என்னைப் பற்றி

வலைபூக்களில் தேன் எடுக்க வந்திருக்கும் பட்டாம்பூச்சிகளே,

இந்த சகோதரனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னைப் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. என்னுடைய பெயர் ஜெகதீஸ்வரன். என்னுடைய துறை கணினி மென்துறை இப்படி நிறைய. ஆனால் அவையெல்லாம் உங்களுக்கு எந்தவிதத்திலும் பயண்தருவதாக இருக்காது என நினைக்கின்றேன். மற்றபடி…

யாரென்றே அறியாமல் சினேகமாய் சிரிக்கும் குழந்தை முதல், பிரபஞ்சத்தை தோற்றுவித்த மகாசக்தி வரை, ஆச்சிர்யங்களை அமைதியாக ரசித்து செல்லும் உங்களை போலவே நானும் ஒரு ரசிகன்.

பரிணாமக் கொள்கை புத்தி ஏற்றுக் கொண்டாலும் ஏதோவொரு காரணத்திற்காக பரமேஸ்வரனையும் கையோடு பிணைத்துக் கொண்ட உங்களைப் போலவே நானும் ஒரு பக்தன்.

ஊர் முழுக்க நாணயம் பேசிவிட்டு கீழே கிடக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து செல்லும் உங்களைப் போலவே நானும் ஒரு கயவன்.

ஈழத் தமிழர்களை காக்க முடியாத இயலாமையை நினைத்து வருந்திவிட்டு ஒட்டிப்போன வயிறு நிரப்ப வேலைக்கு போகும் உங்களைப் போல நானும் ஒரு மனிதன்.

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும் தாய் மொழியை காக்க வேண்டுமென எண்ணங்களை தமிழில் பதிவிடும் உங்களைப் போல நானும் ஒரு தமிழன்.

தொடர்பு கொள்ள -

sagotharan.jagadeeswaran@gmail.com

66 comments to என்னைப் பற்றி

  1. padmahari says:

    /நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும் தாய் மொழியை காக்க வேண்டுமென எண்ணங்களை தமிழில் பதிவிடும் உங்களைப் போல நானும் ஒரு தமிழன்/

    வணக்கம் ஜெகதீஸ்வரன், முதல்ல உங்களுக்கு ஒரு சபாஷ்! உங்க கருத்துக்கள் எல்லாமே மேற்கோள் காட்டக்கூடியவைதான் என்றாலும் நான் மேற்கோள் காட்ட எடுத்துக்கொண்ட கருத்து இப்போதைக்கு மிகவும் அவசியமான ஒன்று என்பதாலும், நானும் இதே காரணத்திற்காக வலைப்பதிய முற்பட்டவன் என்பதாலுமே!

    உங்கள் வலைப்பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்.

    என் வலைப்பக்கத்தை நேரமிருக்கும்போது பாருங்கள். நன்றி!
    http://www.padmahari.wordpress.com

  2. ஓரு சுய அறிமுகத்தின் வாயிலாக படித்தவனை வெட்கம் கொள்ளச் செய்ய முடியுமா? என்பதை இப்போது உணர்ந்து கொள்ள துவங்கி உள்ளேன்.

    வேர்ட்ப்ர்ஸ் மிக அற்புதமாக வடிவமைப்பு உள்ளது என்றாலும் உங்களைப் போன்றவர்களை நிரந்தரமாக பின் தொடர்பவர்களுக்கு நிச்சயம் இடுகை போன்ற வசதிகள் அதிகம் உள்ளவை வேண்டும் நண்பா?

    வாய்ப்பு இருந்தால் பலருக்கும் வழி கிடைக்கும்.

    தேவியர் இல்லம் திருப்புர்

  3. surya says:

    அருமையான அறிமுகம்.

    வாழ்த்துகள்.

  4. உலக சினிமா பதிவுகளை காண அன்புடன் அழைக்கிறேன்.

  5. ஆதிரா.. says:

    அறிமுகம் தந்த உண்மையில் எங்களுள் ஒருவராக இணைந்த உங்கள் படைப்புகளை இனிதான் பார்க்கத்தொடங்குகிறேன். அங்கே கருத்துகள் தொடரும். இங்கே தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்..

  6. seasonsali says:

    ஆனால் அவையெல்லாம் உங்களுக்கு எந்தவிதத்திலும் பயண்தருவதாக இருக்காது என நினைக்கின்றேன்.

    அடக்கம்

  7. parthiban says:

    ஐயா வணக்கம். ஏன் பெயர் பார்த்திபன். என்னுடைய வலைதள முகவரி www .partchil .blogspot .com
    நான் திருச்சி இல் உள்ளேன்.
    எனக்கு விக்கிபீடியா வில் கட்டுரை எழுத எப்படி என்று சொல்லுங்கள். நன்றி.

    buduparthee @live .com

    • விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது எளிமையான ஒன்று!.

      இங்கு சொடுக்கி விக்கியின் பக்கத்திற்கு சென்று பாருங்கள்!. உங்களுக்குத் தேவையான அனைத்தும் இருக்கின்றன@. விக்கிப்பீடியாவில் விரைவில் ஜொலிக்க வாழ்த்துகள்!

  8. //ஊர் முழுக்க நாணயம் பேசிவிட்டு கீழே கிடக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து செல்லும் உங்களைப் போலவே நானும் ஒரு கயவன்.//

    நியாயமாக நிதர்சனத்தை உணர்த்தியிருக்கும் பாங்கு அருமை நண்பரே!

    தங்களுடைய பெரும்பாலான பதிவுகள் மிகவும் உபயோகமாயிருக்கிறது எமக்கு; வாழிய தங்களுடைய பதிவுகள்…

    தங்களுடைய பதிவுகளை வாசித்து, நல்லவைகளை வாழ்க்கையில் ஏற்றெடுத்து பயன் பெறட்டும் இவ்வையகம்!

    மிக்க நன்றி!

  9. kalpana says:

    பல்வேறான இடுகைகள் பயனுள்ளதாக இருக்கிறது!,.
    தொடரட்டும் உந்தன் சேவை!

  10. ருத்திரன் says:

    பல பயனளிக்கும் பதிவுகள். குறிப்பாக பாலியல் கல்வியைப் பற்றி. வாழ்க,…
    வளர்க,…

  11. vasudevan says:

    கணினியில் உன் கருத்து கண்டேன்
    மற்றவை அனைத்தையும் மறுத்து விட்டேன்
    வலைபூவில் கரம் பதித்து
    தமிழர் நெஞ்சில் தடம் பதித்த நண்பனே
    நீ தமிழ் உள்ளவரை நீடுழி வாழ்வாயாக

  12. உன்னை பற்றி எழுதாமல் ஒட்டு மொத்த தமிழனின் முகவரியை எழுதியுள்ளாய்..அருமை நண்பா உன் அறிமுகம்

  13. SUBA.GANESAN says:

    good good good ….jagdi ….good to read your website !!! enjoyble.

  14. Tamizhan says:

    //ஊர் முழுக்க நாணயம் பேசிவிட்டு கீழே கிடக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து செல்லும் உங்களைப் போலவே நானும் ஒரு கயவன்.//
    கண் முன் ஒருவரிடமிருந்து தவறி விழும் 1 ரூபாயை அவரிடம் கொடுக்காமல் எடுத்து கொண்டல் தவறு. அவனை கள்வன் எனலாம். ஆனால்
    ஆள் அரவமற்ற சாலையில் செல்லும் பொழுது கீழே கிடக்கும் 1 ரூபாய் எடுத்து என்ன செய்ய முடியும்.
    எனவே கள்வன் என்று சொல்வதை அந்த இடத்தில் தவிர்த்திருக்கலாம்.

  15. pandian says:

    jegan,

    in mexico script one main intersting point was miising pl go thro

  16. தமிழ் செய்யும் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.
    மென்மேலும் தொடரட்டும்.

  17. STEPHEN says:

    thanks to u ……… you clared many doubts about sexual problem…..

  18. purushoth says:

    jagadeesh sir yenaku tamiz nalla theriyum aana yepadi tamizla letters use pana theriya, irunthalum parava ila really your great. ungaloda intoduction super….

    thank you…

  19. கவிஞர் கங்கை மணிமாறன்
    வணக்கம் நண்பரே..!
    சராசரியாய் இல்லாமல்
    சரியாய்த்தான் எழுதியுள்ளீர்கள்!
    ஆனாலும் …
    ‘கயவன்’ பிரயோகம்
    கண்டனத்துக்குரியது!
    கண்ணில் பட்டதைக்
    கையில் எடுக்கிறோம் !
    ஒருரூபாய் நாணயத்தை
    உள்ளே போடுவதில் தவறில்லை!
    அதுவே ஒருபவுனாக இருந்தால்தான் தவறு!
    உரிமையாளரைத் தேடித் தரமுடியாவிட்டாலும்
    உரிய வழிமுறைகளைக்
    கையாள வேண்டும் -அப்போது!
    எதுவும்
    கனமாய் இருந்தால்…நாம்
    கவனமாய் இருக்கவேண்டும்!
    மற்றபடி நம்போன்ற
    கவிஞர்கள் பெரும்பாலும்
    கயமைப் பட்டியலில்
    கண்டிப்பாய் வரமாட்டார்கள்!
    நன்றி..நண்பரே..!
    என் வலைதளம் பாருங்கள்!
    கருத்துகள் கூறுங்கள்!
    கவிஞர் கங்கை மணிமாறன்
    சென்னை-120 gangaimanimaran.wordpress.com

  20. Bala says:

    Dear sir..,
    Super Introduction…..!!

  21. durairajv says:

    என்னை உங்கள் ரசிகனாக மாற்றிவிட்டன உங்களைப் பற்றிய உங்கள் சுய விளக்கம்…

  22. kpkaran says:

    அன்புள்ள நண்பரே உங்கள் தமிழ் மீதான பற்று தொடர எனது அன்புகலந்த நல்வாழ்த்துக்கள்.
    அன்புடன் .
    k- பிரபாகரன்

  23. பெ.அ. தேவன் says:

    அறிமுகம் அருமை.
    தமிழ் இனத்தின் மீதும், தமிழின் மீதும் தாங்கள் வைத்திருக்கும் பற்றுக்கு தலை வணங்குகிறேன்.

    ஆனால் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொள்வதை கயமை என்று கூறியதற்கு நானும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். பணம் ஒரு சக்தி என்ற வகையில் கீழே கிடக்கும் ஒரு ரூபாயை எடுப்பதில் தப்பில்லை. அதனை தேடுபவர் அருகே இருந்தால் கொடுக்கலாம். யாரும் இல்லை என்றால் வைத்துக்கொள்ளலாம். தொகை பெரியது என்றால் உரியவரிடம் சேர்க்க முயற்சிக்கலாம். அதேபோல இன்றைய காலத்தில் பெருந்தொகையை கீழே போடுபவர்கள் நிச்சயம் ஏழைகளாய் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தும் உள்ளது.

    எப்படியோ பணத்தை பற்றிய சரியான கருத்தை பரப்புங்கள் இனத்திற்காக குரல் கொடுங்கள்.
    நன்றி,
    வணக்கம்.

  24. பெ.அ. தேவன் says:

    அருள் இல்லாருக்கு அவ்வுலகு இல்லை
    பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை

    என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

  25. பெ.அ. தேவன் says:

    பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால் அன்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று பொருளில்லை.

  26. vijaiArumugam says:

    anpu nanpare enathu anpana vanakkangal mugavum payanulla,palla natgal kulapikonda visyathai miga arumaiyaga puriya vaithamaikku ennathu nantrigal….

  27. லதா says:

    உங்க கவிதை super

  28. ramalingam says:

    naan ipothuthan ungalai patri therinthukonden naan niraiya gnanam peravendum eannakku udavi seiyungal

  29. மிக வித்தியாசமாக உள்ளது.அறிமுகம் . வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

  30. Raaga says:

    வணக்கம் நண்பரே! தங்களின் தொடக்கம் மிகவும் நன்றாக உள்ளது.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s