமும், திருவாசகமும் எத்தனை வீட்டில் பாராயணம் சொல்லப்படுகின்றன என்பது கேள்விக் குறியே. தமிழ் முருக பக்தர்களிடமும், ஐயப்ப பக்தர்களிடமும் மட்டுமே கொஞ்சம் வாழந்து கொண்டிருக்கின்றது. அதையாவது காப்பாற்றுவோம். அதற்கு பிராமணர்களை கோவில்களிலிருந்து அகற்றியே தீர வேண்டும்.

\\சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில்கள் சமூக ஆதிக்க நிறுவனமாக செயல்பட்டன. கோயில்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளனவோ அவர்கள் சமூகம் ஆதிக்கம் செலுத்தினர். அரசனை தலைமையாகக் கொண்ட பெரும் நிலவுடைமையாளர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பது சோழர் கால கல்வெட்டுக்களிலிருந்து நன்கு தெரிய வருகிறது. சமூகத்தின் இந்த ஆளும் வர்க்கங்களுக்கு பிராமணியம் தத்துவமாக விளங்கியது. சமூக ஆதிக்க சக்திகள் பிராமணர்களையும், சமஸ்கிருத மொழியையும் ஊட்டி வளர்த்தனர்.\\ என்று கீற்று வலைதளத்தில் அத்திவெட்டி வே.சிதம்பரம் கூறியுள்ளார். கோவில்கள் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் அரசர்களுக்கு பிறகுதான் வந்திருக்கின்றன. அதனால் வளர்த்த ஆதிக்க சக்திகளே பிராமணர்களை எதிர்த்து விரட்டி கோவில்களை மீட்க வேண்டும்.

ஜெயேந்திரர், பிரேமாநந்தர், தேவநந்தன் என சங்கித் தொடர் காமுகர்கள் இனியும் தோன்றா வண்ணம் செய்வது நம் பணி என்றே எண்ணுகிறேன். நாம் முயற்சி செய்யாவிடால் (பிராமணர்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் கூட) பார்பனீயம் அழியாது.